Monday, September 27, 2010

கலைஞர் டிவி/குறும்பட விமர்சனம்/26-09-10

இன்றைய (26-09-10) தினம் மூன்று குறும்படங்கள்தான் பார்க்க முடிந்தது. நடுவில் கேபிள் டிவி ஆபரேட்டரிடம் பவர் இல்லை.நான் தவற விட்டது பரிசு வாங்கிய படம். ஹெல்மெட் அணிவது பற்றி பிரசாரம்?


இன்றுடன்  சீசன் - 2 வில் அறிமுக சுற்று முடிகிறதாம். மொத்தம் 36 இயக்குனர்கள் கலந்துக்கொண்டார்களாம். அடுத்த வாரம் ”போட்டி” வாரம் ஆரம்பம்.அதாவது நடுவர்கள் சொல்லும் தலைப்பில் பட எடுக்க வேண்டும்.அது எந்த வகையிலும் இருக்கலாம்.சவால்தான்.தன் செல்லமானதை விட்டு மாத்தி யோசிக்க வேண்டும்.

குறும்படத்தை நான் ரசிப்பது ஒரு சுவராசியமான சிறுகதையை ரசிக்கும் மனநிலைதான்.

  போனவாரம்

இந்த வாரம்:

தலைப்பு: வியூகம்  இயக்குனர்: சுரேஷ் பாபு

ஒருவனை என்கவுண்டரில்”போட்டுத் தள்ள” மற்றொருவனுக்கு அசைன்மெண்ட் தரப்படுகிறது. வியூகம் அமைக்கப்பட்டு போட்டுத் தள்ளப்படுகிறான்.நாம் நினைப்பதுப் போல கட்ட பஞ்சாயத்து என்கவுண்டர் அல்ல.இது போலீசால் “off the record" ஆக செய்யப்படும் என்கவுண்டர்.

அதான் சஸ்பென்ஸ்ஸாம்????

இந்த சஸ்பென்ஸ் முடிச்சு சரியாகப் போட்டு அவிழ்க்கப் படவில்லை.இங்குதான் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.எல்லாம் ஒரே மூஞ்சியாக இருப்பதால் சற்று குழப்பம். சமோசா வெளிபக்கம் நல்லா இருக்கு. ஆனால் உள்ளே மசாலா சரக்கு சரியில்லை. ஓகே ரகம்.

தலைப்பு: இங்கேயும்  இயக்குனர்: எஸ்.கல்யாண்

ஒரு பெரிய காலனி. நடுவில் பூங்கா. குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

பூங்கா பெஞ்சில் வெள்ளைக் கலர் சூடிதார் அணிந்த பெண் (அந்த காலனியை சேர்ந்தவள்) உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.முகத்தில் வருத்தம்.பிளாஷ் பேக் ஓடுகிறது. வீட்டில் அப்பா, இவள் ஒரு பையனுடன் சுற்றுவதாகசந்தேகப்பட்டுத் திட்டுகிறார்.இவள் மறுக்கிறாள்.அடுத்து வேறு ஒரு நாள் பிளாஷ் பேக் ஓடுகிறது அன்றும் அப்பா சந்தேகப்பட்டு திட்டுகிறார்.அன்றும் அழுகையோடு மறுக்கிறாள். அதுதான் உண்மை.

பிளாஷ் பேக் முடிந்ததும் அவள் அதே வருத்தத்தோடு பேசுகிறாள் “காதல் தோல்வி அடைந்தால்தான் தற்கொலை செய்துக்கொள்வார்கள்.ஆனா நானோ யாரையும் காதலிக்கவில்லை என்பதை நம்ப மறுத்த அப்பாவின் சந்தேகத்தினால்  மனமுடைந்து தற்கொலைச் செய்து கொண்டு ஆவியாக இந்தப் பூங்காவில் உட்கார்ந்திருக்கிறேன்”.

ஆம் அவள் ஒரு  ஆவி.

பேசி முடிந்ததும் அவள் பக்கத்தில் ஒரு இளைஞன் வந்து உட்காருகிறான்.அவனைப் பார்த்து அதிர்கிறாள்.”ஆமாம்.. உன் மேல் இருந்த காதலால் உன் பிரிவைத் தாங்க முடியாமல் நானும் தற்கொலைசெய்துக்கொண்டுவிட்டேன்”.

