Friday, January 15, 2010

இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

மேற்கத்திய இசையில் கவுண்டர் பாயிண்ட்(counterpoint) எனபது ஒரு இசை நுணுக்க சமாசாரம். மேஸ்ட்ரோ இளையராஜா இந்தக் கவுண்டர் பாயிண்ட் சமாசாரத்தை பல பாடல்களில்  எப்படி பிரமிக்க வைக்கும் (ஒரு மாஜிக் நிபுணர் போல்)முறையில் கையாண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.


                                 (தல! சிஷ்யன் உங்களயே மிஞ்சிட்டாரு)
இந்த படத்தில் இருக்கும் ஜே.எஸ்.பாக் (Johann Sebastian Bach)என்னும் ஜெர்மன் இசை கம்போசருக்கு இளையராஜா ஆத்மார்த்தமான ரசிகர்.இவரின் காலம் 1685-1750. இவர் (Johann Sebastian Bach) இதை(counterpoint)அதிக அளவில் பயன்படுத்தி இசைக் குறிப்புகளை எழுதுவார்.அதன் தாக்கம்தான் ராஜாவுக்கும்.

டிஸ்கி:இந்த கவுண்டர் பாயிண்ட்(counter point)என்னுடைய கேள்விஞானம்.புத்தகம்,நெட்,நண்பர்கள்,பாடல்கள் என  கேட்டு புரிந்துக்கொண்டு இந்த அறிவை வளர்த்துக்கொண்டேன்.இதுவே முழு விளக்கம் ஆகாது. தவறு இருந்தால் திருத்தலாம்.

கவுண்டர் பாயிண்ட்(counter point) என்றால் என்ன? (சின்ன கவுண்டருக்கும் இந்தக் கவுண்டருக்கும் ஸ்நானப்பிராப்தி கூட இல்லை.)


ஒரு சாதாரண சினிமா பாட்டு என்று எடுத்துக்கொண்டால்:-

1.பாட்டு ஆரம்பிக்கும் முன் குட்டியாக ஒரு இசை வரும்.  
அது (prelude)

2.இது முடிந்தவுடன்  ஒரு பாடகரோ அல்லது  பாடகியோ ஏதோ ஒரு மெட்டில் இரண்டு வரிகளைப்பாடி விட்டு விடுவார். 
இது பல்லவி.

3.பல்லவி முடிந்தவுடன் ஒரு இடையிசை வரும்.  
இது ( interlude -1 ).

4.interlude -1  முடிந்தவுடன் அடுத்து நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி விடுவார்கள்.
இது சரணம்-1 .

5.இந்த சரணம்-1  முடிந்தவுடன் மீண்டும் ஒரு இடையிசை. 
இது ( interlude -2 ) 

6. interlude -2 முடிந்தவுடன் மீண்டும் நான்கு அல்லது ஐந்து வரிகள் பாடி மீண்டும் பல்லவி வரிகளை பாடி பாட்டை முடிப்பார்கள். 
இது சரணம்-2.

பெரும்பாலும் சினிமா  பாட்டில் வரும் prelude, interlude-1,interlude-2 ன்களின் இசைக்கோர்ப்புகள் இசைக்கருவிகளால் அடுத்தடுத்து இசைக்கப்படும்.அதில் எழும் இனிமை/சத்தம்  முழுவதும்  படர்ந்திருப்பது ஒரே மெட்டு/மெலடி/டுயூன்கள்தான். அதாவது மெயின் பாட்டின் மெட்டுக்கு இசைவாக.எல்லாம் ஒரேதான்.

ஆனால் அப்படி இல்லாமல் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று என பல மெலடிகளை /டுயூன்களை இசைக்கருவிகளில்வாசிப்பது அல்லது குரல்களில் பாடுவது . அவைகளும் வெவ்வேறாகவும்  ஒன்றை ஒன்று சார்ந்தும் அதே சமயத்தில் இவைகள் இசைந்தும்(harmonious) அழகாக போவது. இதுதான் counter point.இதற்கு இதில்  பயிற்சி இருக்க வேண்டும்.

(counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously.)

சரி, இது எதற்கு?

