Tuesday, May 11, 2010

வி.குமார்/ஏ.ஆர்.ரஹ்மான்- கே.பாலசந்தர்

ஜேசுதாஸ் பாடிய  ”உன்னிடம் மயங்குகிறேன்”(படம்:தேன் சிந்துதே வானம்)என்ற  பாட்டு (1974) இசை ரசிகர்களால் ரேடியோவில்  அடிக்கடி விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்.

உன்னிடம் மயங்குகிறேன்

காரணம்: அருமையான வித்தியாசமான பியானோ இசை.அதில் எழும் உணர்ச்சிகள். பாடலின்  இனிமை. பாடல் வரிகள் (வாலி).மேஸ்ட்ரோ போல் ஓவர் அழகுப்படுத்தப்படாத எளிமையான இசைக்கோர்ப்பு.ராஜாவின் பழைய பாடலோ என்று ஏமாற வாய்ப்பு உள்ளது.

அந்த காலக் கட்டத்தில் அவ்வளவாக பியானோவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.கொடுத்தாலும் ஏனோ தானோதான்.அழகுணர்ச்சி இல்லாத இசைக்கோர்ப்புகள்தான்.

இசையமைத்தவர் யார்?

”நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்”(நூற்றுக்கு நூறு)”ஒரு நாள் யாரோ”(மேஜர் சந்திரகாந்த்)”புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்”(இரு கோடுகள்)”காதோடுதான் நான் பாடுவேன்”(வெள்ளிவிழா-ஹிந்தி மெட்டு) ஜெய சந்திரன் -சசிரேகா"என்னோடு என்னென்னவோ ரகசியம்”(படம்: தூண்டில் மீன் (1977).இனிமையான பாடல்களைக் கேட்டிருக்கிறிர்களா?

இசையமைத்தவர் யார்?

1968 ல் “அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா”(எதிர் நீச்சல்) என்ற பாடல் பட்டையைக் கிளப்பினப் பாட்டு.

 இசையமைத்தவர் யார்?

இசையில் ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும்தான் டைரக்டர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியவர் என்று இன்றைய தலைமுறையினர் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.ஆனால் அதற்கு முன்பே  1965 ல் ஒரு சிறந்த இசையமைப்பாளரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.
 
அவர்  வி.குமார் என்னும இசையமைப்பாளர்.இவர் மெலடி கிங்.

பாலசந்தர் தன்னுடைய நீர்குமிழி படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.இவரின் பல படங்களுக்கு இவர்தான் இசை.

இவர் மேற்கத்திய இசை+இந்திய இசை இரண்டும்  கலந்து வித்தியாசமாகக் கொடுத்தவர்.இனிமை கலையாமல் பார்த்துக்கொண்டார்.பாடுபவர்களும் அருமையாக உச்சரித்துப் பாடினார்கள்.துருத்தாத இசை.

அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான முயற்சிகள் சில பாடல்களில் தெரியும்.ஆனால் எம்எஸ்வி என்னும் இசை மேதை “அச்சில்” மாட்டிக்கொள்வதை இவரால் தவிர்க்க முடியவில்லை. காலத்தின் கட்டாயம்?

அந்தக் காலத்திற்கே உரித்தான “சின்ன மெட்டு”(”படைத்தானே பிரம்ம தேவன்” ”பல்லவ நாட்டு ராஜாகுமாரிக்கு”)மெலடிகளை எஸ்பிபியை வைத்து உருவாக்கினார்.எஸ்பிபி அதற்கென்றெ அவதாரம் எடுத்தவர்.

 நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - நூற்றுக்கு நூறு

தாமரைக் கன்னங்கள் (படம் --எதிர் நீச்சல்)
 
 கிழ் இரண்டு பாடல்களும் கட்டாயம் கேட்க:

http://music.cooltoad.com/music/search.php?TITLE=oruvanukku (இங்கு டவுன்லோடு செய்துகொள்ளவும்)Oruvanukku Oruthi - Ennai Azhaithadhu Yaaradi

என்னோடு என்னென்னவோ-படம்: தூண்டில் மீன்
 
மேல் சொன்ன பாடல்கள் இப்போது”பழசு”தான்.இப்போது வரும் பல “வாந்தி” பாடல்கள் கேட்கிற மாதிரியா இருக்கிறது?



இவர் மனைவி சொர்ணாவும் பின்னணிப் பாடகிதான். காதல் திருமணம்.

இவர் இசையமைத்த சில படங்கள்: அரங்கேற்றம்(கமல்),ராஜ நாகம்,எல்லோரும் நல்லவரே,நிறை குடம்(சிவாஜி),சதுரங்கம்(ரஜினி).

இசைத்துறையில் 1964 - 1980 வரை இருந்தவர்.

இவரின் நினைவு நாள் 7.5.10. பிறப்பு 28-07-1934. இறந்தது 7.5.96

 

17 comments:

  1. அருமையான தகவல்கள், நன்றி! இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாட்டெல்லாம் ரொம்ப பிடித்த பாட்டுக்கள்

    ReplyDelete
  2. Blogger அநன்யா மஹாதேவன் said...

