Thursday, August 27, 2009

மதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை









”வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” என்ற பாட்டைப் பாடியவர் கானா உலக நாதன்.பாட்டு ”சித்திரம் பேசுதடி” என்ற படம்.பாட்டு ஓவர் நை ஹிட்.உலக நாதன் ஓவர் நைட் செலிபரைடி.

ஒசாமா பின் லேடன் தோன்றும் ”அல் ஜஸீரா”(Al Jazeera)சானல் தவிர மீதி எல்லா சானல்களிலும் 24 மணி நேரமும் போட்டு துவைத்து எடுத்தார்கள் இந்தப் பாட்டை எல்லா FMகளிலும் போட்டுத்தாக்கினார்கள். தமிழகத்தில் ஓடும் எல்லா PT வண்டிகளிலும் இதேதான். அடுத்து எல்லா பாட்டு நிகழ்ச்சி சேனல்களிலும் மைக் பிடித்துக்கொண்டு நடுவர் ஆனார். சினிமாவில் தோன்றினார்.

இப்போது அவர் எங்கே?

_____________________________________________________________________





ராஜபார்வை(கமலின் 100 வது படம்) என்ற திரைப்படம் எனக்கு தெரிந்து கடந்த 20 வருடமாக எந்த சேனலிலும் போடப்படுவதில்லை. கமலின் சொந்த்ப்படம் இது.
என்ன காரணம்?

____________________________________________________________________








மதன் பாப் என்ற காமெடி நடிகரின் பாணி மூக்கை மேல் நோக்கி இழுத்து பல்லைக் காட்டிக்கொண்டு ”ஹி..ஹி..”சிரிப்பது.அவருக்கென்ற சில வேறு சில காமெடித் திறமைகள் உண்டு.எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில். அதெல்லாம் இல்லாமல் இந்த “மூ.மே.நோ.இ.ப.கா.கொ” பாணியை அவர் மேல் திணித்து” மவனே...உனக்கு ஆயுசுக்கும் இதாண்டா” என்று ஆக்கியது பரிதாபம்.


அவரும் வேறு வழியில்லாமல் .....?

____________________________________________________________________

அம்பானி முதல் ஆண்டி வரை எல்லோரும் கூலிக்குத்தான் மாராடிக்கிறோம்.இந்த எப் எம் (FM) தொகுப்பாளினிகளும் அதே. பாவ்ல கேள்விகளும், பாசாங்கு சிரிப்புகளும்,கொஞ்சி பேசும் பேச்சுக்களும், சேனலுக்கு சேனல் பார்க்கலாம்.


நிகழ்ச்சியில் நேயர்களோடு பேசும் பேச்சு வழிசலோ வழிச்சல். FM நேயர்கள் விடும் ஜொல்கள் தாங்கமுடியவில்லை.


ஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்.


“உங்கள்ட்ட பேசனம்னு மூன்று மாசாமா முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் லைன் கிடைச்சுது.” இது ரூம் போட்டு வழிதல்.


படிக்க:


"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா






16 comments:

  1. என்ன சார் , பொசுக்குனு சாப்ட் போர்னோ என்றுவிட்டீர்களே? வலிசல்களை நான் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன்.



    ஒரு சேனலில் அந்த இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்//


    சிரித்து சிரித்து பேசுவதை சொல்கிறீர்களா ?

    ReplyDelete
  2. ராஜபார்வை: அட ஆமாம் தல..இந்தப் படத்தை சேனல்கள் பக்கம் பார்த்ததே இல்லை.ராஜபார்வை குறித்த உங்கள் பார்வை நல்ல பார்வை.

    ReplyDelete
  3. ராஜ பார்வையை எந்த சேனலுக்கும் விற்பனை செய்திருக்க மாட்டாரோ?

    ReplyDelete
  4. //இழுத்து இழுத்துச் சிரித்து பேசுவது soft porno தான்// :D நிச்சயமாங்க.

    ReplyDelete
  5. ராஜ பார்வை இன்னும் பார்த்ததே இல்லை..
    மற்றவை ஹி..ஹி..

    ReplyDelete
  6. நன்றி பிரகாஷ்.

    நன்றி நர்சிம்.

    ReplyDelete
  7. //என்ன சார் , பொசுக்குனு சாப்ட் போர்னோ என்றுவிட்டீர்களே? வலிசல்களை நான் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன்//

    பிரகாஷ் போன் செக்ஸ் மாதிரி ஆனால் ஒரு மெதுவான
    soft porno என்று சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  8. நன்றி ஸ்ரீ

    நன்றி TKB காந்தி.

    ReplyDelete
  9. //எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவார் முன்னொரு காலத்தில்//

    ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களில் வருவார்.எஸ்.வி.சேகர் அல்ல

    ReplyDelete
  10. T.V.Radhakrishnan said...

    //ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களில் வருவார்.எஸ்.வி.சேகர் அல்ல
    August 27, 2009 8:00 AM///

    சார்! அவர் எஸ்.வி.சேகரின் டீவி நாடகங்களில் வருவார். நன்றி.

    ReplyDelete
  11. Rajaparvai has been broadcastes 2 or 3 times in Podigai.

    FM radio jackie's salaries are very very low. Rs.3000 to 4000 only per month.

    ReplyDelete
  12. ராம்ஜி.யாஹூ said...

    //Rajaparvai has been broadcastes 2 or 3 times in Podigai.//

    தகவலுக்கு நன்றி.வேறு எந்த சேனலிலும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.

    FM radio jackie's salaries are very very low. Rs.3000 to 4000 only per month.

    ReplyDelete
  13. ராஜபார்வையை தூர்தர்ஷனில் ஒரு முறை பார்த்த ஞாபகம்ணே... நீங்க அக்ரஹாரத்து கழுதை, மோகமுள், மற்றவை நேரில் எல்லாம் ஏதாவது ப்ளாட்ஃபார கடைகளிலாவது கிடைக்குதா சாரே?

    ReplyDelete
  14. நண்பரே! எங்க வீட்டு தாய்குலங்களிலிடம் சொல்லி வைத்தும் நானும் தினமும் பேப்பர் பார்த்தும் எந்த சேனலிலும் போட்டாற் போல் தெரியவில்லை.இதற்கு முன் மற்றும் பின் வந்த படங்கள் ரவுண்டுக்கட்டி போடுகிறார்கள்.

    ராஜ் டீவில் தியாகராஜ பாகவதர் அப்பாவின் நடித்த படத்திற்கு கூட சிடி வைத்துள்ளார்கள்.ஆனால் ரா.பார்வை?


    //நீங்க அக்ரஹாரத்து கழுதை, மோகமுள், மற்றவை நேரில் எல்லாம் ஏதாவது ப்ளாட்ஃபார கடைகளிலாவது கிடைக்குதா சாரே?//

    மோகமுள்/மற்றவை நேரில் பெரிய கடைகளில் கிடைக்கும்.அக்ரஹாரத்து கழுதை சந்தேகம்.

    இது சில சேனல்களில் போடுவதுண்டு.

    ReplyDelete
  15. //ஒசாமா பின் லேடன் தோன்றும் ”ஜல் ஜீரா”சானல் தவிர//

    அது அல் ஜ‌ஸீரா ர‌வி சார்...

    ReplyDelete
  16. R.Gopi said...
    //அது அல் ஜ‌ஸீரா ர‌வி சார்...//

    நன்றி கோபி.மாற்றிவிட்டேன்.ஜல் ஜீரா என்றால் சீரகத் தண்ணீர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!