Tuesday, August 11, 2009

உரையாடல் போட்டி-பரிசு பெறாதவர்கள்

பிள்ளையார் சதுர்த்தி அன்று தெருவில் நோக்குமிடங்களெல்லாம் கலர் கலரான குடைகள் தெரிவது மாதிரி எங்கு நோக்கினும் உரையாடல்...
உரையாடல்...உரையாடல்...உரையாடல்...

சரி.. நாமும் ஒரு பதிவு போட்டுட்டா என்ன என்பதாக இந்தப் பதிவு.

யாரோ ஒருவர் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் ”not selected" என்று நடுவர்கள் கிர்ர்ர்ர்ரென்று பஸ்ஸரில் அடித்து சிவப்பு லைட்எரிந்தும் பிடிவாதம் பிடித்துக்கொண்டு போகாமல் அங்கேயே நிற்கிறார்.

சிலர் பரிசுக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரப்பாக்கத்தில்
(unapproved)அரைக்கிரெளவுண்டுக்கு அட்வான்ஸும்,செளபாக்கியா வெட் கிரைண்டருக்கு முன் பணமும் கொடுத்ததாகக் கேள்வி.ஆனால் பரிசு கிடைக்காமல் புலம்பல்கள்.

சில பேர் சில கதைகளை சிபாரிசு செய்கிறார்கள் பரிசுக்காக. அவர்களும் மற்ற எல்லாக் கதைகளை படித்துப் பார்த்து சிபாரிசு செய்தார்களா?

பரிசு பெறாத பதிவர்கள்,பரிசு பெற்ற 20 கதைகளைத் தவிர இவர்கள் பரிசு பெறாத எல்லோர்க் கதைகளையும் படித்தார்களா? அதே மாதிரி பரிசு பெற்றவர்களும் படித்தார்களா?நான் 197 கதைகளை முழுமையாகப் படித்தேன்.மீதிக் கதைகள் முதல் இரண்டாவது பாராவிலேயே முடிவு தெரிந்து விட்டது.இது அனுபவம் கொடுத்த பழக்கம்.

நடுவர்கள் பொறுமையாக 250 கதைகளைப் படித்து தரம் பிரித்து பரிசுக்குரியவை அல்லாதவையாக பிரித்து ரிசல்ட் வெளியிட்டார்கள்.அவர்களுக்கு எவ்வளவு அனுபவம் வந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்.நமக்கும் வர வேண்டாமா? அது மட்டுமா?இப்படிப் படிப்பது நிச்சயமாக அடுத்தப் போடிக்கான நெட் பிராக்டீஸ்.

ஏன் படிக்க வேண்டும்?முதலில், தம் கதைதான் உலகத்திலேயே சிறந்த சிறுகதை என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல் வெளிவர.

  • வாசிப்பு அனுபவம்
  • நடுவர்கள் அளவுகோல் அடிப்படை என்னவென்று தெரிய
  • நம்மைவிட ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் என்பது அறிய
  • நம்மைவிடமட்டமானவர்களும் இருக்கிறார்கள் என்பதும் அறிய
  • வித்தியாசமான கருக்கள்
  • அற்புதமாக எழுதும் first time எழுத்தாளர்கள்
  • எழுத்தின் flow
  • எப்படியெல்லாம் எழுதலாம்
  • என்ன மாதிரியெல்லாம் எழுதலாம்
  • அடுத்தக் கட்ட புது முயற்சிகள்
  • எங்கு தப்புச் செய்தோம் என உணர்தல்
  • எப்படியெல்லாம் முடிக்கலாம்
  • தவறுகளைத் தவிர்க்க
  • அப்பட்டமான “சிறுவர் மலர்” கதைகளைத் தவிர்க்க
இனி படித்தக் கதைகளைப் பற்றி.(இதில் வெற்றிப் பெற்ற கதைகளும் அடக்கம்.)

