Friday, October 1, 2010

அவன்,அவர்கள், அது....குறும்படம்-26-09-10

போன வார (26-09-10)  குறும்பட விமர்சனத்தில்  திடீர் பவர்கட்டினால் ஒரு படம் பார்க்காமல் போய்விட்டது. அது இப்போது யூ டூப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் அதைப் பார்த்து எழுதும்படி இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் நண்பர் எனக்கு பின்னூட்டம்  அந்த விமர்சனப் பதிவில் இட்டிருந்தார்.

 அந்த பின்னூட்டம்:

 ARK.SARAVAN said...(1-10-10)11.53 a.m.
 Nenga miss panuna Helmet Padam youtubela  
vanthuruku pathutu vimarsanam podunga.  
athu en nanbarina padam than nanri..

இனி விமர்சனம்:

படம்: அவன்,அவர்கள், அது இயக்குனர்: ஆர்.ரவிக்குமார்

(இது ஒரு பிரபல (கே.ஹெச்.கே.கோரி) எழுத்தாளரின் கதை.அவர் அனுமதியுடன் சுருக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக தகவல்)
 
வீடியோ இணைத்திருப்பதால்  வழக்கம் போல  விலாவாரியாக கதைச் சுருக்கத்தைத் தரவில்லை.
 
ஹரி என்ற இளைஞனுக்கு “ஆவி மற்றும் ஆவியுடன் பேசுதல்” போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவன் தன் நணபர்களை அவர்கள் ரூமில் சந்தித்து ஆவியுடன் எப்படி பேசுவது என்று ஒரு ஷீட்டை வைத்து முக்கால் வாசி விளக்கும் போது நிறுத்தி,சினிமா டிக்கெட்டை (அன்றைய ஈவினிங் ஷோ) மறந்து விட்டது ஞாபம வந்து, எடுத்துவர கிளம்புகிறான்.

அவன் வரும் வரைக்கும்  இதை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

ஆனால் நண்பர்கள் ஆர்வத்தில் அதை தொடருகிறார்கள். பயம் கலந்த ஆர்வத்துடன் அதே ரூமில் இருக்கும் ஆவியுடன், செத்த நேரம்,எப்படி செத்தது,ஏன் செத்தது என்று வருகையில் கடைசியில் ஆவியின் பெயர் கேட்க “ H..A..R..I" என்ற எழுத்துகளில் நகர்ந்து நின்றதும் அதிர்கிறார்கள்.

ஆமாம் ஹரிதான். டிக்கெட் எடுக்கப் போன ஹரி  மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்துவிடுகிறான்.

இனி என் விமர்சனம்:

ஆரம்பிக்கும் முன் தொகுப்பாளினி கீர்த்தி முந்திரிக்கொட்டையாக படத்தின் டைட்டில் பற்றி இயக்குனரிடம் கேட்டதை விட வேண்டும்.  ஏன்? பார்ப்பவர்களை influence செய்யும்.சுவராசியம் போய்விடும்.

ஒரு குறும்படத்திற்கென்றே அற்புதமான வித்தியாசமான கதை.திகில்,ச்ஸ்பென்ஸ்.திருப்பம் நிறைந்த கதை.கச்சிதமாக சுருக்கப்பட்டுள்ளது.

டைட்டிலே வித்தியாசமாகக் காட்டப்படுகிறது. ரூமில் தொங்கும் காற்றில் கிணுகிணுக்கும் மணியும் ஒரு பாத்திரமாக வருவது அருமை. சொல்லப்படும் (narration)விதமும் நன்றாக இருந்தது.இசையும் நன்று.

ஷேவ் செய்துக்கொண்டே கேட்கும் நணபன் வெட்டுப்படுவது,ஹரி கிணுகிணு மணியைத் தட்டிக்கொண்டே உள்ளே வருவது, முதலில் மோட்டர் சைக்கிள் பொம்மையைக் காட்டுவது......நன்று.

குறைகள்:

நண்பர்கள் பேசும் வசனங்களில் உயிரோட்டமே இல்லை.ஒப்பிக்கிறார்கள்.ஸ்கூல் டிராமா முக பாவங்கள்.ஓட்டதில் உயிர் குறைகிறது.ஒலிப்பதிவு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ?சில வசனங்கள் புரியவில்லை. யூ டூப் காரணம்?

இதில் ஹெல்மெட்  திருப்பம் கம் சஸ்பென்ஸ்.இங்கு நிறைய ஹோம் வொர்க் தேவை.

அதை கடைசியில் காட்டி இருக்கலாம்.யூகிக்க விடாமல் கடைசி வரை  பார்ப்பவர்களை tender hookல் வைத்திருக்கலாம்.ரூமை விட்டுப் போகும் ஹரி  திருமப வந்து நண்பர்களை ரொம்ப பலமாக (”டேய் ரூமில் ஆவி இருக்கு... பாத்து”) எச்சரிப்பதாக டயலாக வைத்திருக்கலாம். இதுவும் “ரூமில்தான் ஏதோ நடக்கப்போகிறது” ”இவர்கள் ஏடா கூடாமாக மாட்டப்போகிறார்கள்” என்று திசைத் திருப்ப உதவும்.

ஹரிக்கு போன் செய்யும் போது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்  தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்”.இதுதான்  புத்திசாலித்தனமான  கடைசி ஷாட். ஆனால் இதன் ஆடியோ  பளிச்சென்று இல்லை.பெரிய குறை.

படத்தின் லிங்க்:

அவன்,அவர்கள், அது....குறும்படம்-26-09-10

6 comments:

  1. நல்லா இருந்தது சார் படம். ஆடியோ மே பீ யூ ட்யூப் குவாலிட்டி ப்ராப்ளம்னு நினைக்கிறேன் சார்.
    நடிகர்கள் வசன உச்சரிப்பு கவனிக்க வேண்டியதே. ‘மிட்டாய் வீடு’ மாதிரி professional நடிகர்களை வைத்து எடுத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
    இப்படத்தின் வெற்றியே ஒரு சிறுகதையைத் தழுவி எடுத்ததுதான் என்பதே.

    ReplyDelete
  2. என்னுடைய ஃபேஸ்புக் பகிர்வு:
    விளையும் பயிர் முளையிலே தெரியும்:

    சென்றவார, பவர்கட்டினால் நான் தவறவிட்ட குறும்படம் youtube இல் இருக்கிறது. சின்னதான ‘நச்’ குறும்படம். இயக்கமு, கேமரா கோணங்களும் நன்றாக இருக்கின்றன. நடிகர்களின் (முதல் தடவை நடிப்பு?) அமெச்சூர்தனங்கள் மட்டுமே இயல்பாக இல்லை. பரவாயில்லை எனச் சொல்லலாம். ஏ.ஏ.ஹெச்.கே.கோரியின் சிறுகதையைக் கொண்டு எடுக்கப் பட்ட படம் இது. கதை நன்றாக இருந்தௌ விஷூவலில் கொண்டு வந்தாலே ஹிட்டாகிவிடும். இருந்தும் நமது கோலிவுட் இயக்குனர்கள் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்துக் குதிரைகளையும் சுமக்க ஆசைப்பட்டு காட்சிப்படுத்தலில் கதை இல்லாமல் மண்ணைக் கவ்வுகின்றனர்.கதை நன்றாக இருந்தால் படம் விளங்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இக்குறும்படம்.படத்தைப் பார்த்து விட்டுக் கீழே இருக்கும் விமர்சனத்தையும் படித்து விடுங்கள்.இன்னும் புரியும்.(நன்றி: ரவிஆதித்யா.ப்ளாக்ஸ்பாட்.காம்)

    http://www.youtube.com/watch?v=mS5XwWoMcRc

    http://raviaditya.blogspot.com/2010/10/26-09-10.html

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை said...

    //நல்லா இருந்தது சார் படம். ஆடியோ மே பீ யூ ட்யூப் குவாலிட்டி ப்ராப்ளம்னு நினைக்கிறேன் சார்.நடிகர்கள் வசன உச்சரிப்பு கவனிக்க வேண்டியதே. //

    நன்றி.

    //‘மிட்டாய் வீடு’ மாதிரி professional நடிகர்களை வைத்து எடுத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//

    தவறு.குறும்படத்திற்கு புது நடிகர்களே வேண்டும்.
    அதில்தான் இயக்குனரின் திறமை இருக்கிறது.


    // இப்படத்தின் வெற்றியே ஒரு சிறுகதையைத் தழுவி எடுத்ததுதான் என்பதே//

    ஆமாம். கதையின் spiritஐ விடவில்லை.

    இயக்குனரின் தளம்:
    http://ravikumartirupur.blogspot.com/

    ReplyDelete
  4. பேஸ் புக்கில் பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  5. Thank u for ur immediate reply.

    Ungal vimarsanathay en nanbarin parvaiku eduthu selkirean..

    nanri...

    ReplyDelete
  6. நன்றி சரவண்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!