Friday, November 12, 2010

இளையராஜா- King of Musical Call & Response

இளையராஜாவின் பாடல்களில் நுனி முதல் அடிவரை எங்கும் அழகுணர்ச்சி மிளிரும்.அதில் ஒரு துளியைத் தொட்டு நாக்கில் வைத்தால் இனிக்கும்.அதில் ஒன்றுதான் Call & Response

இது ஒரு வகை இசைக்கோர்பு.தமிழில் மொழிபெயர்த்தால் அழைப்பும் மறுமொழியும் அதாவது இசைஅழைப்பு அதற்கு இசையிலேயே மறுமொழி.இந்த அழைப்பு & மறுமொழி பல்லவி-1, சரணம்-1,பல்லவி-2, சரணம்-2,Interlude-1,Interlude-2 எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

இது மேஸ்ட்ரோவே நினைத்து செய்ததா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது.இசையின் ஒரு வகையா? தெரியாது.

இதை ஒரு வகை ரசனையாக உள்வாங்கி இசையை ரசித்தால் வரும் அனுபவம் புதுமை. 

இதை நான் தெரிந்துகொண்டது எப்படி?

கானடா வாழும் இளையராஜாவின் தீவிர ரசிகர் திரு ரவி நடராஜன் அவர்களின்http://geniusraja.blogspot.com/  பதிவில் காணப்பட்டது.அவர் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி லெவலுக்கு ராஜாவின் இசையை அலசி ஆராய்கிறார். அவர் இந்த மாதிரி நாதத்துளிகளை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதை வைத்து கிழே உள்ளே இசைத்துளிகளைக் கேட்ட போது சரியாக பொருந்தி வந்தது. அவர் சொன்னதை ஒரு பாமர ரசிகனாக உள் வாங்கிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன்.


நண்பர் ரவி நடராஜனுக்கு நன்றிகள் கோடி.

கிழே கொடுத்த பாட்டின் உதாரணங்கள் என்னுடைய சொந்த தேர்வுகளே.இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் முதல் முதலாக இந்த நாத அழைப்பு/மறுமொழியை இசைத்தவர்கள் யார்? காட்டுவாழ் மிருகங்கள்தான்.முக்கியமாக பறவைகள்.

அதன் கூவல்கள் எதிர் கூவல்கள்தான், எல்லா இசை மேதைகளுக்கும் பின்புலம் என்பது என் யூகம்.இந்த கூவல்கள் முக்கியமாக காதல் செய்ய கூவப்படுகிறது.

ஆனால் நவீனத்தில்மனித உணர்வு ஆலாபனைகளும் அதற்கு மறுமொழியாக இசைக்கருவிகளின் ஆலாபனைகளும் இசைக்கப்படுகிறது.




அதைக் காதால் கேட்போம்.

உதாரணம் -1

ஏ... மச்சான...!(அன்னக்கிளி-1975) என்று ஜானகி ஆலாபித்து
(call ) முடிந்தவுடன் புல்லாங்குழலில் வழியும் நாத மறுமொழி(response).கடைசியில் வரும் அழைப்பு ”மச்சானப் பார்த்தீங்களா” இதற்கு வரும் புல்லாங்குழல் மறுமொழி குறும்புத்தனமாக.
CR Machanapaarthinka.mp3

உதாரணம் -2  

பாடும் வானம்பாடி....ஆ..(நான் பாடும் பாடல்1984)என்று எஸ்பிபி இதமாக அழைக்க(call ) அதற்கு வீணையில் மறுமொழி (response) செல்லம் கொஞ்சியபடி வருகிறது.
CRPaadumVanamPaadi.mp3

ராஜாவின் தனித்தன்மை என்ன? மாத்தி யோசி கான்செப்ட்தான்.
That"s all folks. Now let"s start  diving   in Maestros"  call & response நாத வெள்ளம்


கீரவாணி...(பாடும் பறவைகள்).இரவிலே... பகலிலே... பாடவா நீ. ஒவ்வொன்றுக்கும் உடனடி ரெஸ்பான்ஸ் சிதாரில்(??.துறுதுறுவென ரொம்ப சுட்டித்தனம் நிறைந்தது.
CRKeeravani.mp3

