நானும் என் அக்காவும்
செருப்பை விடுகிறோம்
அடிவாரப் பூக்கடையில்
எங்கள் செருப்புகளுக்கு
செல்லமாக முகம் சிணுங்கி
ரசித்தப்படி நானும்
என் நினைவில்
விடாமல் அவளும்
வருகிறாள்
கலர் கலரான சூடிதார்
கல்லூரி மாணவிகளும்
செருப்பை விடுகிறார்கள்
அதே பூக்கடையில்தான்
எங்கள் செருப்புகளுக்கு
கடைக்காரி காவல்
பூ பழம் தேங்காய் வாங்கியதால்
கல்லூரி மாணவிகளின்
செருப்புகளுக்குக் காவலாய்
இவர்களின் சூடிதார்காரி ஒருத்தி
செருப்புகளுக்கு மட்டுமல்ல
புத்தகமூட்டைகளுக்கும்தான்
தூங்கிடாதடி செக்யூரிட்டி
செல்லமாக முகம் சிணுங்கி
கை ஓங்குகிறாள்
சூடிதார் செக்யூரிட்டி
முதல் படி ஏறியதும்
ஒருத்தி காதில் இன்னொருத்தி
ஏதோ சொல்ல மற்றொருத்தி
தலையில் அடித்துச் சிரிக்கிறாள்
ஒவ்வொருவர் காதுக்கும்
இது போகிறது
வரிசையாக முறைவைத்துக்கொண்டு
எல்லோரும் சிரிக்கிறார்கள்
துப்பட்டாவால் அடித்துக்கொள்கிறார்கள்
ரசித்தப்படி நானும்
என் அக்காவும்
இவர்களைப் பின் தொடருகிறோம்
படிக்குப்படி சூர்யாவைப்
பற்றி பேச்சுக்கள்
அயன் காலர் டியூன்கள்
பரிமாற்றங்கள் கலாய்ப்புகள்
அழகு காட்டுகிறார்கள்
குறுக்கேச் சென்று கலைக்கிறார்கள்
துப்பட்டாவினால் மூடிக்கொள்கிறார்கள்
போஸ் கொடுக்கிறார்கள்
செல்போன் கேமரா
செல்போன் வீடியோ
கலாய்ப்புகள் கலாட்டாக்கள்
முடிந்து கோவிலின் உச்சி
தலை கவிழ்ந்து
குந்திக்கொண்டிருக்கும்
பெண்ணை
நானும் என் அக்காவும்
பார்க்கிறோம்
அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
விடாமல் அவளும்
வருகிறாள்
நீ வரமா போய்ட்டடி
You missed a lot yaar..!!
செம்ம்ம்ம்ம்......ம கலாட்டாடி
செம்ம்ம்ம்ம்......ம கும்மிடி
என்பார்கள் இவர்கள்
இறங்கியதும்
//ஒவ்வொருவர் காதுக்கும்
ReplyDeleteஇது போகிறது
வரிசையாக முறைவைத்துக்கொண்டு
எல்லோரும் சிரிக்கிறார்கள்
துப்பட்டாவால் அடித்துக்கொள்கிறார்கள்//
ம்ம்ம்... என்ன சொல்லியிருப்பாங்க.. உங்களுக்கு தெரியுமா?
வாங்க பாலாஜி.வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//ம்ம்ம்... என்ன சொல்லியிருப்பாங்க.. உங்களுக்கு தெரியுமா?//
தெரியாது பாலாஜி.
நல்ல உணர்வினை கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்
ReplyDeleteநல்லா இருக்குங்க கவிதை
நல்லதொரு பதிவு.படமும் அருமை.
ReplyDeleteகாரணத்திற்கு கடவுளே காரணம்.
ரசித்தேன்.காட்சிகள் கண்முன்னே விரிந்தது.
ReplyDeleteநுட்பமான உணர்வை தருணத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், அருமை, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ReplyDeleteநன்றி நேசமித்ரன்.
ReplyDeleteதுபாய் ராஜா said...
ReplyDelete//நல்லதொரு பதிவு.படமும் அருமை.
காரணத்திற்கு கடவுளே காரணம்.//
நன்றி.
நாடோடி இலக்கியன் said...
ReplyDelete//ரசித்தேன்.காட்சிகள் கண்முன்னே விரிந்தது//
அடிக்கடி வாங்க நாடோடி இலக்கியன்.நன்றி.
//நுட்பமான உணர்வை தருணத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், அருமை, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது//
ReplyDeleteநன்றி யாத்ரா.
மிக அழகிய கவிதை ரவிஜி.காட்சி அமைப்பும், மனசின் நுண்ணிய உணர்வையும் செய் நேர்த்தியாக பின்னியிருக்கிறீர்கள்.கரு வேல நிழலிற்கு நீங்கள் அனுப்பிய "தொடக்க பள்ளி"கவிதையையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா.
ReplyDeleteகொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDeleteகொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..
ரிப்பீட்டு.
நன்றி ராஜாராம்.
