பொதுவாக சினிமா படங்கள் படப்பிடிப்பு முடிந்ததும் சென்சாருக்கு சென்று "A" (வயது வந்தோர் மட்டும்)அல்லது "U" (தடையில்லாமல்அனைவரும்)அல்லது "U/A"(தடையில்லாமல் ஆனால் 12 வயதுக்கு கிழ் உள்ளோர் பெற்றோரின் வழிகாட்டுதல் படி பார்க்கலாம்) என்று அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றாற்போல் சான்று வாங்கி ரிலீஸ் செய்யப்படும்.
எந்த காட்சிகள் வெட்டப்பட்டது அல்லது எந்த வசனங்கள் ஊமையாக்கப்பட்டது (mute)(”கொய்ங்”என்று ஒரு ஒலி வரும் வசனத்தினிடையே ) என்று விவரங்கள் அடங்கிய ஒரு போட்டோ காபி சினிமா தியேட்டர்களில் டிஸ்பிளே செய்திருப்பார்கள். இதைப்பார்க்க ஒரு கூட்டம் பார்க்க அலை மோதும். எனக்கும் ரொம்ப ஆர்வம் உண்டு.
டிஸ்கி:பின்வருவன சில பேருக்கு அதிர்ச்சி தரலாம்.முதலில் எனக்கும் அதிர்ச்சிதான்.ஆனால் இதையெல்லாம் கிட்டத்தட்ட 25 வருடமாக பார்ப்பதால் மற்றும் சென்னை மாநகரத்தின் செம்மொழிகள் அத்துபடியானதால் இதெல்லாம் ஜூஜூபி ஜக்குபாய் ஆகிவிட்டது !
ரீமா என்ன சொல்றாங்க? muted?
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சென்சார் பரிந்துரைகள்: (என் ஞாபகத்தில் இருந்தது.தவறு இருந்தால் திருத்தலாம்)
1.”தயவு செய்து இது முழுவதும் கற்பனையே.சோழ பாண்டிய வரலாறு இதன் சம்பந்தம் இல்லை என்று ஒரு டைட்டில் கார்ட் போடுங்கள்”(செல்வராகவன்தான் இதை போட்டவர் என்று நாம் நினைக்கிறோம்.ஆனால் கதை வேறு)
2.”நாதாரி முண்ட” ”ஓத்தா” “புண்ட மவளே” “தேவடியா பையா” “ass hole""fuck you” போன்ற வார்த்தைகளை நீக்கவும்.(ஊமைப்படுத்தவும்(mute)?)
3. “அந்த இரண்டு பெண்களும் மது அருந்தும் காட்சியை ரொம்ப நீட்ட வேண்டாம்”
4.”ஆர்மி சிறு பெண்னை வன்புணரும் காட்சியின் தீவரத்தைக் குறைக்கவும் (அல்லது வெட்டவும்?).”
5.”சோழ மன்னனின் மனைவியை வன்புணரும் காட்சியை நீக்கவும் (வெட்டவும்?)
6.”தலை வெட்டப்படும் காட்சியின் தீவரத்தை குறைக்கவும்.”(வெட்டவும்?)
சென்சார் போர்டு பற்றிய சிறு பதிவு விரைவில்.....
Subscribe to:
Post Comments (Atom)
முதல் பாயிண்ட் முக்கியம். நிறைய பேர் அவர்தான் புனைவுன்னு முதல்லயே சொல்லிட்டாரே, அப்புறமென்ன என்று நினைத்தனர்.
ReplyDeleteBlogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ReplyDelete//முதல் பாயிண்ட் முக்கியம். நிறைய பேர் அவர்தான் புனைவுன்னு முதல்லயே சொல்லிட்டாரே, அப்புறமென்ன என்று நினைத்தனர்//
இது ஒரு மார்கெட்டிங் டெக்னிக்.சென்சார் சொன்ன போடலாம் இல்லேன்னா அப்படியே விட்டுவிடலாம் அல்லது பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.
தலைவா..பாயிண்ட்டுகள் எல்லாம் பயங்ங்கரம்..
ReplyDeleteநர்சிம் said...
ReplyDelete//தலைவா..பாயிண்ட்டுகள் எல்லாம் பயங்ங்கரம்..//
ஆமாம் தல.டைரக்டர் என்னக் காரணத்திற்காக இதையெல்லாம்(வசனம்)வைத்தார் என்று புரியவில்லை.
காட்சியோடு ஒட்டி வந்தாலும் சென்சார் அனுமதிக்குமா? அனுமதித்தாலும் வைக்க முடியுமா?
கலெக்ஷன் பாதிக்கும்.
February 1, 2010 1:20 PM
இதெல்லாம் கதை ஓட்டத்துக்கு ரொம்ப அவசியம்னு சொல்லுவாங்களே..,
ReplyDeleteவிஜயோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களுக்கு பிறகு இந்த படத்தில் தான் வன்புணர்வு காட்சிகள் அதிகம் போல. எப்படியோ வெட்டிடாங்க.
ReplyDeleteapocalypto படத்தோட தாக்கம் இப்படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க இருந்தது. பிறகு என்ன தைரியத்தில் செல்வராகவன் சினிமாவ விட்டு போரேன் என்று சொல்லுரார்.ஒரு படமா, இரண்டு படமா எதைச் சொல்லுவது. பல ஹாலிவுட் படங்கள் கண்முன்னே வந்து போகின்றன.
SUREஷ் (பழனியிலிருந்து) said...
