நான் படியில் ஏறப்போவதில்லை
திரும்பி வருவேனா
It is a million dollar question
மேல் படியின் முடிவில்
ரைட் சைடில் சொர்க்கமும்
லெப்ட் சைடில் நரகமும்
சட்டென சைடும் மாறிவிடும்
அபாயம் இருக்கிறது
பின்நவீனத்துவ ஐதீகத்தின்படி
பிரதியின் ஆசிரியர்
மண்டையைப் போட்டுவிடுவதால்
அவர் ஆவி கூட சுற்றலாம்
உதவி வணிக வரி அலுவலர்(சரகம்-1)
அ.மா.முனிரத்தினம் உட்கார்ந்திருக்கலாம்
யாராவது டைரி சுவீட் பாக்கெட்
எடுத்துப் போனால் அவர் கூட செல்லலாம்
பிரபஞ்சத்தின் நுனியும் இருக்கலாம்
தோட்டா தரணியும் இருக்கலாம்
”துமித்தல்” சிறு பத்திரிகை
அச்சகமாக இருக்கலாம்
தமிழ் படம் ஷிவா கூட இறங்கி வரலாம்
சிதம்பர ரகசிய சாயலும் இருக்கிறது
தூரம் ஆன அக்கா தேவ குஞ்சரி
மொட்டை மாடியில்
கலைமகள் படிப்பதாகவும் தோன்றுகிறது
காலடிச்சுவடுகளைப் பார்த்தால்
பித்ருக்களின் நடமாட்டம்
இருப்பதாகவும் தெரிகிறது
கருப்புப் பல்லி ஒன்றுதான்
என் மேல் விழுந்தது
படிக்கட்டைக் கவிழ்த்துப்பார்த்து
செக் செய்ததில்
உங்களுக்கும் ஏதேதோ தோன்றலாம்
எதுவும் உறுதியாக
நம்மால் சொல்ல முடியாது
மீறி ஏற முடிந்தால் ஏறுங்கள்
மேலே போனவுடன் எனக்கு
ஒரு SMS அனுப்புங்கள்
எட்டி உதைக்கிறவங்க எப்பிடி எஸ் எம் எஸ் அனுப்புவாங்க ?
ReplyDeleteஞாபகமறதி நோயும் வெற்றி கூட இலவசமா கிடைக்குதுன்னு வச்சுகிடலாம் சார்
கவிதையா படிச்சா நிறைய விஷயங்கள் உள்ள இருக்கு யப்பாடி...
ReplyDeleteநன்றி பிரியமுடன் ... வசந்த்
ReplyDelete:-)
ReplyDeleteநன்றி சித்ரன்.
ReplyDelete:-)
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை.
ReplyDeleteபின்னவீனத்துவ கிருமி உங்களை ஓட ஓட விரட்டி கடித்துவிட்டது என்பது மட்டும் நிஜம்.!
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//பின்னவீனத்துவ கிருமி உங்களை ஓட ஓட விரட்டி கடித்துவிட்டது என்பது மட்டும் நிஜம்.!//
பின்நவீனத்துவம் அப்படின்னா என்னங்க?
நன்றி.
வேணாம், விட்டுருங்க! நான் அழுதுடுவேன்!
ReplyDeleteரவிஷா said...
ReplyDelete//வேணாம், விட்டுருங்க! நான் அழுதுடுவேன்//
அழாதீங்க. படிக்கட்டுல ஏறி எஸ்கேப் ஆகிப் போய்டுங்க.
வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteஇரசித்தேன்.
//தூரம் ஆன அக்கா தேவ குஞ்சரி
மொட்டை மாடியில்
கலைமகள் படிப்பதாகவும் தோன்றுகிறது//
அருமை.ஆனால் தேவ குஞ்சரி எந்த நூற்றாண்டின் பெயர் இது?:)
கண்மணி/kanmani said...
ReplyDelete//வித்தியாசமான சிந்தனை
இரசித்தேன்//
நன்றி கண்மணி.
//அருமை.ஆனால் தேவ குஞ்சரி எந்த நூற்றாண்டின் பெயர் இது?:)//
...முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா! முருகா என்றதும் ... என்ற பாடல் கேட்தில்லையா?
குஞ்சரி என்பவள் தேவயானை.
தேவ குஞ்சரி என் பெரியம்மா பெண் பெயர்.
ஆஹா...நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு...
ReplyDelete“அவங்க” கூட சேராதீங்கன்னு சொன்னேனே..
நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்களே...
கும்க்கி said...
ReplyDelete//ஆஹா...நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு...
“அவங்க” கூட சேராதீங்கன்னு சொன்னேனே..
நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்களே...//
எல்லா வித கவிதையும் எழுதனுங்க.
//குஞ்சரி என்பவள் தேவயானை.
ReplyDeleteதேவ குஞ்சரி என் பெரியம்மா பெண் பெயர்.//
நன்றி
நன்றி ஸ்ரீ.
ReplyDelete