Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை -அதிஷா/யுவகிருஷ்ணா

அதிஷா “புதிய தலைமுறை” என்ற (என்ன”திரி”... வாரந்?) ஒரு பத்திரிக்கை அனுப்பி என் விமர்சனத்தைக் கேட்டிருந்தார்.ஞானி 400 ரூபாய் கேட்ட மாதிரி சந்தா கேட்பாரோ என்று பயந்தேன்.கேட்கவில்லை.இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.விலையும் இல்லை.ஆசிரியர் இலாகா விவரங்களும் இல்லை.தனிச்சுற்றுக்கு மட்டும்.வெள்ளோட்டத்தில்(test marketing) இருக்கிறது.(?)



பாத்தவுடன் முதல் எண்ணம் இப்போதைய சூழ்நிலையில் புதுப் பத்திரிக்கையா?சாதாரணமாகவே புது டீவி சானல்,அரசியல் கட்சி, FM ரேடியோ ஆரம்பித்தாலே இருக்கிறது போதாதா என்ற எரிச்சல் வரும்.


ஏன் புதுப் பத்திரிக்கையா? வழக்கமான காரணங்கள்.இண்டர்னெட்/டீவி சேனல்கள்/செல் போன் பேச்சு,டிவீடி,வார அவுட்டிங்குகள்,சினிமாக்கள்,FM ரேடியோக்கள்,வாக்கிங்க்,ஜாக்கிங்......


ரொம்ப தைரியம் ஜாஸ்தி மாலனுக்கு.(மாலன் ஆசிரியர் என்று தெரிகிறது).இப்போது இருக்கும் ஆவியே சர்குலேஷனில் முக்கி முணகுகிறது.காரணம், அதன் மாற்றம் பாதிப்பேருக்குப் பிடிக்கவில்லை. தன் உருவத்தை இப்போது மாற்றிவிட்டது. குமுதத்தை பீட் செய்ய முயற்சிக்கிறது.


அடுத்த எண்ணம் மறுபடி மறுபடி படித்ததுதான் வரப்போகிறது. என்ன புதுசா சொல்லப்போறாங்க என்பது ?சுஜாதா சொன்னமாதிரி இவை “ஆனந்தவிகிடகுமுதகல்விகுங்குமம்”.எல்லாம் ”சேம்” ”சேம்”தான்.


முன்னமே திசைகள் என்று இளைஞசர்களை குறிவைத்து ஒரு பத்திரிக்கை வந்து (மாலன் ஆசிரியர்)பல வருட்ங்கள் முன் ஆரம்பித்து வெற்றிப் பெறவில்லை.


சரி பத்திரிக்கைக்கு வருவோம்.


எனக்கு வந்தது ரொம்ப பழசாக இருக்கிறதே.லேட்டாக அனுப்பப்பட்டது?

இனி போஸ்ட்மர்ட்டம்:

உருவம்:

இந்தியா டுடேயின் சாயல். கல்கியின் ”இளைஞ்சர் கல்கி” மாதிரி கொண்டு வந்தால் எப்படி ? அதேதான்.உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் வர்ணங்கள் ரொம்ப அழகாக உள்ளது.பேப்பரும் கந்தக நாற்றம் இல்லாமல் வழ வழ.அட்டையும் பள பள.எழுத்துருக்களும் நன்று.பெயருக்கேற்ப டார்கெட் ஆடியன்ஸ் அவர்கள்தானா?

உள்ளடக்கம்:

அந்த கால தேவர் படங்களில் முதல் சீனில் “வெற்றி! வெற்றி!” என்று சென்டிமெண்ட் வசனத்தோடு ஆரம்பிக்கும். இதிலும் முதல் பக்கம் “வெற்றி!வெற்றி! வெற்றி! வழக்கமாக தீபிகா பள்ளிகல் மற்றும் ஜோஸ்னா(ஸ்க்வாஷ்) இவர்களை தொடை தெரிய போட்டோ பேட்டிகளைப்(குமு/ஆவி) படித்துப் பழக்கம்.இதில் பாஸ்போர்ட் ஸ்சைதான்.அதனால் யாரோ மாதிரி இருக்கிறார்கள்.

பேட்டியின் நோக்கம் உண்மையாகவே புதிய தலைமுறைதான்.நல்லா இருக்கு.


அடுத்து என்ஜினியரிங் கவுன்சலிங் பற்றிக் கட்டுரை. கட்டுரையாளர்கள் நம்ம அதிஷா/யுவகிருஷ்ணா இரட்டையர்கள்(சுபா?).ஆனால் ரொம்ப பழசு.


