Monday, September 7, 2009

கமலின் “உன்னைப்போல் ஒருவன்”-பாடல்

கமல் மகள் ஸ்ருதிஹாசன் “உன்னைப்போல் ஒருவன்” படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.இந்தப் படம் ஹிந்தியில் வெளி வந்த “A Wednes Day" என்ற படத்தின் தமிழாக்கம்(ரீமேக்).இதில்கமல், மோகன்லால் நடித்துள்ளனர்.


கமல் நடித்துள்ளதால் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசை ஸ்ருதிஹாசன்? தந்தை 8 அடி பாய்ந்தால் ஸ்ருதிகுட்டி 16 அடி பாயுமா?பார்க்கலாம்.





மொத்தம் ஐந்து பாடல்கள்.மனுஷ்ய புத்ரன் பாடல்கள் எழுதி உள்ளார்.எல்லாப் பாடலுமா? தெரியவில்லை.


1.அல்லா ஜானே ...கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
கமல் (சோலோ)பாடுகிறார்.மிகச் சோகமான சுப பந்துவராளி ராகத்தில்(”பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுப்போனால் அய்யனை.. நீ காணலாம்...” என்ற பாட்டு இதே ராகம்) பாட்டின் ஆரம்ப இசையும் ,முதல் சரணத்திற்கு முன் வரும் இசை வித்தியாசமாக இனிமையாக இருக்கிறது.ஆல்பத்தில் இந்தபாட்டு ஒன்றில்தான் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு வெறும் சத்தமாக இரைக்காமல் it is simply musical. கமல் நல்ல நடிகர்.நல்ல பாடகரா?பாடும்போது நடிக்கக்கூடாது.சில இடங்களில் சுருதி சேரவில்லை.

2.அல்லா ஜானே -2..கண்ணீர் அறியா கண்கள் உண்டோ!
ஸ்ருதி ஹாசன் பாடியது.இனிமையான குரல்.ஸ்ரேஷ்யா/சாதானசர்க்கம் போல் மழலைத் தட்டவில்லை.தமிங்லிஷ் இல்லை.ஆரமபத்தில் இசை நன்றாக ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு?சோக மெலடிக்கு எதற்கு இந்த பப்பி லஹரி மியூசிகல் சேர் குமுக்கு இசை.அப்பா பாட்டு போல் வித்தியாசமாக இசைத்திருக்கலாமே! அங்கங்கே ஹிந்தோளம் ஹம்மிங் சோகமாக ஒலிக்கிறது.பாட்டின் நடுவில் ”கடவுள் பாதி” என்று கமல் மாதிரி வசனம் பேசுகிறார் ஸ்ருதி.


3.நிலை வருமா? கமல்-பம்பாய் ஜெயஸ்ரீ
நல்ல மெலடி.மெலிதான இசை.”நிலை வருமா” என்ற வரிகளுடன் பாடலின் நடுவில் கமல் ஜெயஸ்ரீடன்  சேரும் இடம் இனிமை. பின் வரும் ஆலாபனையும் நல்லா இருக்கு.ஆனால் பாட்டின் இனிமையையும் இசையையும் கடைசி வரை நீட்டிக்க முடியவில்லை.அனுபவம் வேண்டும்.முயற்சி செய்தால் வரும். Born with silverspoon என்று அசிரத்தைக் காட்டினால அம்பேல்.


4.வானம் எல்லை இல்லை:
ஸ்ருதி ஹாசன், பிளேசி பாடியது.இதில் ஸ்ருதி ஹாசன் குரல் அற்புதம்.ஆனால் பாட்டு மேற்கத்திய இசையின் கும்மாங்குத்துப் பாட்டு.வழக்கமான பிளேசியின் கடித்து குதறி ”தமிங்கிலீஷ் சாமி” வந்து ஆடி பாடும் பாட்டு.


மேற்கத்திய இசையை கொஞ்சம் புத்திசாலித்தனமாக இசைக்கலாமே!கூர் கட்டி அடிக்கனுமா?சுமார். தாங்க முடியவில்லை.அம்மணி! டெக்னாலாஜியை வைத்துக்கொண்டு சவுண்டு உடக்கூடாது.உட்ட இனிமையா வுடனும்.


5.உன்னைப்போல் ஒருவன்:
இந்தப் பாட்டை 11 பேர் பாடுகிறார்கள். இந்த ஒரு வரியும், மற்றும் கீதையின் சுலோகமான “பரித்ராணய சாதுனாம்...”தான் திருப்பிப் திருப்பி வருகிறது.இதுவும் சுமார். உயிரே இல்லாமல் பாட்டு.மனதைத் தொடுவது மாதிரி மெட்டுப் போட வேண்டாமா?


