Tuesday, February 16, 2010

மொழிமாற்று சிறுகதைகள் -ஒட்டாமை

பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் மொழிமாற்றுக்(அயல் நாடு) கதைகள் படிக்கும் போது, கதைகள் மனசுக்கு ஒட்டாமல் தள்ளியே நின்றது.இதை சிபாரிசு செய்தவர்கள் மீது செம்ம கடுப்பு வரும்.சும்மா ஒரு பில்ட் அப்புக்காக பிடிவாதம் பிடித்துக்கொண்டுப்படித்தேன்.

ஒட்டாமைக்குக் காரணம் அன்னியத்தனம்.இதில் வரும் களம்,கதை மாந்தர்கள்,கதை,பேச்சு,இனம்,உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் விதம்,ஆழம் புரியாமை முக்கியமாக காலம்.அடுத்து மிக மிக முக்கியமானது இதன் மொழி பெயர்ப்பு மொழி.

நடைமுறைத் தமிழில் இல்லாமல் கட்டுரைத் தமிழ்.படிக்கும்போதெல்லாம்  கல்லூரியில் படித்த nondetail ஞாபகம் வரும்.

”ஜேபியில் இருந்து இரண்டு பிராங்குகளை எடுத்து லேவா தேவிக்காரரிடம் கொடுத்து ”எஜமானனே..! வரும் இலையுதிர்காலத்திற்குள் ரொக்கப்பணத்தைக்
கொடுத்துவிடுவேன் இல்லாவிட்டால் ஜவாப்தாரியாக என் “லோபர்ஸ்” மாளிகையை வைக்கிறேன்”தன் தேனீர் கோப்பையை ஆற்றியபடிச்சொன்னான்.ஜன்னல் கிராதியில் சூர்ய கிரகணக் கற்றைகள் விழுந்திருந்தது.

எப்படி ஒட்டும்?

அடுத்த சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்ட ஆரம்பித்தது.காரணமும் பிடிபட ஆரம்பித்தது.முதல் காரணம் நான் படித்த காலத்தில் மட்டமான மொழிப்பெயர்ப்பு.(இப்போதெல்லாம் நல்ல மொழிபெயர்ப்பு வருகிறது)அடுத்து வெகுஜனத்திலிருந்து இதற்கு “சட்”டென்று இதற்குள் தாவி குதிக்கக் கூடாது.

ஒரு மாதிரி smooth transition இருக்க வேண்டும். இந்த மெதுவான மாறுதலுக்கு பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். நம்ம ஊர் புதுமைப்பித்தன் கதைகளைப் படிப்பதற்கே பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் இருந்தால சில கதைகள் புரியும்.இந்த பின்புலத்தை வைத்துக்கொண்டு மெதுவாக “பழகி”க்கொள்ள வேண்டும்.வெளிநாடுகளின் அரசியல்,வாழ்வு நிலை இத்யாதிகளையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

அடுத்து ஹாலிவுட் கிளாசிக் படங்கள்,உலக திரைப்படங்கள்,நம்ம ஊர் கிளாசிக்ஸ் என்று பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும்.இதெல்லாம் செய்தால்  அந்த அலைவரிசைக்கு வருவோம்.நம்மூர் கதா பாத்திரங்களை அப்படியே அங்கு எதிர்ப்பார்க்க கூடாது.அப்படி இருந்தால் கதை கந்தல் ஆகிவிடும்.மொழிமாற்றுக் கதையின் ஆதார ஆன்மாவே போய்விடும்.

மொழிபெயர்ப்பு சாதாரண வேலை இல்லை.மொழிபெயர்ப்பாளர் வாசிப்பவனைவிட பத்து மடங்கு மேலே இருக்கவேண்டும்.

”கோசலையம்மாள் எல்லாக் குடும்பத்திலும் காண்கிற நடுத்தர ஸ்திரீதான்.பங்கரையாக இருக்க மாட்டாள்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை; நவக்கிரகப் பல்லில்லை; புஸூ புஸூவென்று ஜாடி இடுப்பில்லை; தட்டு மூஞ்சி இல்லை; எண்ணெய் வழியும் மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது. அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம்” 

இது ”சண்பகப் பூ” சிறுகதையில் வரும் ஒரு பாரா -  தி.ஜானகிராமன்

ஜெர்மனிலோ/பிரெஞ்சிலோ/உஸ்பெஸ்கிதானிலோ மொழிபெயர்ப்பில் படிக்கும் ஒருவருக்கு  நமக்கு ஒட்டுவது மாதிரி ஒட்டுமா?

