Sunday, January 31, 2010

தமிழ்”ப்”படம் - துரைதயா on cloud nine

சின்னத்திரை விஜய் டீவி “லொள்ளுசபா” வின் தமிழ்ப்பட கிண்டல் லொள்ளுகளை சற்று பெரிதாக பெரிய திரையில் எடுத்துள்ளார்கள். ”தமிழ்ப்பட” கருவை வைத்தே ”தமிழ்ப்பட”த்தின்” சிக்னேச்சர் இசையான “விஷ் புஷ்” கொண்டு “தமிழ்ப்பட”த்தைநக்கல் அடித்துள்ளார்கள்.சத்தியமாக ”லொள்ளுசபா” மற்றும் "சூப்பர் டென்"(சன் டீவி) இவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அதில் நக்கல் ஒன்று விடாமல் படத்திற்குப் படம் புல் கவரேஜ்.அதில் ஜீவா என்பவர் தூள் கிளப்புவார்.

2606jeeva.jpg (302×265)

லொள்ளுசபா ஜீவா

சின்னத்திரை கொஞ்சம் அமெச்சூர்.ஆனால். இது professtional spoof..”ஓம் சாந்தி ஓம்” என்ற ஹிந்திப் பட டைப் என்றும் கூட சொல்லலாம்.லொள்ளுசபாவில் பாகவதர் முதல் இன்றைய சிவா(சென்னை-28) வரை நக்கல் அடிப்பார்கள்.
சதயராஜும் சில படங்களீல் நக்கல் அடித்திருக்கிறார்..

புளிச்சுப்போன வடிவேலுவின் மூணாம் கிளாஸ் மற்றும் விவேக் காமெடிக்கு ஒரு மாற்று.இவர்களின் தாங்க முடியாத விஷயம் காமெடி நேரடியாக புரிந்துக்கொண்டிருக்கும்போதே அதை விளக்கிச்சொல்லி காமடிச் செய்வார்கள்.

ஆனால் இது ரொம்ப slapstick ஆக இல்லாமல் ஒரு மாதிரி புத்திசாலித்தனமான காமெடி.காட்சிகளுக்கு கோனார் நோட்ஸ் போடாத காமெடி.திகட்டத் தொடங்கும்இடங்களில் சமாளித்து வேறு காட்சிகள்.மொத்தத்தில் செம்ம ரகளை.

படத்தின் மிக பெரிய பலம் கதாநாயகன் ஷிவா.அடுத்த வீட்டு பையன் லுக்.அதே சமயத்தில் திராவிடன்+ஆரியன் கலந்த ஒரு கலவை முகம்.அந்த வெகுளி முகம் இவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்.அசத்துகிறார்.அவர் திரையில் தோன்றும்போதெல்லாம் விசில் பறக்கிறது.ரசிகர்களின் செல்லம்மாகி விட்டார்.

பறவை முனியம்மா. இதில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார்.தூள் கிளப்புகிறார்.

கதை என்ன?சினிமா பட்டி கிராமத்தில் ஆண் குழந்தப்பிறந்தால் கள்ளிப்பால் வைத்து சிசுக்கொலைச் செய்கிறார்கள்.ஏன்? ஆண்கள் கிராமத்தை விட்டுப் போய் நகரத்தில் சினிமாவில் பெரிய ஸ்டாராகி அரசியலில் ஈடுபட்டு 2011 முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார்கள். அதனால அந்த கிராமத்திறகு நல திட்டங்கள் எதுவும் அரசு அளிப்பதில்லை. கள்ளிப்பாலில் இருந்து அப்படித் தப்பித்த ஒரு ஆண் பெரியஆளாகி “தமிழப்பட” ஹீரோ சாகசங்கள் செய்வதுதான் கதை.

படத்தின் டைட்டில் கார்டே பழைய படத்தை (பாலாஜி படங்கள்)ஒத்து இருக்கிறது.நடுவில் ‘கிர்கிர்” ரீல் சுத்தும் சத்தம்.கட்டிளம் காளைகள் பாஸ்கர், வெ.ஆ.மூர்த்தி,மனோபாலா காலேஜ் ஸ்டூடண்டாக வருகிறார்கள்.படம் தவிர பாட்டுக்களும் கிண்டல்.கதாநாயகியை விட தோழி அழகாக இருப்பது.

