இந்த வாரத்திலிருந்து போட்டி ரவுண்ட் ஆரம்பிக்கிறது.
இந்த வாரத் தலைப்பு ”காதல்”. இயக்குனர்கள் எல்லோருக்கும் பிடித்த Genre. காரணம் எல்லோரும் இளைஞர்கள்.இப்படி இளைஞர்களாக இருப்பதால் “மேன்சன்/பிகரு/தண்ணீ/சிகரெட்/லூசுத்தனமான விடலைக் காமெடி” என்று கதைகள் சுற்றி வருவதும் அடிக்கடி நடக்கிறது.
சில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
போன வாரம்-1
போன வாரம்:-2
இந்த வார ஆரம்பப் படமே அசத்தல்.
படம்: கல்லறை இயக்குனர்: தமிழ் சீனு
காதலில் தகவல் இடைவெளி (communication gap) வந்து ஒரு காதலையும் ஒரு நணபனையும் இழக்கிறான் ஒரு இளைஞன்.இதுதான் கதை.
விஜய்க்கு தன் ஆபிசில் வேலைப் பார்க்கும் சுஜியின் மேல் காதல். அவள் பிறந்த நாள் அன்று ஒரு பூச்செண்டுடன் அதை அவளிடம் சொல்ல அவள் வரும் வழியில் நிற்கிறான். ஆனால் அதற்கு முன் அவன் நெருங்கிய நண்பன் மது அதே வழியில் மோட்டர் சைக்கிளில் வந்து அவளுக்கு பூச்செண்டு கொடுத்து பில்லியனின் ஏற்றிக்கொள்கிறான்.
சுஜி சிரித்தபடி ஏறிக்கொள்கிறாள்.பார்த்துவிட்டு விஜய் ”முடிஞ்சது” என்று நொந்து போகிறான்.காதல் தோல்வி.
ஆனால் கதை வேறு.மது ஒரு பிரெண்டாகத்தான் பூச்செண்டைக் கொடுக்கிறான். சுஜிக்கும் விஜய் மேல் காதல்.இரண்டு நாள் கழித்து சுஜி இதை விஜய்யிடம் தெரிவிக்குமாறு மதுவிடம் சொல்கிறான். மது ரொம்ப ஆசையாக ரயில்வே டிராக் அருகே விஜய்யைப் பார்த்து “ டேய்... ஒரு முக்கியமான விஷயம். மது..” என்று ஆரம்பித்து முடிக்காமல் ஒரு ரயில் மோதி மது சாகிறான்.
அவன் காதலைத்தான் ஆசையுடன் சொல்ல வந்து செத்ததாக நம்புகிறான் விஜய்.மதுவின் கல்லறையில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திஒரு வசனம் (எனக்கு மறந்தவிட்டது) பேசுகிறான். நண்பன் மது ஆசைப்பட்டு
விட்டதால் சுஜி மேல் காதல் இல்லை என்பது மாதிரி வசனம்.அதே சமயத்தில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்த வரும் சுஜியின் காதில் இது மட்டும் விழுகிறது. அவளும் தன் காதல் தோல்வி என்று எண்ணுகிறாள்.
காதலும் கல்லறைக்குப் போகிறது தகவல் இடைவெளியால்.
கேமராவில் சொல்லப்பட்ட ஒரு காதல் கவிதை கல்லறை. ஓபனிங் ஷாட்டே அருமை.லோகேஷனே கதையில் ஒன்ற வைக்கிறது.அபூர்வமாக ஆபிஸ் காதல் கதை.குழப்பமில்லாமல் தெளிவான கதைச் சொல்லல்.இசையும் அருமை.நடித்தவர்களும் அருமை.
காதல் வெற்றியை விட காதல் தோல்விதான் சுவராசியமோ?
ரயில் விபத்துதான் சற்று செயற்கையாக இருந்தது போல ஒரு நெருடல்.வேறு விபத்து வைத்திருக்கலாம். முடிந்தவுடன் டைட்டில் கார்டில் ஓடும் இயக்குனரின் பாரதிராஜா டைப் வரிகள் எதற்கு?