ஆற்றில் ஓடம் செல்ல(அவள் அப்படித்தான்-1978).எனக்குத் தெரிந்து இந்திய திரை இசையில் இது மாதிரி கேட்டதில்லை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!High voltage emotion!
CRVazhaioodam.mp3

பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்-1981).எஸ்பிபி ரொமப குழைந்து அழைக்கிறார்.உற்றுகேளுங்கள்.ரெண்டுவிதமான ஹம்மிங் ரெஸ்பான்ஸ்.பாட்டிலேயே ஐந்துவிதமான ஹம்மிங் வரும்.மாத்தியோசி.
CRPoonAada.mp3

நீ பாதி நான் பாதி...(கேளடி கண்மனி-1990).அருமை.
CRNeePathi.mp3


தென்றல் வந்து என்னை(ஒரு ஓடை நதியாகிறது-1983.
CRThendralEnnai-Oru oodai.mp3

ராக்கம்மா கையத்தட்டு(தளபதி-1991).எஸ்.பி.பி. நாலு அழைப்பு அதற்கு நாலு மறுமொழி.3ம்4ம் இசைக்கருவிகள்+மனிதகுரல் சேர்ந்து வருகிறது.ஆனால் இதிலேயே குரல்கள்(3,4) வித்தியாசமாக வருகிறது. இது சுவர்ணலதாவுக்கும் ரிப்பீட் ஆகிறது.5வதுக்கு மெல்லிய வேறு மறுமொழி.
CRRakkam.mp3

உறவுகள் தொடர்கதை.....(அவள் அப்படித்தான்-1978)
CR Uravugal.mp3


பள்ளியறைக்குள் மல்லிகையை(பால நாகம்மா-1981)
CRPalliyarikkul.mp3


நான ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி-1992).புல்லாங்குழல் ரொம்ப stylishஆக இசைக்கப்படுகிறது.ரம்யம்.
CRNaanYerikarai.mp3

உன்னவிட உலகத்தில யாரு(விருமாண்டி-2004)இதில் வரும் 0.16-0.19 அன்ட் 0.36-0.39 மறுமொழி எமோஷன் stunning!
CROnnaVida.mp3

இது ஒரு பொன் மாலைப் பொழுது(நிழல்கள்-1980).இதில் வரும் புல்லாங்குழல் மறுமொழி தெரியாதவர் தமிழ்நாட்டில் யாராவது உண்டா?
CRlIthuOruPon.mp3

வனிதாமணி(விக்ரம்-1986).கிடார் தீற்றல்கள் சம்பிராதயமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.
CRVanithaMani.mp3

கலகலக்கும் மணியோசை(ஈரமான ரோஜாவே-1991)
CRKalaKalakkum.mp3

நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி(ஹேராம்-2000).

இதில் அழைப்புக்கும் மறுமொழிக்கும் இருக்கும் கெமிஸ்டரி made for each other.0.20-0.28 இசையை கவனியுங்கள்.புல்லாங்குழலோடு பினைந்துவரும்  ஹம்மிங்கில் ஒரு விகிதம் இருக்கிறது.நான்கு ஹம்மிங். இதில் மூன்று மென்மை ஒரு பினிஷிங் ஹம்மிங்(3:1).கவிதை.

பிரமிக்கவைக்கிறார் இசைஞானி.பாட்டைக் கேட்க கூடாது.உள்ளே குதித்து ஆழ் நீச்சல் அடிக்கவேண்டும்.You have to live with the song.
CRNeepaartha.mp3

வா வா பக்கம் வா(தங்கமகன்-1983)
CRVaVaPa.mp3

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்ன(வால்டர் வெற்றிவேல்-1993).இது ஒரு freakout response.அஜால் குஜால்.
CRChinna Raasave.mp3

தெய்வீக ராகம் தெவிட்டாத(உல்லாசப் பறவைகள்-1980)
CRDeivigaRagam.mp3

மீட்டாத வீணை (பூந்தோட்டம்-1998).(கிடாரில் கவிதை மறுமொழி.ரித கெளள ராக சுவரங்கள் தெறிக்கிறது.
CRVarudal-MeetVeenai-Poon.mp3

34 comments:

  1. வாங்க தொப்பிதொப்பி.முதல் வருகைக்கு நன்றி.கமெண்ட்டில் நன்றி என்று சொல்லிவிட்டீர்களே. வேறு ஒன்றும் கருத்து இல்லையா? புரியவில்லை.

    நன்றி.

    ReplyDelete
  2. நன்றி அலெக்ஸ். முதல் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  3. தல வழக்கம் போல எனக்கு எல்லாமே புதுசு ;))

    கலக்கிட்டிங்க - கலக்கியிருக்காரு இசை தெய்வம் ;)

    ஹோராம் எல்லாம் ஒன்னுமே சொல்லிக்க முடியல...

    எமோஷன் stunning தான் பதிவு முழுக்க எனக்கு ;)

    ReplyDelete
  4. நன்றி கோபிநாத்

    ReplyDelete
  5. ரவி ஸார் மீண்டும் எனது விருப்பமான இசைப்பற்றிய பதிவை அளித்திருக்கிறீர்கள் பொறுமையாக படித்து கேட்டு பின்னூட்டம் இடுகிறேன் நன்றி.

    ReplyDelete
  6. ரவிஷங்கர்

    நல்ல அறிமுக கட்டுரை (இந்த தலைப்பை பற்றி முழுவதும் எழுத ஒரு தனி வலைப்பூவே வேண்டும்).

    மேல்நாட்டு இசையில் voices என்று குறிப்பிடும் போது, அது குரலை மட்டுமே குறிப்பதாகாது. அவர்கள் வாத்திய ஒலிகளையும் அப்படியே சொல்கிறார்கள்.

    நீங்கள் காட்டிய உதாரணங்களில், அழைப்பு, மறுமொழி இருந்தாலும், ராஜா இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதாவது, repeated call and response. இது சற்று அபாயகரமானது. சரியாக செய்யாவிட்டால், அலுப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு (’சொன்னதையே சொல்லி கழுத்தறுக்காதே!’). அடுத்த நிலை உதாரணங்களில் இரண்டை இங்கு பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் (1979) இடம் பெற்ற 'என்னுள்ளில் எங்கோ' என்ற வாணி ஜெயராம் பாடலை கூர்ந்து கவனியுங்கள். இரண்டாவது இடையிசையில் 3:25 முதல் 3:49 வரை புல்லாங்குழலுடன் மீண்டும் மீண்டும் ஸிந்தசைஸரை விடுவதாக இல்லை....

    http://www.youtube.com/watch?v=--d1kOfr-fc

    சற்றேனும் அலுப்பு தட்டுகிறதா?

    அதை விடுங்கள், ராஜாவின் இந்த படைப்பில் எத்தனை அழைப்பு மறுமொழி உள்ளது என்று கண்டறிவோருக்கு தீபாவளிக்கு விற்காத ஊசிபட்டாசு கொடுத்து கூட கட்டுப்படியாகாது. ஏனென்றால் அதன் நீளம் 17 நிமிடம். சில பல நூறு உரையாடல்களை கொடுத்து, ‘இதற்கு மேலே என்னய்யா செய்ய முடியும்?” என்று கேட்க வைத்து விட்டார்.

    அந்த அருமையான Composer's Breath என்ற இசைப்படைப்பை இங்கே நவீன் ஐயர் இசைக்கிறார்.

    http://www.youtube.com/watch?v=ZJR4o1JTwfI

    http://www.youtube.com/watch?v=nRMEdzThin4

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ரவி நடராஜன்
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  7. Wow! so many pieces, great work!! thank you! thank you... :))

    ReplyDelete
  8. i think how to name it has so many call and response patterns

    ReplyDelete
  9. ராஜாவின் பாடல்களைக் கேட்கக் கேட்க இசையுடன் கணிதத்தையும் பிசைந்து தருகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  10. நன்றி ராஜா.வாங்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. வாங்க ரவி நடராஜன்.

    // அதாவது, repeated call and response. இது சற்று அபாயகரமானது. சரியாக செய்யாவிட்டால்,
    ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில் (1979) //

    இதை நான் உணர்ந்தேன் ஆனால் இது repeated call and response பார்மட்டில் நினைத்துப்பார்க்க
    அப்போது மூளை வேலை செய்யவில்லை. நீங்கள் சொன்னதும்தான் உணர்கிறேன். நன்றி.

    you tube பார்த்துவிட்டேன்.நன்றி.