நக்கல்கள் பாரதி ராஜா காலத்திலிருந்து தனுஷ் வரை.ஆனால் ஜேம்ஸ்பாண்ட் படம்,(கையில் பூனை வைத்துக்கொண்டு) நக்கல் எதற்கு? அதெல்லாம் காலாவதி ஆகி ரொமப வருஷம் ஆயிற்றே.இப்பொழுது இல்லையே!அடுத்து மதுரை பாஷை(அவிங்க..இவிங்க) படஙகளை ஏன் விட்டுவிட்டார்கள்?கிராமத்துப்படங்களும்(அதுவே நொந்துப் போய்) காலாவதி ஆகி ரொம்ப நாளாகி விட்டதே?

சில சாம்பிள் சிரிப்பு:
டூயட் பாட்டில் ஒரு ஸ்வெட்டரில் குலவல்,ஒரே போர்வையில் சல்லாபம் ஆனால் நிச்சியதார்த்தம்(வழக்கம்போல ஸ்கிரீன் நிறைய நிச்சியதார்த்த கூட்டம்) அன்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வெட்கப்படுகிறார்கள்.

கோர்ட் காட்சியில் நீதிபதியின் தீர்ப்பு.

தமிழினத்தின் ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேரன் துரைதயாநிதி Cloud Nine Movies எடுக்கும் படத்தின் விளம்பரங்களில் படத்தின் தலைப்பில் சந்திப்பிழை(”ப்”)இருக்கிறதே என்று பல பேர் கவலையானர்கள்.ஆனால் இப்போது வரும் விளம்பரங்களில் “ப்”பை சொருகிவிட்டார்கள்.

வேண்டுமென்றே இதுவும் நக்கலா?




தமிழ்ப்படத்தின் விதிகளைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும்.

வழக்கமாக காமெடிப் பட போஸ்டர்கள் வேறு மாதிரி இருக்கும்.நடிப்பவர்கள் மண்டை பெரிதாகப் போடப்பட்டு கைகால்கள் குச்சி குச்சியாக போட்டுப் பார்த்தவுடனே”ஹிஹிஹிஹி” வரவேண்டும் என்ற ஒரு இன்ஸ்டண்ட் பில்ட் அப் கொடுப்பார்கள்.இதன் டைரக்டர் சி.எஸ்.அமுதன் ஒரு விளம்பரக் கம்பெனியைச் சேர்ந்தவர் என்பதால் இதன் விளம்பரங்கள் சற்று professtionalஆக இருக்கிறது.இவர்தான் தினமலர் “சண்டேன்னா ரெண்டு” விளம்பரம் எடுத்தவர் என்று கேள்வி.

இந்த படத்தின் பாடல் பற்றிய பதிவு:

தமிழ்ப்படம் பாடல்கள்

குடும்பத்தோடு பார்த்து சிரித்துவிட்டு வரலாம்.


7 comments:

  1. கண்டிப்பா பாக்கறேன்.

    ReplyDelete
  2. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  3. பார்த்துட்டேன் தல..,

    இதுல பின்னவீனமா...சரி வேணாம் விடுங்க..அந்த பீவர் இன்னும்குறையல.

    படம் மொத்தமும் ”டப்பாஸ்”

    ReplyDelete
  4. குடும்பத்தோடு ரசிக்க நீண்ட நாள் கழித்து ஒரு படம்... இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது...

    அந்த காஃபி மேட்டர், இந்தப் பாடலை பாடியவர்,ரமணா.......................................................

    ReplyDelete
  5. Blogger கும்க்கி said...

    // பார்த்துட்டேன் தல..,
    இதுல பின்னவீனமா...சரி வேணாம் விடுங்க..அந்த பீவர் இன்னும்குறையல.
    படம் மொத்தமும் ”டப்பாஸ்”//

    ஒரு நவீனமும் இல்ல.தமிழ் சினிமாவின் பலவீனம்தான் காமெடி.

    நன்றி.

    ReplyDelete
  6. Blogger கார்க்கி said...

    //குடும்பத்தோடு ரசிக்க நீண்ட நாள் கழித்து ஒரு படம்... இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது...//

    நான் தனியாத்தான் போனேன்.அன்று குடும்பம் பிசி.

    // அந்த காஃபி மேட்டர், இந்தப் பாடலை பாடியவர்,ரமணா.......//

    உண்மையிலேயே வயிறு வலிக்க சிரிச்சேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா... பார்த்தாச்சா...???!!!! இந்த வாரத்துக்குள்ள டொரொண்ட்ல வந்துரும் பார்த்திட வேண்டியதுதான்...ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன் சார்...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!