இந்தப் படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
படம்: என் அப்பாவின் காதல் இயக்குனர்:மகேஷ் பெரியசாமி
ஒரு காதலி, முன்னாள் விளையாட்டுக் காதலை, இன்னாள் காதலினிடம் சொல்ல இன்னாள் 'get lost" இனிமே என் கண்ணில் முழிக்காதே என்று காதலை கட் செய்துவிடுகிறான்.
தன் அப்பாவிடமும் சொல்கிறான்.
தன் அம்மாவும் முன்னாள் காதல் ஒன்று இருந்து அது சந்தர்ப்பவசத்தால் தோல்வியாகி அப்பாவை கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை என்று தன் அப்பாவின் மூலம் தெரியவருகிறது. அதிர்கிறான்.எப்படி பொறுத்துக்
கொண்டீர்கள் என்கிறான்?
தான் இன்னும் அவளைக் காதலித்துக்கொண்டிருப்பதால் என்கிறார் அப்பா.
தன் தவறை உணர்ந்து காதலிக்கு போன் செய்து மீண்டும் காதல் தொடரும் என்கிறான்.
இதுவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.(அம்மா போன் பேசும்போது கதவை மூடும் இடம்) சில நடிகர்கள் சின்னத் திரையில் பார்த்தவர்கள்.அப்பாவாக நடித்தவர் அருமை.
எனக்குப் பிடித்திருந்தது.அம்மாவின் காதல் என்று இல்லாமல் அப்பாவின் காதல் டைட்டில் அருமை.
குறும்படத்திற்கு எதற்கு professional நடிகர்கள்?
படம்:காதலுக்குப் பொய அழகு இயக்குனர்:பிரின்ஸ்
உண்மைச் சொன்னால் காதலிக்க முடியாது என்று,”காதலுக்குப் பொய அழகு” என்று பொய் சொல்லி இளைஞன் நிறைய பெண்களை காதலிக்கிறான்.அவன் சொல்லும் பொய்கள் “தண்ணீ அடிக்க மாட்டேன்” “ சிகரெட் குடிக்க மாட்டேன்”என்பன.
இதையேதான்(????) எல்லாம் பெண்களும் கேட்டுக் காதலிக்கிறார்கள்.சாயம் வெளுத்தவுடன் அறைகிறார்கள்.
“காசு நாந்தான் கொடுக்கனமோ?” என்ற இடமும் அடுத்து அவன் நண்பன் மேல் அறை விழுவதும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை.லூசுத்தனமான நகைச்சுவையை விட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமான நகைச்சுவை யோசிக்கலாம்.
ஓகே ரகம்.நடுவர்களால் கடுமையாக ஒதுக்கப்பட்டப் படம்.
படம்:சார்... கதை கிடச்சாச்சு இயக்குனர்:மணிவண்ணன்
பட சான்சுக்குகாக ஒரு துணை இயக்குனர் பல காதல் கதைகள் சொல்லி எல்லாம் ரிஜெக்ட் ஆகி கடைசியில் தன் சொந்தக் கதையை சொல்கிறான் ஒரு தயாரிப்பாளரிடம்.தன்னை யாராவது காதலிக்க வேண்டும் என்று பின்நவினத்துவமாக “ பார்க்கில் அழுதபடி” இருக்க ஒரு பெண் பரிதாபம் கொண்டு விவரம் கேட்கிறாள்.அவனுக்கு கவுன்சிலிங் பண்ணி முடித்தவுடன் ஐ லவ் யூ என்கிறான். சொன்னவுடன் அவள் “Chase your dreams not girls" என்று கிளம்பியவுடன் இவனுக்கு love at first speechஆகி விடுகிறது.
தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் ஓகே என்கிறார். ஆனால் கதை பாசீட்டீவ் ஆக முடிக்க வேண்டும் என்கிறார்.எப்படி முடிப்பது என்று யோசிக்கையில் “முடிக்கலாம்” என்று வெளியே வருகிறாள். அவள் இந்த தயாரிப்பாளர் மகள்.
”சார்... கதை கிடச்சாச்சு” என்கிறான்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
எனக்குப்பிடித்தது. முடிவை சுலபமாக யூகிக்கலாம். பழைய குமுதம் கதை.