நிறைகள்:

  • அற்புதமாக எழுதும் first time எழுத்தாளர்கள். நம்பவே முடியவில்லை.
  • சில வித்தியாசமான கருக்கள்
  • அற்புதமான வரிகள்/வர்ணனைகள்
  • சில யதார்த்தமான கதா பாத்திரங்கள்
குறைகள்(நிறைய)
  • 1920 வருட கதை உத்திகள்.அதுவும் செயற்கைத்தனமாக.
  • கதையின் கதாப் பாத்திரங்களை வேணுமென்றே கஷ்டப்படவைத்து நடுவர்களின் அனுதாபத்தைப் பெற்று பரிசு வாங்கி விடலாம் என்பதாக.(பள்ளியில் விடைத்தாளில் ரூபாய் நோட்டை பின் செய்து கவருவதுப் போல)
  • மெலோடிராமவான அதிர்ச்சி முடிவுகள் அதுவும் லாஜிக் இல்லாமல்
  • பாசாங்குத்தனமாக சமுதாயச் சாடல்
  • கதை என்ற பேரில் கட்டுரைகள்
  • விஞ்ஞான சிறுகதைகள் என்ற பேரில் தனக்கும் புரியாமல் படிப்பவனுக்கும் புரியாமல் கஷ்டப்படுத்துவது.இதிலும் பம்மாத்து பாசாங்குத்தனம்.
  • மேகத்தில் உலவும் கதாப் பாத்திரங்கள்
  • கதைச்சொல்லியின் சொந்த ரசனைகள் கதையில் வந்து இயல்பு இல்லாமல் போவது.
  • கதைச்சொல்லி கதைக்குள்ளே வ்ந்து மைக் பிடித்து பிரசாரம்/அறிவுரை சொல்வது.இதனால கதை டாகுமெண்டரி ஆகிவிடுகிறது.
  • ஓவர் யதார்த்தம் என்ற பேரில் அறுவைகள்/அருவருப்புகள்
  • கதை முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்காமல் கதைச்சொல்லி கடைசியில்கருத்துச் சொல்லிப் போதால்
  • சில கதைகள் பள்ளிப் போட்டிக்கு எழுதப்பட்டவை
  • கதாபாத்திரங்களின் வயதுக்கேற்ற வசனங்கள் இல்லாமை
  • கதையின் மூட் எகிறுதல்
  • கதையின் மூட் தெரியாமல் எழுதுவது
  • நகைச்சுவை சுத்தமாக இல்லை.
  • வெளி உலகம் தெரியாமல் எழுதப்பட்ட வெகுளித்தனமான கதைகள்
  • அமெச்சூர் நெடி
  • பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதைகள்
  • பாசாங்குத்தனமான கவித்துவங்கள்
கடைசியாக :-

சமுதாயச் சாடலை டாக்குமெண்டரியாகச் சொல்லாமல் கதையின் ஓட்டத்திலேயே சொல்லி அதிர்வுகளை ஏற்படுத்தலாம்.அதற்கு வாசிப்பனுபவம் இருந்தால் நன்று.

ரசித்தக் கதைகளைப் பற்றி:-

”மலைகளில் காணாமல் போனதேவதை”(தமிழன்- கறுப்பி)கதை.
சிறப்பு:
ஒரு வசீகரமான நடை.ஒரு பெண்டசி கதை.ஈழ வட்டார வழக்கு.இதுக்கும் திறமை வேண்டும்.உ
_____________________________________

எவனோ ஒருவனின் பரிசு பெறாத “சின்ன மனசு” கதை.
ஒரு சிறுவன் வீட்டை விட்டு ஓடி ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று பயந்துப் போய் வீடு திரும்புகிறான்.
சிறப்பு:
அவன் பார்வை/எண்ணங்களோடு லாஜிக்கலாகச் சொல்லப்பட்டக்கதை.
அசட்டுத்தனம் இல்லை.
__________________________________

சரவணனின் “காத்திருத்தல்கள்”(பரிசுப் பெற்றக் கதை)
சிறப்பு:
கதைத் தெப்பகுளத்தில் ஆரம்பித்து தெப்பக் குளத்தில் முடிகிறது.
உரையாடல்கள் இல்லை.மெல்லிய உணர்வுகள் மனதைத் தொடுகிற்து. கதைச்சொல்லியின் சொந்த ரசனைகள் குறுக்கிடாமல் மேகத்தில் அனுவசியமாக உலவாமல் தரையிலேயே உலவுகிறார்கள்.
_____________________________________


பிரசன்னம் (யோசிப்பவர்).(பெரிய எழுத்தாளர்?)
சிறப்பு:
தெளிவாகச் சொல்லப்பட்ட திரில்லர் கம் விஞ்ஞானச்(?) சிறுகதை.
அடுத்தது என்ன என்ற சுவாரஸ்யம்.அனவாசியமான பாசாங்குத்தனம் இல்லை.

ஊஞ்சல் -
Bee\'morgan .(but...story teller missed a lot in narration)
சிறப்பு:
வித்தியாசமான கரு


யோசனை:

முதலில் ஒரு நான்கு ஐந்து மாதங்கள் ஒரு அல்லது ஒண்ணரைப் பக்கம் எழுதிப் பழகலாம்.

