Monday, March 21, 2011

ஓட்டுக்கு காசு பாலிசிக்கு து(வே)ட்டு

வேட்பாளரை அவரின் தகுதி பார்த்து தேர்ந்தெடுப்பது உத்தமம்.பணத்திற்கு ஓட்டுப் போடுவது கேவலம்.

ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.ஆயுள் காப்பீடு முகவர்கள் ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு முதல் இரண்டுஅல்லது மூன்று தவணையோ இலவசமாக கட்டுவார்கள்.இது சட்டவிரோதம்.காரணம் காசுக்காக பாலிசி இல்லை. உங்கள் தேவைக்காகத்தான் பாலிசி.

இதை 98% கண்டுக்கொள்வதில்லை.இது இல்லாமல் வியாபாரம்
செய்வது கடினம்.நான் யாரிடமிமும் காசு வாங்கியதில்லை.அதற்காகவே எனக்கு சூப்பர் சர்வீஸ் விழுந்து விழுந்து கொடுப்பார்கள்.

ஒருவர் ரொம்ப பிடிவாதமாக ஒன்பது தவணைகள் இலவசமாக கட்டவைத்து காப்பீடு எடுத்துவிட்டார்.பாலிசிதாரருக்கு பெருமைப்பிடிபடவில்லை.ஆனால் முகவருக்கு கடுப்பான கடுப்பு செம்மை கடுப்பு.(இவன் செத்தா கிடைக்கும் தொகையிலிருந்து எனக்கு கமிஷன் தருவானா என்று சகமுகவரிடம் முணுமுணுத்தாராம்)

பாலிசிதாரர், சம்பளத்திலிருந்து தொழிலாளர் கூட்டுறவு சேமிப்புக்கிற்கு தவணைப்பிடிப்பதாக வீட்டில் ரீல் விட்டு அதை
குடிக்கு செலவழித்தார்.பாலிசி முகவரிடம் இருந்தது.பாலிசிதாரர் ஊர் மாறினார்.பிறகு இறந்தார்.அவர் இறந்து போனது ஐந்து மாதம் கழித்துதான் முகவருக்குத் தெரியும்.முகவரும் கண்டுக்கொள்ளாமல் ”காலாவதி பாலிசி" என்று சொல்லி விட்டுவிட்டார்.இரண்டு லட்ச ரூபாய் போச்சு.

துட்டுக்கு ஓட்டுப் போட்டால் இந்த முகவர் கொடுத்த மதிப்புதான் வாக்காளருக்குக் கிடைக்கும்.

5 comments:

  1. நல்லா சூசகமா சொல்லீட்டீங்க... அதே நேரம் பஸ்ஸில், ட்விட்டரில் TBCD, ஜ்யோவ்ராம்சுந்தர் எடுத்து வைத்திருக்கும் விவாதங்களையும் பாருங்கள்...

    ReplyDelete
  2. நன்றி மாதவி

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  3. //எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!//

    :-)

    நல்லா இருக்கு உங்க பிளாக் கண்டெண்ட். ஆனா லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது.

    இந்தப் பதிவும், உதாரனமும் அருமை

    ReplyDelete
  4. தமிழ்மணம் சம்பந்தப்பட்ட வலைகள் லோட் ஆவதற்கு தாமதம் ஆகிறது இன்று.மற்ற வலைகள் ஏதாவது திறந்துப் பாருங்கள்.

    நன்றி கானகம்.இளையராஜா பதிவு படித்துவிட்டீர்களா?இன்றைக்கு போட்டு இருக்கிறேன்.
    நேரம் இருக்கும்போது படிக்கவும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!