ReplyDelete//இதெல்லாம் கதை ஓட்டத்துக்கு ரொம்ப அவசியம்னு சொல்லுவாங்களே..//
சொன்னாலும் முடியுமா?
//apocalypto படத்தோட தாக்கம் இப்படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க இருந்தது. பிறகு என்ன தைரியத்தில் செல்வராகவன் சினிமாவ விட்டு போரேன் என்று சொல்லுரார்.ஒரு படமா, இரண்டு படமா எதைச் சொல்லுவது. பல ஹாலிவுட் படங்கள் கண்முன்னே வந்து போகின்றன.//
ReplyDeleteஎதோ தெரியாம சொல்லிட்டார் விடுங்க ! குடுத்த காசுக்கு சீன் பாத்தமானு போவாம
நன்றி குட்டிபிசாசு.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுக்கிறாங்க.
ReplyDeleteராஜன் அவர்களே நன்றி.என்னையும் விட்டுடங்க.
ReplyDeleteஉக்கார்ந்து யோசிச்சிங்களா சார்?
ReplyDeleteதண்டோரா ...... said...
ReplyDelete//உக்கார்ந்து யோசிச்சிங்களா சார்?//
தல! ரொம்ப நாளா சென்சார் பத்தி பதிவு எழுதனம்னு.அப்பறம் தியேட்டர் சென்சர் டிஸ்பிளே பத்தியும். அதான்.
இது கற்பனைன்னு போட்ட டிஸ்கிக்குப் பின்னாடி இவ்வளோ இருக்குதா...?
ReplyDeleteரெண்டாவது பாயிண்ட் இப்போ வர எல்லாப் படத்துக்கும் பொருந்தும் சார்...
//இதைப்பார்க்க ஒரு கூட்டம் பார்க்க அலை மோதும். எனக்கும் ரொம்ப ஆர்வம் உண்டு.
ReplyDelete//
நான் பார்த்த தியேட்டரில் தேடி பார்த்தேன்...
எங்கே ஒட்டி இருந்தாங்கன்னு கடைசி வரைக்கும்
தெரியல.........
:(
ஜெட்லி said...
ReplyDelete//நான் பார்த்த தியேட்டரில் தேடி பார்த்தேன்எங்கே ஒட்டி இருந்தாங்கன்னு கடைசி வரைக்கும்
தெரியல//
பத்மம் தியேட்டர்(சங்கம் காம்பிளக்ஸ்)
சென்னை-கிழ்பாக்கம்.படத்தின் ஸ்டில் வைக்கும் ஷோ கேசில்.
ரவி சார்.. அந்த மொத பாயிண்ட் பத்தி நான் பதிவ்ழுதி வச்சிருக்கேன். பிரச்சினை வேணாம்ன்னு போடல. ஆ.ஒ. ஆதரித்த பலரின் நிலைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் பாயிண்ட் அது..
ReplyDeleteகார்க்கி said...
ReplyDelete//ரவி சார்.. அந்த மொத பாயிண்ட் பத்தி நான் பதிவ்ழுதி வச்சிருக்கேன். பிரச்சினை வேணாம்ன்னு போடல//
நீங்க மூத்த பதிவர்னால அனானி பிஊ நிறைய வரும். பாத்துதான் செய்யனும்.
நீங்கள் டிஸ்பிளே பார்க்கும் பழக்கம் உண்டா?அதில் பார்த்ததா?
நன்றி.
தல..,
ReplyDeleteஆக உண்மையிலேயே சென்சார் போர்டு இந்த படத்தை பார்த்துத்தான் சர்டிபை பண்ணாங்களா...
ஆச்சரியம்.
கும்க்கி said...
ReplyDelete//தல..ஆக உண்மையிலேயே சென்சார் போர்டு இந்த படத்தை பார்த்துத்தான் சர்டிபை பண்ணாங்களா..ஆச்சரியம்//
ஆமாங்க.அண்ணே!நீங்க எந்த ஊருங்க?
இப்படி அப்பாவியா கேட்குறீங்க.
சென்சாருக்கு guidelines எல்லாம் உண்டுங்க.
அண்ணே!நீங்க எந்த ஊருங்க?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
சோழராஜ்ஜியம்.
அன்பு ரவி நீங்கள் கொடுத்தவை சில சிறிய உதாரணங்கள்தான். இன்னும் மோசமான பல நிகழ்வுகளும் வசனங்களும் திரைப்படங்களில் இருக்கின்றன. சிலவற்றை மட்டுமே சென்சார் வெட்ட சொல்லுகின்றனர். உதாரணமா நகைச்சுவை என்ற பெயரில் எத்தனை இரட்டை அர்த்த வசனங்கள் (இப்போதெல்லாம் நேரடி வசனங்களே) வருகின்றன என்பதை நாம் பண்டை தொட்டு பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம்.
ReplyDeleteசில பாடல்களிலும் இதுபோல வரிகள் வருவதுண்டு ஆனால் இலைமறை காயாக (அட இதிலும் இரட்டை அர்த்தம் பாருங்க) வருவதால் நாம் கண்டுக்கொள்வதில்லை. என்ன பிரச்சினை என்றால் சில குழந்தைகள் இதற்கு அர்த்தம் என்ன என்று கேட்கையில் ஏற்படும் சங்கடங்களும், குடும்பத்துடன் போய் நெளியவேண்டிய நிலைகளுமே!
இது போன்ற நிகழ்வுகளையும் வசனங்களையும் தவிர்த்தாலும் நல்லப்படமாக இருந்தால் நிச்சயம் ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை.