கூகுள் வழங்கும் பிளாக் ஹிட் விவர statisticsல் என்னுடைய “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற ஒரு அருமையான கிராமத்து செவி வழி கதை ஒன்றுக்கு all time pageview recordஆக 894 pageviews வந்திருக்கிறது.அதாவது பிளாக் ஆரம்பித்திலிருந்து இன்று வரை. இதில் 35% நேரடியாக பிளாக்கிலோ அல்லது திரட்டிகளிலோ அல்லது சுட்டிகள் மூலமாகவோ அந்த கதையைப் படித்திருப்பார்கள்.மீதி 65% “பொண்டாட்டி” என்ற குறி(?) சொல்லைப் போட்டு வந்திருக்கிறார்கள். நோக்கம் அதே “குறி”தான்?
இந்த 35%ல் எவ்வளவு பேர் தலைப்பைப் பார்த்து நுழைந்தார்களோ?
All time page viewவில் நான் முதுகு வலிக்க எழுதிய சிறுகதைகள் எதுவும் இல்லை.ஆனால் “ ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தப்போட்டக் கதைக்கு இவ்வளவு ”அடிகள்”.(ஹிட்ஸ்).
இந்தக் கதையும் அடுத்தவன் பொண்டாட்டிக் கதைதான். ஆனால் வந்தவர்கள் எதிர்பார்க்கும் “கிக்” இல்லை இந்த பொண்டாட்டியில்.இலக்கியத் தரமான கிராமத்து வட்டார வழக்குக் கதை.
பாவாடை தாவணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. டீன் ஏஜ் குறி சொல் மூலம் என் கவிதைக்கு வந்து அப்படியே ஓடிப்போய்விட்டதும் நடந்திருக்கிறது.
சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு எப்பவுமே ஹிட்ஸ் அதிகம்.அதையும் மீறி இது வந்திருக்கிறது.
சாதாரண வலைவாசிக்கே இப்படி என்றால், அசைவ பதிவுகள்,ஜோக்ஸ் எழுதும் பிரபல வலைவாசிகளுக்கு எவ்வளவு ஹிட்ஸ் வரும்.
எனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே! இன்னும் உழைக்க வேண்டும்.
வலையில் அள்ள அள்ள குறையாமல் வித விதமாக கொட்டிக்கிடக்கிறது ஆபாச பாலியல் பக்கங்கள். இதில் “பொண்டாட்டி” தேடுவது உளவியில் ரீதியாக நேட்டிவிட்டிக்கா? (மண்ணின் மனம்).திருட்டு மாங்கவிற்கு ருசி அதிகம் என்று சொல்லுவார்கள்.
நானும் ஏன் முதல் வரியில் வரும் ஒரு ஊர்ல ஒரு புருஷன்னு தலைப்பு வைக்காமா ஏன் ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டின்னு வச்சேன்? சத்தியமாக ஹிட்டுக்கு வைக்கவில்லை.அந்த சமயத்தில் தோன்றியதுதான்.
ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...
.
ஒண்ணும் சொல்லத் தெரியல.... ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன்.
ReplyDeleteஎல்லாம் சொல்லிட்டு கடைசில அந்த பதிவோட லிங்க் குடுத்தீங்க பாருங்க....எங்கயோ போய்டீங்க :)
ReplyDeleteநன்றி சித்ரா.
ReplyDeleteவாங்க தல தளப்தி. முதல் வருகைக்கு நன்றி.எப்படி இருந்தாலும் படிக்காதவர்கள் அந்த கதையின் லிங்க் தேடுவார்கள். நானே கொடுத்துவிட்டேன். இது எப்படி இருக்கு.
ReplyDeleteநன்றிங்க.
ஹா...ஹா....’குறி’க்கோளோட தேடுவாங்க போல....:))
ReplyDelete//எனக்கு நிறைய ஹிட்ஸ்களை வழங்கும் இளையராஜாவே பொண்டாட்டிக்கு அடுத்துதான் வருகிறார். எட்டு ரன் வித்தியாசம். போதாது இளையராஜா அவர்களே! இன்னும் உழைக்க வேண்டும்.//
ReplyDelete:)
நன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி அன்பரசன்
Dear Ravi,
ReplyDeleteTesting message.............
With Love,
Usha Sankar.
கமெண்ட் வந்துடுச்சுங்க உஷா. நன்றிங்க. இனிமேல் நீங்க பதிவுகளில் கமெண்ட் போடலாம்.
ReplyDeleteமனித மனதின் எதார்த்த எல்லை இது .................அதை இவளவு விளக்கமா ஒரு பதிவாகிய உங்களின் திறமைக்கு பாராட்டுகள்
ReplyDelete