Monday, September 13, 2010

கலைஞர் டிவி-குறும்படம் (12-09-10)

இந்த வாரம் குறும்படம் என்பதை விட “அருண் படம்”என்று சொல்லலாம். போட்டியில் கலந்துக்கொண்ட மூன்று குறும்பட இயக்குனர்கள் பெயர் அருண்.


தொகுப்பாளினி கீர்த்தி “கடல் கன்னி” உடையில் அசத்தினார். இந்த வாரம் சிறப்பு விருந்தினர் யாரும் இல்லை. என்னை யாரும் கூப்பிடவும் இல்லை(?).போனவாரம் 5-9-10

படம்:பிரேதயா இயக்குனர்: அருண் வரதன்


சாவுக்குப் பிறகு வாழ்வு உண்டு என்று நம்பாத ஒரு பெண் மனைவியான பின் தன் சாவுக்கு(கொலை) பிறகு வாழ்வு உண்டு தெரிந்துக்கொள்வதுதான் கதை.


Life after death என்ற வித்தியாசமான கரு.


கணவன் தன் மூதாதையர் வாழ்ந்த வீடு என்று ஒரு அரதப்பழசான வீட்டிற்கு அழைத்துப்போய் ஒவ்வொரு மனைவிகளையும் கொல்கிறான். அவ்வாறே தானும் கொல்லப்படுவதை இறந்த பிறகு ஆவியாக பார்க்கிறாள்.


இயக்குனர் கேரளாவானதால் மனைவி பேச்சில் கேரள நெடி.வழக்கமான திகில் கதைக்கு உண்டான நடு ராத்திரி,மர்மமான சாவு,வெள்ளை உடை, புகை, கைகள்,”வீல்” கத்தல்.மாத்தி யோசிங்க..!


மேக்கிங்? ஏதோ மிஸ்ஸிங்.


பிரேதயா.... மனைவி பிரேதம் ஆனா பிறகு தெரிந்துக்கொள்வதாலா?


படம்: ஈசல் இயக்குனர்: அருண் ராஜா காமராஜ்


புரிந்துக்கொள்ளாத short tempered (காதலி " fuck" என்று பேசும் இடங்களில் வசனம் muting (டிங்)செய்யப்பட்டுள்ளது) காதலி, காதலனை “செத்துத் தொலை” என்று சபிக்க காதலன் மன உளைச்சலுக்கு ஆளாகி பைக்கில் வேகமாகப்போய் ஒரு முன் பின் தெரியாத இளைஞன் மீது மோதி முபிதெஇ சாகிறான்.காதலன் சாகவில்லை. சாவதற்கு சற்று முன்தான் அந்த முபிதெஇ செல்லில் ” ஐ லவ் யூ” (வேறு ஒரு பெண்)சொல்லி காதல் மலர்ந்த தருணம்.


இரண்டு காதல்களை மாறி மாறி குழப்பாமல் காட்டி அசத்தி இருந்தார். இறந்தவனின் காதலியை காட்டாமல் இருந்தது வித்தியாசம். ஆனால் ஏன் அவர் தமிங்கிலிஷ் பேசுகிறார்.


அருமையான படபிடிப்பு அண்ட் இசை.நடித்தவர்களும் அருமை.இறந்துப் போன காதலன் நடிப்பு அருமை.


எனக்குப் பிடித்தது.


படம்: பயத்திற்கு அப்பால் இயக்குனர்:கார்த்திக் பாலாஜி


Muscular Dystrophy (தசைகளை சுருங்க வைத்து மனிதனை இயங்கவிடாமல் முடக்கும் கொடுமையான நோய்) நோய் வந்த இளம் பெண் இனிமேல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று தன்னைப் ”போட்டுத்தள்ளும்படி”(???) கூலிப்படையிடம் பணம் கொடுக்கிறாள்.


ஆனால் அதன் தலைவன்(மிகவும் வயதானவர்) மறுக்கிறார்.பிடிவாதம் பிடிக்கிறார். அவரின் இளம் சிஷ்ய ரவுடிகள் அவரைப் படுத்தி ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள்.இரண்டு நாள் கழித்து அவளுக்கு அந்த நோய் இல்லை(தவறான டாக்டர் ரிப்போர்ட்) என்று தெரிய வருகிறது. உடனேகூலிப்படைத் தலைவரை சந்தித்து சொல்லவரும்போது அவர் இறந்துக் கிடக்கிறார்.


சரி அப்புறம்...?அங்கயே படம் முடிகிறது. பார்வையாளரின் யூகத்திற்கு சஸ்பென்ஸாக விட்டுவிடுகிறார்.


உயிர் துடிப்பான படத்தின் லோகேஷன்.ஆட்கள்.இசை.தற்கொலை செய்துக்கொள்ளாமல் தன்னைப்போட்டுத் தள்ளச்சொல்லும் பெண்ணின் வெகுளித்தனம் நன்றாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.


எனக்குப் பிடித்தது.


படம்: சின்னக்களவாணி இயக்குனர்:அருண்


புளுகுண்ணி காதலன் எல்லாமே ஓசியில் வாங்கி காதலிக்கும் இவன் தனக்கென திருடும் செல்லும் திறந்த சாக்கடையில் விழுந்து நொந்துப்போவதுதான் கதை(?????).


செல்லை மையப்படுத்தி கதையை நகர்த்தி அது சாக்கடையில் விழுந்து நொந்துப்போவது போல் காட்டி இருக்கவேண்டும்.

சுமார்.


காமெடி:


குறும்படத்திற்கு இசையும் முக்கியம் என்று காரமாக பேசிய மதன் இன்றைய குறும்படங்களின் சிறந்த இசைப் பற்றி குறிப்பிடவில்லை.

6 comments:

 1. நன்றி சித்ரா

  ReplyDelete
 2. ரவி சார் ... நீங்கள் பகிர்ந்த குறும்படங்கள் யு டுப்ல பார்க்க கிடைக்குமா?

  ReplyDelete
 3. நியோ said...

  // ரவி சார் ... நீங்கள் பகிர்ந்த குறும்படங்கள் யு டுப்ல பார்க்க கிடைக்குமா?//

  நான் பகிராத சில படங்கள் யூ டூபில் பார்த்ததுண்டு.ஆனால் பகிர்ந்த படங்களை இன்னும் தேடிப் பார்க்கவில்லை.தேடினால கிடைக்க வாய்ப்பு உண்டு.

  நன்றி.

  ReplyDelete
 4. இந்த வாரம் பார்த்துட்டேன் சார்...
  ஆனா நாலு படமும் அவ்வளாப் பிடிக்கலை.
  ’ஈசல்’தான் தேறியது.
  பிரதாப் போத்தனுக்கு தமிழே பேச வராதா? படங்கள்ல தான் ஒருமாதிரி சைக்கோ மாதிரி பேசுறார்ன்னு பார்த்தா, இங்கயும் அதே கதைதான்.
  ’பயத்திற்கு அப்பால்’ படத்துல அந்தப் பொண்ணு தன்னையே கொல்றதுக்கு ஆள் ரெடி பண்றதெல்லாம் ஓவர் சார்.ஆனாலும் பார்க்கிற மாதிரி பண்ணி இருந்தாரு டைரக்டர். நல்ல கதை கிடைச்சா, பெட்டராப் பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. தமிழ்ப்பறவை said...

  //பிரதாப் போத்தனுக்கு தமிழே பேச வராதா? படங்கள்ல தான் ஒருமாதிரி சைக்கோ மாதிரி பேசுறார்ன்னு பார்த்தா, இங்கயும் அதே கதைதான்.//

  ???????

  // ’பயத்திற்கு அப்பால்’ படத்துல அந்தப் பொண்ணு தன்னையே கொல்றதுக்கு ஆள் ரெடி பண்றதெல்லாம் ஓவர் சார்.ஆனாலும் பார்க்கிற மாதிரி பண்ணி இருந்தாரு டைரக்டர்.//

  உடன்படுகிறேன்.பெண்ணின் அசட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளலாம்.

  நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!