சில நேரங்களில் டிவி சேனலை மாற்றும் போது பெண்களோ ஆண்களோ ஏதோ ஒன்றை அடுப்பில் கிளறியபடி பேசிக்கொண்டு சமையல் நிகழ்ச்சிகள் கண்ணில்படும்.பக்கத்தில் ஒரு தொகுப்பாளினி நின்றுகொண்டு “ஓகோ அப்படியா” என்றபடி அவர் செய்வதையே திருப்பி சொல்லிக்கொண்டு இருப்பார்.முடித்தவுடன் “ரொம்ப சூப்பரா இருக்கு” என்றபடி டிஷ்ஷை வாயில் போட்டபடி போஸ் கொடுப்பார்.
இது வழக்கமான வடிவம்.ஆனால் இதெல்லாம் மாறி வேறு வடிவங்களும் வந்து அடுப்பில் கிளறுகிறார்கள்.
ரூபாய் நோட்டில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வரும் இந்த நிகழ்ச்சிகளை ஒரு சுவராஸ்யத்திற்காக (ருசிக்காக?)பார்ப்பதுண்டு.
அவர்கள் சொல்லும் சமையல் ஐட்டங்களை பார்வையாளர்கள் எவ்வளவு பேர் செய்துபார்ப்பார்கள்? காரணம் சில சாப்பாட்டு/சிற்றுண்டி ஐட்டங்கள் பெரிய ப்ராஜெக்ட் மாதிரி போகிறது. இதில் முன்னேற்பாடுகளே பெண்டு எடுக்கும். அடுத்து செய்வது. அதற்கடுத்து பின்னேற்பாடுகள். உதவியாளர்கள் இல்லாமல் இதில் நுழையமுடியாது.
அடுத்து டேஸ்ட்.
ஒரு தடவை ரொம்ப மெனக்கெட்டு (சைவம்) ஒன்றை செய்துப்பார்த்து சாப்பிட்ட யாருக்கும் சுத்தமாக பிடிக்காமல் ஆனால் பட்ட கஷ்டத்திற்காக (நானும் பட்டேன்)வெளியில் பிடித்தமாதிரி காட்டிக்கொண்டு வாயிலேயே ரொம்ப நேரம் மென்று கடைசியில் தண்ணீர் குடித்து உள்ளே தள்ளினோம்.
பல நேரங்களில் ஒரு டிஷ்ஷே பெயர் மாத்தி வருகிறது.நிறைய அவசர டிபன்கள் கற்றுக்கொள்ளமுடிகிறது. மாற்றுச் செய்முறைகளும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
குடும்பத்தினர் சிலர் வழக்கமான உப்புமா,தோசை,இட்லி,பொங்கல் வகையறாக்களிலிருந்து வெளியே வர மறுப்பதால் தாய்குலங்கள் வேறு முயற்சிப்பதில்லை.
தான் தனியாக செயத புதுவித சமையல்/சிற்றுண்டி வகைகளை குடும்பத்தார் சாப்பிட்டு மகிழ்வதைக் காண்பதும் வாழ்வில் ஒரு ருசி.
முன்னொரு காலத்தில் பாட்டி என்றொருவர் வீட்டில் இருந்தார் அவர்தான் வழிவழியாக கற்றுக்கொண்டதை விதவிதமாக சமையல் செய்வார்.அவர் எங்கே போனார்?
ஷரத்துடன் நான்:
ஜெயா தொலைக்காட்சியில் “ஹரியுடன் நான்” என்ற பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் ஷரத் என்னும் மலையாள இசையமைப்பாளர் நடுவராக வருகிறார்.இவர் தன் இயல்பான நகைச்சுவையால் நிகழ்ச்சியை கலகலக்க வைக்கிறார்.
Spike ஹேர் ஸ்டைலில்(எண்ணெய் தடவி குச்சிகுச்சியாக முடிகள் மேல் நோக்கி நீட்டி இருக்கும்) வந்த பாடகரிடம் “என்ன தலைல ஷாக் அடிச்சிடிச்சா?”
" டயர்டா...?பல்லவிலேயே ரொமப நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சரணம் வந்தீங்களே?”
அடுத்து இவர் சில சமயம் நிறைய தமிழ் சொற்களை தன் பேச்சினிடையே பயன்படுத்தி ஆச்சரியபடுத்துகிறார். “இசை ஆசிரியர்” “வியப்பா இருந்தது” “கோர்வையா” ”செவிக்கு இனிமையா”.
