எல்லாவற்றிலும் ”மெசேஜ்” எதிர்பார்த்து இன்னும் “நீர்குமிழி” காலத்தில் இருக்கும் கே.பாலசந்தர் இந்த வாரமும் ரீமோட் நீதிபதி. குறும்படம் எடுப்பவர்கள் கடைசியில் “ இந்தக் கதையின் மூலம் அறியப்படும் நீதி” என்று டைட்டில் போட்டு குறும்படத்தை முடிக்கலாம்.
நடுவர் தாத்தாக்கள்(மதன்/பிரதாப் போத்தன்) வழக்கமான தங்கள் சூட்டுகளில் வந்து விமர்சித்தார்கள்.அவர்களுக்கு புரியாவிட்டால் மறு முறை பார்க்கும் வசதி இருப்பது அவரது பேச்சின் இடையே தென்பட்டது.ஆனால் தொலைக்
காட்சிப் பார்பவர்களுக்கு அந்த வசதி இல்லை.
நேற்று கேடிவியில் “சீவலப்பேரி பாண்டி” படம் பார்த்தேன். ஒரு ஆச்சரியம் அதை இயக்கியவர் பிரதாப் போத்தன்.
போவதற்கு முன்.....
இந்த வாரம் ஒரு அப்பட்டமான காப்பி அடித்த குறும்படம் திரையிடப்பட்டது.பின்னால் பார்ப்போம்.
படம்: மாயக்கண்ணாடி இயக்குனர்: பிரின்ஸ்
சினிமாவில் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் (அதிகாரம்/அடிபணிதல்) ரோலில் நடித்தவர்கள் நிஜ வாழ்வில் அப்படியே எதிர்மறையாக இருப்பதுதான் கதை.
முதலாளியாக நடித்த துணை நடிகர் கூலி உயர்வு கேட்கும் தொழிலாளியாக நடித்த ஹீரோவை படபிடிப்பில் தவறாக காலில் எத்தி எல்லோரிடமும் திட்டு வாங்கி படபிடிப்பு முடிந்து, அதனால் குறைந்த பேட்டா வாங்குகிறான்.
படபிடிப்பில் தொழிலாளி என்ன வசனம் பேசினானோ அதே வசனத்தை முணு முணுத்தபடி வீடு திரும்புகிறான்.
படபிடிப்பில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது மாதிரி உண்மையிலும் வைத்திருக்கலாம்.படம்தான் பார்க்கிறவர்களுக்குப் புரிகிறதே ஏன் கடைசியில் கோனார் நோட்ஸ்?
பிடித்திருந்தது.
படம்: நண்பன் வாங்கி தந்த (லட்)டீ இயக்குனர்: மணிகண்டன்
நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் காதலித்து ஒரு பெண்ணுடன் ஓடிவிட அதனால் மற்றவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் லத்தியால் பெண்டு எடுக்கப்பட்டு நொந்து போய் ரீலீஸ் ஆகிறார்கள். ரீலீஸ் கூடஇரண்டு குடும்பமும் சமாதானமாகி விடுவதால்தான்.அவர்கள் சமாதானம் இவர்கள்?
அடி வாங்கும் ஒருவன் “ பொண்ண கண்ணால கூட பாத்தது இல்ல” என்று சொல்லியபடி வெளிவருவது சூப்பர்.அவர் நடிப்பும் அருமை.லோகேஷன் மற்றும் படபிடிப்பு நன்று.பிடித்தும் இருந்தது.
படம்: அன்பின் வலி அது இயக்குனர்:ஆளி பிரகாஷ்
இது நெட்டில் பார்த்த ஒரு ஆங்கில குறும்படத்தின் காப்பி.
பகல் நேரம். ஆடகள் புழக்கம் குறைவான வயல்வெளி. ஒரு திசையில் நாய் குரைக்கும் சத்தம் அதை தொடர்ந்து வலியில் கத்தும் குரல்.ஒருவர் அருவாளுடன் சத்தம் வந்த திசையை நோக்கி திகிலுடன் போகிறார்.கேமராவும் தொடர்கிறது.
மீண்டும் நாய் குரைக்கும் சத்தம் .
ஓலம் அதிகமாகி ஒரு இடத்தில் அகட்டிய கால்கள் காட்டப்பட்டு ரத்தம் வழிகிறது.அதைப் பார்க்கிறார் அருவாள் மனிதர். வாயடைத்துப்போய் ஓடி சோளக்கொல்லை பொம்மையில் இருக்கும் புடவைத்துணியை எடுத்து வந்து அந்த கால்களின் மேல் போத்துகிறார்.
