Sunday, May 30, 2010

இளையராஜா - மயக்கும் Counterpoint

இளையராஜாவின்  இனிமையான பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அவர் இந்த மெலடிக்காக சில மேற்கத்திய இசை நுணுக்கம் ஒன்றை தன் பாடல்களில் புகுத்துகிறார்.அது கவுண்டர் பாயிண்ட் (counter point) எனப்படும் ஒன்று.

அது என்ன?

பாடல்களில் பாடகி/பாடகர் பாடி முடிந்ததும் வரும் (முதல் இசையும் அடக்கம்) இடையிசையில்  ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என ஒன்றுக்கு மேற்பட்ட மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது. 
அவைகள் வெவ்வேறாகவும் ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.
 

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

ரொம்ப எளிதாகப் புரிந்துக்கொள்ள “புத்தம்புது காலை” (அலைகள் ஓய்வதில்லை-1981) பாட்டின்  கவுண்டர் பாயிண்டைக் கேட்டுவிட்டு போவோம்.

 புத்தம் புது காலை 
(அலைகள் ஓய்வதில்லை)
ஆரம்பத்தில்( 00.00 -0.41) ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் வயலின் ஒரு மெலடியும்  (இ)ஜானகி ஹம்மிங் ஒரு மெலடியும், (ஈ)

அ,ஆ,இ,ஈ எல்லாம்தனிதனித்தான் ஆனால் கேட்கும்போது(harmonious)இனிமையாகிறது.
அசட்டுத்தனம் இல்லை.கிடைத்த சந்தில் விதவிதமாக சிந்து பாடுகிறார் மேஸ்ட்ரோ.

 விரிவாக படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்
 
எல்லாம் கேள்வி /படிப்பு ஞானம்தான்.தவறு இருந்தால் திருத்தலாம்.இசைக் கருவிகள் தெரிந்த மட்டிலும் எழுதியுள்ளேன் இதிலும் தவறு இருந்தால் திருத்தலாம்.


 பனிவிழும் மலர் வனம்  1982 - நினைவெல்லாம் நித்யா  
(கிடார் vs வயலின்- 0.29 - 0.40) 
இந்தப் பாடல் இசைக் கற்பனையின் உச்சம் என்று சொல்லாம். 
இதில் கர்நாடக ராகம்+மேற்கத்திய கிளாசிகல் இசை+அபரிதமான இசைக்கோர்ப்பு+ புதுமை+எஸ்பிபி குரல் என பலவித சமாசாரங்கள் காணலாம்.இன்னும் இளமையாக இருக்கிறது.

முன்னணியில்  கிடாரின் ஒரு  மெட்டும் பின்னணியில் ஒரு வயலினின்  வேறு ”கீச்” மெட்டும்இசைக்கப்படுகிறது.இந்த கிடார்-வயலின் அலசலின் நடுவே ஒரு குரூப் வயலின்வேறு சந்தில் சிந்து பாடிவிட்டுப்போகிறது.

அல்லிபபூவே மல்லிப்பூவே  - 2009 -பாக்யதேவதா(மலையாளம்)

(பியானோ-????-வயலின் 0.00 -0.20)
ரம்யமான மென்மையான பியானோ வாசிக்கப்பட அதன் எதிர்திசையில் ஒரு நாதம் மற்றும் 0.10இல் வயலின் இழைகள் வேறொரு நாதத்தில் உள்ளே நுழைகிறது.இந்த பியானோ இசையை ஒரு தடவையாவது கேளுங்கள்.

அட்டகாசம். Hats off Maestro! This is magical music maestro!

தேன் பூவே பூ  -1984 -அன்புள்ள ரஜனிகாந்த்
(கிடார் vs புல்லாங்குழல்- 2.33 - 2.45)   கிடாரும் புல்லாங்குழலும்  ஒன்றை ஒன்று எப்படி அதனதன்  தனி நாதத்தில் செல்லம் கொஞ்சுகின்றன.
 

பூந்தளிர் ஆட  - 1981 - பன்னீர்புஷ்பங்கள்
 (சிந்த்(?)-கிடார்-கிடார் 2.49-3.06)

இது ராஜாவின் மாஸ்டர் பீஸ்.சில இடங்களில் ஹம்மிங்கும் கிடாரோடு 0.31-0.42 & 1.44 -1.57 கவுண்டர்பாயிண்ட் உண்டு.1.44 -1.57 இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்களையும் கவனியுங்கள்.மயக்கும் நாதம்.

