Friday, August 7, 2009

மலைக் கோவிலில் சூடிதார் பெண்கள்






















நானும் என் அக்காவும்
செருப்பை விடுகிறோம்
மலைக் கோவில்
அடிவாரப் பூக்கடையில்

கலர் கலரான சூடிதார்
கல்லூரி மாணவிகளும்
செருப்பை விடுகிறார்கள்
அதே பூக்கடையில்தான்

எங்கள் செருப்புகளுக்கு
கடைக்காரி காவல்
பூ பழம் தேங்காய் வாங்கியதால்

கல்லூரி மாணவிகளின்
செருப்புகளுக்குக் காவலாய்
இவர்களின் சூடிதார்காரி ஒருத்தி
செருப்புகளுக்கு மட்டுமல்ல
புத்தகமூட்டைகளுக்கும்தான்

தூங்கிடாதடி செக்யூரிட்டி

செல்லமாக முகம் சிணுங்கி
கை ஓங்குகிறாள்
சூடிதார் செக்யூரிட்டி

முதல் படி ஏறியதும்
ஒருத்தி காதில் இன்னொருத்தி
ஏதோ சொல்ல மற்றொருத்தி
தலையில் அடித்துச் சிரிக்கிறாள்

ஒவ்வொருவர் காதுக்கும்
இது போகிறது
வரிசையாக முறைவைத்துக்கொண்டு
எல்லோரும் சிரிக்கிறார்கள்
துப்பட்டாவால் அடித்துக்கொள்கிறார்கள்

ரசித்தப்படி நானும்

என் அக்காவும்
இவர்களைப் பின் தொடருகிறோம்

படிக்குப்படி சூர்யாவைப்
பற்றி பேச்சுக்கள்
அயன் காலர் டியூன்கள்
பரிமாற்றங்கள் கலாய்ப்புகள்

அழகு காட்டுகிறார்கள்
குறுக்கேச் சென்று கலைக்கிறார்கள்
துப்பட்டாவினால் மூடிக்கொள்கிறார்கள்
போஸ் கொடுக்கிறார்கள்
செல்போன் கேமரா
செல்போன் வீடியோ
கலாய்ப்புகள் கலாட்டாக்கள்
முடிந்து கோவிலின் உச்சி

தலை கவிழ்ந்து
குந்திக்கொண்டிருக்கும்
பெண்ணை
நானும் என் அக்காவும்
பார்க்கிறோம்

அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
அவளும் வந்திருக்கலாம்
என் நினைவில்
விடாமல் அவளும்
வருகிறாள்


நீ வரமா போய்ட்டடி
You missed a lot yaar..!!
செம்ம்ம்ம்ம்......ம கலாட்டாடி
செம்ம்ம்ம்ம்......ம கும்மிடி
என்பார்கள் இவர்கள்
இறங்கியதும்
முதல் வேலையாக



படிக்க கவிதை:

சிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்....






34 comments:

  1. //ஒவ்வொருவர் காதுக்கும்
    இது போகிறது
    வரிசையாக முறைவைத்துக்கொண்டு
    எல்லோரும் சிரிக்கிறார்கள்
    துப்பட்டாவால் அடித்துக்கொள்கிறார்கள்//

    ம்ம்ம்... என்ன சொல்லியிருப்பாங்க.. உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  2. வாங்க பாலாஜி.வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    //ம்ம்ம்... என்ன சொல்லியிருப்பாங்க.. உங்களுக்கு தெரியுமா?//

    தெரியாது பாலாஜி.

    ReplyDelete
  3. நல்ல உணர்வினை கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்
    நல்லா இருக்குங்க கவிதை

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு.படமும் அருமை.

    காரணத்திற்கு கடவுளே காரணம்.

    ReplyDelete
  5. ரசித்தேன்.காட்சிகள் கண்முன்னே விரிந்தது.

    ReplyDelete
  6. நுட்பமான உணர்வை தருணத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், அருமை, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  7. நன்றி நேசமித்ரன்.

    ReplyDelete
  8. துபாய் ராஜா said...

    //நல்லதொரு பதிவு.படமும் அருமை.
    காரணத்திற்கு கடவுளே காரணம்.//

    நன்றி.

    ReplyDelete
  9. நாடோடி இலக்கியன் said...

    //ரசித்தேன்.காட்சிகள் கண்முன்னே விரிந்தது//

    அடிக்கடி வாங்க நாடோடி இலக்கியன்.நன்றி.

    ReplyDelete
  10. //நுட்பமான உணர்வை தருணத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள், அருமை, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது//

    நன்றி யாத்ரா.

    ReplyDelete
  11. மிக அழகிய கவிதை ரவிஜி.காட்சி அமைப்பும், மனசின் நுண்ணிய உணர்வையும் செய் நேர்த்தியாக பின்னியிருக்கிறீர்கள்.கரு வேல நிழலிற்கு நீங்கள் அனுப்பிய "தொடக்க பள்ளி"கவிதையையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா.

    ReplyDelete
  12. கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..

    ReplyDelete
  13. ஆதிமூலகிருஷ்ணன் said...

    கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..
    ரிப்பீட்டு.

    ReplyDelete
  14. நன்றி ராஜாராம்.

