Wednesday, August 12, 2009

அய்யோ!.சூப்பர்!..சினிமா வசனங்கள்..

சிறு வயதில் நான் பார்த்த சினிமாக்களில் அடிக்கடி வரும் வசனங்களை இப்போது நினைத்தால் அய்யோ....அம்மா! ஆனால் அதே சமயத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வருகிறது.ஏன்?அப்போது மக்குத்தனமாக ரசித்தது.ஆம்!அப்போதைய “பஞ்ச்” டயலக்குகள்.

இப்போது உள்ள தலைமுறைத் தப்பிவிட்டது.

கிழே சில சாம்பிள்கள்:-

  • “போன்னு சொல்லிட்ட இல்ல..பெத்த தகப்பனயே..!போறேன்...ஆனா போவறத்துக்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டுப்போறேன்....(கதவுக்கு அருகில் நின்று 5 நிமிட வசனம்.கடைசியில் துண்டை உதறித் “தூத்தேறி”)
(சிவாஜி தன் கன்னக்கதுப்புகள் துடிக்க,கண்களில் நீர் தளும்பு வசனம் பேசுவார். நாங்கள் கைத்தட்டுவோம்)
  • ”முள்ளுல சேல விழுந்தாலும், சேலல முள் விழுந்தாலும் நஷ்டம் ொட்டச்சிக்குதான்.ஆம்பிளைங்க உதறிட்டுப் போயிடுவாங்க”
  • ”ஒண்ணு சொல்றேன்..நீங்க பணக்காரங்க.....மேல் படில இருக்கீங்க..ஆட்டம் போட்டு தவறி விழுந்தா அடிபடறது நீங்கதான்...ஆனா நாங்க ஏழைங்க எங்க கால் எப்போதுமே இந்த பூமித்தாய் மேலதான்.விழுந்தாலும் காயம் ஒண்ணும் படாது”
  • ”அவ இப்படித்தான் துள்ளிக்கிட்டு திரிவா.... ஒருத்தன் வந்து மூக்கணாம் கயிறு போட்டு அடக்கின தெரியும் இவளோட திமிறு.பொட்டிப்பாம்பா அடங்குவா”
  • (மகள்)”பால் திரிஞ்சு போச்சும்மா.... திரிஞ்சு போச்சு..நான் எதுக்குமே லாயக்கில்ல”.(அம்மா) என்னடி..சொல்ற..! (மகள்)ஆமாம்மா...நா எச்சில் மாங்கா ஆயிட்டேன்....கெட்டுப் போயிட்டேம்மா....கெட்டுப் போயிட்டேன்.
  • ” ஒரு குடும்பத்துல ஆம்பிள கெட்டுப் போவறது,வீட்லேந்து வெளில எச்சி துப்பற மாதிரி, அதே பொம்பள கெட்டுப் போவறது,தன் மேலேயே தானே எச்சில் துப்பக்கிற மாதிரிம்மா ... மாதிரிம்மா.... .(குடும்பத்தில் வாயைப் பொத்திக்கொண்டு (பன்றிக் காய்ச்சல் வந்த மாதிரி)அழுவார்கள்.(செந்தாமரை வசனம்?)
  • ”நீ ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சா தாய்யா இருந்தா.இப்படிப் பண்ணுவியா!”
  • ”நீ வயசுக்கு வந்தப் பொண்ணும்மா...! பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் வீட்ட விட்டு தாண்டாக்கூடாது...ஊர்க்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க ...ஆமா சொல்லிபுட்டேன்”
  • ”ஒரு குடும்பத்துல அம்மாங்கிறவ மாட்டுவண்டியில சக்கரத்தில இருக்கிற “அச்சு” மாதிரி.அவதான் ஆதாரம்.அச்சு கழண்டுப்போச்சுன்னா வண்டி கொடச் சாஞ்சுடும்....”
  • ”பணப்பித்துப்பிடிச்ச நாகலிங்கம்!எவ்வளவுதான் பங்களா,தோட்டம்,தொறவுன்னு சொத்து சேத்தாலும்..எதுவும் கைல எடுத்திட்டுப் போக முடியாது.மனுஷனுக்கு ஆறு அடிதான் சொந்தம்”

  • “என்னதான் இருந்தாலும் அவன் உன்ன தொட்டுத் தாலிகட்டி மூணு முடிச்சுப் போட்டவன்.அவன் எது சொன்னாலும் பொறுத்துக்கம்மா...”

தாய் மாமன்/வில்லன்/பண்ணையார்/தாலியைப் பிடித்துக்கொண்டு பேசும் வசனங்கள் என்று நிறைய உண்டு. யாராவது எழுதலாம்.

தெலுங்கு டப்பிங் பட வசனங்களும் சூப்பரா இருக்கும்.