1.பாட்டின் அழகை மெருகூட்டுவதற்கு.Romanticization
2.இசையை அடுத்தத் தளத்திற்கு நகர்த்துதல்
3.புது முயற்சி
4.புது உருவாக்கம்(creativity)
5.இசைக்கருவிகளின் நாதத்தை வைத்து சிலம்பாட்டம்
6.கருவிகளின் உரையாடல்
 7.இசைக்கருவிகளின் குட்டி குட்டியான நாதங்களை பயன்படுத்துதல்
8.point,counterpoint,point  என்று தனிதனியாக  நாதங்களை உருவாக்கி அதை எல்லாவற்றையும்  ஒன்றுபடுத்தும் அழகில் எழும் நாதம்

உதாரணமாக கிழ் உள்ள புடவையின் நூல் வேலைப்பாடைப் பாருங்கள். அதே மாதிரிதான் பாட்டின் உள்ளே மேஸ்ட்ரோவின் நேர்த்தியான கவுண்டர் பாயிண்ட் என்னும் இசைக்கோர்வைகளும்.


இந்த கவுண்டர் பாயிண்டுகளைத்தான் முக்கியமாக prelude,  interlude -1 , interlude -2 போன்ற முதல  இடையிசைகளில் வாசித்து பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.இதில் கர்நாடக இசை ஸ்வரங்களும் மற்றும் ஹம்மிங்களும் ஊடுபாவாக  நெய்திருப்பார்.


 
                    மேஸ்ட்ரோவின் பெண் ரசிகர்கள்  (கவுண்டர் பாயிண்டுகள்?)



இனி மேஸ்ட்ரோவின்  riot of   counterpoints நிறைய பாடல்கள் உள்ளன.சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு வேண்டுகோள்! சற்று உன்னிப்பாகக் கேளுங்கள்!

1:அலைகள் ஓய்வதில்லை (புத்தம் புது காலை)
C.PointPuthamPuthu.mp3

ஆரம்பத்தில் ஒரு புல்லாங்குழல் ஒரு மெலடியும்(அ), கும்கும் என்று கிடாரில் வேறு ஒரு மெலடியும்(ஆ),கோரஸ் ஹம்மிங் ஒரு மெலடியும்(இ), கோரஸ் வயலின் ஒரு மெலடியும்(ஈ) எல்லாம் கலந்து இந்த அ,ஆ,இ,ஈ க்களுக்குள் நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள்.இனிமை!இனிமை!இனிமை!

அட்டகாசம்.

1A.அவதாரம் (தென்றல் வந்து தீண்டும்போது

அவதாரம்

இந்தப் பாட்டின் prelude 00.00 இருந்து 00.08 வரை ஒரு ”தானத்தந்தம்” என்று ஒரு பெண் குரலும் அதற்கு கவுண்டராக வேறு ஒரு “தானத்தந்தம்”பெண்குரலும் விதவிதமாக பின்னிக்கொண்டே வரும். 00.09ல் இசைக்கருவி இழைகள் (bells,synth,violin,humming)  இதோடுப் பின்னிக்கொள்ளும்.ராஜா 00.17ல் “தந்த தந்த தான” என்று இவைகளுடன் சேர்ந்துக்கொள்வார்.முதல் அடுக்கில் ராஜா ஒரு மெலடியும்,இரண்டாவது அடுக்கில் பெண்குரல் இதற்கு கவுண்டராக வேறு மெலடியும், மூன்றாவது அடுக்கில் பெண் குரல்  முற்றிலும் வேறாக ஹம்மிங்குகள் நெய்யப்பட்டிக்கும். இது தவிர இதனூடே இசைக்கருவிகளும் பின்னிக்கொண்டே வரும்.ஆனால் எல்லாம்  harmonyஆக இசைந்து வரும்.


மெதுவாக ஊர்ந்து வரும் இவைகள்   ”தென்றல் வந்து தீண்டும்” என்று பல்லவி யை ராஜா ஆரம்பிக்க 0.32ல் டிரம்ஸ்ஸால் அறைந்து அறைந்து பாட்டின் டெம்போ மெதுவாக  உயர்ந்துக்கொண்டே வர  0.38 to 0.39ல் ஒரு இசை இழை (என்ன கருவி?) மெலிதாக தழுவி விட்டுப் போகும்.அசத்தல்!

இதுதான் கவுண்டர் பாயிண்ட்.

பார்வையற்றவர்கள் பாடுகிறார்கள் என்பதைக் கற்பனைச் செயதுக்கொள்ளுஙகள்.Hats of Maestro!