31 comments:

  1. எப்படி? இது உங்களால் மட்டும்........ இவ்வளவு பொறுமையா! எப்படி உங்களுக்கு நேரம்? ஏதாவது additional Time specialaaaa arange பண்ணி வைத்திருக்கிறீர்களோ? நம்மால் இது முடியாது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சார்,

    என் கதையை படிச்சிங்களா?

    விமர்சனத்தை என் மெயிலில் அனுப்புங்கள்.

    iniyavan2009@gmail.com

    ReplyDelete
  3. பஞ்சதந்திரம் படத்தில் ஒரு வசனம் வருமே? “மாமா கேள்வி கேட்குறது ஈஸி. பதில் சொல்லுறதுதான் கஷ்டம்”

    அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி இங்கே பின்னூட்டுகிறேன்.

    “மாமா விமர்சனம் பண்ணுறது ரொம்ப ஈஸி. கதை எழுத கத்துக் கொடுக்குறது அதைவிட ஈஸி. கதை எழுதறதுதான் கஷ்டம்!”

    ReplyDelete
  4. ஆஹா... இதுவே எனக்குப் போதும். ரொம்ப சந்தோசம், ரொம்ப நன்றி.

    //கதை முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்காமல் கதைச்சொல்லி கடைசியில்கருத்துச் சொல்லிப் போதால்//
    இது எனக்குத்தான்னு தெரியுது.

    ReplyDelete
  5. மிக அழகான, நிதர்சனமான பதிவு சார்...
    குறைகளை அழகாகப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்...
    பரிசுப்போட்டி என்றாலே கதைகளில் பள்ளிக்கூட குழந்தைகள் தினவிழா கட்டுரை,பேச்சுப்போட்டி மாதிரி கதைகள் வந்து விழுகின்றன..
    நீங்கள் சொன்னது மாதிரி ‘சிறுவர்மலர்’ டைப் நீதிக்கதைகள் என்றும் சொல்லலாம்...
    நீங்கள் குறிப்பிட்ட கதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும்...
    நன்றி சார்...

    ReplyDelete
  6. ரவி சார் , உங்கள் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரே நாளில் எல்லா கதையையும் படித்தீர்களா? ( அன்று செய்தி தாள்கள் படித்தீர்களா? ).

    என் கதையை இப்படி யாரும் பயன்படுத்தி கொள்வார்கள் என்று நினைக்கவில்லை உங்களைப்போல் .

    Am not totally useless , I can be also used as a bad example :P

    ReplyDelete
  7. கல்லெறிவோம். விழுந்தா எனக்கு. இல்லாட்டி பின்னூட்டத்திற்கு என்றுதான் கதையை அனுப்பி வைத்தேன். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் இல்லையா...

    தங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன். (என் கதையை படிச்சீங்களோ...)

    ReplyDelete
  8. விஞ்ஞான சிறுகதைகள் என்ற பேரில் தனக்கும் புரியாமல் படிப்பவனுக்கும் புரியாமல் கஷ்டப்படுத்துவது.இதிலும் பம்மாத்து பாசாங்குத்தனம்.//

    அய்யோ.... ர‌வி சார் என்னை‌ சொல்றாரோ என்னவோ? நானும், ஏதோ என‌க்கு மனதில் தோன்றியதை எழுதினேன்....சுட்டிக்காட்டும் வேக‌ம் ரெம்ப‌ கார‌மா இருக்கே ர‌வி சார்...

    எனிவே....திருத்திக்கொள்கிறேன்.....

    ReplyDelete
  9. தங்க முகுந்தன் said...
    // எப்படி? இது உங்களால் மட்டும்........ இவ்வளவு பொறுமையா! எப்படி உங்களுக்கு நேரம்? ஏதாவது additional Time specialaaaa arange பண்ணி வைத்திருக்கிறீர்களோ?//

    ஆர்வம் இருந்தால் செய்யலாம்.

    ReplyDelete
  10. என். உலகநாதன் said...
    //சார்,என் கதையை படிச்சிங்களா?
    விமர்சனத்தை என் மெயிலில் அனுப்புங்கள்.//

    சார்! நீங்க என் கதைப் படிச்சீங்களா?

    ReplyDelete
  11. யுவகிருஷ்ணா said...

