Thursday, December 30, 2010

இளையராஜா- King of Enchanting Violins-1

இந்தப் பிரபஞ்சத்தில் வயலின் என்ற மேல் நாட்டு இசைக்கருவியை இந்த அளவுக்கு விதவிதமாக,கலர்கலராக, பலவித இசைக் கலவைகளில்,விதவிதமான நாதங்களில்,ராகங்களில்,வேறு இசைக்கருவிகளையும் சேர்த்து பாடலுக்கிடையே அழகுப்படுத்திக் கொடுத்தவர் மேஸ்ட்ரோ இளையராஜா மட்டும்தான் இருக்கும்.


கொஞ்சம் யோசித்தால் Violin is maestro"s delightஓ என்று படுகிறது.இது வெஸ்டர்ன் கிளாசிக்கலுக்கு ரொம்ப தோதான கருவி. இசைஞானியும் வெஸ்டர்ன் கிளாசிகல் அபிமானி. இவருடைய இசையிலும் மேற்கத்திய நாதங்கள் விரவிக் கிடக்கும்.

சாஸ்தீரிய சங்கீதத்தில் இல்லாத சுதந்திரம் திரை இசை வயலினுக்கு நிறைய உண்டு.இளையராஜா புகுந்து விளையாடி இருக்கிறார்.இதை தனியாகவும் இசைக்கலாம். கோராஸ்ஸாகவும் இசைக்கலாம். இதோடு தொடர்புடைய செல்லோ, வயோலாவும் வயலின் குடும்பத்தைச் சேர்ந்துதான்.

இதன் நாதம் இசைக்கோர்ப்புக்கு ஒத்து வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இது கறிவேப்பலை மாதிரி எல்லா உணர்ச்சிகளுக்கும் தூவலாம்.

மேல் நாட்டு இசை ரசிகர்கள் யாராவது கிழே கொடுத்துள்ள வயலின் இசைத் துண்டுகள் சிலவற்றைக் கேட்டால் தமிழ் இசைத்திரைப்பாடலகள் இடையே இசைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்பவே மாட்டார்கள்.

படம் பின்னணியிலும் நிறைய இதை இசைக்கிறார். ஏக்கம்,தனிமை,சோகம்,துக்கம் மற்றும் இனம் புரியாத ஆழ் மன உணர்ச்சிகளை கிளறுகிறது. இதயம் படத்தில் மின்னல் கீற்றாக வயலின் தீற்றல்கள் நிறைய வரும. முரளியின் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும்.

எம் எஸ்வி அவர்கள் புதிய பறவை என்ற படத்தில் “எங்கே நிம்மதி” என்ற பாட்டிற்கு 100 வயலின்கள் பயன்படுத்தி பாட்டிற்கு ஒரு களேபர உணர்ச்சிகரத்தைக் கொடுத்திருப்பார்.

பின் வரும் இசைக் கோர்ப்புகளில் வழக்கமான இனிமை,புத்திசாலித்தனம்,Professional touch,முக்கியமாக ...மிக மிக முக்கியமாக “ஆத்மா” இருக்கிறது.

அடுத்து சில (பல?)இசைக்கோர்ப்புகளில் finishing touchஐ கவனியுங்கள்!

நான் அடிக்கடி சொல்வது,இவரின் இசை நாத இணைப்புகளில் “ஒட்டு” மற்றும் “அசட்டுத்தனம்” இல்லாமல் இருக்கும்.

ஒரு கட்டத்தில் வயலின் நாதத்தை சிந்தசைசர் என்ற எலெக்ட்ரானிக் கருவியில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.காலத்தின் கோலம்.

 மொத்தத்தில் வயலின் தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டது.

பின் வரும் ஆடியோக்களில் இசைத்துளிகள் மட்டும்தான்.முழுப்பாட்டு கிடையாது. வயலின் நாதத்திற்க்கு முன்னே அல்லது பின்னே வேறு இசைக்கருவிகளின் நாதமும் வரும். காரணம் ஒரு முழுமைக்காகதான்.


எல்லாமே ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் வைக்கப்படுகிறது.தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.