2. திருவாசகம் சிம்போனி:பூவேறு கோனும் புரந்தரனும்
   (கவுண்ட் 0.06 to .24)
CpointPooverukonum-Thiruvasagam.mp3

இதில் உண்மையாக வயலின்/சாரங்கி,புல்லாங்குழல்/கிடார் எனநெய்திருப்பார்.என்ன உச்சரிப்பு.
3.பன்னீர் புஷ்பங்கள்(ஆனந்தராகம்)(கவுண்ட் 0.06 to .26)
 ஆரம்பம் வயலின் ரகளை.cello,flute,synth,violin என்று பின்னல்.இதனிடையே சிம்மேந்திர மத்யமம் என்கிற ராகம் கசியும்.

CpointAnandaRaagamKetkum.mp3
 
4.கோழிகூவுது (ஏதோ மோகம்): 0.01 - 0.15

 CpointYethoMoham.mp3
 

இது நமக்கானப் பாட்டா?அவருக்கா?

5.மண் வாசனை (பொத்திவச்ச)1.24 - 1.33

 MCpointPotthiVecha.mp3

6.அரங்கேற்ற வேளை(ஆகாய வெண்ணிலாவே) (0.58 - 1.18)
  CpointAgayavennilave.mp3


என்ன ஒரு மங்களகரமான ஆரம்பம்.
இந்த கவுண்டின் லீடில் ஒரு வயலின் மெலிதாக தர்பாரி கானடாவை தீற்றிக்கொண்டே வர பின்னணியில் அண்ணன் வயலின்மார்கள் துரத்திக்கொண்டே வர..... மேஸ்ட்ரோவின் பிரமிக்க வைக்கும் கற்பனை.

 7.வைதேகி காத்திருந்தாள்(மேகம் கருக்கயிலே)0.00 -0.22
மேகம் கருக்கயிலே

8.பதினாறு வயதினிலே(செந்தூரப்பூவே)1.13 -1.20
  CpointSenthooraPoove.mp3


9.சத்ரியன்(மாலையில் யாரோ மனதோடு)
 (0.05-0.17)

CpointMaalayil.mp3

 இது பூமிக்காகப் போடப்பட்ட பாட்டல்ல.காதல் கிரகம் வீனஸ்ஸூக்குப் போடப்பட்டது.முதலில் வரும் interlude கற்பனையின் உச்சக்கட்டம்.It is a stunner.

நான் பேசுவதை விட  என் ரசிகர்களோடு என் இசை மூலம்தான் பேசகிறேன் - இளையராஜா

படிக்க:
இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி

32 comments:

  1. நன்றி முரளி.

    ReplyDelete
  2. Brother,

    Superb.. Continue to post more.

    The drums of this song is something unique, which haunts me for a longtime. Don't know why.

    The flute which joins "Vanthu vanthu poguthamma" is benchmark-ed Raja..

    Raja's darbar, undoubtedly.

    Sudharsan

    ReplyDelete
  3. இந்த பாடல்களை கேட்கும் போது நீங்கள் சொல்வது புரிகிறது. உழைப்பு தெரிகிறது.

    ”என் கண்மனி, காதலி...” சிட்டுக்குருவி படப்பாடல், நீங்கள் சொன்ன வகையில் வருமா ? தெரியவில்லை. ஆனால், டிராக் சிஸ்டம் இல்லாத (அப்படித்தான் நினைக்கிறேன்) காலத்தில், என்ன ஒரு மிக்ஸிங். ராஜா..ராஜா தான்

    ReplyDelete
  4. அத்தனையும் என் Favourite.தொடருங்கள்.

    ReplyDelete
  5. சூப்பர் சார்...
    க்ளாஸ்ல பாடம் எடுக்கிறமாதிரி புட்டுப் புட்டு வைச்சிருக்கீங்க.நன்றி...
    ஒவ்வொரு பாடலாக் கேட்டுட்டு வந்து சொல்றேன்..இப்போதான் ‘ஆனந்த ராகம்’ கேட்டுமுடிச்சேன்.. என்னோட ஆல்டைம் ஃபேவரைட் சாங் அது...
    //உதாரணமாக கிழ் உள்ள புடவையின் நூல் வேலைப்பாடைப் பாருங்கள்.//
    அங்க போனா நூல் வேலைப்பாடைக் கவனிக்க முடியலை சார்... :-)

    ReplyDelete
  6. Blogger Suddi said...

