முல்லாவுக்கு அடிக்கடி ஞாபக மறதி வரும்.
ஒரு நாள் கடை வீதிக்கு சென்றார்.அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.ஏதேதோ பொருள்கள் வாங்கியபடி இருந்தார்கள் மக்கள்.அம்மிய கூட்டத்தில் ”தான் யார்” என்பதை மறந்துத் தொலைத்துவிட்டார்.
எப்படி தன்னை அறிந்துக்கொள்வது.தமக்கு தெரிந்த யாராவது கடை வீதியில் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடி இருந்தார். ஒருவரும் தென்படவில்லை.நேற்றே எல்லா பொருள்களும் வாங்கிப் போய்விட்டார்களா?
முல்லாவிற்கு ரொமப சோதனையாகப் போய்விட்டது. ஏதோ தீர்மானித்து பக்கத்தில் குதிரைக்கு கொள்ளு விற்கும் கடைக்குள் நுழைந்தார்.
கடைக்காரன் “ அய்யா.. உங்களுக்கு எவ்வளவு கொள்ளு வேண்டும்” என்று கேட்டான்.
”கடைக்காரரே நான் இப்போது உங்கள் கடைக்குள் நுழைவதைப் பார்த்தீர்களா?”
”ஆமாம், நீங்கள் வந்ததைப் பார்த்தேன்”
“ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?”
“இல்லை”
”இல்லை என்கிறீர்கள்.ஆனால் நாந்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்”
கடைக்காரன் முழித்தான்.
--------------------------------------------------------
ஒரு புத்தகத்தில் படித்த கதை
Subscribe to:
Post Comments (Atom)
:-)))))))).
ReplyDeleteஇது வேறு பொருளையும் தருகிறது .இல்லையா?
ஆமாம்.முல்லாவே ஒரு மிஸ்டிக்தானே.
ReplyDelete:))
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDelete