படம் ”சூப்பரா” இருக்குங்க,”சூப்பரா” ஒரு சீன்/பாட்டு பாத்தோம், ”சூப்பர்” டிஸ்கவுண்ட், ”சூப்பர்” சேல்,” ”சூப்பர்”ஆட்டம்,”சூப்பர்”பதிவு”சூப்பர்”கிக் ”சூப்பர்” கலெக்ஷன்,”சூப்பர்” பிகர்,”சூப்பர்” ஹிட், ஏர்டெல் “சூப்பர்” சிங்கர் இப்படியாக இந்த சொல்லை லெப்ட் அண்ட் ரைட் பொழுது விடிஞ்சி பொழுது போனால் இதையே போட்டுத் துவைத்து எடுக்கிறோம்.
பேசிப்பேசியே எல்லோரும் Superintendent ஆகிவிட்டோம்.
கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகத்தான் இந்த சொல் ”சூப்பர்” லோல் படுகிறது என்பதாக என் யூகம்.
இதன் உண்மையான அர்த்தம் தெரியாமல் superficialலாக எல்லாவற்றிக்கும் உபயோகிக்கிறோம்.பல இடங்களில் சும்மா பில்ட் அப் கொடுக்க உதவுகிறது.இதைப் பெற்றுக்கொண்டவர் சாதா மகிழ்ச்சியை விட சூப்பர் மகிழ்ச்சி ஆகிறார். சினிமா வட்டாரங்களில் இது அதிகம்.
அர்த்தம் என்று பார்த்தால் “வழக்கத்தை விட”என்றுதான் இதன் அகராதி அர்த்தம். வழக்கமாக “ஸ்டார்”கள் இருக்கிறார்கள் ஆனால் ரஜினி “சூப்பர் ஸ்டார்” அதே மாதிரி ” பாஸ்ட் டிரெயின்” ”சூப்பர் பாஸ்ட் டிரெயின்”.
சுப்பராயான்களில் பெஸ்ட் சுப்பராயன் “சூப்பர்” சுப்பராயன்?
இந்தப் பொருளில்தான் நாம இதை பெரும்பாலும் பயன் படுத்துகிறோமா? இதன் அர்த்தம் நீர்த்துப்போய் “நல்லா இருக்கு” என்பதற்கு இணையாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.சாதாரண பேச்சு வழக்கில் “அத விட சூப்பர் என்னன்னா...” என்பது அடிக்கடி காணலாம்.
இதற்கு சரியான இணை “ரொம்ப நல்லா இருக்கு”(அருமை?அற்புதம்?) .நாம் தமிழர்கள் அதனால் “சூப்பர்”என்றுதான் சொல்லுவோம். இது சிம்பிளாகவும் வசதியாகவும் இருக்கிறது. வாய் ரொம்ப வலிக்காது.இதன் அருகில் இருக்கும் ஸ்லாங்குகள் ”செம்ம” “தூள்” “அட்டகாசம்” “பட்டைய கிளப்பிட்ட”.
இதன் மூலம் (லோகல் மூலம்) "superb" என்பதாக என் யூகம்.மூலம்
சினிமாக்காரர்கள். சூப்பருப்(பு) என்றால் ஏதோ காசிமேடு கெட்ட வார்த்தைப்போல் இருக்கிறது என்று “பி”யை எடுத்து சைலாண்டாக்கி சூப்பர் ஆகிவிட்டார்கள்.
சூப்பர்..!இது எல்லா தர மக்களும் பேச வசதியாகவும் நாகரிகமாகவும் மற்றும் ”ஆங்கிலம் பேசும் பெருமை”யும் இருக்கிறது.
90களில் சூப்பருக்கு இணையாக ”தூள்” ”அமக்களம்””பின்னிட்டான்”.ஆனால் இது குறிபிட்ட வட்டத்தில்தான் பேசப்படும்.இதற்கு சமீபமாக ”கிளாசா” ”ஏஒன்”“ஏகிளாஸ்””எக்ஸ்லெண்ட்” பல வட்டங்களில் பேசப்பட்டதுண்டு.
80களில் மாணவர்கள் மற்றும் படித்த வட்டாரங்களில் எதற்கெடுத்தாலும் “fantastic" .சொல்லும்போது சிவாஜி கணேசன் உச்சரிப்பு.