    //Brother,

    Superb.. Continue to post more.//

    Thanks Suddi. I have included "புத்தம் புது காலை”.பதிவில் சேர்க்க மறந்து போனது.

    ReplyDelete
  7. பின்னோக்கி said...

    // ”என் கண்மனி, காதலி...” சிட்டுக்குருவி படப்பாடல், நீங்கள் சொன்ன வகையில் வருமா ? தெரியவில்லை.//

    இது(சுசிலா/பாலு) அடுத்து அடுத்துப் பாடுவது.வராது.”பூமாலையே தோள் சேரவா”(பகல் நிலவு)ஜானகி ஒரு மெட்டும்,ராஜா வேறு ஒரு மெட்டும் பாடுவார்.சந்தில் ஆளுக்கு ஒரு சிந்து பாடுவது.

    I have included "புத்தம் புது காலை”.பதிவில் சேர்க்க மறந்து போனது.பார்க்க.சூப்பர் பாட்டு.

    //ஆனால், டிராக் சிஸ்டம் இல்லாத (அப்படித்தான் நினைக்கிறேன்) காலத்தில், என்ன ஒரு மிக்ஸிங். ராஜா..ராஜா தான்//

    சத்தியமான உண்மை.இப்பெல்லாம் ஒட்டுப் போடுகிறார்கள்.

    ReplyDelete
  8. //ஸ்ரீ said...//

    // அத்தனையும் என் Favourite.தொடருங்கள்.//

    I have included "புத்தம் புது காலை”.பதிவில் சேர்க்க மறந்து போனது.பார்க்க.சூப்பர் பாட்டு.

    நன்றி.

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said...

    // சூப்பர் சார்! க்ளாஸ்ல பாடம் எடுக்கிறமாதிரி புட்டுப் புட்டு வைச்சிருக்கீங்க.நன்றி...//

    நன்றி.பரிசல் பதிவு(அவதாரம் பாடல்)
    பார்த்ததும்தான் இதன் பொறி விழுந்தது.
    // ஒவ்வொரு பாடலாக் கேட்டுட்டு வந்து சொல்றேன்..இப்போதான் ‘ஆனந்த ராகம்’ கேட்டுமுடிச்சேன்.. என்னோட ஆல்டைம் ஃபேவரைட் சாங் அது...//

    ஐய்யோ! வயலின் சீறிக்கொண்டுவரும்

    // அங்க போனா நூல் வேலைப்பாடைக் கவனிக்க முடியலை சார்... :-)//

    ஆக்‌ஷூவலா நான் முதலில் வைத்தது வித்யா பாலன் புடவைப் போட்டோ.கவனம் சிதறும் என்பதால் எடுத்து விட்டேன்.

    I have included "புத்தம் புது காலை”.பதிவில் சேர்க்க மறந்து போனது.பார்க்க.சூப்பர் பாட்டு.

    நிறையப் பாட்டு இருக்கிறது.கவுண்டர் பாயிண்டின் சிம்பிள் பார்முலா “சந்தில் பல சிந்துகளைப் பாடுவதுதான்”.கண்டுப்பிடித்து அனுபவியுங்கள்.Start today Boss!

    ReplyDelete
  10. Excellent Ravi....

    Raja has done many great things... Posts like this makes us know more of his achievements, indepth music knowledge and his passion to the music....

    Do write more such details....

    ReplyDelete
  11. நன்றி கோபி.தெரிந்தவரை எழுதுகிறேன்.

    ReplyDelete
  12. தல....கலக்கிட்டிங்க...;))

    ஒவ்வொரு பாடலையும் மீண்டும் நீங்கள் கூறியது போல கேட்கும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கு ;))

    மேலும் மேலும் தொடருங்கள் தல ;)

    ReplyDelete
  13. ரசிகன்யா நீர்!

    இப்படியெல்லாம் பாட்டை ரசிக்க முடியுமான்னு பிரமிப்பா இருக்கு!

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. // தல....கலக்கிட்டிங்க...;))

    ஒவ்வொரு பாடலையும் மீண்டும் நீங்கள் கூறியது போல கேட்கும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கு ;))

    மேலும் மேலும் தொடருங்கள் தல ;)//

    நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  15. பரிசல்காரன் said...

    // ரசிகன்யா நீர்! இப்படியெல்லாம் பாட்டை ரசிக்க முடியுமான்னு பிரமிப்பா இருக்கு!மிக்க நன்றி.//

    ராஜாவோடு பாட்டு அப்படி.

    நன்றி பரிசல்.

    ReplyDelete
  16. பிரமாதம்...

    இவ்வளவு நுணுக்கமா விளக்கி..
    நானும் , பரிசலும்...திருப்பூர் ரயில்வேஸ்டேஷன் வாசலில் பாடின பாட்டை...(எங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சது)
    அதன் மேன்மையை மேலும் மேலும் உணர வச்சிருக்கீங்க!

    நானும் ரேடியோல இருக்கேன்....இவ்வளவு ஆழமா யோசிக்கலையேன்னு வெக்கமா இருக்கு! :(

    பரிசலை வழி மொழிகிறேன்..
    ரசிகன்யா நீர்!

    வாழ்த்துக்கள் தலைவா!

    ReplyDelete
  17. Hi Ravi

    Good post on counter melodies. Honestly, Raja's counterpoint work requires several books, not just one blog post.

    You could just do a post on only his counterpoints with solo violin. I would have been delighted if you had pointed out more of recent Raja's work too. The latest on your post dates to his work almost 15 years ago. Please take my feedback positively.

    'Megam Karukkaiyile' is a fantastic experimentation of the rustic folk melody and western choir. However, though this can be considered polyphony, it is not a counterpoint in the strictest sense.

    I understand that you write for Tamil readers. Here is a Telugu suggestion on counter melodies by Raja that is Carnatic based, but outstanding experimentation. In the film, 'Aalapana', there is a SPB song ' Aavesa mantha' - the prelude of this song takes the 'En Kanmani' (Chittukuruvi) experiment one notch forward where Raja gets SPB to sing two Carnatic melodies simultaneously - pure bliss!


    Keep up the good work.

    Cheers

    Ravi Natarajan
    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  18. சுரேகா! வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.

    சுரேகா.. said...

    //பிரமாதம்... இவ்வளவு நுணுக்கமா விளக்கி.. நானும் , பரிசலும்...திருப்பூர் ரயில்வேஸ்டேஷன் வாசலில் பாடின பாட்டை...(எங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சது)//

    அவர் எழுதின பதிவுதான்(இதை எழுதவேண்டும்) தூண்டியது.

    //இவ்வளவு நுணுக்கமா விளக்கி..//

    ராஜாவின் இசைக்கோர்ப்பு பக்கா professional.மன்னார் அண்ட் கம்பெனி அப்ரோச் இல்லை.

    இதைக்கேளுங்கள்:


    ”காத்திருந்தேன் தனியே” (kathuren)
    படம்: ராசா மகன்.

    http://www.thiraipaadal.com/albums/ALBIRR00544.html

    கவுண்ட் 0.10 to 0.22 ல் உங்களை பிரமிக்க வைப்பார்.The drums and violin arrangements are so grand.

    ReplyDelete
  19. Hi Ravi Natarajan,

    I am honoured.Thanks a lot.Here in another two minutes power shutdown due to some problem.Will come back in detail.

    ReplyDelete
  20. Hi Ravi Natarajan,

    I am back.

    //Raja's counterpoint work requires several books, not just one blog post.//

    100% agreed.This is my first attempt on technical grounds.Normally I give poetic expressions of his songs in my blog.

    //I would have been delighted if you had pointed out more of recent Raja's work too. The latest on your post dates to his work almost 15 years ago. Please take my feedback positively. //

    The answer is same as as first.In earlier of his career he had done it lively because he is highly skilled guy.So it is worth mentioning,particularly "putham puthu kalai" is amazing work.

    //Please take my feedback positively. //

    Definitely.100%

    //Megam Karukkaiyile' is a fantastic experimentation of the rustic folk melody and western choir. However, though this can be considered polyphony, it is not a counterpoint in the strictest sense.//

    I take note of this and review again.Thanks.

    ReplyDelete
  21. Hi Ravi Nat!

    //In the film, 'Aalapana', there is a SPB song ' Aavesa mantha' - the prelude of this song takes the 'En Kanmani' (Chittukuruvi) experiment one notch forward where Raja gets SPB to sing two Carnatic melodies simultaneously - pure bliss!//

    Prelude is super.
    The song resembles 'கூட்டத்திலே கோயில்புறா””யார் வீட்டு ரோஜா” “காவியம் பாடவா” so many songs.

    Icould not make out raaga.Is it kamas?

    ReplyDelete
  22. ஆகாய வெண்ணிலாவே பாடல் 6/2 என்ற நடையில் உள்ளது.. இந்த நடை இந்திய திரை இசையில் உபயோகித்த பெருமை இசைஞானி அவர்களையே சாரும்..இசை அரேன்ஜர் களுக்கும், தாள வாத்திய புரோகிராமர்களுக்கும், இந்த நடை ஒரு சவால்... எனிவே, ராஜா ராஜா தான்....அசைக்க முடியாது..

    ReplyDelete
  23. வாங்க மஞ்சள் ஜெட்டி.பேரே வித்தியாசமா இருக்கு.கருத்துக்கு நன்றி.

    //ஆகாய வெண்ணிலாவே பாடல் 6/2 என்ற நடையில் உள்ளது..//

    நானும் கேள்விப்பட்டேன்.கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம் ஆனதால் புரிந்துக்கொண்டு எழுதலாம் என்று விட்டு விட்டேன்.

    ReplyDelete
  24. மேஸ்ட்ரோவின் பெண் ரசிகர்கள் (கவுண்டர் பாயிண்டுகள்?)
    ராஜாவின் இசை போலவே அழகான விளக்கம்.

    ReplyDelete
  25. The prelude of "etho mogam" is a masterpiece. I am sure most of you have read sangeetha kanavugal. In that ilaiyaraja would have played some of his music tracks to a French composer (Paul Marriott). The prelude of etho mogam is the one of the tracks he played during that conversation.

    ReplyDelete
  26. Thanks Muthuswamy. I have written about other music directors also.

    ReplyDelete
  27. I have no words to speak about IR, but, i think "Ninaivoo oru paravai" from "sigapu rojakal" comes in this race. Its definetly a great work. If we listen to 5 mins song, we can use them for full lenght movie as background score. It carries all sorts of moods in a song...

    ReplyDelete
  28. Blogger Thangu said...

    // I have no words to speak about IR, but, i think "Ninaivoo oru paravai" from "sigapu rojakal" comes in this race. Its definetly a great work. If we listen to 5 mins song, we can use them for full lenght movie as background score. It carries all sorts of moods in a song..//

    வருகைக்கு நன்றி.சிவப்பு ரோஜாக்கள் படமே புதுமை.நீங்கள் பாட்டைப் பற்றிச் சொல்வதும் சரி. இது அவரின் பல பாடல்களுக்கும் பொருந்தும்.

    July 15, 2010 12:51 AM

    ReplyDelete
  29. Wonderful writeup

    There one more i enjoyed , this time in BGM

    In Thalabathy when rajini meets ArvindSamy after knowing he is his brother

    Arvind samy asks "meratriya", and when rajini replies "illai, kenji ketkuren" Maestro starts his work there

    there'll be a couterpoint of the theme music used for Arvind samy and rajini meetings in the movie and chinnathayaval tune and the thing is this time the theme plays as a pathos theme unlike the other times

    watch the scene in youtube

    search for "SURYA MEETS COLLECTOR" and listen from 3:18

    Maestro rules

    ReplyDelete
  30. நன்றி கணபதி ராம்.

    "SURYA MEETS COLLECTOR" போட்டேன் வரவில்லை.

    ReplyDelete
  31. மூன்று வருடங்கள் கழித்து வருகிறேன். திரு ரவி அவர்களே,கவுண்டர் பாய்ன்ட் முறையில் இளையராஜா இசை அமைத்த சில பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது என் கண்மணி என்ற சிட்டுக்குருவி படப் பாடல்தான். அதை வெறுமனே இது வராது என்று நீங்கள் சொல்லி இருப்பது தவறு. மற்றபடி புத்தம் புது காலை பாடல் அந்த யுக்தியில் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. நீங்கள் இளையராஜாவின் ஒரு சிறிய இசை துனுக்கைக்கூட அந்த 3.07 ஆவது வினாடியில் வரும் இசை அபாரம் என்று பாடல்களுக்கே மூச்சு முட்டும்வரை வர்ணிப்பவர்.நீங்கள் இப்படி தவறுகள் செய்யலாமா?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!