    ReplyDelete
  12. உங்கள் விருப்பம் + உழைப்பு தெரிகிறது
    மிக அருமை தொடரவும்

    ReplyDelete
  13. Thekkikattan|தெகா said...

    // Wow! so many pieces, great work!! thank you! thank you... :))//

    நன்றி தெகா.

    ReplyDelete
  14. Senthil said...

    // i think how to name it has so many call and response patterns//


    ஆமாம் செந்தில். நன்றி.

    ReplyDelete
  15. November 13, 2010 9:20 AM
    Indian said...

    // ராஜாவின் பாடல்களைக் கேட்கக் கேட்க இசையுடன் கணிதத்தையும் பிசைந்து தருகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.//
    ஆமாம்.அதைத் தவிர ஒரு மாஜிகல் டச்சும் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  16. பாலாஜி சங்கர் said...

    //உங்கள் விருப்பம் + உழைப்பு தெரிகிறது
    மிக அருமை தொடரவும்//
    உங்களைப் போன்ற ராஜா ரசிகர்கள் போடும் பின்னூட்டமும் பதிவுகள் போட ஊக்கம் அளிக்கிறது.

    நன்றி பாலாஜி சங்கர்.

    ReplyDelete
  17. பிரமாதம் சார்...ரொம்பக் கலக்கலா வந்திருக்கு இந்த ராஜா பதிவும்...இன்னும் வேணும் வேணும்னு கேட்கவைக்குது. இனி எந்தப் பாட்டைக் கேட்டாலும் இது ஞாபகம் வரும். நன்றிகள் உங்களுக்கும், ரவி நடராஜன் சாருக்கும்...

    ReplyDelete
  18. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  19. தாய்தன்குழந்தைக்கு சுவையான ஒருபதார்த்தத்தை சிறிதுசிறிதாக எடுத்து அன்ப்போடுஊட்டிவிடுவததைப்போல் எங்களுக்குஎடுத்து தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  20. Palay King said...

    // Good Work.... Congrats...//

    ரொமப நன்றி. முதல் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  21. T.Duraivel said...

    //தாய் தன்குழந்தைக்கு சுவையான ஒருபதார்த்தத்தை சிறிதுசிறிதாக எடுத்துஅன்ப்போடு
    ஊட்டிவிடுவததைப்போல் எங்களுக்குஎடுத்து தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.//

    முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி துரைவேல்.





    ரொமப நன்றி. முதல் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. ரவிஜி....

    வழக்கம் போல், ராஜா சம்பந்தப்பட்ட பதிவுன்னாலே, உங்க அதகளம் ஆரம்பமாகி விடுகிறது....

    அசத்தல்....

    அவரின் இசையும் அதை உங்களின் வார்த்தையில் வடிக்கும் இது போன்ற பதிவுகளும்....

    80-களில் இளையராஜா இசையமைப்பில் வரும் பாடல் கேசட் வாங்க (எந்த நடிகர் நடித்திருந்தாலும்), எவ்வளவு நேரமாயினும், கடை வாசலில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  23. கோபி சொன்னது:

    //எவ்வளவு நேரமாயினும், கடை வாசலில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது.//

    அது ஒரு கனாகாலம். மறக்கமுடியுமா?இவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சி இல்லாத காலம்.

    நன்றி கோபி.

    ReplyDelete
  24. அருமையான பதிவு நண்பரே.. !!

    ReplyDelete
  25. நன்றி சந்திரமோகன். முதல் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  26. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  27. அருமையான பதிவு நன்பரே. பாடல்களை புதிய கோனத்தில் ரசிக்க வைக்கிறது உங்கள் பதிவு. நன்றி

    ReplyDelete
  28. நன்றி ந.நவில்.வருகைக்கும் நன்றி. மற்ற ராஜாவின் பதிவுகளைப் படித்தீர்களா?

    ReplyDelete
  29. என்ன விஷயம் என்று தெரியாமல் ரசித்ததுண்டு.அதை விஷயம் தெரிந்து ஒருவர் விளக்குவது இன்னமும் இசைக்கு அழகூட்டுகிறது.இளையராஜாவின் ரசிகர்களுக்கு சலிக்காமல் தீனி இடுகிறீர்கள்.திகட்டாமலும்.பல புது விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகின்றது.நன்றி நாங்களே சொல்ல வேண்டும்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!