    //“மாமா விமர்சனம் பண்ணுறது ரொம்ப ஈஸி. கதை எழுத கத்துக் கொடுக்குறது அதைவிட ஈஸி. கதை எழுதறதுதான் கஷ்டம்!”//

    என் முன்னோடிகளிடமும் நீங்கள் சொன்ன மாதிரிதான் சொன்னேன்.55 கதைகள் திரும்பி வந்தது.

    இடுப்பில் துண்டைக்கட்டி கண்டுக்கொண்டேன் என் கைலாசனாதனை என்று நிறைய வாசிக்க
    ஆரம்பித்தேன் பல கதைகளை.இரண்டு வருடம் சோம்பேறித்தனம் இல்லாமல் எழுதினேன்.
    சரிவரவில்லை.நொந்தேன்.மீண்டும் எழுதினேன்.

    நான்கு வருடங்களுக்குப் பிறகு “ஜோதி”
    தெரிந்தது.புன்னகை வந்தது.

    ReplyDelete
  12. ரவிஜி,

    விளக்கமான விமர்சனத்திற்கு நன்றி! வெற்றி பெற்ற சில கதைகள் வெற்றி பெற்றபின் தான் வாசிக்கும் பேறு கிட்டியது.

    //“மாமா விமர்சனம் பண்ணுறது ரொம்ப ஈஸி. கதை எழுத கத்துக் கொடுக்குறது அதைவிட ஈஸி. கதை எழுதறதுதான் கஷ்டம்!”//

    :-))) இந்த பதிவுல லக்கி கமெண்ட் இல்லாம முழுமை அடையாது போலருந்தது. குறை தீர்ந்த சந்தோசம்!

    ReplyDelete
  13. நீங்கள் குறைகளாக சொன்ன லிஸ்ட் சிறப்பாக இருந்தது. படித்த ஐம்பது கதைகளிலேயே இவற்றை உணர முடிந்தது. என் கதை என்னால் வேறு கோணத்தில் பார்க்கப்படுவதால் அதிலும் இந்தத் தவறுகள் இருந்தனவா என்பதை அறிய முடியவில்லை. ஏற்கனவே பின்னூட்டமிட்டிருந்தீர்கள். நேரமிருந்தால் இன்னும் விளக்கலாம் மெயிலில். ப்ளீஸ்.. எதிர்பார்க்கிறேன். (அப்படியே 'இரை போட்டுத் தூங்கப்பண்ணிவிட்டாயா?'வையும் விமர்சிக்கலாம்)

    ReplyDelete
  14. எவனோ ஒருவன் said...

    //ஆஹா... இதுவே எனக்குப் போதும். ரொம்ப சந்தோசம், ரொம்ப நன்றி//

    நண்பா!உங்களுக்குத் திறமை இருக்கிறது.எழுதி
    எழுதி fine tune செய்துக்கொள்ளுங்கள்.சீரியசாக எழுதுங்கள்.

    ReplyDelete
  15. நேர‌மிருப்பின், விருப்ப‌மிருப்பின் என்னுடைய இந்த க‌தைக‌ளைப் ப‌ற்றிய‌ க‌ருத்துக்க‌ளை சொல்ல‌வும்...

    http://vettipayal.wordpress.com/2009/05/30/kuttipaap/

    http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html

    ல‌க்கி,
    சாப்பாடு ந‌ல்லா இல்லைனு சொல்ல ச‌மைய‌ல் தெரிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தும் ஒரு ப‌ட‌ம் மொக்கை என்ப‌தை சொல்ல‌ சினிமா இய‌க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தும் நம‌க்கு தெரியாத‌த‌ல்ல‌ :)

    ReplyDelete
  16. நல்ல உபயோகமான பதிவு.நன்றி.

    ReplyDelete
  17. ஒரு சிறுகதையில் இருக்க வேண்டாதவைகளாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் அருமை, கூர்மையான அவதானிப்பகள், இக்குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை.

    ReplyDelete
  18. தமிழ்ப்பறவை said...

    //பரிசுப்போட்டி என்றாலே கதைகளில் பள்ளிக்கூட குழந்தைகள் தினவிழா கட்டுரை,பேச்சுப்போட்டி மாதிரி கதைகள் வந்து விழுகின்றன..//

    நானும் அப்படித்தான் நினைத்தேன் என் அறிமுக எழுத்து வயதில்.படித்துத் தெளிந்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  19. Prakash said...

    //ரவி சார் , உங்கள் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது. ஒரே நாளில் எல்லா கதையையும் படித்தீர்களா? ( அன்று செய்தி தாள்கள் படித்தீர்களா? ).//

    நன்றி.

