Wednesday, February 10, 2010

கெய்சனும் ”கட்டிங்” பாரும் திஜாவும்

இந்தியாவில் கடந்த 25 (மேலேயே?)வருடங்களாக பைவ் எஸ்,சிக்ஸ் சிக்மா,கெய்சன் போன்ற சித்தாந்தங்கள் பொருள் உற்பத்தி மற்றும் சேவை கம்பெனிகளில் முழுமூச்சில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு  ஒரு கார்பரேட் குமபலே (VP/P/GM)அதிக சம்பளத்தில் ஏசி கான்பரன்ஸ் ரூமில் (கையில் லேப்டாப்புடன்) தீவரமாக சிந்தித்து இதை நடை முறைப்படுத்துவார்கள்.படுத்தியதும்,படுத்தியது சரியாக இருக்கிறதா என்று  சரி பார்க்க ஒருவர் (அவர் Global Head) ஜப்பானில் இருந்து வருவர்.

எல்லாம் முடிந்து மாலை மங்கியதும் இந்திய நிர்வாகிகள் அவருடன் ேர்ந்து பாரில் ”கட்டிங்”
போடுவார்கள்.ஒரு MNC யில் இருந்த போது நானும் ”கட்டிங்”போட்டிருக்கிறேன்.ரூமுக்கு கொண்டுவிடும்போது பார்த்தால்அவர் ரூம் தாறுமாறாக இருக்கும்.

முதல் முறை இந்த பைவ் எஸ்,சிக்ஸ் சிக்மா,கெய்சன்களை உள் வாங்கியபோது “அட... புண்ணாக்குகளா...! இது ”ஒயிங்க சர்வீஸ் கொடு,பர்பெக்ட்டா பொருள செய், எதையும் வேஸ்ட் பண்ணாத,இடத்த கலீஜ் பண்ணாத வச்சுக்கோ,தேங்கிப்போகாம மேல மேல மேம்படுத்து.எல்லாம் ஒழுங்கா செஞ்ச சூப்பர் லாபம்,சுத்தம்,நம்பர் ஒன் கம்பெனி”
இதப்போய் ஸ்பைரல் பயிண்டிங்கில் கொடுக்கும்  ”பில்ட்-அப்” பாண்டுரங்கன்கள் இவர்கள் என்று ”சிப்பு” வந்தது.

கடைசியில் ஜென் தத்துவம் மாதிரி “அவ்வளவுதான்.. நீ போகலாம்” என்று மனம் சொல்லியது.

என்ன வித்தியாசம்?நமக்கு எல்லாம் தெரியும்.நாம் “கச்சா முச்சா” வென்று செய்வதை இவர்கள் ஒழுங்குப்படுத்தி சீர்படுத்தப்பட்ட முறையில் செய்ய வைக்கிறார்கள்.

தி.ஜானகிராமனின் ஒரு சிறு கதையில் ஒரு பழைய பேப்பர் வியாபாரி தன் எடைபோடும் தராசைப் பற்றிச்சொல்லும்போது”இது எளுதின கடுதாசிக்கும் எளுதாத (வெள்ளை) கடுதாசிக்கும் வித்தியாசம் காட்டும்”.அவ்வளவு துல்லியமாக எடைப் போடும் மிக தரம் வாய்ந்த தராசு.

அவ்வளவு துல்லியமாக குறையில்லாமல் இருக்க வேண்டும் தயாரிக்கப்படும் பொருள்கள்.

Six Sigma:பொருள் உற்பத்தி அல்லது சேவையை பழுது (100%சதவீதம் பெர்பெக்ட்)இல்லாமல் கொடுப்பதை அணுகும் முறை.அதற்கான வழிமுறைகள்.

Five "S":(பாக்டரிகளில்)ஒழுங்கா,சுத்தமா,அடுக்கி வை.வேண்டாதத ஒரம் கட்டு,டக்னு தெரியமாதிரி வை,ஈசியா ஹாண்டில் பண்ற மாதிரி வை,சரியாக்கி அதேயே பாலோ பண்ணு,

Kaizen:செய்யும் வேலைகளை ”தொடர்ந்து” மேம்படுத்திக்கொண்டே இருத்தல்.சுலபமாக செய்தல்.இந்த பிரபஞ்சம் முடியும்வரை.சிறப்பாக செய்தல்.இது கம்பனியில் எல்லா துறைக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

சில கம்பெனிகளில் கத்தை கத்தையாக கெய்சன் போட்டு அசத்துவார்கள்.

