Thursday, May 27, 2010

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டி...

ஒரு ஊர்ல ஒரு புருசனும் பொண்டாட்டியும் இருந்திருக்காங்க.அந்த புருசனும் பொண்டாட்டியும் இருக்கயில அவ ஒரு ஆள சேர்த்துக்கரணும்னு நெனக்கிறா.அப்ப அவ ஒருத்தன சேத்துக்கிட்டா.ஊட்டுக்காரன் பத்து நாளைக்கு வெளிய போனாதான் அவன நாம வரவழைக்க முடியும்னு ஒரு ஐடியா போடறா.

“ஏ மச்சான் எனக்கு தலவலி வந்திருச்சு” அப்படின்னு சொல்லுவா.அவன் ”ஏன் தங்கப் பொண்டாட்டி! ஏன் செல்லப் பொண்டாட்டி! உனக்கு என்னம்மா செய்யுது” கேட்பான்.அதுக்கு அவ “எனக்கு தலவலி விடணுமுன்னா பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வரணும்னு” செல்லமா அடம் புடிப்பா.

இவன் ஊரு உலகமெல்லாம் போயி, கல்லு கல்லா எடுத்து கடிச்சுப் பாக்கான்.இவனுக்கு பல்லுக்கு மலிவான கல்லு எங்க கிடைக்கும்? ஆனா ரொம்ப முனப்ப தேடிட்டு இருக்கான்.

அவன் பல்லுக்கு கல்லு எடுக்கப்போகயில இவ கூட்டிவந்தவனோட ”என் புருசன் பல்லுக்கு மலிவான கல்லுக்கு போயிருக்கான் அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” கூத்தடிச்சிட்டு இருக்கா.பக்கத்துல மாமியாருகாரி இருக்கா.அவ “இவ  இங்க கூத்தடிச்சிட்டு இருக்கா.பயபுள்ள
பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வரணும்னு பாக்கப் போயிருச்சு”ன்னு வருத்தப்படறா”

இவன் கல்லக் கல்ல  கடிச்சு எடுத்துக் கடிச்சு வாய் ரத்தமா இருக்கறத பாத்து “ என்னப்பா இப்படி கல்லக் கல்ல கடிக்கிறனு” கேட்டிருக்கான் ஒருத்தன்.”என் பொண்டாட்டி தலவலி விடணுமுன்னா பல்லுக்கு மலிவான கல்லு பாக்கச் சொன்னா.அதுதான் பாத்துகிட்டு இருக்கேன்னான்”  அடப்பாவிப்பயலே கடயில போயி உப்புக்கல்லு அள்ளி கடிச்சுப்பாரு அது நொறுக்குனு இருக்கும். அதுதான் பல்லுக்கு மலிவான கல்லு”ன்னு சொல்லிட்டு போயிடுறான்.

”அப்படியா இது தெரியாம ஊரு உலகமெல்லாம் சுத்திட்டேன்” சொல்லிட்டு உப்ப எடுத்துகிட்டு வீட்டுக்கு வரான். இவனப் பாத்துட்டு அவ கள்ள புருசன் (தெரியாம) ஒடிடறான்.”மச்சான் பல்லுக்கு மலிவான கல்லு கொண்டு வந்ததுக்கு அப்புறம், எனக்கு தலவலி உட்ருச்சு மச்சான். இப்ப நல்லா இருக்குது”ன்னு சொல்வா.

கல்லுக்கடிக்கிறதுல தப்பிச்சுகிட்டானே இவன எப்படி கொல்றதுன்னு யோசிச்சு மறுபடியும் மண்டயடின்னு படுத்துக்கிருவா. “என்னடா...ஏன் தங்கப் பொண்டாட்டி! ஏன் செல்லப் பொண்டாட்டி! உனக்கு என்னம்மா செய்யுது” கேட்டான். “ஏ மச்சான் எனக்கு யானப்பாலு குதிரப்பாலு எடுத்துட்டு வந்தா மண்டயடி விட்ரும்னா” இவன் அதுக்கு “ அப்டியா நான் எடுத்திட்டு வாரேன்.உனக்கு இல்லாததா” அப்படின்னுட்டு இவன் போவான்.

கெழடி  சொல்றா “என் புருசன் பல்லுக்கு மலிவான கல்லுக்கு போயிருக்கான் அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” கூத்தடிச்சிட்டு இருக்கா... இப்பா ஆனப்பாலு குதிரப்பாலுன்னு எடுக்கப் போற...செத்துருவடா மகனே...”ங்கறா.அதுக்கு அவன் “ ஏ சிரிக்கி மகளே என் பொண்டாட்டிய நீ எப்படி இப்படி சொல்லுவ” அப்படிங்கறான். “ஏ மவனே..உன் பொண்டாடிய காட்டிக்கொடுக்கேண்டா” அப்படின்னு சொல்றா.

