படத்தை வெறும் ஜடமாக பார்த்து அதற்கு பின்னணி என்ற உயிர் கொடுத்து நம் முன் உலவ விடுவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை.எவ்வளவு விதமான உணர்ச்சிகள் படம் முழுவதும்?
ஒரு படத்திற்கு பாடல் கம்போசிங்கை விட அந்த படத்திற்க்கு பின்னணி இசைப்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை என்று எல்லா இசையமைப்பாளர்களின் ஒட்டு மொத்த கருத்து.
யாராவது இறந்தால் ஷெனாயும்,போலீஸ் என்றால் ரோட்டரி ட்ரம்மில் வாசிப்பும்,காமெடின்னா கொய்ங்... கொய்ங்..,மலைப்பிரதேசம் என்றால் சிதாரும்,கோவிலில் அர்ச்சனை என்றால வீணையும், வயல் என்றால் புல்லாங்குழலும் இருந்த காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டார் ராஜா.
இளையராஜா பின்னணிக்கு ஒரு பரிமாணம் கொடுத்தார்.அதை ஒரு கதாபாத்திரமாக ஆக்கினார்.
கண்ணால் பார்ப்பதை காதால் உணரவும் செய்தார்.
கமல், ரஜினிக்கு விசிலடித்த ரசிகன் ராஜாவின் பின்னணிக்கும் (சி.ரோஜா.டிக் டிக் டிக்,நெ.கிள்ளாதே)விசிலடிக்க ஆரம்பித்தான்.மிக முக்கியமாக வெஸ்டர்ன் கிளாசிகள் வயலின் தீற்றல்கள் பின்னணிக்கு கொடுத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு உணர்ச்சிகளை கொண்டு வந்தார்.
(ஹேராம் படத்திற்கு பின்னணி)
தமிழ்திரையில் பார்த்திராத உணர்ச்சிகளை பல இசைக்கருவி கலவைகளில் இசைத்து வழியவிட்டார்.பல வித மணங்கள் கொடுத்தார்.உள்ளே ஒடும் ஆதமாவை கலைக்காமல். கலவைகள் மொன்னையாக உருத்தி துருத்திக்
கொண்டு நாராசாரமாக இல்லாமல் மனதிற்கு இதமாக இருந்தது.
கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்கள்.எத்தனை விதமான பின்னணிகள். ஒரே விதமான உணர்ச்சிகளுக்கு எத்தனைவிதமான பின்னணிகள்.அலுத்துவிடும்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே (1981) டைட்டில் இசை
பல வித flavour கொடுக்கப்பட்டு கடைசியில் மேஸ்ட்ரோ வெஸ்டர்ன் கிளாசிகளில் பினிஷிங் டச் (1.48-2.13) கொடுப்பார்.
அலைகள் ஓய்வதில்லை(1981) பின்னணி இசை
பாரதிராஜா & கோ பின்னணி டைப்புகளை ஒரு கட்டத்தில் நிறுத்தினார்.அதற்கேற்றார் போல் சினிமாக்களும் மாறியது.
மகேந்திரன்,பா.மகேந்திரா ம.ரத்னம் போன்றவர்கள் வந்தார்கள்.வருடத்திற்கு வருடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.இசைக்கருவிகளும் மாறியது.
மகேந்திரன் பாலுமகேந்திரா படங்களில் பின்னணியில் அமைதியாக இருந்தார்.
ராஜாவின் பாடல்களில் பின்னணி இசைக்கான கூறுகளும் பின்னணி இசையில் பாடல்களுக்கான கூறுகளும் இருக்கும்.
இப்போது அடுத்தக்கட்டத்திற்க்கு கொஞ்சம் தாவி இருக்கிறார்.
இதை நந்தாலாலாவில் பார்க்கலாம்.இளையராஜா இதில் தன்னுடைய heart & soul போட்டிருக்கிறார்.இது ஒரு வித்தியாசமான கரு.பொதுவாகவே ராஜாவின் இசை உணர்வுகளை ஊடுரவுக்கூடியது.பின்னணியில் கசியும் உணர்ச்சிகள் வித்தியாசமானது.உலகத்தரமானது.
