பாம்பே டு கோவா, மெட்றாஸ் டு பாண்டிச்சேரி என்று பயணத்தை மூலமாக வைத்து படங்கள் வந்தது.இதிலெல்லாம் ஒரு குறிகோளோ அர்த்தமோ இல்லாமல் ஒரு ஜாலி டிரிப் நோக்கத்தில் இருக்கும். சமீபத்தில் வந்தப் படத்தில் ஒரு குறிகோள் உண்டு.அது குவார்ட்டர் கட்டிங் அதற்காக ஒரு இரவு பயணம்.
நந்தலாலாவும் ஒரு பயணப்படம்தான்.
இதில் முன் திட்டம்,முன்பதிவு,முன்யோசனை எதுவும் இல்லாமல் குருட்டாம் போக்கில் பயணம். ஆனால் இது ஒரு வித்தியாசமான பயணம்.தொப்புள்கொடி ஊடே பயணித்து முன்பின் பார்த்திராத அம்மாவைத் தேடும் பயணம். அம்மாவைத் தேடி ஒரு ஆறு(ஏழு/) வயது பள்ளிச் சிறுவனும்,மனநிலை சரி இல்லாத ஒரு குழந்தை இளைஞனும் “அன்ன வாசல்” தாய்வாசல்” என்று தம் தம் ஊருக்கு செல்லுகிறார்கள்.
இருவர் இடையே உள்ள அம்மா பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் கெமிஸ்டரியில் நெடுஞ்சாலையில் பயணித்து கடைசியில் அந்த கிராமங்களுக்கு போய் சேருகிறார்கள். முடிவில் அம்மாவைப் பார்த்தார்களா? திரையில் பார்த்துத் தெரிந்துக்கொள்ளவும்.
இதில் வரும் அம்மாக்கள் வழக்கமான சினிமா அம்மாக்கள் அல்ல.அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை மறுக்க ஊனம்,மனநலம்,கள்ளக்காதல் இன்னபிற பல காரணங்கள்.
முன்னே மகேஷ் முத்துசாமி (காமிரா) பின்னே இளையராஜா தொடர இருவரும் ரத்தமும் சதையுமாக பயணிக்கிறார்கள்.இடையில் நிறைய விளிம்பு நிலை மனிதர்களை சந்தித்தபடி போகிறார்கள். 95% லாஜிக்கோடு பயணம்.
இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தை செதுக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.அவரே மன நலம் சரியில்லாத இளைஞனாக பாத்திரம் ஏற்று வாழ்ந்திருக்கிறார். பாலுமகேந்திரா வசதியாக குளிர் மலைப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வது போல் இவர் பச்சை பசேல் நெடுஞ்சாலை.
இரண்டரை மணி நேர பாசங்குத்தனங்கள் மிகவும் கம்மியான குறும்படம் அல்லது பத்துப்பக்க குறுநாவல்.
முதலில் மெதுவாக தொடரும் பயணம் ஒரு கட்டத்தில் சூடுபிடிக்கிறது.ஒரு கட்டத்தில் சோகம் அப்ப ஆரம்பிக்கிறது.
சிறுவன் நடிக்கும் அஸ்வத்ராம் தாரே ஜமீன் பர் படத்தில் நடித்தவனாம்.மிகை இல்லாமல் முகத்தில் அம்மா வருத்தத்தோடு வாழ்த்திருக்கிறார்.பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்னிக்தா அகோல்கர் ஒல்லிக்குச்சியாக பொருந்திவருகிறார். ரோகிணியும் அம்மாவாக வருகிறார்.இது தவிர சில அம்மாக்கள். தோன்றும் மூன்று பெண்களும்(வேலைக்காரி/அம்மா/ஸ்னிக்தா) ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்து சற்று குழப்புகிறார்கள்.
இப்போது பள்ளி சிறுவன் கடத்தல் சீசன். அதனால் சிறுவன் சரியாகப் போய் சேருவானா என்று ஒரு பதைபதைப்பு உள்ளுக்குள் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.
தன்னிடம் பயணிக்கும் இளைஞனை “மாமா” என்று விளிக்க ஆரம்பிப்பது ஒரு குறியீடு. தான் தேடிப்போகும் “அம்மா”வின் உடன்பிறந்தவனாக நெருங்கிப்
போவது அருமை. ஜாதிகலவரத்தில் உன் ஜாதி என்ன என்று யாரோ கேட்க இளைஞன் “மெண்டல்” என்று சொல்வதும் அருமை.