இனி இசை ஜகதலப்பிரதாபன் இளையராஜாவின் mindblowing and enchanting violins.....


அன்னக்கிளி (1975) -அன்னக்கிளி உன்ன தேடுது
(முதல் படம்.வித்தியாசமான தீற்றல்கள்.ராஜாவின் இயல்பான 1.துரிதகதியில் நாதப்பின்னல் 2.பல வித இசைக்கருவி3.மேற்கத்திய இசை கலவை 4.நாதங்களை ரிபீட் செய்யாமை.அப்போதைய டிரெண்டை காப்பி அடிக்காமல் செய்த வயலின் நாதங்கள் அருமை.கிராமிய மணம் மாறாமல் மேற்கத்திய சாயல் வாசிக்கப்படுகிறது)
Violin-1-Annakiliunna.mp3

காதல் ஓவியம்(1982)-பூவில் வந்து கூடும்  
(இனிமையான தனி வயலின்)

 Violin-1-Poovilvandu.mp3

பகல் நிலவு(1985)-பூமாலையே தோள் சேரவா
(துள்ளல் கோரஸ் வயலின். 0.14 பிறகு வயலினுக்குள் நடக்கும் உரையாடல் இனிமை.நம்முடனும் உரையாடுகிறது)
Violin-1-Poomaaliye.mp3

 அஜந்தா(2007) -யாருக்கு யார் என்று
( இது தமிழ்ப் பட இசையா? 0.19 பிறகு full style)
Violin-1-Ajantha.mp3
 

டிக் டிக் டிக் (1981)-  பூ மலர்ந்திட
Violin-1-poomalarinth.mp3

கர்ஜனை(1981) - என்ன சுகமான உலகம்
(இதில் துடிப்புடன் வரும் நாதம் 0.16ல் மெதுவாக மாறி வித்தியாசமாக அமுங்குகிறது.0.34-0.45ல் வயலினுக்கு கிடார் தாளமாக இசைக்கப்படுகிறது.

அட்டகாசம்..!)
Violin-1- Ennasugamaana.mp3
 

புவனா ஒரு கேள்வி குறி(1977)-விழியிலே மலர்ந்தது 
(அப்போது பிரமிக்க வைத்த இசைக் கோர்வைகள். 1980ல்தான் தீவிரமாக கவனிக்க முடிந்தது)
 


Violin-1-Vizhiyilae.mp3
 

அலைகள் ஓய்வதில்லை(1981)-புத்தம் புது காலை
(எனக்கு மிகவும் பிடித்த இசைத் துண்டு.மிகவும் ரம்யமான வயலின்..!வயலினில் புத்தம் புது காலையை காட்டுகிறாரோ?ஆச்சரியப்படுத்துகிறார்)
Violin-1-PuthamPuthu.mp3

சூரக்கோட்டை சிங்கக் குட்டி(1983)-காளிதாசன் கண்ணதாசன்
Violin-1-Kalidasan.mp3

கிழக்கே போகும் ரயில்(1978)-பூவரசம்பூ பூத்தாச்சு
(வயலின் நாதத்தோடு பின்னால் ஒரு புல்லாங்குழல் அழகுப்படுத்துகிறது.பாஞ்சாலிக்காக தலை சுற்றும் வயலின்)

Violin-1-Poovarasum.mp3

பூந்தோட்ட காவல்காரன்(1988)-சிந்திய வெண்மனி
(உணர்ச்சிகரமான வயலின்.பாட்டின் ஹோம்லி மூடைச் சொல்கிறது ) 

Violin-1-SinthiyaVenmani-PKaval.mp3


ஜானி(1980) காற்றில் எந்தன் கீதம்
(கோரஸ் வயலின்கள் உண்டாக்கும் உணர்ச்சிகள் புதுசு.பிரமிக்க வைக்கிறது.இது ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இடையே வருகிறது என்று வெளியாட்கள் நம்புவார்களா?உள் ஆட்களே நம்ப மாட்டார்கள்)
Violin-1-Katrilenthen.mp3

 
அவள் அப்படித்தான்(1978) வாழ்க்கை ஓடம் செல்ல

 Violin-1-Vazhkaioodam.mp3


மெட்டி(1982) மெட்டி ஒலி
Violin-1-MettiOli.mp3

பன்னீர் புஷ்பங்கள்(1981)-ஆனந்த ராகம் கேட்கும்
(இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.கிளாசிகல்(சிம்மேந்திர மத்யமம் ராகம்) வயலின்   பிரவாகம் எடுத்து  குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது.0.26 ஆரம்பிக்கும் வயலினை உற்றுக் கேளுங்கள் ஒரு வித வலியுடன் உரையாடுகிறது.குறுக்கே ஷெனாய்யும் வலியுடன்.கவுண்டர் பாயிண்ட்.Musical riot..! Stunning..!)
  Violin-1-Anandaraagam.mp3

 
எங்க ஊரு பாட்டுக்காரன்(1987) மதுர மாரிக்கொழுந்து
(பெண்கள் ஹ்ம்மிங்கிறகு எப்படி பதிலலிக்கிறது பாருங்கள்.இரண்டு ஹ்ம்மிங்கிற்கும் இரண்டுவிதமான வயலின் தீற்றல்கள்)
Violin-1-Madhuramari.mp3

உறவாடும் நெஞ்சம்(1976)- ஒரு நாள் உன்னோடு 
(finishing touchஐ கவனியுங்கள்.அட்டகாசம்)
Violin-1-OruNaalUnnodl.mp3

முந்தானை முடிச்சு(1983)-அந்தி வரும் நேரம் 
(இதிலும் வித்தியாசமான நாதங்கள்)
Violin-1-Andhivarum.mp3

மண் வாசனை(1985)-பொத்தி வச்ச மல்லிகைமொட்டு

Violin-1-PotthiVech.mp3

நிழல்கள்(1980)-இது ஒரு பொன்மாலைப் பொழுது
(ஞானியின் செல்லமான வெஸ்டர்ன் கிளாசிகல் தீற்றல்கள்.0.51 முடிகிறது என்று முடிவு செய்தால் 0.52-0.53 அழகான finishing touch கொடுத்து முடிக்கிறார்)
Violin-1-Ithuoruponfinal.mp3

தென்றலே என்னைத் தொடு(1985)-தென்றல் வந்து என்னை
  Violin-1-ThendlVanEnnaiThodum.mp3


ஆராதனை(1981)- இளம்பனி துளிர்விடும் நேரம்
Violin-1-Ilampanithuli.mp3

பூந்தளிர்(1979)-ஞான் ஞான் பாடனும் 
(ஓற்றை வயலின்  அதன் சம்பிரதாயமான நாதத்தில்.அற்புதமாக அமைக்கப்பட்ட 0.15-0.19.புல்லாங்குழலுடன் உரையாடல்.)
Violin-1-Jnan jnan.mp3

அவதாரம்(1995)-தென்றல் வந்து தீண்டும்போது
(உள்ளே ஊடுபாவாக போகும் வயலின் ஆத்மாவை தீண்டுகிறது)
Violin-1-Avatharam-Then.mp3


மெட்டி(1982)-சந்தக்கவிகள் பாடிடும்
(00.00-0.09/0.13-0.20/0.27-0.29/0.47-.053 விதவிதமான soulful வயலின்கள்(செல்லோ?ஆரபி ராகத்தில் கிளாசிக்கலாக ஆரம்பித்து ........பாட்டை எப்படியெல்லாம் அழகுப்படுத்துகிறது)
Violin-1-Sandakavigal.mp3

வள்ளி(1993)-என்னுள்ளே என்னுள்ளே
Violin-1-EnnulleEnnul.mp3



அரங்கேற்றவேளை(1990)- ஆகாய வெண்ணிலாவே
(கானடா ராகத்தில் லீடில் ஒரு சுணுங்கியபடி தனி வயலினும் அதை தொடரும் கோரஸ்(?) வயலினும் 0.06ல் சேரும் தபலாவும் 0.20ல் மாறும் வயலின் நாதமும் அதன் உரையாடலும். அட்டகாசம்.Highly Divine!Hats of Maestro!.தபலாவை ஏன் 0.06ல் சேர்க்கிறார்?)
Violin-1-Aagayavennilave.mp3

நினைவெல்லாம் நித்யா(1982)-பனிவிழும் மலர்வனம்
(வித்தியாசமான கலவை/மணம்/உரையாடல்)

Violin-1-PaniVizhMal.mp3

.படிக்க: பகுதி-2
 
http://raviaditya.blogspot.com/2011/01/king-of-enchanting-violins-2.html

59 comments:

  1. அசத்தலுங்க ....அற்புதம்

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன். ஆடியோ தடங்கல் இல்லாமல் ஒலிக்கிறதா?

    ReplyDelete
  3. வேறு யாரவது ஒருத்தரோட இசையை இந்த அளவுக்கு சிலாஹித்து உங்களால் எழுத முடியும் என்று நினைகிறீர்களா அதுதான் இளையராஜா.....
    மனிதர் உணர்துகொள்ள அது மனித ஆற்றல் அல்ல அதையும் தாண்டி உயரமானது.......
    உங்களுடிய உழைப்புக்கும் ரசனைக்கும் ஒரு ராயல் salute

    ReplyDelete
  4. அருமை.. ட்விட்டர், பஸ், ஃபேஸ்புக்கில் இதற்கு இணைப்பு கொடுத்துவிட்டேன்.

    ReplyDelete
  5. அட்டகாசம் ரவிசார் :) சில தினங்களுக்கு முன்புதான் ரிங்டோன் தேவைக்காக ஏகப்பட்ட கூகுள் சர்ச்சுக்கள் மேற்கொண்டு முடிவினில் ஒரு கிளி உருகுதேவில் வந்து நின்றேன் :) இங்கே அள்ளிக்கொடுத்திருக்கிறீர்கள் உங்களின் பகிர்தலுக்கு நன்றிகள் பல! :)

    ReplyDelete
  6. இதைப்போன்ற தொகுப்பு புல்லாங்குழல் பயன்படுத்தப்பட்ட இசைத்தொகுப்பினை காலம் கைக்கூடும் வேளையில் கேட்க காத்திருக்கிறோம் ! #ரிக்வெஸ்ட்

    ReplyDelete
  7. கலக்கல் தொகுப்பு பாஸ்
    ஒவ்வொன்றாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

    முதல் மரியாதை(1985)-பொத்தி வச்ச மல்லிகைப்பூ // மண்வாசனை என்று மாற்றவம்

    ReplyDelete
  8. உங்கள் ரசனையும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது - அரை மணி நேரம் வேறெந்த வேலையும் செய்யமுடியாமல் தேனில் மூழ்கி எழுந்தேன் - ராஜாவுக்கு ஒரு நன்றி, உங்களுக்கு நூறு நன்றிகள்!

    ஒரே ஒரு சின்னத் தவறு - அந்த ‘முதல் மரியாதை’யைமட்டும் ‘மண்வாசனை’ என்று திருத்திவிடுங்கள்.

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  9. Fantstic effort and thanks for the same

    ReplyDelete
  10. அருமையான பதிவு..வரிகளினூடே மட்டும் என்று அல்லாது How to name it,Nothing But wind,Thiruvasagam போன்ற ராஜாவின் ஆல்பங்களில் வரும் எந்த வயலின் அல்லது புல்லாங்குழலை கேட்கையிலும்
    ஏதோ உணர இயலா ஒன்றை உணர்ந்துவிட்டது போல் தோன்றும்.வயலின் என்ன அவரால் இசைக்க(இயக்க)ப்படவே உதித்ததோ :)

    ReplyDelete
  11. //..மிக மிக முக்கியமாக “ஆத்மா” இருக்கிறது.//
    ..முற்றிலும் உண்மை :)

    ReplyDelete
  12. Very nice collection..!!
    No one other than you would have observed so keenly...
    "It will take atleast six months for a beginner to hold a violin correctly" - Ilayaraja(in an interview for Nandalala)
    No one can make tunes that touch your soul, other than raaja..!!
    Awesome work..!!