சில பின்னணிகள் டிரைலரில்தான் இருக்கிறது.படத்தில் இல்லை
அகி அம்மாவை ஓடி ஓடி வீடு விடாக தேடும் காட்சி(படம்)
மனதைப் பிசையும் உணர்ச்சிகளை வயலின் தீற்றிக்கொண்டே பையனை பின் தொடர்ந்து போகிறது இசை. இதன் நடுவே வரும் சிறுவனின் குரல் படுத்துகிறது. எனக்குப்பிடித்த ஒன்று.உலுக்கிவிட்டது என்று சொல்லலாம்.
டிரைலர்(இதுவும் நான் ரசித்த ஒன்று).என்ன விதமான உணர்ச்சிக்கலவை? Awesome Maestro!
லாங்ஷாட்டில் கார் வரும் காட்சி (டிரைலர்).ஹாலிவுட்டேயே மிஞ்சியது.
பிரயாணம் ஆரம்பிக்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)
பிரயாணம் தொடர்கிறது (நன்றி: சுரேஷ்குமார்)
டிரைலர்
அடிக்கடி படத்தில் வரும் பின்னணி
மன நலகாப்பகத்தில் டாப் ஆங்கிளில் மரம் காட்டப்பட்டு படிப்படியாக காமிரா தரைக்குப்போகும் காட்சி
டிரைலர் (கருணை சுரக்கிறது)
மிஸ்கின் பதைபதைப்படும் ஓடும் சீன்(டிரைலர்)
ஜிப்சி (டிரைலர்)பாட்டு
நந்தலாலா - பட விமர்சனம்
.
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் இதை பதிய வேண்டும் என சொல்லலாம் என்று இருந்தேன்
ReplyDeleteஅருமை
நன்றி பாலாஜி சங்கர்.படம் பாத்தீட்டிங்களா?
ReplyDeleteஅந்த மேதையின் இசை நம் பாக்கியம் என நினைக்கிறேன். உங்கள் பதிவுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி கே.பி.ஜனா.
ReplyDeleteநல்ல பகிர்வு தல
ReplyDelete\\கமல், ரஜினிக்கு விசிலடித்த ரசிகன் ராஜாவின் பின்னணிக்கும் (சி.ரோஜா.டிக் டிக் டிக்,நெ.கிள்ளாதே)விசிலடிக்க ஆரம்பித்தான்\\
ரீப்பிட்டிக்கிறேன் ;)
நந்தலாலா அந்த மரம் காட்டும் போது அடுத்து அவன் என்ன செய்வனோ என்ற அவலுடனும் பதபதைப்புடனும் இருக்கும் அந்த இசை.
மீஷ்கின் உடை மாற்றிவிட்டு நடக்கும் காட்சி ஆகா...கிளம்பிட்டான்ய்யான்னு சொல்ற மாதிரி இருக்கும்.
ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அது என்ன சொல்வருகிறது என்று தன் இசையால் ரசிகனுக்கு சொல்வதில் இசை தெய்வத்க்கு நிகர் அவரே தான் ;)
Hi,
ReplyDeleteThe link from Thiraimanam, is not a valid one, please correct that asap, so that everyone can enjoy your work.
Thanks for posting those wonderful bits.
Take care...
நன்றி கோபிநாத்
ReplyDeleteElancheran said.
ReplyDelete//The link from Thiraimanam, is not a valid one, please correct that asap, so that everyone can enjoy your work. //
Thank your for valid information. I informed Tamilmanam.Thank you for your comments.
பகிர்வுக்கு நன்றி சார்...
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி பன்னிக்குட்டி ராம்சாமி.அங்கேயும் நன்றி போட்டுவிட்டேன்.
ReplyDeleteHello,
ReplyDeleteI do not have tamil fonts in my system. I saw this movie yesterday and I was moved by background score. I was speaking to my relative and he had pointed me to this link. It was great to listen to those soul stirring score again. Thank you very much.
Ramasubramaniam
நன்றி ராமசுப்ரமணியம்.
ReplyDeleteMy friend Mr.Ramasubramaniam had much praise for this movies back ground (especially) and I landed on this link through his FB page. The way Mr.Ravishankar has presented this post is very excellent.
ReplyDeleteThanks Sridharans and again thanks to your friend also.
ReplyDelete