கேனரா பேங்க் கேஷ் கவுண்டரில்
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று அலசப்பட்டு
என் கைக்கு வந்த நோட்டில்
ராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக
சொல்கிறார்
புரசைவாக்கம்
முதல் குறுக்குத் தெருவில் இருக்கும்
என்னிடம் வந்திருக்கிறது
கலவரத்துடன் கவிதை
எழுதி முடித்து
எழுதி முடித்து
ஆவின் பால் போடும்
கிருஷ்ணகுமாரிடம்
சுதாவை அனுப்பிவிடுகிறேன்
அடுத்த வாரம் நான்
தாலிகட்டப் போகும்
பெண்ணும் பெயரும்
சுதாதான்
(இது மாற்றி எழுதிய கவிதை)
அடுத்த வாரம் நான்
தாலிகட்டப் போகும்
பெண்ணும் பெயரும்
சுதாதான்
(இது மாற்றி எழுதிய கவிதை)
ஒரிஜனல் படிக்க சுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்
ஹிஹி.. நீங்க எழுதுனதுக்கு நீங்களே எதிர்கவுஜையா? நல்லாருக்குது.
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete// ஹிஹி.. நீங்க எழுதுனதுக்கு நீங்களே எதிர்கவுஜையா? நல்லாருக்குது//
ரொம்ப நன்றிங்க.இத இன்னும் கூட இம்புரூவைஸ் பண்ணலாம்.
//ஹிஹி..//
ஏங்க ஆதி “ஹிஹி” உங்க டிரேட்மார்க்க?
அந்த கவிதையும் நல்லா இருந்துச்சு. இதுவும் நல்லலாதான் இருக்கு.
ReplyDeleteநன்றி இராமசாமி.ஆனால் நான் எழுத முயற்சித்த பரிமாணம் வேற.
ReplyDeleteஅந்த பரிமாணம் இப்போதுதான் ஒரளவுக்கு வந்தது.ஒரு சிறுகதையும் எழுதப் போறேன் இதை வைத்து.
நல்லது ரவி. அதை படிக்க காத்திருக்கிறேன். உங்களுக்கு டைம் கிடைச்கா கொஞ்சம் என்னோட பிளாக்
ReplyDeletehttp://satturmaikan.blogspot.com/ வந்து பாத்துட்டு போங்க.
நன்றி இராமசாமி.வருகிறேன்.
ReplyDelete