    ReplyDelete
  13. ரசனையுடன் தேர்ந்தெடுத்த துணுக்குகள். உங்கள் உழைப்பிற்கு நன்றி. (எவ்வாறு இப்படியான இசைத் துணுக்குகளை தயார் செய்வது, வலையேற்றுவது, பிளேயருடன் பிளாக்கில் இடுவது என்பது பற்றி தனிபதிவாக விளக்க முடியுமா?

    ReplyDelete
  14. Dear Ravi Adithya,

    pothi vecha malliga mokku - Mann Vasanai.. Not Mudhal Mariyadhai.

    sorry for the corection.

    NIce blog. IR's Violin, flute , guitar - ellathukum naan romba romba kiruku..

    inum neraiya paatai sollindae irukalam...........

    Audio Quality is tooooooooooo Good. Enjoy the Clarity..........

    Thank u Ravi.......

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  15. prem kumar said...

    வருகைக்கு நன்றி பிரேம் குமார்.

    // வேறு யாரவது ஒருத்தரோட இசையை இந்த அளவுக்கு சிலாஹித்து உங்களால் எழுத முடியும் என்று நினைகிறீர்களா அதுதான் இளையராஜா.....//

    உண்மைதான்.மற்றவர்களை அங்கேயும் இங்கேயும் கொஞ்சம்தான் ரசிக்க முடியும்.இவரை இப்படி ரசித்துவிட்டு மற்றவர்களைக் கேட்டால் “சப்” என்று இருக்கிறது.


    // உங்களுடிய உழைப்புக்கும் ரசனைக்கும் ஒரு ராயல் salute//

    நன்றி.ராஜாவின் இசை இப்படி உத்வேகப்படுத்துகிறது.

    ReplyDelete
  16. நன்றி சித்ரன்

    ReplyDelete
  17. ஆயில்யன் said...

    // அட்டகாசம் ரவிசார் :) சில தினங்களுக்கு முன்புதான் ரிங்டோன் தேவைக்காக ஏகப்பட்ட கூகுள் சர்ச்சுக்கள் மேற்கொண்டு முடிவினில் ஒரு கிளி உருகுதேவில் வந்து நின்றேன் :) இங்கே அள்ளிக்கொடுத்திருக்கிறீர்கள் உங்களின் பகிர்தலுக்கு நன்றிகள் பல! :)//

    நன்றி. ஏற்கனவே புல்லாங்குழல் பற்றி ஒரு பதிவு இருக்கிறது.அந்தப் பதிவு:

    இளையராஜா: மயக்கும் புல்லாங்குழல்

    http://raviaditya.blogspot.com/2010/03/blog-post_10.html

    ஆனால் இதில் ஆடியோ இல்லை.ஒன்லி சுட்டிதான்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  18. நிணைத்தேன் வந்தாய் நூறு வயது ரவி உங்களுக்கு...(ஆனால் சற்று காலம் தாமதம்தான்) முழுவதும் கேட்டு பொறுமையாக படித்து பின்னுட்டம் இடுகிறேன்.

    ReplyDelete
  19. நன்றி கானா பிரபா. மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  20. நன்றி சொக்கன்.தவறைத் திருத்திவிட்டேன்.அதோடு சில எழுத்துப்பிழைகளும் திருத்திவிட்டேன்.

    ReplyDelete
  21. Sudhar said...

    // Fantstic effort and thanks for the same//

    நன்றி சுடர்.வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. Aishwarya Govindarajan said...

    முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.


    // ஏதோ உணர இயலா ஒன்றை உணர்ந்துவிட்டது போல் தோன்றும்.வயலின் என்ன அவரால் இசைக்க(இயக்க)ப்படவே உதித்ததோ :)//

    அருமை.என்னுடைய அவரைப் பற்றிய மற்ற பதிவுகளையும் “இளையராஜா” என்ற லேபிளின் கீழ் முடிந்தால் படிக்கவும்.

    அவரும் ஆத்மார்த்தமாக போடுகிறார்.அதனால்தான் ஆத்மா இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  23. சுரேஷ் கண்ணன் said...

    வாங்க சுரேஷ் கண்ணன்.

    // ரசனையுடன் தேர்ந்தெடுத்த துணுக்குகள். உங்கள் உழைப்பிற்கு நன்றி.//

    ராஜா என்றால் ஒரு தவம் போல செய்வேன்.

    //எவ்வாறு இப்படியான இசைத் துணுக்குகளை தயார் செய்வது, வலையேற்றுவது, பிளேயருடன் பிளாக்கில் இடுவது என்பது பற்றி தனிபதிவாக விளக்க முடியுமா?//

    பதிவு போட ஆர்வமில்லை.உங்கள் மின் மடல் கொடுங்கள்.அதில் சொல்கிறேன். நன்றி.

    ReplyDelete
  24. //num neraiya paatai sollindae irukalam...........//

    வாங்க உஷா.

    தேர்ந்தெடுக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்.
    எல்லாம் “நான்... நான்....இல்லையான்னு” துரத்த ஆரம்பித்துவிட்டது.

    நன்றி.

    ReplyDelete
  25. வாங்க ராஜா. மெதுவா கேட்டுட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  26. பாலாஜி சங்கர் said...

    // கவிதை அருமை//

    பின்னிட்டீங்க.தமிழ்மணத்திலும் இருக்கட்டும் என்று வேறு சுட்டி கொடுத்தேன்.

    ReplyDelete
  27. கற்பூர முல்லை படத்தில் பூங்காவியம் பாடலின் நடுவில் ஒரு வயலின் பிட் வருமே. உயிரையே கரைப்பது போல். என்ன சொல்லுங்கள் மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.

    ReplyDelete
  28. ரசனையான தொகுப்பு....

    ReplyDelete
  29. //எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!//

    :-)கலக்கல் பதிவு சார்

    ReplyDelete
  30. தளபதியில் ராக்கம்மா கையத்தட்டுவின் ஆரம்ப இசை- எவ்வளவு பெரிய விசயம் தெரியுங்களா? சென்னையில அதை செய்ய முடியாதுன்னு மும்பையில ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 67 கலைஞர்கள், 320 பக்கம் கோர்வை. ஒரு சாதனையான விசயமாச்சுங்களே. மறந்துட்டீங்களா?

    ReplyDelete
  31. சூப்பர்... அட்டகாசம் சார்... வெல்கம் பேக் டூ ஃபார்ம்... வெகுக் கவனமாகத் தேர்ந்தெடுத்த இசைத் துணுக்குகள்.உழைப்பிற்கு ராஜ மரியாதை செய்கிறேன்.

    ‘பொத்திவச்ச மல்லிகை மொட்டு, உங்க கைப் பட்டதும் ‘பூ’வாகிடுச்சே... :)

    ReplyDelete
  32. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

    // கற்பூர முல்லை படத்தில் பூங்காவியம் பாடலின் நடுவில் ஒரு வயலின் பிட் வருமே. உயிரையே கரைப்பது போல். என்ன சொல்லுங்கள் மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.//

    ஆமாங்க வித்யா.அற்புதமான மெலடி.நன்றி.

    ReplyDelete
  33. முதல் வருகைக்கு நன்றி காஞ்னா ராதாகிருஷ்ணன்.

    கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  34. வருகைக்கும் நன்றி.கருத்துக்கும் நன்றி கானகம்.

    ”எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்” இவ்வளவு தூரம் வந்துட்டு கைய நனச்சுட்டு போங்கன்னு ஒரு விருந்தோம்பல்தான்.

    ReplyDelete
  35. ILA(@)இளா said...

    // தளபதியில் ராக்கம்மா கையத்தட்டுவின் ஆரம்ப இசை- எவ்வளவு பெரிய விசயம் தெரியுங்களா? சென்னையில அதை செய்ய முடியாதுன்னு மும்பையில ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 67 கலைஞர்கள், 320 பக்கம் கோர்வை. ஒரு சாதனையான விசயமாச்சுங்களே. மறந்துட்டீங்களா?//

    அந்திமழைப்பொழிகிறது பாட்டையே விட மனசில்லை இளா.அடுத்து பூங்கதவே தாழ் திறவாய்.இதையும் விட்டு விட்டேன்.

    ராக்கம்மா கையத்தட்டு பாட்டை இணைக்க முயற்ச்சிக்கிறேன்.

    நன்றி இளா.

    ReplyDelete
  36. தமிழ்ப்பறவை said...

    // சூப்பர்... அட்டகாசம் சார்... வெல்கம் பேக் டூ ஃபார்ம்... வெகுக் கவனமாகத் தேர்ந்தெடுத்த இசைத் துணுக்குகள்.உழைப்பிற்கு ராஜ மரியாதை செய்கிறேன்.//

    நன்றி தமிழ்ப்பறவை.இன்னும் நிறைய இருக்கிறது.மனசில்லாமல் விட்டுவிட்டேன்.

    // ‘பொத்திவச்ச மல்லிகை மொட்டு, உங்க கைப் பட்டதும் ‘பூ’வாகிடுச்சே... :)//

    திருப்பி அதை மொட்டாக்கிவிட்டேன்.

    ReplyDelete
  37. Kolipaiyan said...

    // Excellent!//

    நன்றி கோலிபையன்.வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  38. Nice to see this. Couple of observations.

    1. There are not many after 1990's and only one after 2000. What happend to him once more musicians started coming....?

    2. I heard the contribution of violinist V S Narasimhan to Raja is more...check out about him

    http://www.youtube.com/watch?v=LGCIbn5ZT0g

    ReplyDelete
  39. Fantastic!. You could add this too.. "Kaadhal kavithaigal" song from Gopura vasalile.

    ReplyDelete
  40. அட்டகாசமான இடுகை.

    ReplyDelete
  41. தல...வந்துட்டேன்...அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன் - அனுபவிச்சிட்டேன்னு சொல்ல கூடிய இசையா அவரோட இசை எல்லாம்!!!

    உங்கள் உழைப்புக்கு அனைவரும் நன்றி சொல்றாங்க...அதையே நானும் சொல போறதுயில்லை..இது உங்க கடமை...இன்னும் நீங்க செய்யனும்.

    இன்னும் வயலின் தொகுப்பில் 2வது கூட போடுங்க தல..விருமாண்டியில கூட உன்னைவிட பாடலில் நடுவில் வரும்.

    இளா அண்ணே சொன்னது போல ராக்கம்மாவை விட்டது கஷ்டமாக இருக்கு தல..;))

    ஆனந்த ராகம் கேட்கும், புத்தம் புது காலை, என்னுள்ளே என்னுள்ளே,ஆகாய வெண்ணிலாவே.....இசை தெய்வம் இசை தெய்வம் தான்..;)))

    ReplyDelete
  42. December 30, 2010 9:39 PM
    Azhagan said...

    // Fantastic!. You could add this too.. "Kaadhal kavithaigal" song from Gopura vasalile.//

    Yes sir. It is excellent piece of violin, but I restricted to certain combinations.Otherwise I get confused in selection.

    Thanks a lot.

    ReplyDelete
  43. Saveena said
    1. There are not many after 1990's and only one after 2000. What happend to him once more musicians started coming....?//

    He limited his assignment after 2000 and trend also changed.

    //V S Narasimhan to Raja is //

    Yes you are right. I already saw the video.

    thanks.

    ReplyDelete
  44. நன்றி இந்தியன்.

    ReplyDelete
  45. வாங்க கோபிநாத்.

    // இன்னும் வயலின் தொகுப்பில் 2வது கூட போடுங்க தல..விருமாண்டியில கூட உன்னைவிட பாடலில் நடுவில் வரும்//

    முயற்ச்சிக்கிறேன்.கொஞ்சம் டைம் வேண்டும்.

    // இளா அண்ணே சொன்னது போல ராக்கம்மாவை விட்டது கஷ்டமாக இருக்கு தல..;))//

    தெரிந்துதான் விட்டேன். சேர்த்துவிடுகிறேன் இதில் அல்லது 2வில்.

    நன்றி.

    ReplyDelete
  46. Dear Ravi,
    violin list - ungalai naan naan nu thorathina list - 2nd part podunga pl...........

    eagerly expecting..........

    with Love,
    Usha Sankar.

    ReplyDelete
  47. நிறைய பேர்(??)கேட்பதால் செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  48. Dear Ravi,
    Thanks for the acceptance......

    PERIYAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
    LISTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT

    Sollungo ........................

    with Love,
    Usha Sankar.

    ReplyDelete
  49. ரொம்ப நன்றிங்கன்னா.

    ReplyDelete
  50. அருமை ரவி அண்ணா ~~

    இசைஞானியின் கையில் வயலின் .... அம்மாவின் கையில் குழந்தை போல ...... அவர் கொஞ்சும் ( இசைக்கும் ) அழகே தனி .......

    இசைஞானி காலத்தில் பிறந்து விட வேறு என்ன பாக்கியம் சொல்லுங்கள் .......

    ராஜா சரணம்

    ReplyDelete
  51. வாங்க அலெக்ஸ்.

    //இசைஞானி காலத்தில் பிறந்து விட வேறு என்ன பாக்கியம் சொல்லுங்கள் .......//

    சத்தியமான வார்த்தை.

    நன்றி.

    ReplyDelete
  52. ரவிஷங்கர்

    நல்ல பதிவு.

    கமெண்டுகள் சுவாரசியமாக இருந்தன.

    இரண்டு விஷயங்களைப் பற்றி எழுத இந்த கமெண்ட்:

    1) 2000 க்குப் பின் ராஜா எங்கு தேவையோ அங்கு வயலின்களை உபயோகித்த வண்ணம் இருக்கிறார். VSN பிரிந்தது இழப்பு என்றாலும், எம்பார் கண்ணன், ராமசுப்பு, மற்றும் செல்வராஜ் அருமையான வயலின் கலைஞர்கள். கண்ணன் பல கர்நாடக இசைக் கச்சேரிகளில் (சுதா ரகுநாதன்) வாசித்தும் வருகிறார். ராமசுப்பு எம்.டி ராமநாதனுக்கு வாசித்தவர் என்று படித்த ஞாபகம். சில 21 ஆம் நூற்றாண்டு உதாரணங்கள்: எங்கே நீ சென்றாலும் (கண்ணுக்குள்ளே), ஒரு சிறி கண்டால் (பொன்முடி புழையோரத்து - மலையாளம்), ரங்கு ரங்கு (ப்ரேம் கஹானி - கன்னடம்), பா திரைப்பட டைடில் இசை என்று பல படங்களிலும் உபயோகித்து வந்துள்ளார்.

    2) VSN, Madras String Quartret என்ற அமைப்பில் சேம்பர் இசை மற்றும் பல அருமையான கலப்பிசையில் அருமையான முயற்சிகள் செய்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்திருந்தபொழுது, அவருடைய சிடி வேண்டும் என்று மியூசிக் வோர்ல்ட் சென்றிருந்தேன்.

    “டெம்பிள் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட Madras String Quartret இருக்கிறதா?” என்று கேட்டது பெரிய தப்பாகி விட்டது.

    அந்த உதவியாளர் இன்னொருவரிடம் முணுமுணுத்தது வேடிக்கையாக இருந்தது:
    “ஏதோ குவாட்ட்ர் வேணுமாம். கோயில் பேர வேற சொல்லி குழப்பறாரு. நீ கொஞ்சம் பாரேன்!”

    நன்றி

    ரவி நடராஜன்
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  53. வாங்க ரவி நடராஜன்.

    // VSN பிரிந்தது இழப்பு என்றாலும், எம்பார் கண்ணன்//
    மேல் இருவர் பற்றித் தெரியும்.மற்றவர்கள் தெரியாது.

    //VSN, Madras String Quartret//

    யூ டூபில் பார்த்திருக்கிறேன்.

    //மியூசிக் வோர்ல்ட் //
    நல்ல கூத்து.

    நன்றி.

    ReplyDelete
  54. ரவி சார்..
    உங்கள் உழைப்பு தனித்து தெரிகிறது.. அபாரம்..
    ராஜா சாருடைய இசைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடலாம்..

    ReplyDelete
  55. நன்றி கவின். உங்கள் இணைப்புக்கும் நன்றி.

    ReplyDelete
  56. உலக இசைக்கு ஒரு அருங்கொடை இளையராஜாவின் இசை.புதிய இசை
    thas
    uk

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!