Thursday, December 16, 2010

நான் -வாலி-மாலி-ஜாலி

கவிஞர் வாலி என்றதும் என் பள்ளிவயது நிகழ்வு ஒன்று உடனே ஞாபகம் வரும்.எம்ஜியார் ரசிகர் மன்ற நூலகத்தில் அவரின் கொள்கைப்பாடல்கள்,காதல்பாடல்கள்
தத்துவப்பாடல்கள் அடங்கிய பாட்டுப்புத்தகம் படித்ததுதான். அதில் எம்ஜியாருக்காக வாலி “நான்” என்று தொடங்கும் நிறைய பாடல்கள் எழுதியிருப்பார்.



1. நான் காற்று வாங்க போனேன்(கலங்கரை விளக்கம்)
2.நான் ஆணையிட்டால்(எங்க வீட்டு பிள்ளை)
3.நான் பார்த்ததிலே உன்(அன்பே வா)
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை(நான் ஆணையிட்டால்)
5.நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்)
6.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)
7.நான் மாந்தோப்பில் (எங்க வீட்டு பிள்ளை)
8.நான் ஒரு குழந்தை நீ (படக்கோட்டி)
9.நான் அளவோடு எதையுமே ரசிப்பவன்(எங்கள் தங்கம்)
10.நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்(நான் ஆணையிட்டால்)

இவரைப் பின்பற்றி வேறு சில கவிஞர்களும்

“நான் செத்துப்பொழச்சவண்டா”
”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்”
“நான் யார் நீ யார் தெரியார்”

என்று வேறு எழுதியதாக கேள்வி.

எதற்கு இந்த ”நான்” ???? சும்மா ஒரு ஹீரோ பில்ட் அப்தான்.”நான்”தான் உலகத்தில் நடக்கும் எல்லா அநியாங்களையும் தட்டிக்கேட்பேன்.அங்கெல்லாம்  தோன்றி துஷ்டர்களை வதைப்பேன்.என்னைவிட்டால் வேறு யாரும் கிடையாது என்கிற ஒரு ஈகோதான். வாத்தியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள் கிக் ஆகிவிடுவார்கள்.

“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை ” என்று பாட்டு ஆரம்பித்ததும் விசில் பறக்கும்.

அது ஒரு காலம்.இப்ப பஞ்ச் டயலாக் மாதிரி அப்போ.

வாலி நன்றாக படம் வரைவாராம்.அப்போது விகடனில் மாலி என்பவர் இருந்ததால் இவர் வாலி என்று வைத்துக்கொண்டாராம் இந்த ரங்கராஜன்.



அன்று ஆரம்பித்து இன்று ”விருதகிரி” வரை still batting not out.

இவரைப் பற்றி சில ஆச்சிரியங்கள்:

1.கண்ணதாசன் கோட்டையை உடைத்து உள்ளே நுழைந்தது.
2.இவ்வளவுகோபக்காரனாக இருந்தும் இன்னும் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்.
3.இவர் கூட வந்தவர்கள் எல்லாம் காலாவதி ஆகியும் இவர் இன்னும் பாட்டெழுதுகிறார்.

இவர் கஷ்டப்பட்டு எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்று நினைத்த காலமும் உண்டு.காரணம் பாட்டில் கண்ணதாசன் பாதிப்பு.

இவர் அருமையான பாடல்கள் எழுதி இருக்கிறார். அதே சமயத்தில் வார்த்தை ஜால கவிதை காவியம் மற்றும் சில ரசிக்க முடியாத பாடல்களும்  உண்டு.

இவர் ஒரு ஆல் ரவுண்ட் கவிஞர். ”அடுத்தாத்து அம்புஜத்தப்பார்த்தேளா” “வா வாத்தியாரே ஊட்டாண்டே” “முக்காபுலா முக்காபுலா”"நிலா காயுது”எழுதினார்.

ஆளுங்கட்சிக்கு வழக்கமாக இவர் போடும் “பின் பாட்டு”ம் தாங்க முடியாத ஒன்று. ”அழகிரி நீ ஒரு ஜாங்கிரி”. காலத்தின் கோலம்.சினிமா உலகத்தின் சாமுத்திரிகா லட்சணம்.

என் உள்ளம் தொட்ட பாடல்கள்:(இசை அமைத்தவர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.

கவித்துவமான பாடல்களை நல்ல உச்சரிப்புடன் பாடகிகள்,பாடகர்கள் பாடிஉயிர்க்
கொடுத்தார்கள்.அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

1.பவழக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)எம் எஸ் வி
2.நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி (உயர்ந்த மனிதன்)
3.நான் பாடும் பாடல் (நான் ஏன் பிறந்தேன்)சங்கர் கணேஷ்
4.புத்தன் ஏசு காந்தி பிறந்தது(சந்திரோதயம்) எம் எஸ் வி
5.நாம் ஒருவரை ஒருவர் (குமரிக்கோட்டம்)எம் எஸ் வி
6.உன்னிடம் மயங்குகிறேன்(தேன் சிந்துதே வானம்) வி.குமார்
7.அன்புள்ள மான் விழியே (குழந்தையும் தெய்வமும்)எம் எஸ் வி
8.மன்றம் வந்த தென்றலுக்கு (மெளன ராகம்) இளையராஜா
9.மெதுவா மெதுவா ஒரு (அண்ணா நகர் முதல் தெரு) சந்திரபோஸ்
10.முன்பே வா அன்பே வா (ஜில்லுனு ஒரு காதல் ) ஏ.ஆர்.ரஹ்மான்
11.ஆகாய வெண்ணிலாவே தரை மீது (அரங்கேற்ற வேளை)இளையராஜா
12.கொஞ்ச நாள் பொறு தலைவா (ஆசை) தேவா
13. என்னுள்ளே என்னுள்ளே பல (வள்ளி)இளையராஜா

இன்னும் நிறைய இருக்கிறது. என் ஞாபகத்தில் வந்ததை எழுதினேன்.

எனக்கு தெரிந்து இவர் எழுதிய இரண்டு அருமையான பக்திப் பாடல்கள் 

1.கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (டி.எம்.எஸ்)

2. கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (பூஷணி கல்யாண ராமான்)

பவளக்கொடியிலே முத்துக்கள் (பணம் படைத்தவன்)பாடல் வரிகள்:

பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண் மயில் என்றே பேராகும்

பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தைப் பண்ணாகும்
காலடித்தாமரை நாலடி நகர்ந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்

இந்த காதலன் உள்ளம் புண்ணாகும்

பவழக்கொடியிலே.........

ஆடைகள் அழகை மூடியபோதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும்

பவழக்கொடியிலே.........



10 comments:

  1. Normally I do not put my comments on any site, but yours was an excellent one that I could not resist. The article took me back to those wonderful years of melody. "Unnidam Mayangugiren" is one of my favourites. Don't know what happened to the music director Kumar. Is he still alive?

    Extremely well written article, straight from the heart. Keep it up!

    ReplyDelete
  2. Dear Ravi,
    Nice Write up about Vaali. Ivarin kavidhaigal... acharyam dhan..........

    tv showvil parthadhu - ivarudaiya pirandha naal vizhavil...

    Sonnavarai marandhu vitten.. got it. adhu
    Rajini dhan....... solliya vishayam

    Ramayanathil - Vaali - ivar edhirae yar irundhalum - avarin balam Vaaliku poi vidumam.

    adhu pola than indha Vaali yum. Ivar edhirae naam irundhal, nam balathin paadhi ivaruku poi vidum..
    namakae thirupi kodupar......

    kamal sonnadhu - ennudaiya pada padal ondrai - konjam maatri kodunga endru kaeten. adharku vaali sir ku kobam vandhadhu. yenna kurai, maatra maten enru sonnar.
    naan pidivadhamga marubadiyum kaeten. ezhundhu poi vittar.
    piragu - oru naal - vandhar. gada gada endru ezhudhi koduthu vittu, pesamal senru vittar.
    andha paatu - Unna nenachen paatu padichen
    en kashtam thangama ipadi ezhudhitar......

    "Edhuvum solladha pogadheenga..idhai partha mudhal naal mudhal, reply panna try panninen. mudiyavillai. idhu dhan mudhal reply... varudangaluku piragu - solla mudindha sandhoshathudan,

    with Love,
    Usha Sankar.

    ReplyDelete
  3. Expatguru said...

    // Normally I do not put my comments on any site, but yours was an excellent one that I could not resist.//

    Thanks sir I am honoured.

    // The article took me back to those wonderful years of melody. "Unnidam Mayangugiren" is one of my favourites. Don't know what happened to the music director Kumar. Is he still alive?//

    No he is no more. The writeup about "Unnidam Mayangugiren" see my below link
    http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_11.html

    You can also see the other MD"s writeup in my ”இசை” மற்றும் “இளையராஜா” labels.

    Thanks a lot.

    ReplyDelete
  4. Usha Sankar

    //Ramayanathil - Vaali - ivar edhirae yar irundhalum - avarin balam Vaaliku poi vidumam//

    இது நிறைய பேருக்கு தெரியும் என்பதால் எழுதவில்லை.நானும் டிவி பார்த்தேன்.யூ டூப்லேயும் இருக்கு.ஆனா விரிவா இருக்கு.

    //"Edhuvum solladha pogadheenga..idhai partha mudhal naal mudhal,//

    ஒண்ணு செய்யுங்க.கூகுள் மூலம் ஒரு பிளாக்கர் ஓபன் பண்ணி வச்சுக்குங்க.(கூகுள் மெயில் இருக்கும் என்று நினைக்கிறேன்).அதன் மூலம் கூட நீங்க உங்க பேர்லேயே கமெண்ட் போடலாம். நன்றி.

    ReplyDelete
  5. எல்லாமே முத்துக்கள்!

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லியவற்றில் நிறைய பாடல்கள் வாலி எழுதியது தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.நல்ல பகிர்வு...நன்றி...

    ReplyDelete
  7. தமிழ்ப்பறவைக்கு ஒரு ரீப்பிட்டே ;)

    ReplyDelete
  8. நன்றி சித்ரா

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said...

    // நீங்கள் சொல்லியவற்றில் நிறைய பாடல்கள் வாலி எழுதியது தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.நல்ல பகிர்வு...நன்றி...//

    மலரே குறிஞ்சி மலரே(டாக்டர் சிவா),ஒரு நாள் யாரோ(நாணல்),தாமரைக் கன்னங்கள்(எதிர் நீச்சல்)
    இதெல்லாம் கூட எனக்குப்பிடித்த பாட்டு. ரொம்ப நீண்டு விடும் என்று எழுதவில்லை.

    ReplyDelete
  10. நன்றி கோபிநாத்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!