இந்த வாரமும் காதல்கதைகள்தான்.
படம்: ?? இயக்குனர்: ராம்
முதல் படம் அனிமேஷனோடு நிஜ கேரக்டர்கள். இயக்குனர்-ராம் அரைப்படம்தான் பார்த்தேன்.படத்தின் பெயர் தெரியவில்லை.பார்த்தவரையில் ஓகே ரகம். நடுவர்கள் ஆகா ஓஹோ என்றார்கள். அப்படி ஒன்றும் தெரியவில்லை.
படம்: ஈர நிலம் இயக்குனர்: கல்யாண்
ஒரு இரவு நேரத்தில் காலில் குண்டடிப்பட்டு கடலில் அலைந்து வரும் சுதா என்ற பெண்ணை ஒரு மீனவ இளைஞன் ஒருவன் காப்பாற்றுகிறான்.அவள்
ஒரு ஈழப்போராளி.ஈழ அகதி முகாமிலிருந்து தப்பி வரும்போது இந்திய கடல்படையினரால் சுடப்பட்டாள்.
அனாதையான இளைஞனுக்கு அவள் வரவு வாழ்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. காதலிக்கிறான்.அவள்?ஒரு வாரம் கழித்து திரும்பி தன்னை இந்திய கடல் எல்லையில் கொண்டுபோய் விடச்சொல்கிறாள். விட்டதும் “எனக்கும் உன் மேல காதல் இருக்கு. திரும்பி வந்த திருமணம் செய்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு போகிறாள்.
எனக்குப் பிடித்தது.படத்தில் உயிர்துடிப்பு இருந்தது.அவளைத் திருப்பி கொண்டுவிடும்போது “முதன் முதலா கடலுக்குப் போற மாதிரி இருந்திச்சு” வசனம் அருமை.முடிவில் அலை அடித்து பின் போகும்போது ஈரமணலில் “சுதா” என்று தென்படுவதும் அருமை.
படம்: முள் இயக்குனர்: அஷோக்
டைட்டிலில் ”முல்” என்று போட்டிருந்தார்கள். ஆரம்பமே சரியில்லை.
யாரோ ஒரு பெண் மெமரி லாசாகி ஒரு என்கவுண்டர் போலீஸ்காரரிடம் அடைக்கலம் ஆகிறாள். மருந்து மற்றும் பல விஷயங்கள் கொடுத்தும் அவளால் தான் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இடையில் எ.போ. அவளும் காதலாகிவிடுகிறார்கள்.ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார்கள்.
ஆனால் அவள் ஒரு போராளி.தான் யார் என்பது ஒரு கட்டத்தில் தெரியவர தன்னுடைய கூட்டளிகள் இடத்திற்கு ஓடி விடுகிறாள்.எ.போலிசுக்கும் பின்னால தெரிய வருகிறது.
கூட்டாளிகள் அந்த எ.போலிசைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த எ.போலீசுக்கும் அவளைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். இக்கட்டான நிலையில் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அவள் அவனையும் அவன் அவளையும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அவள் மூணுமாத கர்ப்பம்(?).
வித்தியாசமான கரு.எடுத்தவிதம் தாங்கமுடியவில்லை.படு டிராமத்தனம்.சுத்தமாக உயிரே படத்தில் இல்லை. நடிப்பு ???????????? அதுவும் அந்த பெண்மணி?
படம்: ஒரு ஊர்ல இயக்குனர்: ராஜ்குமார்கூட்டாளிகள் அந்த எ.போலிசைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த எ.போலீசுக்கும் அவளைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். இக்கட்டான நிலையில் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அவள் அவனையும் அவன் அவளையும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அவள் மூணுமாத கர்ப்பம்(?).
வித்தியாசமான கரு.எடுத்தவிதம் தாங்கமுடியவில்லை.படு டிராமத்தனம்.சுத்தமாக உயிரே படத்தில் இல்லை. நடிப்பு ???????????? அதுவும் அந்த பெண்மணி?
சொந்த மாமன் மகளின் மீது காதல் பிணி வந்து அவளை சைக்கிளில் டபுள்ஸ் (முன் பக்க பாரில்)வைத்துக் கொண்டு ஒரு நாள் போக வேண்டும் என்று வெகு நாள் ஆசை. அதற்காகவே சைக்கிள் கேரியரை எடுத்து
விடுகிறான்.ஆனால் நிறைவேறவில்லை.
