இந்த வாரம் ஆரம்பிக்கும் போதே நடுவர்கள், எடுக்கும் குறும்படங்களில்“out of box thinking" "lateral thinking, இருக்கனும் என்று ஆரம்பித்தார்கள். ஆனால் படங்கள் படு சொதப்பல். ஒன்றைத் தவிர மீதி குறும்படங்கள் ”வெத்து” படங்கள் ஆகிவிட்டது.
போன வாரம் 3-10-10
படம்: “காதல் கடிதம்” இயக்குனர்:சரத் ஜோதி
அருணுக்கு மது மேல் காதல். காதலைச் சொல்ல குறுஞ்செய்தி/இமெயில்/ பேஸ் புக் போன்றவைகளை பயன்படுத்தாமல் தாளில் தன் கைப்பட கடிதம் எழுதி காதலை தெரிவுபடுத்துவதுதான் காதலின் மதிப்பு என்று நினைத்து எழுதுகிறான்.
எழுதிமுடித்தவுடன் கடிதம் ஜன்னல் வழியாக பறந்துபோய்விடுகிறது. மிகுந்த வருத்தமடைகிறான். அப்படியே பறந்து ஒரு சிறுவன்/சிறுமி/கோணி விற்பவன்/பூக்காரி/ மதுவின் அம்மா மூலமாக மதுவின் பெட்ரூம் டேபிளுக்கு வருகிற்து.( பூ வாங்க வரும் மதுவின் அம்மாவிற்கு பூக்காரி அதில் பூவை வைத்து கொடுப்பதால்).அப்போது அவளும் தன் காதலைச் சொல்ல ஒரு கடிதம் தன் கைப்பட எழுதிக்கொண்டிருக்கிறாள்.
இடையில் அதைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சியாகி தன் கடிதத்தை கசக்கி விடுகிறாள். நேரில் பார்த்து தகவலைச் சொல்கிறாள்.தன் காதலையும் சொல்கிறாள். அவனும் இன்ப அதிர்ச்சி. காதல்தான் கைக்கூடி விட்டதே என்று கடிதத்தை “பொக்கிஷமாக” பாதுகாக்காமல் ரோடில் குப்பையாக போட்டுவிட்டு கைக்கோத்து நடக்கிறார்கள்.
காதல் கடிதம் சாதல் கடிதம் ஆகிவிடுகிறது.
குறுஞ் செய்தி காலத்தில் காதல், கடிதத்தில் சொல்லப்படுவது புதுமை. ஒரு ஐடியல் அல்லது பெண்டசி சம்பவத்தைச் சொன்ன விதம் நன்றாக இருந்தது.
இசையும் அருமை.
கிராபிக்ஸ்ஸில் கடிதம் பறப்பது செயற்கையாக இருந்தது.கிராபிக்ஸ்ஸால் யதார்த்தம் நீர்க்கிறது.படிக்கும் போது கடிதத்தில் முகம் தெரிவது எல்லாம் 1965ல் வந்துவிட்டது.
பிடித்திருந்தது.
இதுதான் இந்த வார சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
படம்: “யமுனா” இயக்குனர்:அருண்வரதன்
ஒரு பாலியல் தொழிலாளியின் காதல். கதை புரியவில்லை.சொதப்பல் இயக்கம்.மட்டமான திரைக் கதை.மலையாள இயக்குனர். கேரக்டர்கள் மலையாளத்தில் முணகுகிறார்கள்.செட்டிங்ஸ் நன்று.
பாலியல் தொழிலாளி என்றாலே வாயில் வெத்தலபாக்கு குதப்பனமா?
படம்: “பூஜ்யம் ஒன்று” இயக்குனர்:எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
இது எந்திரன் காதல்? ஹரிஷ் பிரியாவைக் காதலிக்க ஆனால் அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தான் உருவாக்கிய “ஹல்” என்ற பெயருடைய பேசும் கம்புயூட்டரை ப்ரியாவை எப்படி கவருவது என்று கேட்கிறான். அவளுக்கு காதல் கவிதைகள் பிடிக்கும் எழுதிக் கொடு என்கிறது.
ஆனால் இவனுக்கும் கவிதைக்கும் 1000 மைல் இடைவெளி.அதனால் அதுவே எழுதிக் கொடுக்கிறது.தான் எழுதிய கவிதையாக கொடுக்கிறான். படித்துவிட்டு காதலாகிறாள் ஹரிஷ் மீது.
தினமும் கவிதை எழுதிக்கொடுத்து ஒரு கட்டத்தில் இதுவும் ப்ரியா மேல் காதல் கொள்கிறது.அவன் திருமணம் செய்துக்கொள்ள உத்தேசித்தவுடன் இது தன்னை ஷார்ட் சர்க்கீயூட் செய்து விட்டு காதல் தோல்வியில் இறந்து
விடுகிறது ஹல்.எந்திரன் மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால்.
இறப்பதற்கு முன் 500 கவிதைகள் எழுதிக்கொடுத்துச் சாகிறது.ஹரிஷ் சொச்ச நாளை ஓட்டுவதற்கு?அவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்?தெரிந்தால் ஹரீஷ் ஆல்சோ ஷார்ட் சர்க்கீயூட்?