    ReplyDelete
  15. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..//

    கடைசி வரிகளின் தாக்கம் உறைக்க கொஞ்சம் நீளம் அவசியம் என்று டெக்னிக்கலாக(???)
    உணர்ந்தேன்.

    நன்றி ஆதி.

    ReplyDelete
  16. //ஆ.முத்துராமலிங்கம் said...//

    // ஆதிமூலகிருஷ்ணன் said...

    கொஞ்சம் நீளமாக உணர்ந்தேன்..//

    கருத்துக்கு நன்றி.காரணம் அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளேன்.

    ReplyDelete
  17. அவளும் வந்திருக்கலாம்
    அவளும் வந்திருக்கலாம்
    அவளும் வந்திருக்கலாம்
    என் நினைவில்
    விடாமல் அவளும்
    வருகிறாள்

    vegu arumai
    padithuvittu
    araimanineram
    kazhithu
    pinnutom
    idugiren.

    yenedral ?

    indha vari
    ennodu thodarndhu vandhukode irkkiradhu

    nandri!

    ReplyDelete
  18. நன்றி பிஸ்கோத்துப்பயல்.

    ReplyDelete
  19. :-)

    மனசுக்குப் பிடிச்ச காட்சியை பார்க்கும்போது கவிதையா எடுத்திருக்காங்கன்னு சொல்லுவோம். ஒரு கவிதையையே அழகா காட்சிப்படுத்துதினதை எப்படி சொல்றது!

    மிக அழகு

    ReplyDelete
  20. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  21. நன்றி சென்ஷி.நம்ம லேட்டஸ்ட் சிறுகதைப் படிச்சீங்களா?

    ReplyDelete
  22. D.R.Ashok said...

    //நல்லாயிருக்குங்க//
    வருகைக்கு நன்றி அஷோக்.கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  23. நுட்பமான உணர்வை, காட்சியை கவிதையாக்கியுள்ளீர்கள் எளிமையாக. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. என்.விநாயகமுருகன் said...

    //நுட்பமான உணர்வை, காட்சியை கவிதையாக்கியுள்ளீர்கள் எளிமையாக. வாழ்த்துக்கள்//

    நன்றி.

    ReplyDelete
  25. ரவி

    நல்லா இருக்கு......

    சரி..... என்ன பேசினாங்க?? சொல்லவே இல்லையே?!!!

    ReplyDelete
  26. நன்றி கோபி.

    //சரி..... என்ன பேசினாங்க?? சொல்லவே இல்லையே?!!!//

    யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
  27. இது கவிதையா? தெரியல, ஆனா படிக்க இதமா நினைவார்த்தமா இருந்தது...

    சமீபத்தில் பெங்களூர் லால்பாக் பூக்கள் (!!) கண்காட்சிக்கு போனபோது, ஆரேழு பெண்கள் (கல்லூரி வயதுதான்) பக்கம் பக்கமாய் நின்று, ஒருத்தி விட்டு ஒருத்தி கைகளை இடையிலிருப்பவளின் பின்னால் கோர்த்து கொண்டு ஒரு நடனம் போல் தத்தி தத்தி செருப்பால் ஒலி எழுப்பி போனார்கள். நான் video பிடித்தேன்.

    எனக்கு கிராமத்து கும்மி ஞாபகம் வந்தது... அப்படியே நின்று ரசித்துக் கொண்டிருந்தேன் (ஜொள்ளு என்றும் சொல்லலாம்). இதெல்லாம்தான் 'பெண்மையோ'?

    (எழுத்து பிழைகள் இருக்கும் - மண்ணிக்கவும்...)

    ReplyDelete
  28. எல்லாம் நல்லா இருந்தது சார் ஆனா அக்கா கூட போறப்ப பொண்ணுங்கள சைட் அடிகிறீங்க பாத்தீங்களா! அதுதான் சரி இல்ல!..

    ReplyDelete
  29. கடவுளை மறந்த ஞானம் மிகவும் அருமை! நல்லதொரு கவிதை. யதார்த்தமான படைப்பு. மிக்க நன்றி.

    ReplyDelete
  30. Sugumar (சுகுமார்) said...

    // இது கவிதையா? தெரியல, ஆனா படிக்க இதமா நினைவார்த்தமா இருந்தது...//

    நன்றி சுகுமார்.

    ReplyDelete
  31. Mohan kumar said...

    //எல்லாம் நல்லா இருந்தது சார் ஆனா அக்கா கூட போறப்ப பொண்ணுங்கள சைட் அடிகிறீங்க பாத்தீங்களா! அதுதான் சரி இல்ல!..//

    நானா?

    நண்பரே! அவர்களின் செயல்களை கூர்ந்து கவனிக்கிறார் கவிதையின் நாயகன்.

    நன்றி.

    ReplyDelete
  32. வெ.இராதாகிருஷ்ணன் said...

    //கடவுளை மறந்த ஞானம் மிகவும் அருமை! நல்லதொரு கவிதை. யதார்த்தமான படைப்பு. மிக்க நன்றி//

    நன்றி சார்.

    ReplyDelete
  33. அந்த பெண்ணுக்கு கோவிலுக்கு செல்ல இஷ்டமில்லையோ என்னவோ! :?

    ReplyDelete
  34. Shakthiprabha said...

    // அந்த பெண்ணுக்கு கோவிலுக்கு செல்ல இஷ்டமில்லையோ என்னவோ! :?//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!