போட்டு யோசித்து கொசுறாக வெய்யில்அடிக்கிறது.
துணிக்காயப்போட்டால் மீண்டும் தூறுகிறது.துணிகளை எடுத்தால் நின்று விடுகிறது.
வருண பகவான் சார் ஒன்னியுமே புர்ல? ஓன் பாடில தொண்டி விழுந்து மெர்சல் ஆயி கோபமா?
_____________________________
இப்போதெல்லாம் பாடல்கள் வெளியீட்டு விழா என்று
சேனலுக்கு சேனல் போட்டிக்கொண்டு ஒளிப்பரப்புகிறார்கள்.
வழக்கம்போல பேசுபவர்கள் பின்னால் இடுக்கு வழியே சினிமா PROக்கள் தலை நீட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கிறார்கள்.
பாடல்களை மக்கள் போட்டிக்கொண்டு கேட்கிறார்களா? மக்கள் கேட்பதைவிட நிறைய (வீடியோ) பார்க்கிறார்கள்.படத்தில் பாடல்களுக்கான மவுசு குறைந்துவிட்டதா? பாடல்கள் இல்லாவிட்டால் ரசிகன் என்னோவோ போல் ஆகிறான்.
மன்மதன் அன்பு பாடல் கேட்டேன்.பாடல்களை எல்லோரும் சுருதியோடு பாடுவார்கள். கமல் மட்டும் சுருதியோடு பேசுவார்.இதில் கமல் எப்படி?
கமலின் நீல வானம் பாட்டை ரசிக்க முடிகிறது.வயலின் அருமை.”பன்னீர் புஷ்பங்களே”(அவள் அப்படித்தான்) குரல் ஞாபகம் வருகிறது.ரொமாண்டிக் தலைப்பு உள்ள படத்தில் இன்னும் கூட romantic interludes கொடுத்திருக்கலாமே?
ரஹ்மான் பட பாடல் போல திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோரஸ் குரல்கள் எதற்கு?
கமல் கவிதைப் படிக்கிறார்.”கடவுள் பாதி மிருகம் பாதி” டெம்பிளேட் குரலில்.அதை விடவில்லை.”கலவி””ஆணுறை” என்று புரட்சி செய்திருக்கிறார்.வழக்கமாக அவர் பார்ட் டைமாக செய்யும் “இந்து” மத கிண்டல்.புல் டைம்மாக செய்தால் படம் போணியாகது என்று கமலுக்குத் தெரியும்.த்ரிஷா தமிழ் பேசி புரட்சி செய்திருக்கிறார்.
_____________________________
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கிழே வீழ்த்தினான்.அதை சுமந்துக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் தமிழ் சினிமா சாங்குகளைப் பற்றிச் சொல்லிவிட்டு எள்ளி நகைத்து“விக்கிரமா .. தீம் சாங் என்று ஒன்று காணப்படுகிறது எல்லா தமிழ் பட ஆல்பங்களிலும் . அது என்ன? அதன் தாத்பர்யம் என்ன?சொல்ல விட்டால் உன் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடும்” என்றது.
_____________________________
உலகத்திலேயே சின்னஞ்சிறு கதை ஒன்று தான் படித்ததாக சுஜாதா எழுதியதாக ஞாபகம்: (நினைவிலிருந்து)அது:
பிரபஞ்சமே அழிந்து கடைசியில் ஒரே ஒரு மனிதன் சாத்திய அறையில் கவலையுடன் சேரில் உட்கார்ந்திருக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.
”கதவின் தாழ்ப்பாள் இறுக சாத்தப்பட்டு பூட்டப்படுகிறது” என்று இருந்தால் இன்னும் திகில் கூடும் என்று சுஜாதா எழுதி இருந்தார்.
நான் இதற்கு வைத்த முடிவு:
அவனுக்கு ஒரு SMS வருகிறது. அதில் “இன்று நாள் எப்படி? ராசிபலனுக்கு 125க்கு டயல் செய்யவும்.கட்டணம் கிடையாது”
_____________________________
(ஆண்டாள் அல்ல மதுரை மீனாட்சி போஸ்)
பொதிகையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகம் ஒளிபரப்பினார்கள். ரொம்ப பழசு என்று நினைக்கிறேன்.பத்மா சுப்ரமணியம் குழுவினர் செய்தது.
பாடல்கள் வித்தியாசமான ராகங்களில் மற்றும் மெட்டுக்களும்.அபிநயங்களும் வித்தியாசமான பாவங்களில்.
.
மொத்தமாக எல்லாத்தையும் போட்டு ஒரு கலக்கு கலக்கியிருக்கிங்க தல ;)
ReplyDeleteநன்றி கோபிநாத்
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்ணன் சார்.
ReplyDeleteஅந்த கதை சரி ஆனா வார்த்தைகள் அப்படி வராதுங்க....
ReplyDeleteஉலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது..
இதன் variant
உலகின் கடைசி மனிதன் தனியாக ஓர் அறையில் உட்கார்ந்திருந்தான். கதவு பூட்டப்பட்டது...
இதை, ஹெமிங்க்வே ஆறு வார்த்தைக் கதையைப் பற்றிக் சொல்லும்போது கொடுத்திருந்தார். கற்றதும் பெற்றதும்...
வருகைக்கு நன்றி கா.கி.கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//அந்த கதை சரி ஆனா வார்த்தைகள் அப்படி வராதுங்க..//
உடன்படுகிறேன்.சின்னஞ்சிறு கதை என்று எழுதிவிட்டேன்.அதான் நினைவிலிருந்து என்று குறிப்பிட்டேன். மீண்டும் நன்றி.
:)
ReplyDeleteSuper collection...nice...
ReplyDelete