Wednesday, September 9, 2009

இரண்டு வார்த்தைக் கதைகள்

தலைப்பு:  ”அய்யோ பாம்பு! ” என்றதும் இளம்பெண் மரணம்.

கதை:  கேண்டிட் கேமரா
__________________________________

தலைப்பு:  தேர்வு எழுதிய 40%சதவீதம்  சாப்டுவேர் இன்ஜினியர்கள்

கதை: வங்கி கிளார்க்
__________________________________

தலைப்பு:  மரத்தடியின் கிழ் வைத்த  என் வீட்டுப்  பிள்ளையார்

கதை: எங்கு போனார்?
_________________________________

தலைப்பு: வீட்டில் பார்த்த  வரன் பத்துப் பொருத்தமும் பொருந்தி வர எஸ் எம் எஸ் அனுப்பினான்

 கதை:  என்ன மறந்திடு!
_________________________________

தலைப்பு:"ஏன் சார் இப்படி? நாலாவது தடவை  ஓயெஸ்(OS) மாத்தறேன்”
  
கதை:அசடு வழிந்தேன்
_________________________________

25 comments:

  1. ஏற்கனவே இந்த மாதிரி எழுதியிருக்கீங்களே :)

    ReplyDelete
  2. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    //ஏற்கனவே இந்த மாதிரி எழுதியிருக்கீங்களே //

    ஆமாம்.ஆனால் அவை வேறு வேறு ”கரு”க்கள்.

    ReplyDelete
  3. முதலிரண்டும் நல்லா இருந்தது சார். மூணாவது ஓகே.

    ReplyDelete
  4. தமிழ்ப்பறவை said...

    // முதலிரண்டும் நல்லா இருந்தது சார். மூணாவது ஓகே//

    நன்றி.

    ReplyDelete
  5. ரெண்டு வார்த்தைக்கதைக்கு எல்லாம் தலைப்பு நீளமாகத்தான் இருக்கணுமா

    ReplyDelete
  6. :)

    முதல் கதையைத் (தலைப்பைத்!?) தவிர மீதி எல்லாமே சுமாராத்தான் எனக்குப்படுது

    ReplyDelete
  7. அய்யோ..ரெண்டு வார்த்தையா?

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    நன்றி.

    மண்குதிரை said...

    நன்றி.

    ReplyDelete
  9. ரெண்டு வார்த்தைக் கதை எல்லாம் சரி தான்..ஆனால் அதற்கான தலைப்பு ஊர் நீளத்துக்கு இருந்தா தான் கதையே புரியும் போல இருக்கே?! பின்ன எப்படி அது ரெண்டு வார்த்தைக் கதையாக முடியும்? !!!
    புரியலை !!! தலைப்பும் ரெண்டு வார்த்தையில இல்ல இருக்கணும்

    ReplyDelete
  10. சின்ன அம்மிணி said...
    //ரெண்டு வார்த்தைக்கதைக்கு எல்லாம் தலைப்பு நீளமாகத்தான் இருக்கணுமா//

    சுஜாதா ஒரு தடவை எழுதி காட்டினார்.அதைத்தான் பின்பற்றினேன்.தலைப்பு சுருக்கிச் சொல்வது கஷடம்.

    ReplyDelete
  11. சென்ஷி
    //முதல் கதையைத் (தலைப்பைத்!?) தவிர மீதி எல்லாமே சுமாராத்தான் எனக்குப்படுது//

    நன்றி.

    தண்டோரா ...... said...
    //அய்யோ..ரெண்டு வார்த்தையா?//

    ஏங்க?

    ReplyDelete
  12. மிஸஸ்.தேவ் said...

    //ரெண்டு வார்த்தைக் கதை எல்லாம் சரி தான்.................இருந்தா எப்படி அது ரெண்டு வார்த்தைக் கதையாக முடியும்? !!!

    நீங்கள் சொல்வது சரிதான்.தலைப்பை சின்னதாக வைத்து கதை விடுவதற்கு இது ரிவர்ஸ்.அதில் அவ்வளவு பெரிய கதையைப் படித்துவிட்டு தலைப்புப் புரியவில்லை என்று சொல்லுவோம்.

    // புரியலை !!! தலைப்பும் ரெண்டு வார்த்தையில இல்ல இருக்கணும்//
    ரொம்ப கஷ்டம்.முயன்றுப் பார்த்து தோல்விதான்.