அவளுக்காக பட்டம் பிடிக்க ஓடிப்போய் காலில் நெருஞ்சி முள் குத்தி பெரிய கொப்பளம் வந்து படுத்துவிடுகிறான்.கொப்பளம் உடையவில்லை. அவன் ஆயா அதை ரண சிகிச்சை செய்ய முயல்கிறாள். வலி பயத்தில் அடம்பிடித்து மறுக்கிறான்.அவள் வந்து அவனை எழுப்பி (டாக்டரிடம் போக?)தன்னோடு அணைத்து முத்தம் கொடுக்க அவன் கால் தரையில் அழுந்தி கட்டி உடைகிறது.
முத்தம் அனஸ்தீசியாவா?
பிடித்திருந்தது.முதல் காட்சியே உயிர்துடிப்போடு ஆரம்பம்.கிராமத்திற்கே கொண்டுபோய்விட்டார்.அதுவும் கதாநாயகன் படுத்திருக்கும் ரூம்(குச்சு?) வித்தியாசம். எடுத்தவிதமும் திருப்தி அளிப்பதாக இருந்தது.கதாநாயகியின்
கண்கள் மட்டும்தான் காட்டப்படுகிறது.
அவளை முன் பாரில் வைத்துக்கொண்டு போவதுதான் தன் காதல் லட்சியம் என்கிற மாதிரி போய் கதை வேறு பக்கம் போகிறது.இதுதான் குறை.
இதுதான் சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
பட டைட்டிலில் ஒரு குறள் காட்டப்படுகிறது. அது:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து
அர்த்தம்:நோய் தீர அதற்கு எதிரான மருந்து வேறாக இருக்கிறது.ஆனால் இவளாள் ஏற்பட்ட (காதல்) நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.
குறும்படத்தில் குறுகலான திருக்குறள்?
Boss, can i have your contact # to discuss more?
ReplyDeleteBoss, can i have your contact # to discuss more to ilamurugu at gmail dot com
ReplyDeleteவாங்க இளா. நான் மெயில் அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteநன்றி.
சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், சிறந்த படத்தை.... :)
ReplyDeleteசகோ, முதல் படமும் நன்றாக இருந்தது. அனிமேஷன் காட்சிகளை வைத்து கொஞ்சம் கூட நாடகத்தனம் இல்லாமல் எடுத்திருந்தார்கள். அதில் வரும் அனிமேஷன் காட்சிகளின் நிறங்களும் பளிச்சென்றும், அடிக்காதவண்ணமும், மனதிற்கு இதமாகவும் மொத்தத்தில் நன்றாக இருந்தது.
ஈரநிலமும் நன்றாகவே இருந்தது. கடற்கரை எழுத்து, நாயக, நாயகியின் உடைகள், கடல் காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது.
முள் படம் எனக்கும் பிடிக்கவில்லை. கதை நல்ல சிந்தனை. நாயகியை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம். சுத்தமாக வரவில்லை நடிப்பு.
உங்கள் ரசனையும் நன்றாக இருக்கிறது சகோ...
---
என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/
என் வண்ணங்களைக் காண. - http://www.kavi-oviyam.blogspot.com/
நன்றி கவிநா.
ReplyDeletehmmm.. இந்த வாரம் பாக்கலை சார்...:(
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete// hmmm.. இந்த வாரம் பாக்கலை சார்...:(//
எங்கள பாக்க வந்துட்டீங்களே!
Nanbarea vanakam,
ReplyDeletethangal kuripititrukum ram padathin peyar february 14, ram enoda nanbarthan. antha padatha nenga fulla pakamayea sumar nu eppadi vimarsanam panalam. ethu nala vimarsanathuku ALAKA? vimarsanam panrathunu achu atha sariya panunga boss. ethuku munadi en nanbar ravi padathayum eppadithan pathi padathay parthu vimarsanam seytherkal. meendum athea kathai..
thangal meal nala mathipu engal muuvarukumea undu. athanalthan ethay solrean.
pin kuripu : february 14 story enudayathuthan..
nanri
இது சொந்த ரசனை சார்ந்து எழுதப்படுகிறது. நான்தானே ரசிக்கவில்லை. பெரும்பாலோர் ரசித்தார்களே?
ReplyDelete//ethuku munadi en nanbar ravi padathayum eppadithan pathi padathay parthu vimarsanam seytherkal. meendum athea kathai..//
நீங்கள் சொல்பவர் ரவிக்குமாரா? ”அவன்,அவர்கள், அது” படமா? பவர்கட்டினால் பார்க்கமுடியவில்லை என்று யூ டூபில் பார்த்து எழுதினேன்.நன்றி கூட சொன்னீர்களே?
நன்றி.
Nanri.
ReplyDelete