Tuesday, November 2, 2010

கமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்?

பாகவதர் காலத்தில் நடிக்கத் தெரிந்தவருக்கு பாடவும் தெரியவேண்டும்.இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லை.அழகு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை சங்கீத ஞானம் வேண்டும் என்ற கால கட்டம்.நிறைய பாடிக்கொண்டே நடித்தார்கள்.

பின்னாளில் பின்னணி பாடும் தொழில்நுடபம் வந்து விட்டாலும் உலக நாயகன் கமல் அதையும் விட்டு வைக்கவில்லை.அவரும் டூயட் அல்லது சிங்கிள் அல்லது குரூப் பாடிக்கொண்டே நடித்தார்.வேறு நடிகர்களுக்கும் பின்னணியும் பாடினார்.அதுவும் இரண்டு முன்னணி பின்னணி பாடகிகளுடன்.



கமலின் பன்முகத் திறமையில் சினிமாவில் பாட்டுப் பாடுவதும் ஒன்று.அவர் முதலில் பாடிய பாட்டு “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”. படம்:அந்தரங்கம் (1975).இசை: ஜி.தேவராஜன்.கிட்டத்தட்ட 35 வருடம் முன்பு..

இவர் நுழைந்த காலத்தில் எந்த கதாநாயகனும் பாடுவதற்கு இவர் போல் ஆர்வம் காட்டிய மாதிரி தெரியவில்லை. கமலை சத்தியமாக பாராட்ட வேண்டும்.பாடுவது என்றால் சும்மா இல்லை நடிப்பதுபோல் சவாலான ஒன்று.

முதல் பாட்டு அவ்வளவாக குறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெயிட் லிஸ்டில் வைக்கப்பட்ட பாடகரின் குரல்வளம்.



முதல் பாட்டுக்கும் அடுத்துப் பாடிய பாட்டுக்களுக்கும் இடைவெளி நிறைய.

கமல் தன் ஆரம்ப கால படங்களில் பெண்களைக் கவருவதற்கு வேணுமென்றே திறந்த மார்புடன் கட்டாயமாக ஒரு காட்சியில் வருவார். சில படங்களில் ஜட்டியுடன் தோன்றுவார்.அது பாணியில் தான் பாடகராக காட்டிக்கொள்ளவேண்டும் என்று இசையமைப்பாளர்களைச் செல்லம் கொஞ்சி அல்லது தன் கதாநாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி சான்ஸ் வாங்கிப் பாடிய மாதிரி தெரியவில்லை

தான் பாடும் காட்சியில் தானே பாடினால் சிறப்பாக இருக்கும் என்ற ஆர்வ கோளாறுதான்.(இஞ்சி இடுப்பழகி/கடவுள் பாதி/பன்னீர் புஷ்பங்களே/அன்பே சிவம்).
ருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி) சவாலான பாடல்.படம் முழுவதும் வயதான பெண்ணாகவே பேசி அதே குரலில் பாடவும் செய்துவிட்டார்.சூப்பர்.

கிட்டதட்ட 70 பாடல்கள் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.இவருக்கும் இசை ஞானிக்கும் கெமிஸ்டரி பொருந்தி போகும் போல.இசை ஞானியின் படங்களில் நிறைய பாட்டியுள்ளார்.ஆனால் ராஜா அவ்வளவாக இவரை டூயட்டுக்கு பயன்படுத்தவில்லை. கமலின் குரல் ரேஞ்ச் தெரியும். ரிஸ்க் எடுக்கவில்லை.தன் இசையை வைத்து சில பாடல்களை ஒப்பேற்றிவிட்டார்.

இதே  மாதிரி குரல் வேறு யாருக்கேனும் இருந்தால் இளையராஜா பாட அனுமதித்திருப்பாரா? சந்தேகம்தான்.