வித்தியாசமான கரு. படபிடிப்பும் உயிர்துடிப்பாக இருந்தது.பழைய பேய் படங்களில் பேய்க்கு யூனிபார்ம் வெள்ளைப் புடவை.இதில் முதன்முதலாக பேய்க்கு வெள்ளை சூடிதார் துப்பட்டா.மாத்தி யோசித்திருக்கிறார் இயக்குனர்.

இசை நன்றாக இருந்தது.

எனக்கு ரொம்ப பிடித்தது இந்த குறும்படம்.

தலைப்பு: தலைப்புச் செய்தி  இயக்குனர்:பிரபாகரன்

செல் போன் மிஸ்யூஸ் செய்யப்படுவதால் நான்கு இளைஞர்கள்  ஒரு துணை நடிகையின் கொலையில் (அவளுக்கு தொல்லைக் கால்கள் வருகிறது) அனாவசியமாக விசாரிக்கப்பட்டு அடி வாங்குகிறார்கள்.

காமெடியாக எடுக்கப்பட்டிருந்தது.ஹீரோ நடிப்பு நன்று.

இவர்கள் மீது தவறில்லை என்று ரிலீஸ் ஆகி வரும் போது ஒருவர் “எனக்கு நிறைய பெண்களிடமிருந்து தொல்லைக் கால்கள் வருகிறது” என்று புகார் கொடுக்க பின்னணியில்  அந்தப் பெண்களை போலீஸ் பெண்டு எடுக்கும் குரல் கேட்கிறது.


இதுவரை பார்த்தப் படங்களை பற்றி யோசிக்கும் போது  சில படங்களில் உள்ளே ஓடும் முக்கியமான இழையை மெயிண்டன் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.  அதற்குப் பதிலாக ஓவர் ஸ்டைல் காட்டுகிறார்கள்.

அடுத்து கடைசியில் டிவிஸ்ட் கொடுக்கும் படங்களில் டிவிஸ்டுக்கு உண்டானதை நன்றாக பில்ட் அப் கொடுத்து டிவிஸ்டுஐ அவிழ்க்க வேண்டும்.

இது பல படங்களில் மிஸ்ஸிங்.8 comments:

 1. நன்றி தியாவின் பேனா.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு... நான் தான் பார்க்கலை...ஹ்ம்ம்ம்...அடுத்த வாரம் பார்க்கலாம்(பவர் கட் ஆகாம இருந்தால்) :-(
  என்ன சார் இந்த வாரம் கீர்த்தி போட்டிருந்த ட்ரெஸ்ஸப் பத்தி சொல்லவே இல்ல....

  ReplyDelete
 3. தமிழ்ப்பறவை said...

  // நல்ல பகிர்வு... நான் தான் பார்க்கலை...ஹ்ம்ம்ம்...அடுத்த வாரம் பார்க்கலாம்(பவர் கட் ஆகாம இருந்தால்) :-(//

  பாருங்கப்பா.வீணாப் போன முழு சினிமாவ பார்கிறத விட இது ஓகே.

  //என்ன சார் இந்த வாரம் கீர்த்தி போட்டிருந்த ட்ரெஸ்ஸப் பத்தி சொல்லவே இல்ல....//

  விடமாட்டீங்களே.ஒரு மாதிரி குறுகுறுன்னு இருக்காங்க கீர்த்தி.இந்த வாரம் ஓகே டிரஸ்தான்.

  ReplyDelete
 4. T.V.ராதாகிருஷ்ணன் said...

  // நல்ல பகிர்வு//

  நன்றி சார்.

  ReplyDelete
 5. Nenga miss panuna Helmet Padam youtubela vanthuruku pathutu vimarsanam podunga.
  athu en nanbarina padam than
  nanri..

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி ARK.SARAVAN. யூ டூபின் லிங்க் கொடுங்கள்.அல்லது அதன் தலைப்பு, இயக்குனர் பெயர் சொல்லுங்கள். தேடினேன் கண்டுபிடிக்க முடியவில்லை.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!