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..//
கடைசி வரிகளின் தாக்கம் உறைக்க கொஞ்சம் நீளம் அவசியம் என்று டெக்னிக்கலாக(???)
உணர்ந்தேன்.
நன்றி ஆதி.
//ஆ.முத்துராமலிங்கம் said...//
ReplyDelete// ஆதிமூலகிருஷ்ணன் said...
கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..//
கருத்துக்கு நன்றி.காரணம் அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளேன்.
அவளும் வந்திருக்கலாம்
ReplyDeleteஅவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
என் நினைவில்
விடாமல் அவளும்
வருகிறாள்
vegu arumai
padithuvittu
araimanineram
kazhithu
pinnutom
idugiren.
yenedral ?
indha vari
ennodu thodarndhu vandhukode irkkiradhu
nandri!
நன்றி பிஸ்கோத்துப்பயல்.
ReplyDelete:-)
ReplyDeleteமனசுக்குப் பிடிச்ச காட்சியை பார்க்கும்போது கவிதையா எடுத்திருக்காங்கன்னு சொல்லுவோம். ஒரு கவிதையையே அழகா காட்சிப்படுத்துதினதை எப்படி சொல்றது!
மிக அழகு
நல்லாயிருக்குங்க
ReplyDeleteநன்றி சென்ஷி.நம்ம லேட்டஸ்ட் சிறுகதைப் படிச்சீங்களா?
ReplyDeleteD.R.Ashok said...
ReplyDelete//நல்லாயிருக்குங்க//
வருகைக்கு நன்றி அஷோக்.கருத்துக்கும் நன்றி.
நுட்பமான உணர்வை, காட்சியை கவிதையாக்கியுள்ளீர்கள் எளிமையாக. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்.விநாயகமுருகன் said...
ReplyDelete//நுட்பமான உணர்வை, காட்சியை கவிதையாக்கியுள்ளீர்கள் எளிமையாக. வாழ்த்துக்கள்//
நன்றி.
ரவி
ReplyDeleteநல்லா இருக்கு......
சரி..... என்ன பேசினாங்க?? சொல்லவே இல்லையே?!!!
நன்றி கோபி.
ReplyDelete//சரி..... என்ன பேசினாங்க?? சொல்லவே இல்லையே?!!!//
யாருக்குத் தெரியும்?
இது கவிதையா? தெரியல, ஆனா படிக்க இதமா நினைவார்த்தமா இருந்தது...
ReplyDeleteசமீபத்தில் பெங்களூர் லால்பாக் பூக்கள் (!!) கண்காட்சிக்கு போனபோது, ஆரேழு பெண்கள் (கல்லூரி வயதுதான்) பக்கம் பக்கமாய் நின்று, ஒருத்தி விட்டு ஒருத்தி கைகளை இடையிலிருப்பவளின் பின்னால் கோர்த்து கொண்டு ஒரு நடனம் போல் தத்தி தத்தி செருப்பால் ஒலி எழுப்பி போனார்கள். நான் video பிடித்தேன்.
எனக்கு கிராமத்து கும்மி ஞாபகம் வந்தது... அப்படியே நின்று ரசித்துக் கொண்டிருந்தேன் (ஜொள்ளு என்றும் சொல்லலாம்). இதெல்லாம்தான் 'பெண்மையோ'?
(எழுத்து பிழைகள் இருக்கும் - மண்ணிக்கவும்...)
எல்லாம் நல்லா இருந்தது சார் ஆனா அக்கா கூட போறப்ப பொண்ணுங்கள சைட் அடிகிறீங்க பாத்தீங்களா! அதுதான் சரி இல்ல!..
ReplyDeleteகடவுளை மறந்த ஞானம் மிகவும் அருமை! நல்லதொரு கவிதை. யதார்த்தமான படைப்பு. மிக்க நன்றி.
ReplyDeleteSugumar (சுகுமார்) said...
ReplyDelete// இது கவிதையா? தெரியல, ஆனா படிக்க இதமா நினைவார்த்தமா இருந்தது...//
நன்றி சுகுமார்.
Mohan kumar said...
ReplyDelete//எல்லாம் நல்லா இருந்தது சார் ஆனா அக்கா கூட போறப்ப பொண்ணுங்கள சைட் அடிகிறீங்க பாத்தீங்களா! அதுதான் சரி இல்ல!..//
நானா?
நண்பரே! அவர்களின் செயல்களை கூர்ந்து கவனிக்கிறார் கவிதையின் நாயகன்.
நன்றி.
வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDelete//கடவுளை மறந்த ஞானம் மிகவும் அருமை! நல்லதொரு கவிதை. யதார்த்தமான படைப்பு. மிக்க நன்றி//
நன்றி சார்.
அந்த பெண்ணுக்கு கோவிலுக்கு செல்ல இஷ்டமில்லையோ என்னவோ! :?
ReplyDeleteShakthiprabha said...
ReplyDelete// அந்த பெண்ணுக்கு கோவிலுக்கு செல்ல இஷ்டமில்லையோ என்னவோ! :?//
கருத்துக்கு நன்றி.