Friday, August 14, 2009

நமுத்துப்போன அம்மா - கவிதை



திடீரென்று ஏதோ ஆசை
சுட்ட அப்பளம் சாப்பிட
பள்ளிச்செல்லும் அவசரத்தில்
கேட்டப் பையனுக்கு
அப்பளம் சுட்டுப் போடாமல்
திட்டி அனுப்பி விட்டாள்
அமமா
மனம் பொருக்காமல்
பாறங்கல்லாய் கனக்க
அவசரமாக இரண்டு சுட்டு
சின்ன டப்பாவில் போட்டு
பெரிய சிபாரிசில்
பள்ளி உள்ளே போன டப்பா
அடக்கமுடியாத ஆர்வத்தில்
வகுப்பு பாடங்களுனூடே
திறக்கப்படும்போதும்
மூடப்படும்போதும்
பையனின் முகத்திலும்
டப்பாவின் உள்ளேயுமாய்
கூடுவிட்டு கூடு பாய்ந்து
பார்க்கப்பட்ட அம்மா
மதிய உணவு இடைவேளையில்
சாப்பிட மறக்கப்பட்டு
நமுத்தேப் போனாள்
மாலை பள்ளிவிட்ட அவசரத்தில்
மனம் பொருக்காமல்
பாறங்கல்லாய் கனக்க
நமுத்துப் போன அம்மாவின்
சில தூள் அம்மாக்களை
மட்டும் கவனமாக
டப்பாவில் போட்டு
மீதி அம்மாவை குப்பைத்
தொட்டியில் கொட்டி
ஒரு முறை குலுக்கிப்
பார்த்து கொண்டான் மறக்காமல்
வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு
காட்ட



படிக்க சிறுகதை:

”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்







29 comments:

  1. அருமை ரவி சார். மீ தி பர்ஷ்டு :P

    ReplyDelete
  2. Prakash said...

    //அருமை ரவி சார். மீ தி பர்ஷ்டு :P//

    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  3. முரளிகண்ணன் said...

    //அசத்தல்//

    நன்றி.

    ReplyDelete
  4. அழகான கவிதை ,எழுத்துப் பிழைகளை சற்றே கவனிக்கலாமே.

    ReplyDelete
  5. இந்த வாரம் வலைச்சரத்தில் உங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.முடிந்தால்பார்க்கவும்.

    ReplyDelete
  6. Shakthiprabha said...

    //யதார்த்தம்//

    நன்றி

    ReplyDelete
  7. ஸ்ரீ said...

    //அழகான கவிதை ,எழுத்துப் பிழைகளை சற்றே கவனிக்கலாமே//

    தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. எதார்த்தமாய் இருக்கு....

    ReplyDelete
  9. பிரியமுடன்.........வசந்த் said...

    // எதார்த்தமாய் இருக்கு....//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. :)

    நல்லா இருக்கு அச்சுபிழைகளை தவிர்க்கலாமே

    ReplyDelete
  11. நன்றி நேசமித்ரன்.கூடிய வரைத் திருத்திவிட்டேன்.
    மேலும் இருந்தால் சுட்டிக்காட்ட முடியுமா?

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா வந்திருக்குங்க ரவிஜி.யாரும் யோசிக்காத கோணம். அழகு!

    ReplyDelete
  13. நல்லா இருக்குங்க ரவி

    ReplyDelete
  14. //பா.ராஜாராம் said...//

    // ரொம்ப நல்லா வந்திருக்குங்க ரவிஜி.யாரும் யோசிக்காத கோணம். அழகு!//

    வாங்க ஜி.நன்றி.

    ReplyDelete
  15. TKB காந்தி said...

    //நல்லா இருக்குங்க ரவி//

    நன்றி காந்தி.

    ReplyDelete
  16. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

    ReplyDelete
  17. அருமையான வரிகள்..

    எழுத்துப் பிழை ஒற்று எழுத்துக்களில்..

    ReplyDelete
  18. //யாத்ரா said...//

    //ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை//

    நன்றி

    ReplyDelete
  19. //பட்டிக்காட்டான்.. said...

    // அருமையான வரிகள்..

    எழுத்துப் பிழை ஒற்று எழுத்துக்களில்.//

    நன்றி.

    ReplyDelete
  20. மிகச் சிறப்பான கவிதை.சிறிது ரொமாண்டிஸிசம் இருந்தாலும் ரசிக்க வைத்தது. எனது வலைமனைக்கும் கொஞ்சம் வருகை தாருங்களேன்.

    http://oliyudayon.blogspot.com/

    ReplyDelete
  21. நன்றி பிரசன்னா இராசன்.

    ReplyDelete
  22. அசத்தல்....ரவி ஷங்கர். எத்தனை அம்மாக்கள் !!
    வாசகனை புன்னகைக்க வைக்க முடிந்தாலே கவிதை வெற்றி தானே !!!

    நானும் ஒரு சிறுகதைன்ற பேர்ல ஒரு நமுத்து போன அப்பளம் சுட்டிருக்கேன்.
    உங்கள் விமர்சனம் தேவை.

    ReplyDelete
  23. அ.மு.செய்யது said...

    //அசத்தல்....ரவி ஷங்கர். எத்தனை அம்மாக்கள் !!
    வாசகனை புன்னகைக்க வைக்க முடிந்தாலே கவிதை வெற்றி தானே !!!//

    நன்றி சார்.

    //நானும் ஒரு சிறுகதைன்ற பேர்ல ஒரு நமுத்து போன அப்பளம் சுட்டிருக்கேன்.
    உங்கள் விமர்சனம் தேவை.//

    பிசியாக இருக்கிறேன். வருகிறேன் பிறகு. நன்றி.

    ReplyDelete
  24. August 17, 2009 5:28 AM
    தமிழ்ப்பறவை said...

    //ஓகே...//

    நன்றி. நந்தலாலா பாட்டுக் கேட்டேன்.நல்லா இருக்கு.

    ReplyDelete
  25. Sowmya said...

    // Simply Superb :)//

    நன்றி செளமியா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!