Thursday, May 27, 2010

ரிமோட்

நடிகை  ரேவதி
முதலிரவில் நுழைகையில்
புலி ஒன்று மான் குட்டியை கவ்வியபடிநோக்க
நன்னா பாடினேள் God bless you
கவுண்டமணி செந்திலைத் துரத்த
Breaking news ல் யாரோ ஒருவர் லஞ்சம் வாங்கி
ஆண்மை குறைவை சித்த வைத்தியர்
கார்த்தியும் தமன்னா பிம்பம்
தோன்றும்நொடியில்
”டிவி வால்யூம குறைங்க” என்று சொல்...
மல்லிகா பத்ரிநாத் எதையோ கிளறிக்கொண்டு..
ஈ...சாங்கு யாருக்கானும் டெடிகேட்
வசந்தபாலன் சார் சொன்னாரு
Sun Pictures Kalanithi Maran Pre..
பேரிரசைச்சல் பின்னணியில் புட்பால் ஒன்று
திருப்பதி பிரும்மோத்ச்வம் சாமி உலாவில்
மீண்டும் தலைப்பு செய்திகள்
3 ரோசஸ் டியை குடிக்க...
பரிசு பணத்த என்ன செய்வீங்க
புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

15 comments:

  1. மாத்து மாத்துன்னு மாத்திட்டீங்க.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா..
    அருமை..

    ReplyDelete
  3. ரொம்ப பிடிச்சிருக்குங்க, ஒவ்வொரு வரியிலும் ரிமோட் மாறிக்கொண்டே வரும் சேனல்களின் நிகழ்வுகளை சப்தங்களை, அவற்றின் சலிப்பை ஈர்ப்பில்லாத மனநிலையை, ஈர்க்காத விஷயங்களுக்கு மத்தியில் நிறைவு தராத தேடலை, மனதின் அலைவுகளை இப்டி சகல உணர்வுகளைத் தருகிறது கவிதை. சிரித்துக் கொண்டே வாசித்தேன். ஒரே நேரத்தில் நிகழும் பல்வேறு காட்சிகளின் துண்டுக் கோர்வைகளை ரொம்ப ரசித்தேன். இம்மாதிரி இயல்வு வாழ்க்கைக்கு ரொம்ப நெருக்ககமான விஷயங்களிலிருந்து உருவாகும் கவிதைகள் தரும் கவித்துவ சிலிர்ப்பு சுகமான அனுபவமாயிருக்கிறது. இனி ரிமோட் மாற்றும் போதெல்லாம் இந்தக் கவிதை நினைவுக்கு வரும் :)))

    ReplyDelete
  4. பார்த்துங்க ரிமோட் போயிற போது

    ReplyDelete
  5. அன்பு ரவி ...
    டி வி யின் ரிமோட் மனதின் ரிமோட்டின் வெளிப்பாடா ..?
    நல்லதொரு அனுபவம் எனக்கு உங்கள் கவிதையில் ...

    ReplyDelete
  6. கலக்கல் . நல்ல இருக்கு

    ReplyDelete
  7. 6 Comments
    Close this window Jump to comment form

    Blogger ILA(@)இளா said...

    // மாத்து மாத்துன்னு மாத்திட்டீங்க//

    நன்றி இளா.

    Blogger அநன்யா மஹாதேவன் said...

    // ஹா ஹா ஹா..
    அருமை..//

    நன்றி அனன்யா

    ReplyDelete
  8. Blogger யாத்ரா said...

    // இனி ரிமோட் மாற்றும் போதெல்லாம் இந்தக் கவிதை நினைவுக்கு வரும் :)))//

    நன்றி யாத்ரா.

    ReplyDelete
  9. Blogger இராமசாமி கண்ணண் said...

    // பார்த்துங்க ரிமோட் போயிற போது//

    ஏற்கனவே என் மகன் ஒண்ணு உடைச்சுட்டான்.

    ReplyDelete
  10. Blogger நியோ said...

    // அன்பு ரவி ...
    டி வி யின் ரிமோட் மனதின் ரிமோட்டின் வெளிப்பாடா ..?
    நல்லதொரு அனுபவம் எனக்கு உங்கள் கவிதையில் ...//

    வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    // கலக்கல் . நல்ல இருக்கு//

    வாங்க பனித்துளி சங்கர்.முதல் வருகை?
    நன்றி.

    ReplyDelete
  12. டியர் ரவி, என் வலைக்கு வந்து கமெண்ட் அளித்ததற்கு நன்றி. உங்கள் புத்தக கண் காட்சி அனுபவம் சுவாரசியமாக இருந்தது. உங்கள் எழுத்து நடை (சுஜாதாவின் சாயலோடு) நன்றாகவே இருந்தது. நிறைய எழுதுங்கள். எனது புத்தகம் `உப்புக் கணக்கு' அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும் (தேவி வெளியீடு).அது குறித்து உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் கணிப்பொறியில் பெரிய புலி இல்லை. டேச்னியால் விஷயங்கள் எதுவும் பெரிதாக தெரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன்.

    May 26, 2010 2:49 AM

    ReplyDelete
  13. Blogger வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

    //romba nalla irukku//

    நன்றி வித்யா.

    //உப்புக் கணக்கு' அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும் (தேவி வெளியீடு).அது குறித்து உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.//

    அண்ணாநகரில் எந்த புத்தகக் கடையில் கிடைக்கும்.சொல்ல முடியுமா?

    படித்து விட்டு கட்டயமாக கருத்துச்சொல்கிறேன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!