ரெஹ்மான்,ஹாரிஸ்,யுவன் தாக்கம் (ஒரளவுக்கு) இல்லாமல் இருப்பதற்கு பாராட்டலாம்.அம்மணிக்கு ஒரு யோசனை.பாட்டில் முடிந்த அளவுக்கு டெக்னாலிஜியை வைத்து இனிமைக் கொண்டு வாருங்கள்.தொப் தொப் தட்டுவதில் பிரயோஜனம் இல்லை.


சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.


கடைசியாக ஏர்டெல் சூப்பர் சிங் ஸ்டைலில்................


selected?   rejected?   wait listed?


Wait listed........................!


பாடல் கேட்க:

http://tamil-theater.blogspot.com/2009/09/download-unnai-pol-oruvan.html



11 comments:

  1. நேசமித்ரன் said...
    //nice post and valid review//

    நன்றி நேசமித்ரன்.

    ReplyDelete
  2. அல்லா ஜானே வரிகள் அழகானவை அதேபோல் வானம் எல்லை, நிலைவருமா பாடல் வரிகளும் தத்துவமானவை, அல்லா ஜானே மனுஷ்ய புத்திரன் எழுதியது, ஏனையவை கமலின் கைவண்ணம். ஸ்ருதி பாஸ் பண்ணிவிட்டாஎ என்றே சொல்லலாம், பிளேசினால் உன்னைப்போல் ஒருவன் பாடல் கொஞ்சம் வெஸ்டேர்ன் ஆகிவிட்டது, இதனைத் தவிர்த்திருந்தால் நல்ல அல்பம்.

    ReplyDelete
  3. வந்தியத்தேவன் said...
    //அல்லா ஜானே மனுஷ்ய புத்திரன் எழுதியது//

    தகவலுக்கு நன்றி.

    // ஸ்ருதி பாஸ் பண்ணிவிட்டாஎ என்றே சொல்லலாம்//

    ஆமாம்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. அதுக்குள்ள பதிவா....???
    இவ்வளவு வேகம் எதிர்பார்க்கலை சார்...
    கொஞ்சம் கடுமையாவே விமர்சித்திருக்கிறீர்கள்/..எனது புரிதலின் படி ஸ்ருதி ஓ.கே...இன்னும் எதிர்பார்க்கலாம் இசையில்..
    அதே நேரம் தமிழுக்கு ஒரு நல்ல பாடகி கிடைத்துவிட்டார்...
    பாடல்களைக் கேட்டுவிட்டு வந்து சொல்கிறேன்

    அன்பு வந்தியத்தேவன்...
    //நல்ல அல்பம்.//
    பொருள் ஏடாகூடமாக மாறிவிடப்போகிறது....

    ReplyDelete
  5. தமிழ்ப்பறவை said...

    //கொஞ்சம் கடுமையாவே விமர்சித்திருக்கிறீர்கள்/
    மனதில் பட்டதைச் சொன்னேன்.டெக்னாலாஜியை மிஸ்யூஸ் பண்ணுவது பிடிக்கவில்லை.



    //..எனது புரிதலின் படி ஸ்ருதி ஓ.கே...இன்னும் எதிர்பார்க்கலாம் இசையில்..
    அதே நேரம் தமிழுக்கு ஒரு நல்ல பாடகி கிடைத்துவிட்டார்..//

    கரெக்ட்.நிச்சியமாக வருவார்.அசிரத்தையாக இருத்தல் கூடாது.

    நன்றி.

    ReplyDelete
  6. தமிழ் பறவை

    //பாடல்களைக் கேட்டுவிட்டு வந்து சொல்கிறேன் //

    நான் கொடுத்தச் சுட்டியில் பாடல் கேட்கும்போது விட்டு விட்டு பாட்டுக் கேட்கிறது.
    சரிபார்த்துச்சொல்லவும். வேறு லிங்க் ஏதாவது?

    ReplyDelete
  7. நான் டௌன்லோடு செய்து கேட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது சார்...பிரச்சினையில்லை.

    ReplyDelete
  8. நீங்கள் கொடுத்த சுட்டியில்தான் டௌன்லோடு செய்து கேட்டேன்...

    ReplyDelete
  9. நன்றி.சரிபார்க்கிறேன். பாடல்கள் எப்படி?

    ReplyDelete
  10. ஒரு தடவைதான் கேட்டேன் சார்.
    கமல் பாடும் அல்லா ஜானே பிடித்திருந்தது.நிலை வருமா இன்னும் நன்றாகக் கேட்க வேண்டும்.
    ஐந்தாறுமுறை கேட்டுவிட்டுதான் என் பார்வையைப் பதிவிடும் எண்ணம் சார்..
    ஸ்ருதி தேறுவார் என்றே தோன்றுகிறது.
    ஹாரிஸ் போல் குண்டுச்சட்டிக்குதிரை இல்லை எனவும் தெரிகிறது சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!