“நீ போயி ஒரு பெரிய சாக்கு கொண்டுவா”ன்னு சொல்றா.அவன் கொண்டுவரான்.ஆரானூரு கம்மா கூடனூரு கம்மா இருக்கு. அங்க அவன கூட்டிக்கிட்டு போயி, அந்த ஆரானூரு கம்மாயில வெள்ளரிக்கா வாங்கி கீழ காய போட்டு, அதுக்குமேல இவன உட்கார வச்சு, அதுக்கு மேல காயப் போட்டு,கண்ணுக்கு நேரா ரெண்டு ஓட்ட வச்சு சுத்தி காய வச்சு கட்டி வீட்டுக்கு மூட்டய தூக்கி செமந்துக்கிட்டு வாரா.

(இந்தக் கதையில் வரும் வெள்ளரிக்காய் விற்கும் கெழவிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.)

இந்த கெழடிக்கிட்ட இவ(மருமவ) தெனமும் வெள்ளரிக்கா வாங்குவா.”வெள்ளரிக்கா.வெள்ளரிக்கா” ன்னு வித்திட்டு வந்திருக்கா.”ஏ மாமி வெள்ளரிக்கா கொடுங்கன்னு” அவ கேக்குறா.மூட்டய வச்சுட்டு “ஏம்மா மூட்டைய எல்லாம் துளைக்கக் கூடாது.மேலாப்புல பிஞ்சுக் காயா இருக்கு.அத எடுத்துக்கோ”ன்னு சொல்றா.அவ நல்ல பிஞ்சுக்காய எடுத்திட்டு உள்ள போறா”

கள்ள புருசன் கட்டுலுல படுத்திருக்கான். வெள்ளரிக்காய அவ ஒரு கடி  இவன் ஒரு கடி கடிச்சிட்டு “என் புருசன்  எனக்கு யானப்பாலு குதிரப்பாலு எடுத்துட்டு வர போயிருக்கான்...அவன் அங்க சாவானோ நான் இங்க வாழ்வேனோ” சொல்லி கடிச்சு கடிச்சு விளையாடிக்கிட்டு இருக்காக. அப்ப கொஞ்ச நேரம் பாத்துட்டு, இந்த கெழடி சொல்லிச்சாம்:

”ஏ ஆரணூரு வெள்ளரிக்கா கேட்டுக்கோ ரத்தினமே..ஏ கெழட்டுப்பொணமே...ஏ கெழட்டுப்பொணமே”ன்னு

மூட்டைய தட்டியிருக்கா.பிறகு சாக்க தட்டிவிட்டிருக்கா.இவன் அருவாளோட உள்ள இருந்தவன் எந்துச்சதும், வெட்ட ஓடியிருக்கான்.அவன் ஓடிட்டான்.இவள மட்டும் தலய வெட்டி அறுத்துக்கிட்டுப் போயி போலிசு டேசன்ல கொடுத்துட்டு,”இவ அப்படி செஞ்சா.நா இப்படி செஞ்சே”ன்னு சொல்லிப்புட்டு அவனும் அவன் அம்மாவும் நல்லா வாழுறாக.


நன்றி:”கிராமத்துக் கதைகள்”  முனைவர் ந.சந்திரன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட் .விலை ரூபாய் 60.00


படிக்க: நான் சொன்ன விக்னேஸ்வரி கதை

10 comments:

  1. ரசனையா இருந்தது. முக்கியமா பல்லுக்கு மலிவான கல்லு விஷயம்! இன்னும் நிறைய கதைகள் எதிர்ப்பார்க்கிறேன். இல்லாட்டி இந்த மொழி வழக்கெல்லாம் அழிஞ்சு போயிடும்.

    ReplyDelete
  2. தமிழிஷ்ல போடலியோ?

    ReplyDelete
  3. படித்து முடித்ததும்.. தலை சுத்துதே ஏன்? அருமையான கதை

    ReplyDelete
  4. அடேங்கஃப்பா...

    :))

    ReplyDelete
  5. Blogger அநன்யா மஹாதேவன் said...

    // ரசனையா இருந்தது. முக்கியமா பல்லுக்கு மலிவான கல்லு விஷயம்! இன்னும் நிறைய கதைகள் எதிர்ப்பார்க்கிறேன். இல்லாட்டி இந்த மொழி வழக்கெல்லாம் அழிஞ்சு போயிடும்.//

    நன்றி அனன்யா.

    ReplyDelete
  6. Blogger அநன்யா மஹாதேவன் said...

    // தமிழிஷ்ல போடலியோ?//
    இப்பதான் இணைச்சேன். நன்றி.

    ReplyDelete
  7. Blogger அதிஷா said...

    // படித்து முடித்ததும்.. தலை சுத்துதே ஏன்? அருமையான கதை//

    நன்றி.

    ReplyDelete
  8. Blogger கும்க்கி said...

    //அடேங்கஃப்பா...//

    நன்றி.

    ReplyDelete
  9. பயமாயிருக்கு ஸார்..!

    ReplyDelete
  10. Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    // பயமாயிருக்கு ஸார்..!//

    இதுக்கே இப்படியா? நம்ம பேய்க் கதை ஒன்னு படிங்க.”பேய் வீட்டில் விழுந்த செல்போன்”

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!