சினிமா விமர்சனம்:வாமனன்.கதை எங்கிருந்து சுடப்பட்டது என்று குறிப்பு இதில் புதுசு.


அடுத்து சீமான் பேட்டி: தலைப்பு பார்த்தால் அரசியல் மாதிரி தெரிகிறது.ஆனால் கேள்விகள் சினிமா பற்றியது.இந்த பேட்டியில் பிழை ஒன்று. “ஓண்ணு தெரி........12 வயசுக்கு மேற்பட்ட” என்ற இடத்தில் 12 வயசுக்கு கிழ் என்று வர வேண்டும்.சரியா?சீமானின் வழக்கமான பொறி பறக்கும் அறிவுபூர்வமானப் பேச்சு.


இதில் ”இப்போதைய சினிமா”வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் “”இப்போதைய பத்திரிக்கைகள்” என்று மாலனிடம் கேட்டால் என்ன சொல்வார்.


பக்கம் 14 “கடவுள்..” கட்டுரை நல்லா இருக்கு.படமும் சூப்பர்.


பக்கம்17ல் இந்த சர்க்கரை நோய்ப் பற்றி கட்டுரை.இதுப் பற்றி வராத ஒரே பத்திரிக்கை கல்யாணப் பத்திரிக்கை மட்டும்தான்.வழக்கமான இப்போதெல்லாம் சர்க்கரை நோய் 30 வயதிலேயே “புதிய தலைமுறை”க்கு வந்துவிடும் காரணம்தான் கட்டுரைக்கு காரணம்.


பக்கம் 21 ல் பைக் வாங்குவது பற்றி. இது மாலன் ஸ்டைல் கட்டுரை.சுமார்.உமா ஷக்தி கவிதை.நகையும் சதையும் போல புத்தரும் ஈழமும் என்று ஆகிவிட்டது.கவிதை ஓகே.படம் நல்லா இருக்கு.நடுப்பக்கத்தில் வாரிசு அரசியல் இந்தியா மேப்பில்.”வாழ்க ஜனநாயகம்” இது எதற்கு?சுற்றுலா கட்டுரையும் நல்லா இருக்கு.புது இடம்.






















சினிமா கட்டுரை: விரிவான அலசல்.பேட்டி.கார்டூன் ஓகே.வைரமுத்துவின் வழக்கமான கலக்கல் எழுத்து.யூத்துகளை ரொம்ப கவர்ந்தவர்.”நிறைந்தவர்” என்ற சிறுக்தை ஓகே.வட்டார வழ்க்கில் எழுதி இருக்கலாமோ? நல்ல தாக்கம் இருந்திருக்கும்.இதிலும் இளைஞ்ன்.


பாலமுருகன் கட்டுரை ஒரு விழிப்புணர்ச்சி.மாணவரை விட கட்டுரையாளர் ரொம்ப கோபப்படுகிறார். ரிப்போட்டிங்கில் கட்டுரையாளர் விலகி நின்று எழுதவேண்டும் என்று ஒரு மாண்பு இருப்பதாக கேள்வி. ஜூவி கட்டுரைகளின் கடைசி பாராவில் இப்படித்தான் ஒரு புலம்பல புலம்பி விட்டு முடிப்பார்கள்.


சொலவது சரியா? யுவகிருஷ்ணா சொல்லுங்களேன்?


கடைசி மூன்று பக்கங்கள்: கணினியில் தமிழில் எழுத மென்பொருள் விவரங்கள்.உருப்படியானத் தகவல்கள்.அடுத்தப் பக்கம் “புத்தக அறிமுகம்” படிக்க வேண்டிய பகுதி.


முடித்தவுடன் ஏதோ ”மிஸ்ஸிங்” பீலிங்.


ஒரு டீசண்டான ”இளைஞசர் கல்கி” டைப்கொண்டுவரும் முயற்சியைப் பாராட்டலாம்.பத்திரிக்கை படிக்கும் கிட்டத்தட்ட ஒழிந்தே விட்ட இந்த தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சி.


அன்றைக்கே கஷ்டபட்டு தொலைநோக்குப் பார்வையில் முழுமூச்சில் “திசைகள்” வளர்ந்திருந்தால் “புதிய தலைமுறை” எதிர்நோக்கப் போகும் சங்கடங்களை அலட்சியமாக கடந்திருக்கும்.


வாழ்த்துக்கள்!