உலக நாயகன் கமல் என்ற அந்தஸ்த்தில் இவர் பாடல்கள் இவரது ரசிகர்களால்  ரசிக்கப்படுகிறது.புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட தேர்தல் நேரங்களில் பாடுகிறார். ரத்தத்தின்  ரத்தங்கள் புல்லரிக்கிறார்கள்.
 
பொதுவாக கமல் குரல் எப்படி?

தன்னுடைய பன்முக திறமை வைரங்களில் இதுவும் ஒரு வைரம் என்று சொல்ல முடியாது.குட்டையாக நடிக்கலாம். நெட்டையாக நடிக்கலாம்.ஜார்ஜ் புஷ் அல்லது பலராம நாயுடுவாக தோன்றலாம். ஆனால் பாடுவது தனக்கு இயற்கையாக இருக்கும் குரலில்தான் பாட வேண்டும். ருக்கு ருக்குக்கு மாத்தலாம்.ஆனால் மெலடிக்கு?

ஓகே ரகம்.நூத்துக்கு நாற்பது மார்க் போடலாம். கணீர் குரல் கிடையாது.தனி இழையாக  கேட்காமல் தூசு படிந்து வருகிறது.அதாவது finetune ஆகவில்லை.

 இவருக்கு பொருத்தமாக  நிறைய “பேசும்” பாட்டுக்கள் பாடியுள்ளார்.கடவுள் பாதி/சொன்னபடி கேளு,கண்மணி காதல்,விகரம்,ஆள்வர்பேட்டை ஆளுடா.

இவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு.



ஆனாலும் சில பாடல்களை சிறப்பாக பாடி உள்ளார். எனக்குப்பிடித்த சில பாடல்கள்.

1.எங்கேயோ திக்கு திசை(மகா நதி)
2.அன்பே சிவம் அன்பே சிவம்(அருமையான இசை)
3.சுந்தரி நீயும்
4.பொன் மானே தேடுதே
5.ராஜா கைய வச்சா
6.போட்டு வைத்த காதல்
7.கண்மணி காதலன் அன்போடு
8.ஞாயிறு ஒளி மழையில்

இவர் குரல் சில சமயங்களில்   ஜெயசந்திரன் சாயல் வருகிறது.

”எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்” என்று மழையில் நனைந்தபடி என்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பாடுவார்.அதுதான் பதிவின் தலைப்பு.

டெயில் பீஸ்:

எஸ்.பி.பி. கமலுக்கு நிறைய பின்னணிப் பாடி கமல் பாடுவது மாதிரியே ஆகி கமல்  கமலுக்கு பாடினால யாரோ மாதிரி இருக்கிறது.



10 comments:

  1. \\இவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு\\

    இது எனக்கு புதுசு...வர தீபாவளிக்கு விஜய் டிவிய்ல கலைஞானி வருகிறார் ;))

    ReplyDelete
  2. நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  3. நான் கமல் ரசிகன் நல்ல பதிவு கொதுடிர்கள் நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு.. நிறைய புதிய தகவல்கள்... கமல் மோகனுக்குப் பாடியது உட்பட...
    கமல் அஜித்துக்கும் பாடி இருக்கார் (உல்லாசம்)

    ReplyDelete
  5. தமிழ்ப்பறவை said...

    //கமல் அஜித்துக்கும் பாடி இருக்கார் (உல்லாசம்) //

    புதிய தகவல்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. Kamal has also sung a song in Pudhu pettai but its a background song

    and he has recently sung for raaja sir again in hindi film happi for Pankaj kapoor(Roja la Terrorist ah varavaru)

    Kamal had sung only for raja sir and his sons in movies in which he didn't act or produce :)

    ReplyDelete
  7. Btw forgot to mention ur nice write up :)

    I'm loving reading ur write ups on raaja sir ,

    Naanum ungala mathiri oru bakthan :)

    ReplyDelete
  8. மாயவன்(ஜெர்மனி)June 10, 2011 at 10:57 PM

    கமல்ஹாசத்தேவரைப்பற்றி நான் என்னத்தைச்சொல்ல?
    அவர் எனக்குள் ஒருவர்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!