    சில எண்ணங்கள்:-
    மேற் சொன்ன கதைகள் எழுதவும் கொஞ்சம் திறமை வேண்டும்.அந்தத் தலைப்புக்கேற்றாற் போல்,
    அசட்டுதனம் இல்லாமல்,இரண்டு வார்த்தை கதை பொருந்த வேண்டும்.பிரதிபலிக்க வேண்டும்.

    சுஜாதா ஒரு தடவை எழுதி காட்டினார்.அதைத்தான் பின்பற்றினேன்.

    பார்க்க:
    http://raviaditya.blogspot.com/2009/03/2_30.html

    http://raviaditya.blogspot.com/2009/01/blog-post_5687.html

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. அமெச்சூராக எழுதிப்பார்த்திருக்கிறேன். (இதுவும் அதே ரகம் தான்) சும்மா டாப் ஆஃப் தெ மைண்ட் முயல்கிறேன்.

    ஒருவர்: ஹலோ.. தெரியுதா?
    இன்னொருவர்: ஹலோ! ஆமாங்க.. நல்லா தெரியுதே!

    தலைப்பு: 3G

    ReplyDelete
  14. வெங்கிராஜா | Venkiraja said...

    //அமெச்சூராக எழுதிப்பார்த்திருக்கிறேன்.//

    ஒருவர்: ஹலோ.. தெரியுதா?
    இன்னொருவர்: ஹலோ! ஆமாங்க.. நல்லா தெரியுதே!


    தலைப்பு: 3G

    நல்லா இருக்கு.ஆனா கதையில இரண்டு வார்த்தை வரல. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
    நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

    http://www.srilankacampaign.org/form.htm



    அல்லது

    http://www.srilankacampaign.org/takeaction.htm



    என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
    அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

    ReplyDelete
  16. நன்றாக இருக்கிறது ரவி.

    ReplyDelete
  17. //September 9, 2009 9:33 PM
    க. தங்கமணி பிரபு said...//

    செய்தாயிற்று.

    ReplyDelete
  18. ஸ்ரீ said...
    நன்றாக இருக்கிறது ரவி.


    நன்றி.

    ReplyDelete
  19. இரண்டு வரி போய், இப்போ இர‌ண்டு வார்த்தையா?/ கலக்குங்கோ ரவி சார்...

    ReplyDelete
  20. R.Gopi said...
    //இரண்டு வரி போய், இப்போ இர‌ண்டு வார்த்தையா?/ கலக்குங்கோ ரவி சார் //

    நன்றி கோபி.

    ReplyDelete
  21. முதலாவது ஷாக் ட்ரீட்மென்ட்.

    ReplyDelete
  22. நன்றி ஊர்சுற்றி.

    ReplyDelete
  23. அட சூப்பர் சார் எனக்கு இது மாதிரி எழுத ரொம்ப பிடிக்குது யோசிக்க நிறைய விஷயம் வருது அதை எழுத்தா கொண்டு வர்றதில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு சார் இது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்...

    ReplyDelete
  24. பிரியமுடன்...வசந்த் said...

    //அட சூப்பர் சார் சார்//

    பாராட்டுக்கு நன்றி வசந்த்.

    //எனக்கு இது மாதிரி எழுத ரொம்ப பிடிக்குது யோசிக்க நிறைய விஷயம் வருது அதை எழுத்தா கொண்டு வர்றதில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு//

    யோசிக்கிறீங்க.ஆனா கொஞ்சம் ஆழமா(அஜித் கதை மாதிரி)யோசிங்க.
    தலைப்பை டெபினஷன் மாதிரி கொடுக்காதீங்க.உடனே எழுததீங்க.என்னுடைய கேண்டீட் காமிரா கதைக்கு தலைப்பு வைக்க 10 நாள் ஆயிற்று.அனுபவம் வரும்.தூள் கிளப்புவீர்கள்.

    // இது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்...//

    ஆகா...!தல கேட்டீங்களா ஒரு கேள்வி.

    உங்கள் கேள்வியே ஒரு கதையாக்கலாம்.(take it easy boss)

    தலைப்பு:

    இது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்

    கதை -1 கற்பனை.com

    கதை -2 ங்கொய்யலா யோசி?

    கதை -3 ரெண்டு வார்த்தைக்கு?

    கதை -4 யோகா பண்ணுங்க

    வசந்த்! ஆனா நம்ம ரெண்டு
    பேருக்குத்தான் கதை புரியும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!