படங்கள்: நன்றி: www.blog.sanjaigandhi.com


படிக்க: சிறுகதை

"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா







16 comments:

  1. நண்பரே

    நான் கேட்டிருப்பது 400 ரூபாய் அல்ல. 500 ரூபாய். தரமான படங்களை எடுத்து நேரடியாகப் பார்வையாளருக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சி இது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்ற பெரும் நிறுவனங்களின் முதலீட்டில் வெளியீடாக வரும் இதழ் போன்ற முயற்சி அல்ல கோலம். அது வேறு. இது வேறு. சீக்கிரம் சந்தா அனுப்பி ஆதரியுங்கள். நன்றி.

    நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

    நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

    எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

    ஊர் கூடி தேர் இழுப்போம்.

    எப்படி பணம் அனுப்புவது ?

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. சில இடங்களில் உங்கள் கருத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கு. ”சேம்.. சேம்” “ இந்தியா டுடே சாயல்” ”வெற்றி மீது வெற்றி” இன்னும் சில.. நல்ல விமர்சனம்.. :)

    ReplyDelete
  3. நடுப் பக்கத்தில் இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு என்ற இடத்தில் தமிழ்புடு என்று இருக்கிறது. கர்நாடகா என்ற இடத்திலும் தவறாக வந்துள்ளது.
    நன்றி

    ReplyDelete
  4. நன்றி :-)

    உருட்டுக்கட்டையால் செம அடி எதிர்பார்த்தோம். நல்லவேளை எல்லோரும் மயிலிறகால் செல்லமாய் அடிக்கிறீர்கள்!

    ReplyDelete
  5. gnani said.

    //நான் கேட்டிருப்பது 400 ரூபாய் அல்ல. 500 ரூபாய்.//
    தவறுக்கு வருந்துகிறேன்.அடுத்து உங்கள் திட்டத்தில்
    எனக்கு ஆர்வம் இல்லை.

    ReplyDelete
  6. SanjaiGandhi said...

    //சில இடங்களில் உங்கள் கருத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கு. ”சேம்.. சேம்” “ இந்தியா டுடே சாயல்” ”வெற்றி மீது வெற்றி” இன்னும் சில.. நல்ல விமர்சனம்.. :)//

    போட்டோ எடுக்கும்போது நான் உங்கள் விமர்சனத்தை படிக்கவில்லை.தாக்கம் இருக்கக்கூடாது என்ற காரணம்தான்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  7. ponnusamypalani said...

    //நடுப் பக்கத்தில் இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு என்ற இடத்தில் தமிழ்புடு என்று இருக்கிறது. கர்நாடகா என்ற இடத்திலும் தவறாக வந்துள்//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. யுவகிருஷ்ணா said...

    //உருட்டுக்கட்டையால் செம அடி எதிர்பார்த்தோம். நல்லவேளை எல்லோரும் மயிலிறகால் செல்லமாய் அடிக்கிறீர்கள்!//

    நன்றி.

    ReplyDelete
  9. லக்கி ,ஒரு அனுஷ்கா படம் கூட இல்லையா ? நீர் ஆசிரியர் குழுவில் இருக்கிறீரா இல்லையா ?

    ReplyDelete
  10. Prakash said...

    // லக்கி ,ஒரு அனுஷ்கா படம் கூட இல்லையா ? நீர் ஆசிரியர் குழுவில் இருக்கிறீரா இல்லையா ?//

    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  11. என்னாச்சு.. எழுத்துப்பிழை அதிகம் தட்டுப்படுகிறது?!

    ReplyDelete
  12. நல்ல அலசல் போல...
    புத்தகம் பெருநகரங்களுக்கானது போல் தெரிகிறது...
    சார் ஒரு கட்டுரை போட்டிருக்கேன் உங்கள் விமர்சனம் எதிர்நோக்கி இருக்கிறேன்...

    ReplyDelete
  13. சென்ஷி said...

    //என்னாச்சு.. எழுத்துப்பிழை அதிகம் தட்டுப்படுகிறது?!//

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. September 2, 2009 12:17 PM
    தமிழ்ப்பறவை said...

    // சார் ஒரு கட்டுரை போட்டிருக்கேன் உங்கள் விமர்சனம் எதிர்நோக்கி இருக்கிறேன்...//

    கட்டாயம் படிப்பேன்.நான் பின் தொடர்பவர்களை கூகுள் ரீடரில் எப்படியும் பார்ப்பேன் .

    ReplyDelete
  15. எப்ப வருதாம்?

    ReplyDelete
  16. தெரியவில்லை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!