மேலுள்ள சித்தாந்தங்களை நாம் வீடு நாடு எல்லாவற்றிலும் நடைமுறைப்படத்தலாம்.சிரத்தையாக செய்தால் உண்மையிலேயே நல்ல பயன்.

ஒரு காலத்தில் ரயில்வே டைம்டேபிள் பார்த்தால் தலைசுத்தும்.அங்கும் Kaizen போடப்பட்டு (Continuous improvement?)எளிமையாக்கப்பட்டதாக கேள்வி.இப்போது(கடந்த 20 வருடங்களாக)அட்டகாசம்.It is very very  userfriendly.


நான் என் பளாட்டில் போட்ட கெய்சன்(ரொம்ப ரொம்ப பழசு): பேப்பர் போடுபவர் ஒவ்வொரு மாடிக்கும் லிப்டில் போகாமல் முதலில் மேல் மாடிக்கு லிப்டில் போய் அங்கிருந்து ஆரம்பித்து வரிசையாக போட்டு படியில் இறங்கியபடியே கிழே  வந்துவிடலாம்.இதில் நிறைய எனர்ஜி,டைம்,செருப்புத் தேய்மானம்,வெயிட்டிங்,சேமிக்கலாம்/குறைக்கலாம்.

பாரில் போட்ட கெய்சன்: அருணா இன் பாரில் வித விதமான  சைட் டிஷ்ஷை ஜலதரங்கம் கப் போல் டேபிள் புல்லாக வைப்பார்கள்.”கிளாஸ்” வைப்பதற்கு இடமே இருக்காது.சில  அயிட்டங்கள் (பிடிக்காமல்)சாப்பிடாமல் வேஸ்ட் ஆகும்.முதலிலேயே சொல்லிவிடுவது பிடிக்காத அயிட்டங்களை கொண்டுவரவேண்டம் என்று. சரி என்ன பயன்?


1.வெயிட்டர் எல்லாவற்றையும் சுமக்க வேண்டாம்.
2.டேபிளில் நிறைய இடம் இருக்கும்
3.வேஸ்ட் ஆகாமல் இருக்கும்
4.பாருக்கும் சைட் டிஷ் சேமிப்பு அதிகமாகும்
5.ஆறிப் போய் திரும்ப எடுத்துப்போனால் நமத்துப்போகும்.


(மேல ஒரு சார்ட் இருக்கே அது என்னங்க? சைட் டிஷ் சார்ட்டா?)

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக  “பாரில்” கெய்சன் போட்ட முதல் தமிழ் குடி மகன். 10 comments:

 1. கெய்சன்னு தலைப்புல பார்த்ததும் ஏதோ விவகாரம்னு வந்தா.. நல்லாருக்கு சார் மேட்டர். ஆனா இன்னும் கொஞ்சம் லோக்கலா விளக்கிருக்கலாம்.

  ReplyDelete
 2. //ஆனா இன்னும் கொஞ்சம் லோக்கலா விளக்கிருக்கலாம்//

  அப்படியா? பண்ணியிருக்கலாம்.

  நன்றி அதிஷா.

  ReplyDelete
 3. க.இராமசாமி said...

  //நல்ல பதிவு//

  நன்றி.

  ReplyDelete
 4. உருப்படியான பதிவுதான்.

  ReplyDelete
 5. நன்றி சித்ரன்.

  ReplyDelete
 6. எளிமையாச் சொல்லி இருக்கீங்க.... நன்றி....
  பாப் அப் விண்டோல பின்னூட்டப் பெட்டி வருவதும் கைஸன் தானே....

  ReplyDelete
 7. தமிழ்ப்பறவை said...

  // எளிமையாச் சொல்லி இருக்கீங்க.... நன்றி....//

  நன்றி.

  // பாப் அப் விண்டோல பின்னூட்டப் பெட்டி வருவதும் கைஸன் தானே....//

  ஆகா! போட்டுட்டாரு ஒரு கைசன்.ஆமாம் சத்தியமா!

  ReplyDelete
 8. நன்றி வசந்த்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!