சும்மா  சுமாரான ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்:-

“Kosalai Amma looks  like  typical next door middle class  lady.Yet she does n"t look ugly.Her nose is  not flattened; Her eyes are never..bulged one? Has  teeth never look unevenly projected.Her waist does not look like barrel.Has face that never looks ....?She is not pretty,but not sluttish.Has no oily face. little fair complexioned..that"s all."

8 comments:

  1. இடுகை மனதில் 'பச்' என ஒட்டிக்கொண்டது..நன்றி..

    ReplyDelete
  2. நன்றி ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  3. நல்ல இடுகை

    ReplyDelete
  4. நன்றி நான்ரசித்த.

    ReplyDelete
  5. இதைத்தாங்க நான் நிறைய மொழிபெயர்பாலர்களிடம் கேட்டிருக்கேன். எல்லோருமே பதில் சொல்லா புன்னகையை மட்டும் விடையாக கொடுத்து விடுகிறார்கள். மரியாதை நிமித்தம் மேலும் கிண்டமுடியாத உப்புமாவாக மனதில் இறுகி கிடக்கும் கேள்வி இது.. ஏன் தமிழாக்கக் கதைகள் இயல்பாக இல்லை. மொழி மாற்றம் செய்யும் பொது localisation முக்கியமா இல்லையா.. பிரசுரம் செய்யும் புத்தக பதிப்பாளர்களும் ஏனோ literal translation னை மட்டும் விரும்புகிறார்கள். இதில் ஏதும் சட்டப் பிரச்சினை இருக்கான்னு தெரியலை.

    கடைசில ஆங்கில மொழிபெயர்ப்பு satire ஆக செய்ததுதானே.. :))

    ReplyDelete
  6. //ஏன் தமிழாக்கக் கதைகள் இயல்பாக இல்லை. மொழி மாற்றம் செய்யும் பொது localisation முக்கியமா இல்லையா.//

    ஒரிஜனல் கதை ஆசிரியரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.ரொம்பவும் சகஜாமாக்கினால நீர்த்துவிடும்.

    //கடைசில ஆங்கில மொழிபெயர்ப்பு satire ஆக செய்ததுதானே.. :))//

    இதில் மூணு விஷயம்.(நேராக உஸ்பெஸ்கித்தானுக்குப் போகமுடியாதுஆங்கில மூலமாக போக வேண்டும்.)
    1.திஜாவின் உணர்ச்சிகளை கொண்டு வருதல்
    2.சரியான ஆங்கில இலக்கணம்
    3.இந்த பாரா மட்டும் துருத்திக்கொண்டு நிற்கக் கூடாது.

    இது மேல்வாரியாகப் பார்த்தால் லிட்டரல் டிரான்ஸிலேஷன் மாதிரி தெரியும்.

    நீங்கள் முயற்சித்து பின்னூட்டத்தில் போடுங்களேன்.Please try?

    நன்றி விதூஷ்


    தி.ஜா.
    வெளிப்படுத்திய உணர்ச்சிகளை கதையை ஒட்டிக்கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  7. இதெல்லாம் ரொம்பப் பெரிய விசயம்...
    எனக்கும் மனதில் ஒட்டுவதில்லை...அதனால் அதிகமும் படிப்பதில்லை....

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    //இதெல்லாம் ரொம்பப் பெரிய விசயம்..எனக்கும் மனதில் ஒட்டுவதில்லை...அதனால் அதிகமும் படிப்பதில்லை...//

    ஓரு புண்ணாக்கும் இல்லை.படிக்க பழக வேண்டும்.நானும் சுஜாதாவைக் கட்டிக்கொண்டு அழுதேன் முதலில்.அவர்தான் நிறைய ரெபரென்ஸ் கொடுத்துப்(தன் எழுத்துகளில்)படிக்க ஆர்வம் ஏற்படுத்தினார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!