ஒரு கவுண்டமணி ஜோக்:
கவுண்டமணி காதலியின் அப்பா: ஏண்டா... என் பொண்ணயே லவ் பண்றீயா? உண்டவீட்டுக்கே ரெண்டகம் பண்றீயா?
கவுண்டமணி: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்ன்னு எல்லோரும் சொல்றீங்க.அப்படின்னா என்னய்யா மீனிங்?
கவுண்டமணி காதலியின் அப்பா: எனக்கு தெரியாது. எல்லோரும் சொல்றாங்க. நானும் சொல்றோன்.
கவுண்டமணி(நொந்துக்கொண்டே): ஏன்யா தெரியாததெல்லாம் சொல்றீங்க...?
Subscribe to:
Post Comments (Atom)
super post
ReplyDeleteசூப்பர் பின்னூட்டம்
ReplyDeleteசூப்பர் இடுகை.... சூப்பர் எழுத்து நடை..... சூப்பர் கருத்து! :-)
ReplyDeleteநன்றி சித்ரா.
ReplyDeleteஸார் நீங்க என்ன இசை கேட்பதை நிறுத்திட்டிங்களா..?
ReplyDeleteஇசையை பத்தி எழுதுங்க ஸார்.. உங்களுக்கு அது நல்லா வருது.. நான் தினமும் வந்து உங்க வலைதளத்தை பார்த்து ஏமாந்து போறேன்.. ப்ளிஸ்...
ரவி, இந்த வார்த்தை ரொம்ப வருஷமாகவே இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்! சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே இதை ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்! சேலத்திலிருந்து வருவார் அவர், என் சொந்தக்காரர்! சென்னையை தாண்டியதில்லை! ஆனாலும், எதெற்கெடுத்தாலும் “சூப்பர் டக்கர்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்! இருந்தாலும், கட்டுரை சூப்பர் :)
ReplyDelete:)))
ReplyDeleteraja said...
ReplyDelete//இசையை பத்தி எழுதுங்க ஸார்..//
ஒரு வாரம் முன்பு “ஏழுமலையான் மகிமை” பாடல் பற்றிப் போட்டேன்.உங்கள் பின்னூட்டம் காணோம்.
// இசையை பத்தி எழுதுங்க ஸார்.. உங்களுக்கு அது நல்லா வருது.. நான் தினமும் வந்து உங்க வலைதளத்தை பார்த்து ஏமாந்து போறேன்.. ப்ளிஸ்...//
உங்கள் ஆர்வத்திற்க்கும் ஆதரிப்புக்கும் நன்றி.
நேரம் பிரச்சனை.அடுத்து நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.ராஜா போட்டால் கொஞ்சம் ஸ்டீரியோடைப் ஆகிவிடும் என்று ஒரு நெருடல்.மற்ற பதிவுகளையும் இசைப் பதிவுக்கு நிகராக செய்கிறேன்.
முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறேன்.
நன்றி.
ரவிஷா said...
ReplyDelete// ரவி, இந்த வார்த்தை ரொம்ப வருஷமாகவே இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்//
நான் காலேஜ்/பள்ளி பருவங்களைப் பற்றி ரொம்ப யோசித்ததில் இது அவ்வளவாக பயன்படுத்தப்படவில்லை என்பது என் கணிப்பு.
//“ டக்கர்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்! இருந்தாலும், கட்டுரை சூப்பர் //
ஏதோ ஒரு வார்த்தை நினைவில் இருந்து ஆனால் பெயர் தெரியாமல் மூன்று நாள் முழித்து கடைசியில் பதிவை வெளியிட்டு விட்டேன். அதுதான் நீங்கள் அனாசியமாக போட்ட இந்த ”டக்கர்”.
”டாப் டக்கர்” என்று சொல்லக்கேட்டுருக்கிறேன்.
பாரதிராஜா ”டாப் டக்கர்”என்ற டைட்டிலில் படம் ஏற்பாடு ஆகி பின்னால் அது “வாலிபமே வா வா” என்றாகிவிட்டது.
நன்றி ரவிஷா.
நன்றி டிவிஆர் சார்.
ReplyDeleteரவிஜி....
ReplyDelete“சூப்பர்” கருத்துக்களை உள்ளடக்கிய ”சூப்பர்” போஸ்டிங்..... பதிவின் அந்த தமிழ்நடை “சூப்பர்”...
அந்த கடைசியில் வருகிற கவுண்டமணி ஜோக் “சூப்பரோ சூப்பர்”.......