பின்னணியில் இவர் குரலில் கதை சொல்ல இப்படத்தின் விஷுவலாக ஓடுகிறது. பெரிய கொடுமை ஆடியோ சரியாகவே இல்லை.இயக்குனரே ஹீரோவாக நடிக்கிறார்.
விஷுவலாக படத்தைச் சொல்லத் தெரியாதவர்கள்தான் பின்னணியில் கதை சொல்லுவார்கள் என்று நடுவர் பிரதாப் போத்தன் ஒரு அடி அடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
fine post
ReplyDeletetnteu results
tamilnadu results
india employment results
india results
tnteu.in results
pallikalvi.in results
share prices live
pallikalvi results
useful informative site
tn velai vaaippu
வருகை,கருத்து மற்றும் பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletemrknaughty said...
ReplyDeleteநல்லா இருக்கு
thanks
mrknaughty அவர்களே உங்கள் கமெண்டின் கிழே ஒரு ஆபாச தள லிங்க் கொடுத்துள்ளீர்கள்.அதை அழித்துவிட்டேன்.இது மாதிரி லிங்க் கொடுக்கும் வேலையெல்லாம் இங்கு வேண்டாம்.உங்களை எச்சரிக்கிறேன்.
ReplyDeleteஅன்பான ரவிஷங்கர்,
ReplyDeleteஇந்நிகழ்ச்சியைப் பற்றி பொறுமையுடன் வாரா வாரம் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. :)
இந்த வாரம் நானும் பார்த்தேன். முதல் குறும்படம் (கல்லறை) கிளிஷேவான காட்சிகள்தான் என்றாலும் (ரோஜா பூ கீழே விழுவதும் அவுட் ஆஃப் போகஸில் காதலி இன்னொருவருடன் போவதும்) விஷூவலாக நன்றாக அமைந்திருந்தது. நண்பரின் மேல் ரயில் மோதும் காட்சி சிறப்பாகவே அமைந்திருந்தது. (உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை) அப்போது கதைசொல்லி சற்றும் பதைபதைத்து நகராமல் இருந்தது பொருத்தமானதாக இல்லை. இதை மதன் சுட்டிக் காட்டினார்.
காதலுக்குப் பொய் அழகு' - இதில் சமகால இளைஞர்களின் குணாதியங்களைத்தான் அந்த இயக்குநர் காட்டியிருந்தார். இதற்கு ஏன் நடுவர்கள் அத்தனை கடுமையான ஆட்சேபணை தெரிவித்தார்கள் என புரியவி்ல்லை. அந்தக்குறும்படத்தின் மைனஸ் பாயிண்டே ஒரு முழுமை இல்லாமலிருந்ததுதான். விளையாட்டாகத் துவங்கி விளையாட்டாகவே போய் விட்டது.
அப்பாவி்ன் காதல் மிகவும் கிளிஷேவான சப்ஜெக்ட். கேளடி கண்மணியிலேயே இதெல்லாம் வந்துவிட்டது. குறும்படத்தின் ஆரம்பத்தில் அந்த டிராலி ஷாட் தேவையில்லாதது என்றே நான் நினைக்கிறேன்.
சுரேஷ் கண்ணன் said...
ReplyDelete// இந்நிகழ்ச்சியைப் பற்றி பொறுமையுடன் வாரா வாரம் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. :)//
ஆமாம். ஒரு சிறுகதையை ரசிக்கும் மனநிலையில்தான் பார்க்கிறேன்.
// முதல் குறும்படம் (கல்லறை) கிளிஷேவான காட்சிகள்தான் என்றாலும் (ரோஜா பூ கீழே விழுவதும் அவுட் ஆஃப் போகஸில் காதலி இன்னொருவருடன் போவதும்) விஷூவலாக நன்றாக அமைந்திருந்தது.//
கவனித்தேன்.ஆனால் எழுத மறந்துவிட்டேன்.
ரொம்ப ஷார்ப்பாக பார்க்க வேண்டும்.
// நண்பரின் மேல் ரயில் மோதும் காட்சி சிறப்பாகவே அமைந்திருந்தது. (உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை)//
ஏனோ பிடிக்கவில்லை.செயற்கை?