ஓகே ரகம். சுட்டுவிட்டதாக நடுவர் பிரதாப் சொன்னார்
ஹரிஷ் காதல் முயற்சி செய்யும் கட்டத்தில் “வர வர உன் மேல கோபம் கூட வர மாட்டேங்குது” என்று ப்ரியா சொல்வது யதார்த்தமான நகைச்சுவை.
படம்: “மன்னிப்பாயா” இயக்குனர்:பாலா
சர்ச்சில்தான் காதல் ஆரம்பிக்கிறது.நாயகன் கரோலின் (?) என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.அவளும் ஓகே. (இருவரும் கிறிஸ்துவர்கள்). ஆனால் அவள் வீட்டில் நாட் ஓகே.அதனால் அவளுக்கு வேறு இடத்தில் திருமணம்.
இரண்டு வருடம் கழித்து அதே சர்ச்சில் சந்திக்கிறார்கள்.மறுபடியும் ஐ லவ் யூ என்கிறான். ஏன் என்றால் அவன் “மனதில் பட்டதைச் சொல்பவனாம்”.
இன்னும் அவளை காதலிக்கிறானாம். Do you want chicklets? என்கிறாள். படம் முடிகிறது.
கோயில் பிரகாரத்தில் நிறைய காதல் பார்த்தாயிற்று.இதில் சர்ச் பிரகாரம்.அருமை அண்ட் வித்தியாசம்.படபிடிப்பு நன்றாக இருந்தது.இசை நன்று.
மனதில் படம் ஒட்டவில்லை.படத்தில் சுத்தமாக ஆழம் இல்லை.எமோஷன்ஸ் இல்லை.நாயகி வசனத்தை ஓப்பிக்கிறார்.கதாநாயகன் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.ஆனால் சிகரெட் பழக்கம் உண்டாம். காதலிக்கு சிகரெட் பிடிக்காது ஆனால் அவள் சூயிங்கம் மெல்லுகிறாள்.
கதாநாயகன் ரொமப spontaneousஆம். அதைச் சுற்றி கதை? பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே இவர்களை மன்னியுங்கள்!
படம் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
இந்த வாரம் முதல் படம் பாக்க முடியலை சார்..
ReplyDelete‘யமுனா’ ரொம்ப அமெச்சூர். ஸ்கூல் ட்ராமா டைப்...
படம் எடுக்கிறவருக்கு தமிழ் நண்பர்களே கிடையாது போல.ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.மத்தபடி ம்ஹூம்.
‘பூஜ்யம் ஒன்று’- எந்திரன்??? இருக்கலாம். ஹீரொயின் நிறையக் குறும்படத்துல பார்த்த ஞாபகம். ஹீரோ நல்ல தேர்வு.. ஒரு இன்ஃபீரியாரிட்டி கேரக்டர் இருக்க மாதிரி. நல்லா நடிச்சிருந்தார். ஷாட்ஸ் சரியில்லை. முடிவு ஓகே.இருந்தாலும் மனதில் ஒட்டவில்லை.
‘மன்னிப்பாயா’- விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி இருந்தது. கதாநாயகியின் கையிலிருந்து வெட்டிங் ரிங்கை ‘படக்’ கென ஹீரோ உருவும் காட்சி பிடித்திருந்தது. ஹீரோ பாலா படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்புதான் வரவில்லை. ஹீரோயின் சுத்த மோசம்.(நடிப்பும்தான்). வித்தியாசமா ஏதோ சொல்ல் வர்றா மாதிரி இருந்தது. அப்படி எதுவும் சொல்லாம விட்டதுதான் வித்தியாசமோ??? :-(
அடுத்தவாரமாச்சும் நல்ல படங்கள் வரட்டும்....
தொகுப்பாளினி கீர்த்தி போடும் மொக்கை ஜோக்குகள் அவர் சொல்வதால் மட்டுமே ரசிக்க வைக்கிறது.
மதனின் விமர்சனம் அழகு...
பிரதாப் போத்தனுக்கு வெட்டி சம்பளம்...
கே.பி..-- நோ கமெண்ட்ஸ்(எந்திரன் அவதார் கம்பேரிசன்.. ஹா...ஹா....)
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete// இந்த வாரம் முதல் படம் பாக்க முடியலை சார்..//
முதல் படம்தான் நல்லா இருந்தது.
// படம் எடுக்கிறவருக்கு தமிழ் நண்பர்களே கிடையாது போல.ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.
மத்தபடி ம்ஹூம்.//
ஆமாம ஷாட்ஸ் நல்லா வச்சிருந்தாரு.சரியான கவனிப்பு.
// அடுத்தவாரமாச்சும் நல்ல படங்கள் வரட்டும்....
தொகுப்பாளினி கீர்த்தி போடும் மொக்கை ஜோக்குகள் அவர் சொல்வதால் மட்டுமே ரசிக்க வைக்கிறது.//
சரி சரி ஓகேண்ணா.நீங்க ரொம்ப யூத்.
// மதனின் விமர்சனம் அழகு...//
ரொம்ப பதமா சொல்கிறார்.புண்படாமல்
// கே.பி..-- நோ கமெண்ட்ஸ்(எந்திரன் அவதார் கம்பேரிசன்.. ஹா...ஹா....)//
அவருக்கு ”மெசேஜ்” எண்ட் டைட்டில்ல போட்ட புல்லாரிப்பாரு.
நன்றி
நன்றி சித்ரா.
ReplyDelete