    // என் கதையை இப்படி யாரும் பயன்படுத்தி கொள்வார்கள் என்று நினைக்கவில்லை உங்களைப்போல்//

    ”நல்லா இருக்குன்னு” பின்னூட்டம் போட்டேன் ஆனா செலக்ட் ஆகல்ல?அப்படியா?புரியவில்லை

    //Am not totally useless , I can be also used as a bad example :P//

    சார்! என்னாச்சு.நீஙகள் பெரிய படிப்பெல்லாம் படித்து இருக்கிறீர்கள். ஏன் இப்படி? இதுவும் புரியவில்லை.

    ReplyDelete
  20. குடந்தை அன்புமணி

    நல்ல எண்ணங்கள்.கருத்துக்கு நன்றி.


    கோபி,
    //அய்யோ.... ர‌வி சார் என்னை‌ சொல்றாரோ என்னவோ? நானும், ஏதோ என‌க்கு மனதில் தோன்றியதை எழுதினேன்....சுட்டிக்காட்டும் வேக‌ம் ரெம்ப‌ கார‌மா இருக்கே ர‌வி சார்...//

    எதுவும் போட்டுக்குழப்பிக்
    கொள்ளாதீர்கள்.பொதுவாகச் சொன்னேன்.

    நன்றி கோபி.

    ReplyDelete
  21. வெட்டிப்பயல் said...

    //நேர‌மிருப்பின், விருப்ப‌மிருப்பின் என்னுடைய இந்த க‌தைக‌ளைப் ப‌ற்றிய‌ க‌ருத்துக்க‌ளை சொல்ல‌வும்..//

    ஏன் என் கதைப் படித்து யாருமே கருத்துச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?

    ReplyDelete
  22. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //நேரமிருந்தால் இன்னும் விளக்கலாம் மெயிலில். ப்ளீஸ்.. எதிர்பார்க்கிறேன்.//

    நண்பரே அவ்வளவுதான்.வேறு குறையில்லை அதற்கு.

    //(அப்படியே 'இரை போட்டுத் தூங்கப்பண்ணிவிட்டாயா?'வையும் விமர்சிக்கலாம்)//

    நம்ம கதைய யாருமே விமர்சித்து கருத்துச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? என் கதையும்
    மிஸ் ஆயிடுச்சுங்க!

    ReplyDelete
  23. பா.ராஜாராம்

    நன்றி ஜி.


    யாத்ரா

    நன்றி யாத்ரா.

    ReplyDelete
  24. //ஏன் என் கதைப் படித்து யாருமே கருத்துச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?
    //

    :)

    ReplyDelete
  25. வெட்டிப்பயல்

    ////ஏன் என் கதைப் படித்து யாருமே கருத்துச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?
    //

    மன்னிக்கனும் சார்.மறந்து விட்டேன்.ஏண்டா இந்தக் கட்டுரையை எழுதினேன் என்று ஆகிவிட்டது.அடுத்து ரொம்ப சீரியஸ்ஸா விமர்சனம் பண்ணின ஆளாளுக்கு ஆட்டோ அனுப்பிச்சு வாங்க சார் நம்ம வலைக்கு என்கிறார்கள்.அலுப்புத் தட்டுகிறது.

    இதுதான் கடைசி.வருகிறேன் நாளைக்கு.

    ReplyDelete
  26. ரொம்ப அருமையான பதிவு....
    The need of the hour ....
    பூங்கொதது!

    ReplyDelete
  27. அன்பு கே.ரவிஷங்கர்...

    தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  28. அன்புடன் அருணா said...

    //ரொம்ப அருமையான பதிவு....
    The need of the hour ....
    பூங்கொதது!//

    நன்றிம்மா.

    ReplyDelete
  29. இரா. வசந்த குமார். said...

    //அன்பு கே.ரவிஷங்கர்... தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள்.//

    நன்றி.

    ReplyDelete
  30. நல்லதொரு இடுகை. மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறைகள் என இடப்பட்டிருப்பதில் பல இடங்களில் எனது கதை ஒத்துப் போவதை அறிகிறேன். நிறைகளில் ஒன்று கூட ஒட்டாமல் இருப்பதை எண்ணி வருத்தம் கொள்கிறேன்.

    மிக்க நன்றி ரவிசங்கர் அவர்களே.

    ReplyDelete
  31. வெ.இராதாகிருஷ்ணன் said...

    //இருப்பதை எண்ணி வருத்தம் கொள்கிறேன்//

    எழுதி எழுதிப் பழகினால் சரியாகிவிடும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!