அரை படம் முழுவதும் தொளதொளப் பேண்ட்டின் இடுப்புப்பட்டையை பிடித்தப்படி இருக்க ஸ்னிக்தா சரி செய்து இடுப்பில் கயிறு கட்டிவிடுவது சூப்பர் டச். இப்படிப்பிடிக்காமல் இருந்திருந்தால் பாத்திரத்தின் லூசுத்தனம் அவ்வளவுவாக வெளிப்பட்டிருக்காதோ?டைட்டில் முதலிலேயே இசை இளையராஜா என்று போடப்படுகிறது.
இசை லாலா ராஜா.(லாலா என்றால் பெரியண்ணன் என்ற அர்த்தமும் உண்டு)இந்தப் படத்தின் ஒவ்வொரு திசுக்களுக்கும் ராஜாவின் இசை ஆக்ஸிஜன் எடுத்துச்செல்கிறது.ரொமப நாளைக்குப் பிறகு இளையராஜாவிற்கு Full Meals.
அதுவும் “அம்மா” கதை ஆச்சே “சும்மா” விடுவாரா? ஸ்டார்ட் மீயூசிக்தான்.
படத்தின் அமைதியிலும் ராஜா இருக்கிறார்.ராமாராஜன்/ராஜ்
கிரண்களுக்குத்தான் அம்மா பாட்டு.இங்கும் எதற்கு ஸ்டிரியோ டைப் அம்மா பாட்டு. படம் முழுவதும்தான் இதேதானே ஓடுகிறது?
ஹாஸ்பிடல் சீன்/ வீடுவிடாக தன் அம்மாவைத் தேடும் சீன் ராஜா பின்னணியில் அசத்துகிறார்.
படத்தின் நீளம்.காட்சி ஊடம்தான் சினிமா என்றாலும் அதற்காக சில இடங்களில் பாத்திரங்கள் அடைப்படை வசனம் கூட பேசாது ரோபோ மாதிரி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்வதோடு படத்தை முடித்திருக்கலாம்.தாக்கம் இருக்கும்.
மொத்தத்தில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்.
நல்ல பகிர்வு. கதை சொல்லாமல் சுருக்கமாக, நன்றாகப் பகிர்ந்துள்ளீர்கள்.ஆதித்யா படம் பார்த்தாரா? அவரின் கருத்து என்ன?
ReplyDelete//ஆதித்யா படம் பார்த்தாரா? அவரின் கருத்து என்ன?//
ReplyDeleteபார்க்கல.அவ்ருக்கு டெஸ்ட் நடக்குது.அவரும் அம்மாவும் மற்றொரு நாள் போவார்கள்.
நன்றி.
Nice Comments!
ReplyDeleteநன்றி சாய் கோகுல கிருஷ்ணா.வருகைக்கும் நன்றி.
ReplyDeleteநல்ல பகிர்வு தல...படத்தில் முழுசாக வரும் ஒரே பாட்டு அந்த அம்மா பாட்டு தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு முதலில் தெருவில் ஒரு குழந்தை அழும் போது இந்த சிறுவன் ஒடி போவனே அந்த இசை ரொம்ப பிடிச்சிருந்த்து ;)
படத்தில் பெரும்பாலான காட்சிகளில் எங்கோ ஒரு குழந்தையின் குரலோ இல்லை குழந்தையையோ கண்பது அதுவும் ஒரு கதை சொல்லிமாதிரி இருந்த்து ;)
//எனக்கு முதலில் தெருவில் ஒரு குழந்தை அழும் போது இந்த சிறுவன் ஒடி போவனே அந்த இசை ரொம்ப பிடிச்சிருந்த்து ;)//
ReplyDeleteஆமாங்க.டிரைலரில் காட்டப்படும் ஹைவேஸ் கார் தோன்றும் காட்சி பிஜிஎம் படத்தில் கிடையாது.
அட்டகாசம்.
//படத்தில் பெரும்பாலான காட்சிகளில் எங்கோ ஒரு குழந்தையின் குரலோ இல்லை குழந்தையையோ கண்பது அதுவும் ஒரு கதை சொல்லிமாதிரி இருந்த்து//
ஆஹா.கவனிக்கலீங்க.
நன்றி கோபிநாத்.
நல்ல விமர்சனம். படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.
ReplyDeleteவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
ReplyDelete//நல்ல விமர்சனம். படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.//
வாங்க வித்யா.தமிழ்மணத்துல இணைஞ்சுட்டீங்க போல இருக்கு.பதிவுல பட்டைத் தெரிகிறதே?
நன்றி.
traileril recording ketten.padam paarka aasaiyai ullathu.
ReplyDelete