    //அருமையான தகவல்கள், நன்றி! இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாட்டெல்லாம் ரொம்ப பிடித்த பாட்டுக்கள்//

    நன்றி.

    ReplyDelete
  3. Blogger அநன்யா மஹாதேவன் said...

    //Tamilish ல போடலியோ?//

    இப்பத்தான் போட்டேன். நன்றி.

    ReplyDelete
  4. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  5. Blogger Alexander said...

    // ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?//

    வருகைக்கு நன்றி.பதிவிலேயே இருக்குது.பாலசந்தர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியது போல என்று.முதல் படமான நீர்குமிழியில் வி.குமாருக்கு ரஹமானின் தந்தை சேகர் உதவினார் என்பது நீயுஸ்.
    உதவினார்

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள்,
    நன்றி!

    ReplyDelete
  7. என்னது? பாலச்சந்தர் ரஹ்மானை அறிமுகப்படுத்தினாரா? கவிதாலயா தயாரிப்பு என்பதால் இந்த முடிவிற்கு வந்தீர்களா?

    மணியின் படத்தில் எல்லாமே அவரோட செலக்‌ஷன் தானே? மேலும் ரஹ்மானை ரோஜாவுக்கு இசையமைக்க அழைத்தது(ஜிங்கிள்ஸிலிருந்து) மணிதான். பாலச்சந்தர் இல்லை.

    ReplyDelete
  8. ரவி, அவருடைய பெயர் யேசுதாஸ் , ஜேசுதாஸ் அல்ல. தமிழர்கள் தவிர வேறு யாரும் இந்த தவறை செய்வதில்லை - அவரும் அந்த கால பேட்டிகளில் இதை சொன்னதாக ஞாபகம்.

    நாம் செய்யும் மற்ற தவறுகள் மேனகா காந்தி (மனேகா காந்தி என்பதே சரி), கவாஸ்கர் (காவஸ்கர் என்பதே சரி)

    ReplyDelete
  9. Blogger S Maharajan said...

    //அருமையான தகவல்கள்,நன்றி!//

    நன்றி.

    ReplyDelete
  10. Blogger யோசிப்பவர் said...

    // மணியின் படத்தில் எல்லாமே அவரோட செலக்‌ஷன் தானே? மேலும் ரஹ்மானை ரோஜாவுக்கு இசையமைக்க அழைத்தது(ஜிங்கிள்ஸிலிருந்து) மணிதான். பாலச்சந்தர் இல்லை.//
    ஒரு பேட்டியில் பாலச்சந்தர் ”இந்தப் படத்தில் ஒரு புது
    இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று என் எண்ணத்திற்கு மணிரத்னமும் ஓகே என்றார்” என்று சொல்லி இருக்கிறார்.அதை ஒட்டித்தான் நான் இதை எழுதினேன்.

    நன்றி

    ReplyDelete
  11. Blogger பாலா அறம்வளர்த்தான் said...

    //ரவி, அவருடைய பெயர் யேசுதாஸ் , ஜேசுதாஸ் அல்ல. தமிழர்கள் தவிர வேறு யாரும் இந்த தவறை செய்வதில்லை - அவரும் அந்த கால பேட்டிகளில் இதை சொன்னதாக ஞாபகம்.

    சரி.மாற்றி விடுகிறேன்.இது பல வருடங்களாக நடக்கிறது.பெயர் வைத்திருப்பவர் எப்படி வைத்திருக்கிறாரோ அப்படித்தான் போட வேண்டும்.நன்றி.

    ஜேசுபாதம் என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    தாஜ்மஹால் - தாஜ்மெஹேல்

    ReplyDelete
  12. சார். அப்புறம் அவர் வானொலியிலும் இசையமைத்து உள்ளார் என்று கேள்விபட்டு இருக்கிறேன். நாகேஷ்-ஜெயலலிதா நடித்த மேஜர் சந்திரகாந்த் படத்தின் பாடல்களும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ......
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. Blogger ரெண்டு said...

    //சார். அப்புறம் அவர் வானொலியிலும் இசையமைத்து//
    எனக்குத் தெரிந்து இல்லை.அவர் மேடை நாடகங்களுக்கு நிறைய இசை அமைத்துள்ளார்.

    //ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ......//
    சூப்பர் பாடல். பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. பாமா விஜயம் இசை எம் எஸ் வி . நிறைய பேர் தவறுதலாக வி குமார் என்று நினைதுக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி. தவறைத் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. நான் கேட்ட கேள்விக்கு காரிகன் குறிக்கிட்டு ரவி ஆத்தியா எழுதிய ஒரு சிறு தவறை சுட்டி காட்டி ஓடுகிறார்.அந்த பெருமகனார் அமுதை பொழியும் நிலவே என்ற பாடல் இசையமைத்தவர் ராமநாதன் என்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ராஜாவின் இசையில் பாடவில்லை என்று காமடி பீஸ் விட்டவர்.

    [ ஏனென்றால் ராஜ ரசிகர்களுக்கு ஒன்றுமே தெரியாது : என்பதை தான் வலியுறுத்துகிறார் மாப்பிள்ளை ]

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!