 தூரிகை இன்றி   - 2007 -அஜந்தா (பியானோ-புல்லாங்குழல்-வயலின்- 0.00 -0.17)கவுண்டர் பாயிண்டை ”ஒருகாட்டு”காட்டுகிறார்.மிரண்டுப்
போய்விட்டேன்.


 ஆரோ பாடுன்னு தூரே -2010-கதா தொடரன்னு(மலையாளம்)

 (0.28-0.45 பியானோ- வயலின்)

 ஓ.... சத்யன் அந்திகாடு சாரே.. இந்த பியானோவும் வயலினும் எத்தர சந்தோஷத்தோட பிரேமிச்சு....கேட்டோ

செம்பூவே  -1996 -சிறைச்சாலை
(செல்லோ-புல்லாங்குழல்-பெல்ஸ்-??????-0.00-0.17) 

ஆரம்பமே கவுண்டர்பாயிண்ட் கலக்கல்.பிரமிக்க வைக்கிறார்.Mindblowing counterpoint.


 கொடியிலே மல்லிகைப்பூ
 (1986 - கடலோரக்கவிதைகள்-1.01 -1.20)
 கிடார்-சிந்த்-பு.குழல்-வயலின்(?).அருமை
  
கண்ணன் வந்து - 1987- ரெட்டைவால் குருவி
(கிடார்-சாக்ஸ்+வயலின் 0.00 - 0.22)
மென்மையான கிடார் தீற்றல் ஒரு மெட்டில்ஆரம்பிக்க பின்னணியில் ஒரு கீச் வயலின் வேறொரு மெட்டில் உரையாட பிறகு சாக்ஸ்போன் சேர்த்துக்கொள்கிறது வேறொரு மெட்டில்.

தாமரைக்கொடி - 1983 -ஆனந்தகும்மி
(பியானோ(?)-கிடார்-சிந்த்-வயலின்- 0.17 - 0.45 )
அட்டகாசம். வயலின் பறக்கிறது.

 
உறவெனும்  - 1980-நெஞ்சத்தைக் கிள்ளாதே
(கிடார்-கிடார்-வயலின்-???? -0.00 -0.23 & 3.19-3.30)   
 
காதல் வானிலே  - 1995 - ராசய்யா
(1.34-1.41)

மேலே பார்த்தது இசை மெலடி வித்தைகள்.ராஜா இப்படித்தான் விதவிதமாகப் போட்டு பிடிக்கிறார் இந்த வீடியோவில் வருகிற மாதிரி.


    இந்த வீடியோவின் இசை அருமை
 

 

19 comments:

  1. ஆராய்ச்சி எல்லாம் கலக்கல் தல....எல்லா பாட்டையும் தனிமையில் இனிமையாக கேட்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி தல ;))

    ReplyDelete
  2. Blogger கோபிநாத் said...

    // ஆராய்ச்சி எல்லாம் கலக்கல் தல....எல்லா பாட்டையும் தனிமையில் இனிமையாக கேட்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி தல //

    நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  3. இதில் பூந்தளிர் ஆட”வும்..,

    தாமரைக்கொடி”யும் என்னோட பேவரிட் சாங் தலைவரே..,

    இந்தளவு பிரிச்சி மேய்ஞ்சதில்ல..ஆனா நீங்க சொல்லுற சாமாச்சாரம்லாம் பேர் தெரியாம அனுபவிச்சதுண்டு..

    ரொம்பவும் என்னை மாதிரியே யோசிக்கறீங்க...உங்கள கொலை பன்னாத்தான் நான் உருப்பட முடியும்..

    என்ன சொல்றீங்க...

    ReplyDelete
  4. அல்டிமேட் பாஸ், நீங்க சொல்ர மேட்டர திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பதுண்டு, ஆனா அதுதான் கவுன்ட்டர் பாய்ன்ட்னு இப்பத்தான் தெரியும், நன்றி!

    ReplyDelete
  5. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்களில் ஒன்று பனிவிழும் மலர் வனம் . என்றைக்கும் ராஜா ராஜாதான். சிலபாடல்களை வர்ணிக்கமுடியாது அப்படியான பாடல்களைத் தான் உங்கள் இடுகையில் இட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. ராஜாவின் எல்லா பாடல்களிலுமே இந்த counter point சங்கதி உள்ளது. அவரது பாடல்களில் உள்ள ) base guitar parts எல்லாமே இப்படித்தான். முடிந்தால், மேகம் கொட்டட்டும் பாடலுடைய base guitarஐ கவனித்துப் பாருங்கள். நன்றாக இசைக்கத் தெரிந்தவர்களுக்கும், அடிப்படை இசையறிவு இருக்கும் என்னைப் போன்ற எல்லாருக்கும், ஒவ்வொரு ராஜாவின் பாடலும் அதிசயமே... பகிர்விற்கு நன்றி :)

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Blogger Karthick Krishna CS said...

    // ராஜாவின் எல்லா பாடல்களிலுமே இந்த counter point சங்கதி உள்ளது. அவரது பாடல்களில் உள்ள ) base guitar parts எல்லாமே//

    நீங்கள் சொல்வது சரி. அவருடைய base guitarஐ எல்லாப் பாடல்களுக்கும் சம்பிராதயம் ஆக்கிவிட்டார்.அது இல்லாமல் முடியாது.

    நான் எடுத்துக் காட்டும் ounter point கொஞ்சம் சீரியஸ்ஸானது்.It was intentionally done.It came successfullly also.

    // நன்றாக இசைக்கத் தெரிந்தவர்களுக்கும், அடிப்படை இசையறிவு இருக்கும் என்னைப் போன்ற எல்லாருக்கும், ஒவ்வொரு ராஜாவின் பாடலும் அதிசயமே... பகிர்விற்கு நன்றி //

    இசை அறிவு இல்லாவிட்டாலகூட ”என்னவோ புதுசா இருக்கு” என்று ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.

    அதற்கு சாட்சி: பனங்காட்டான் எனபவரின் பின்னூட்டம்

    // அல்டிமேட் பாஸ், நீங்க சொல்ர மேட்டர திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பதுண்டு, ஆனா அதுதான் கவுன்ட்டர் பாய்ன்ட்னு இப்பத்தான் தெரியும், நன்றி!//

    நன்றி கார்த்திக் கிருஷ்ணா.

    ReplyDelete
  9. Blogger கும்க்கி said...

    // இதில் பூந்தளிர் ஆட”வும்..,
    தாமரைக்கொடி”யும் என்னோட பேவரிட் சாங் தலைவரே..,//

    தாமரைக்கொடி பாட்டில் எஸ்பிபி பின்னுவார்.அவர் இல்லாமல் இந்தப் பாட்டு அவ்வளவாக சோபிக்காது.

    // இந்தளவு பிரிச்சி மேய்ஞ்சதில்ல..ஆனா நீங்க சொல்லுற சாமாச்சாரம்லாம் பேர் தெரியாம அனுபவிச்சதுண்டு..//

    நானும்தான்.என் நண்பர்/மற்றும் சுய ஞானம்/நெட் என்று கொஞ்சம் அறிவைப்பெற்றேன்.

    // ரொம்பவும் என்னை மாதிரியே யோசிக்கறீங்க...உங்கள கொலை பன்னாத்தான் நான் உருப்பட முடியும்.. என்ன சொல்றீங்க...//

    ஐய்யோ அம்மா! இசைக்கேட்டால் மனது பண்படும் என்பார்கள்.
    ராஜாவின் இசையைக் கேட்டுவிட்டு இந்த எண்ணமா...

    வெயிட் பண்ணுங்க இன்னும் ஒரு பதிவு வரும் “இளையராஜா King of Heavenly Hummings”அப்புறம் முடிவு எடுங்க.

    ReplyDelete
  10. Blogger பனங்காட்டான் said...

    // அல்டிமேட் பாஸ், நீங்க சொல்ர மேட்டர திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பதுண்டு, ஆனா அதுதான் கவுன்ட்டர் பாய்ன்ட்னு இப்பத்தான் தெரியும், நன்றி!//

    நன்றி பனங்காட்டான்.பதிவில் கொடுத்த லிங்கையும் படிச்சீங்களா?

    உங்களோட பின்னூட்டத்த கார்த்திக் பின்னூட்டத்தில் உதாரணமா கொடுத்திருக்கேன்.

    ReplyDelete
  11. Blogger வந்தியத்தேவன் said...

    // எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்களில் ஒன்று பனிவிழும் மலர் வனம் . என்றைக்கும் ராஜா ராஜாதான்//

    82ல் ஒரு புது முயற்சி.எந்தவித செயற்கைத்தனம் இல்லாத கிளாசிகல்
    கம்போசிங்.

    நன்றி

    ReplyDelete
  12. உங்கள் பழைய பதிவை இப்போதுதான் படித்தேன். இவ்வளவு நாளும் மிஸ் பண்ணிவிட்டேன். மேலும் ஒரு பாடலைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
    அவதாரம் படத்தில் வரும் (உண்மையில் படத்தில் இல்லை, கேசட்களில் மட்டுமே இப்பாடல் இருக்கும்) பாடல்,

    கண்ணிரெண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே...
    காலமெல்லாம் நீயெனக்கு கைவிளக்கே...

    பாடல் முழுதும் பெண்குரல் கோரஸில் வரும், ஹார்மனி அற்புதமாக இருக்கும். கோரஸ் இரண்டாகப் பிரியும், ஒரு கோரஸ் பாடலைத் தொடரும், இன்னொரு கோரஸ் அப்படியே ஹம்மிங்காக மாறும். இன்னொரு இடத்தில் இரண்டு கோரஸ்களும் வேறு வேறு பிட்சுகளில் பாட கேட்கும்போது அப்படியே நமக்கு புல்லரித்து கண்ணீர் வழியத்தொடங்கும்!

    ReplyDelete
  13. Blogger பனங்காட்டான் said...

    // உங்கள் பழைய பதிவை இப்போதுதான் படித்தேன். இவ்வளவு நாளும் மிஸ் பண்ணிவிட்டேன். மேலும் ஒரு பாடலைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்//

    நன்றி. இளையராஜா லேபிளில் நிறைய எழுதி உள்ளேன்.

    நீங்கள் குறிப்பிடும் பாடல் கேட்ட மாதிரி தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. ஆமாம் அந்தப் பாடல் அதிகம் கேட்கப்படாத பாடல், அதனால்தான் குறிப்பிட்டேன்! உங்களுக்கு மெயிலில் வேண்டுமானால் அப்பாடலை அனுப்புகிறேன்.

    ReplyDelete
  15. உங்கள் இடுகையால் பதிவுலகில் சில தினங்களாக நடக்கும் சம்பவங்களில் இருந்து மாற்றம் தந்தாக இருந்தது

    ReplyDelete
  16. பனங்காட்டான் said...

    //ஆமாம் அந்தப் பாடல் அதிகம் கேட்கப்படாத பாடல், அதனால்தான் குறிப்பிட்டேன்! உங்களுக்கு மெயிலில் வேண்டுமானால் அப்பாடலை அனுப்புகிறேன்//

    ரொம்ப நன்றி.என் நண்பர் ஒருவர் வைத்திருக்கிறார்.அவரிடம் பெற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  17. Blogger பாலாஜி said...

    // உங்கள் இடுகையால் பதிவுலகில் சில தினங்களாக நடக்கும் சம்பவங்களில் இருந்து மாற்றம் தந்தாக இருந்தது//

    நானும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.ஹிம்...!

    //மாற்றம் தந்தாக இருந்தது//

    நம்ம திகில் கதைப் படித்தீர்களா?

    ReplyDelete
  18. இதனை அவரே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.
    //சில நுணுக்கங்களை வைத்துக்கொண்டு எமாற்றிக்கொண்டிருக்கிறோம் //
    என்று நகைசுவையாக சொன்னதுண்டு.

    ReplyDelete
  19. Blogger கக்கு - மாணிக்கம் said...
    // இதனை அவரே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.
    //சில நுணுக்கங்களை வைத்துக்கொண்டு எமாற்றிக்கொண்டிருக்கிறோம் //
    என்று நகைசுவையாக சொன்னதுண்டு.//

    கருத்துக்கு நன்றி.வருகைக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!