லேட்டஸ்ட் வசனம்: “ஏய்.. செல்லம்! கனவுல டெய்லி வாடா! என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுடா!” ( பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் பேசுகிறார்)



19 comments:

  1. ம்.. இதெல்லாம் ஒரு காலம்..!

    இப்பல்லாம் ஒரு வசனம்கூட மனசுல நிக்க மாட்டேங்குது..!

    ReplyDelete
  2. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    //ம்.. இதெல்லாம் ஒரு காலம்..!//

    நண்பரே வசனங்களை ரசிக்கிறீங்களா? நன்றி.

    ReplyDelete
  3. ஹிஹி..

    அப்புறம் மெயிலுக்கு வாங்களேன். ஒரு சின்ன விஷயம் சொல்லணும்..

    thaamiraa@gmail.com

    ReplyDelete
  4. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //ஹிஹி.. அப்புறம் மெயிலுக்கு வாங்களேன். ஒரு சின்ன விஷயம் சொல்லணும்..

    வருகிறேன்.

    ReplyDelete
  5. :-))

    லிஸ்ட் சின்னதா இருக்கே..!!
    இதுவே போதும்னு நினைச்சுட்டிங்களா..??

    ReplyDelete
  6. பட்டிக்காட்டான்.. commented on blog post_11: //“:-))லிஸ்ட் சின்னதா இருக்கே..!!இதுவே போதும்னு நினைச்சுட்டிங்களா..??”//

    நன்றி.உங்களிடம் இருந்தால் சொல்லலாம்.

    ReplyDelete
  7. தலைமுறை இடைவெளியை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்

    ReplyDelete
  8. 1.என் மனசுல ரொம்ப நாளா பொதச்சு வெச்சிருக்குற உண்மைய நான் இப்போ வெளிய சொல்றேன்

    2.காளி ஜக்கு ம்ம் இழுத்துட்டு போ இவள

    3.சொந்தபந்தங்க எல்லாம் பார்த்திட்டு இருக்கு , இப்போ கல்யாணத்த நிறுத்த சொன்னா நான் எங்கம்மா போவேன்

    ReplyDelete
  9. V.Sekar padathula "amabalaiga neengha..Ponbalangaya naangha.."ngra type la niraya dialogue varum..Note panni irukkeengala?
    UM.Krish

    ReplyDelete
  10. //முரளிகண்ணன் said...//

    // தலைமுறை இடைவெளியை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்//

    நன்றி முரளி.

    ReplyDelete
  11. Prakash said...

    // 1.என் மனசுல ரொம்ப நாளா பொதச்சு வெச்சிருக்குற உண்மைய நான் இப்போ வெளிய சொல்றேன்

    2.காளி ஜக்கு ம்ம் இழுத்துட்டு போ இவள

    3.சொந்தபந்தங்க எல்லாம் பார்த்திட்டு இருக்கு , இப்போ கல்யாணத்த நிறுத்த சொன்னா நான் எங்கம்மா போவேன்//

    சூப்பர் பிரகாஷ் .அந்த தாலியப் பிடிச்சுக்கிட்டு பேசுற வசனம் தெரியுமா?

    ReplyDelete
  12. //“ஏய்.. செல்லம்! கனவுல டெய்லி வாடா! என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுடா!” ( பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் பேசுகிறார்)//


    LOL :))))))))))

    ReplyDelete
  13. 1."அடியே இந்த தாலி உன் கழுத்துல இருக்கற வரைக்கும் தான நீ சுமங்கலியா இருப்ப , அத கழட்டிடா நீ எனக்கு தான் சொந்தம். " ( சிகப்பு விளக்கு ஒன்று தொங்கும். ஆக்ரோஷமான முகத்துடன் ஊர் பண்ணையார் )

    " பண்ணையார் அய்யா நில்லுங்க , இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க "

    2.மாமா ( அத்தான்) உங்க கையால அந்த மூணு முடிச்ச என் கழுத்துல மாட்டி விடுங்க.


    3.இந்த தாலி மேல சத்தியமா சொல்றேன்.....

    4.ஐயோ , இந்த தாலியை மட்டும் கேட்காதீங்க அத்தான். என்னை கொலை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. ஆயில்யன்

    // LOL :))))))))))//

    நன்றி.
    _____________________
    பிரகாஷ்

    சூப்பர்!
    ______________________

    ஸ்ரீ

    நன்றி

    ReplyDelete
  15. பதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு...

    ReplyDelete
  16. தமிழ்ப்பறவை said...

    //பதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு//

    ஆமாங்க.இல்லைங்க.

    ReplyDelete
  17. கே.ரவிஷங்கர் said...

    தமிழ்ப்பறவை said...

    //பதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு//

    ஆமாங்க.இல்லைங்க.

    அது ஆமாவா? இல்லையா?

    ReplyDelete
  18. கிருஷ்ணமூர்த்தி said...

    வாங்க.ஆங்கிலத்தில் Yes also No என்கிற மாதிரி.
    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!