// காதலுக்குப் பொய் அழகு' - இதில் சமகால இளைஞர்களின் குணாதியங்களைத்தான் அந்த இயக்குநர் காட்டியிருந்தார். இதற்கு ஏன் நடுவர்கள் அத்தனை கடுமையான ஆட்சேபணை தெரிவித்தார்கள் என புரியவி்ல்லை.//
நடுவர்கள் தங்கள் சொந்த சித்தாந்தங்களை படத்தின் மீதி ஏற்றிப் பார்க்கிறார்கள்.எல்லா பெண்களும் சொல்லி வைத்தாற்போல் சிகரெட்-தண்ணீ அடிப்பதுப் பற்றித்தான் கேட்கிறார்கள்.
//அந்தக்குறும்படத்தின் மைனஸ் பாயிண்டே ஒரு முழுமை இல்லாமலிருந்ததுதான். விளையாட்டாகத் துவங்கி விளையாட்டாகவே போய் விட்டது.//
என் முதல் குறும்பட விமர்சனத்திலேயே சொல்லி இருந்தேன். ரொமப விடலைத்தனம் இருக்கிறது.
// அப்பாவி்ன் காதல் மிகவும் கிளிஷேவான சப்ஜெக்ட். கேளடி கண்மணியிலேயே இதெல்லாம் வந்துவிட்டது.//
நல்ல பாயிண்ட்.
// குறும்படத்தின் ஆரம்பத்தில் அந்த டிராலி ஷாட் தேவையில்லாதது என்றே நான் நினைக்கிறேன்//
டெக்னிகல் விஷயம் அவ்வளவுவாகத் தெரியாது.
நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் பார்த்துவிட்டேன் சார்.
ReplyDelete’கல்லறை’ ஆரம்பத்தில் வழக்கம்போல எனத் தோன்றினாலும், முடிவை நோக்கி அழகாகச் சென்றது.கேமரா வொர்க்கில் ஒரு ப்ரொஃபசனலிசம் இருந்தது.மதன் அழகாக விமர்சிக்கிறார்.பிரதாப் போத்தன் ஏன் தான் இப்படிக் கடுப்பேத்துறாரோ தெரியலை.அவர் பேசினா ச்ப் டைட்டில் போடச் சொல்லலாம்.:(
‘அப்பாவின் காதல்’- எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை சார். மெகா சீரியல் மாதிரி இருந்தது. நாட் நல்லா இருந்தாலும் அதைச் சொன்ன விதம் ரொம்ப ட்ராமாதான்.
‘காதலுக்குப் பொய் அழகு’- காமெடியாச் சொன்னாலும், பிரதாப் போத்தன் சொன்ன மாதிரி ஒதுக்கப் பட வேண்டிய படம் இல்லை.(இதே போலதான் இதுக்கு முன்னாடி ஒருதடவை எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு படத்தை நிராகரித்தார்.அப்பவும் எரிச்சல்தான்)
‘சார் கதை கிடைச்சிடுச்சு’- ஆடியோ குவாலிட்டி புவர். இயக்குனரே, நாயகனானது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவிடாமல் செய்துவிட்டது போலும்.
தமிழ்ப்பறவை,
ReplyDelete//கேமரா வொர்க்கில் ஒரு ப்ரொஃபசனலிசம் இருந்தது.//
சூப்பர்.
//பிரதாப் போத்தன் ஏன் தான் இப்படிக் கடுப்பேத்துறாரோ தெரியலை.அவர் பேசினா ச்ப் டைட்டில் போடச் சொல்லலாம்//
ஹா ஹா ஹா ஹா
//‘காதலுக்குப் பொய் அழகு’- காமெடியாச் சொன்னாலும், பிரதாப் போத்தன் சொன்ன மாதிரி ஒதுக்கப் பட வேண்டிய படம் இல்லை//
சரி
//இயக்குனரே, நாயகனானது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவிடாமல் செய்துவிட்டது போலும். // ஆமாம் இது உண்மைதான்.
நன்றி.
தொடர்ந்து பார்க்கிறேன் . நல்ல ப்ரோக்ராம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDelete