Wednesday, September 8, 2010

இளையராஜா-ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி டூயட் - பி.பி..ஸ்ரீநிவாஸ்


ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளும் பத்மாவதி தாயாரும் பாடும் டூயட்.ஹிந்தோள் ராகம்? தெரிஞசா சொல்லுங்க பதிவர்களே..!

அருமையான தெலுங்கு மெலடி.மேஸ்ட்ரோவும் ஜானகியும் பாடுகிறார்கள். படம்: ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி.தமிழில் ஏழுமலையானின் மகிமை.படத்தில் கண்ணழகி பானுப்ரியா அண்ட் அருண்கோவில்.மற்ற பாடல்களும் இனிமை.


ஆரம்ப வயலின் இசை அருமை.நடுவில் வயலின் 2.58-3.15 அண்ட் 3.25-3.28 புல்லாங்குழல் அருமை.பெருமாளுக்கு தனி பக்தி இசைக்கோர்ப்பு?

தெலுங்குப் பக்திப் பாடல்களில் வரும் உணர்ச்சியை இப்பாடலிலும் காணலாம்.



என் அபிமான வெல்வெட் குரல் பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரே ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது.இன்னும் இனிமை மாறவில்லை. படம்: கடவுள் அமைத்த மேடை.(1979).
 


மேஸ்ட்ரோ இசையில்  இவர் குரலில் பாட்டு கேட்பது வித்தியாசமாக இருக்கிறது.

ரசிக்க வைக்கும் வரிகள்.

0.19-0.30 இசையில் ததும்பும் உணர்ச்சிகளை கவனிக்கவும்.பழையகிளாசிக் மேஸ்ட்ரோ  இசை.”தென்றலே நீ பேசு” பி.பி.ஸ்ரீனிவாஸ்காரு எடுக்கும் இடம் இனிமை.சிவரஞ்சனி ராகம் சாயல் சில இடஙகளில்.

”வார்த்தைகள் தேவையில்லை... அன்பை நாம் பாராட்ட” அருமையான இடம்.




ஏழுமலையான் மகிமை தமிழ் பாடல்கள் கேட்க:
(தெலுங்குப் பாடலின் தமிழ் வெர்ஷன் “எந்த ஜன்மம்”)

ஏழுமலையானின் மகிமை

ஸ்ரீஏடு கொண்டல சாமி சாங்கஸ் டவுன்லோட்

4 comments:

  1. ஏழுமலையான் மகிமை- தேவகானம் போங்க...
    அந்தப் பீரியடுக்குன்னு இல்லாம லேட்டஸ்டான கம்போஸிசன்.
    ராஜாவின் குரலில் ‘ழ’வைக் கேட்பதே அழகு...

    ‘தென்றலே நீ பேசு’ இதமாகப் பேசியது(பாடியது).

    எம்.ஜி.ஆருக்காக இளையராஜா ஒரு பாடல் பாடியதாக எங்கோ படித்த ஞாபகம்.. இப்பதிவைப் படிக்கும் ராஜ ரசிகர்கள் அதுபற்றி விபரமும், பாடல் இருப்பின் பாடலும் தந்துதவினால் மகிழ்வேன்...

    ReplyDelete
  2. //ஏழுமலையான் மகிமை- தேவகானம் போங்க...//

    எனக்கு தெலுங்கு வெர்ஷன் பிடித்திருந்தது.

    //ராஜாவின் குரலில் ‘ழ’வைக் கேட்பதே அழகு...//

    சூப்பர் அண்ணாச்சி.ரெண்டு வெர்ஷனையும் கேட்டீங்களா?

    //எம்.ஜி.ஆருக்காக இளையராஜா ஒரு பாடல் பாடியதாக எங்கோ படித்த ஞாபகம்.. //

    படம் பூஜைப்போட்டதாக ஞாபகம்.பாடியதாக ஞாபகம் இல்லை..?

    நன்றி.

    ReplyDelete
  3. யப்பா..எப்படி தான் இந்த பாட்டை எல்லாம் கண்டுபிடிக்கிறிங்களோ..நன்றி தல ;)

    ReplyDelete
  4. நெட்ல தேடினா கிடைக்கும். நன்றி கோபிநாத்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!