.

ReplyDelete......உண்மை. அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நன்றி சித்ரா.
ReplyDeleteஷரத் நிஜமாகவே “சைமன் கோவெல்” மாதிரி பேசுகிறார்! நல்லவேளை சைமனைப் போல அசிங்கமான காமெண்ட்டுகள் அடிப்பதில்லை! ஒரு எபிசோடில், “கணபதி பப்பா மௌர்யா” என்று பாடினார் ஒருவர்! அதற்கு காமெண்ட் அடிக்கையில் “எனக்கென்னமோ உனக்கும் மைக்குக்கும் டிஸ்டன்ஸ் மோர்யா என்று காதில் விழுந்தது” என்று சரியான தொனியில் பாடவில்லை என்பதை டைமிங்காக அடித்தார்!
ReplyDelete//தான் தனியாக செயத புதுவித சமையல்/சிற்றுண்டி வகைகளை குடும்பத்தார் சாப்பிட்டு மகிழ்வதைக் காண்பதும் வாழ்வில் ஒரு ருசி.//
ReplyDeleteஇத பல பேர் இந்த காலத்துல புரிஞ்சிகிரதே இல்லங்க....ஓடுற அவசரத்துல என்ன டிபன் சாப்பிடராங்கன்னே பலருக்கு தெரியறது இல்ல...
சரத் பல மலையாள திரை படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் . கேரளத்து ஆள் சென்னை வாசி தமிழில் ஜூன் R என்ற படத்தின் இசை இவர்தான்,
ReplyDeleteஇப் படத்தில் வரும் மழையே மழையே என்ற பாடல் ஓர் நல்ல இசை கோர்வை.
சாஸ்திரிக இசை கற்றவர் . பால முரளி கிருஷ்ணாவின் சிடர் . இளையராஜாவின் இசை ரசிகர்
நன்றி ரவிஷா.
ReplyDeleteவருகைக்கு நன்றி பாரதி மணி. கருத்துக்கும் நன்றி.
ReplyDeletemuchanthi said...
ReplyDeleteவருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லிய தகவல் அனைத்தும் நானும் படித்திருக்கிறேன்.
கேட்டிருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
சமையல் குறிப்புகள் டிவியில் பார்த்ததில்லை...இணையத்தில் பார்த்து கத்திரிக்காய் கொத்சு செய்ய முயற்சித்து, கைவிரல்கள் தீப்பட்டதுதான் மிச்சம்.இருந்தும் மூன்றாவது முயற்சியில் நேற்றுத்தான் வெற்றியடைந்தேன்.
ReplyDelete‘ஹரியுடன் நான்’ வருபவர் பெயர் ஷரத் ஆ? தகவலுக்கு நன்றி. நன்றாகப் பேசுகிறார்...
//கத்திரிக்காய் கொத்சு செய்ய முயற்சித்து, கைவிரல்கள் தீப்பட்டதுதான் மிச்சம்.இருந்தும் மூன்றாவது முயற்சியில் நேற்றுத்தான் வெற்றியடைந்தேன்//
ReplyDeleteஅருமையான டிஷ்ங்க.செய்யுங்க. நன்றி
//‘ஹரியுடன் நான்’ வருபவர் பெயர் ஷரத் ஆ? தகவலுக்கு நன்றி. நன்றாகப் பேசுகிறார்..//
நல்லா பாடுவாருங்க.
ஷரத்துடன் நான் - இந்தத் தலைப்பு தான் அந்த நிகழ்ச்சிக்கு சரியான ஒன்று . ஹரி சொல்வதை விட சரத் தான் அதிகம் நல்ல விடயங்களை எடுத்து சொல்கிறார் பங்கேற்பாளர்களுக்கு. ஹிந்தி பாடல்கள் என்றால் மட்டுமே குஷி ஆகிவிடுகிறார் ஹரி :)
ReplyDelete//ஷரத்துடன் நான் - இந்தத் தலைப்பு தான் அந்த நிகழ்ச்சிக்கு சரியான ஒன்று . //
ReplyDeleteஷரத் கலகலக்க வைக்கிறார்.ஹரியும் நிறைய டெக்னிகல் விஷயங்களை சொல்லுகிறார்.
//ஹிந்தி பாடல்கள் என்றால் மட்டுமே குஷி ஆகிவிடுகிறார் ஹரி//
அவரோட பேவரைட் ஆச்சே.
நன்றி மனோஜ்.