சஸ்பென்ஸ் உடைகிறது.
அது ஒரு on the way பிரசவம்.அகட்டிய கால்கள் பக்கத்தில் உள்ள பெண்மணி அப்போதுதான் பிறந்த குழந்தையை கையில் வைத்து இருக்கிறார்.
நடுவர்கள் யாரும் இதன் ஒரிஜனலைப் பார்த்ததாக தெரியவில்லை.இதற்கு கேமராவிற்கு உண்டான பரிசு கிடைத்தது.
படம்: 7 குறுக்கு 2 நெடுக்கு இயக்குனர்:அழகு ராஜா
சவ ஊர்வலத்தில் ட்ரம்பெட்(requiem என்னும் இறந்தவர்களுக்கு அல்லது அவர்களின் ஆத்மாவிற்கு வாசிக்கும் இசை) வாசிக்கும் விளிம்பு நிலை இளைஞனின் காதல் தோல்வி கதை.
காதலிக்க ஆரம்பித்து அதை சொல்ல முடியாமல் தவித்து கடைசியில் தன் செல் நம்பர் கொடுத்து பேசச் சொல்கிறான். ஆனால் அவளிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.அவள் தன் நண்பியின் திருமணத்திற்குப் போய்விடுகிறாள்.
இரண்டாவது நாள் ஒரு சவ ஊர்வலத்தில் ட்ரம்பெட் வாசித்தப்படியே வழியே போகும் போது ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.கை வாசிக்க முடியாமல் நடுங்குகிறது.அது ரோடில் “நீத்தார் அஞ்சலி” போஸ்டரில் இவள் காதலியும் அவள் நண்பியும் ஒரு விபத்தில் இறந்த செய்தியுடன்.
இவன் வாசித்துக்கொண்டிருக்கும் சவ ஊர்வலம் அவளுடையதுதான்.
துக்கத்தில் வாசிக்க முடியாமல் போக இவனை துரத்தி விடுகிறார்கள். மறு நாள் இரவு தனியாக போய் அவள் சவக்குழியைத் தோண்டி அவளுக்கு requiem வாசிக்கிறான்.
மற்ற சாவுகளை இவன் அலட்சியமாக பார்க்க இவள் சாவு இவனைப் படுத்துகிறது.
முடிவை யூகித்து விடலாம் என்றாலும் கரு வித்தியாசமாக இருந்தது.வழக்கமாக சாவு கானா பாட்டு இல்லாமல் டிரம்பெட் வித்தியாசம்.
தலைப்பு வித்தியாசமான தலைப்பு.பிணம் எடுக்கும் பாடையைக் குறிக்கிறது.அவனின் செல் காலர் டியூனும் “சாவு ட்ரம்பட் இசை”.சூப்பர்.
எல்லாமே நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்தது.
சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது நண்பன் வாங்கி தந்த (லட்)டீ.
: 7 குறுக்கு 2 நெடுக்கு ENAKKU PIDITHATHU.
ReplyDeleteNANDRI SAAR.
நன்றி Aditya.
ReplyDeleteCurrent illai athanal kadaisi 3 padamthan parthen sir.'nanban vangi thantha lattea' ok. Innum konjam comedy z panni irukkalam. 'anbin vali athu' enakku pidikkalai.'7nedukku 2 kurukku' parava illai.nandrakavae irunthathu.innum konjam edit panni irukkalaam. Sorry for english sir.system problem.
ReplyDeleteஎன் தம்பி "நாளைய இயக்குனர்" பார்த்தான்னா நான் தொலைஞ்சேன். விடாம புடிச்சு வச்சு கதை சொல்ல ஆரம்பிச்சுருவான். எப்படியோ ஒவ்வொரு வாரமும் தப்பிச்சு வந்தேன். இப்போ இங்க மாட்டிக்கிட்டேன். எல்லாப் படமுமே நல்லா இருக்கு. என் பார்வையில் இது இளைய (நாளைய) இயக்குனர்களை ஊக்கப்படுத்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வழிவகுக்கும் ஒரு சிறந்த நிகழ்ச்சி. நல்ல பகிர்வு ஜி. நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteநீங்களும் முடிந்தால் நாளைய இயக்குனர் பாருங்கள்.10 நிமிடத்தில் ஒரு சிறுகதை என்று கோணத்தில் பார்க்கவும்.
தமிழ்ப்பறவை said...
ReplyDeleteฝฝ'7nedukku 2 kurukku' parava illai.nandrakavae irunthathu.innum konjam edit panni irukkalaam.ฝฝ
ํำYes. You are right.
Thanks Parani Kumar