Wednesday, May 20, 2009

பதிவர் Follower கவிதைகள் - 1



ஒரு பூச்செண்டு



காலை எழுந்தவுடன்
ஜன்னலின் வட்ட சதுரத்தில்
ஒரு அழகான 
புது பூச்செண்டு
Follower



__________________________


சப்தபதி



வலைப்பெண்களை
பின் தொடர ஆரம்பித்த 
நாள் முதல்
என்னை விடாமல் 
பின் தொடரும் Follower
மனைவி






__________________________







கவலையில்லை
எண்ணிப்பார்க்கிறேன்

ஒன்று குறைகிறது
மறுபடியும் எண்ணுகிறேன்
குறைகிறது
அப்பாடா நிம்மதி
போனது ஆண் தான்
பெண் Follower அல்ல





__________________________


27 comments:

  1. அத்தனையும் அருமைன்னாலும்

    //சப்தபதி

    வலைப்பெண்களை
    பின் தொடர ஆரம்பித்த
    நாள் முதல்
    என்னை விடாமல்
    பின் தொடரும் Follower
    மனைவி//

    தலைப்பும் கலக்கல் :)

    ReplyDelete
  2. எதார்த்தமான கவிதைகள்....

    /*கவலையில்லை
    எண்ணிப்பார்க்கிறேன்
    ஒன்று குறைகிறது
    மறுபடியும் எண்ணுகிறேன்
    குறைகிறது
    அப்பாடா நிம்மதி
    போனது ஆண் தான்
    பெண் Follower அல்ல */

    ரசித்து சிரித்தேன்...



    ஆனந்த விகடனில் உங்கள் கவிதையை படித்தேன்...மிகவும் நன்றாக இருந்தது.. வாழ்த்துக்கள்..தாமதத்திற்கு மன்னிக்கவும்...அந்த ரவிஷங்கர் நீங்கள் தான் என எனக்கு அப்போது தெரியவில்லை...ரவி ஆதித்யா என்ற உங்கள் வலைப்பூவின் பெயரே நினைவில் இருந்ததால் வந்த குழப்பம்...

    ReplyDelete
  3. ரவி,

    எல்லாமே நல்லா இருக்கு. சென்ஷி சொன்ன மாதிரி 'சப்தபதி' தலைப்பும் கவிதையும் நல்ல 'அனு'பவம் எனக்கும் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  4. வித்தியாசமான சிந்தனை

    வரிகள் அனைத்தும் இரசித்தேன்

    சப்தபதி - ஹா ஹா ஹா ...

    ReplyDelete
  5. //எண்ணிப்பார்க்கிறேன்
    ஒன்று குறைகிறது
    மறுபடியும் எண்ணுகிறேன்
    குறைகிறது
    அப்பாடா நிம்மதி
    போனது ஆண் தான்//

    இப்போ சந்தோஷ படுங்கள் , ஒரு follower கூடி இருப்பார். அட ச்சே, ஆண்தான். அது நான்தான்.

    ReplyDelete
  6. சென்ஷி said...

    //அத்தனையும் அருமைன்னாலும்//

    நன்றி சென்ஷி.

    ReplyDelete
  7. கயல்விழி said...

    //எதார்த்தமான கவிதைகள்//

    நன்றி.இந்த கவிதைகளின் இன்ஸ்பியரேஷன் நீங்கள்தான்.

    எப்படி?
    நான் follower ஆனதற்கு பாராட்டிப் போட்ட உங்கள்பின்னூட்டம்.எடுத்தேன் பேனாவை(?)எழுதினேன் கவிதையை.

    //ஆனந்த விகடனில் உங்கள் கவிதையை படித்தேன்//

    நன்றி.

    ReplyDelete
  8. அனுஜன்யா said...

    //எல்லாமே நல்லா இருக்கு//
    நன்றி.

    //நல்ல 'அனு'பவம் எனக்கும்//

    ”அனா”னிய பாலோ பண்ணுங்க.
    (ஹிஹிஹிஹிஹி)

    ReplyDelete
  9. நட்புடன் ஜமால் said...

    //வித்தியாசமான சிந்தனை

    வரிகள் அனைத்தும் இரசித்தேன்

    சப்தபதி - ஹா ஹா ஹா //

    வாங்க ஜமால்.நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  10. தேனீ - சுந்தர் said...

    //இப்போ சந்தோஷ படுங்கள் , ஒரு follower கூடி இருப்பார். அட ச்சே, ஆண்தான். அது நான்தான்//

    இன்னொரு பூச்செண்டு!

    முதல் வருகைக்கு நன்றி.
    பின்பற்றுதலுக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    // அட ச்சே, ஆண்தான். அது நான்தான்//

    ரசித்தேன்.சூப்பர்.

    ReplyDelete
  11. நல்லா இருக்கு உங்கள் பின்தொடரும் கவிதை

    ReplyDelete
  12. "No Door Delivery" - ரொம்ப அருமைங்க.

    ReplyDelete
  13. கை கொடுங்க ரவி சார்... எல்லாமே சூப்பர்.முதல் மூணும் ரொம்ப நல்லா இருக்கு...
    புன்னகையோடு படிக்க வைத்தது. நன்றி...

    அது சரி உங்க பதிவுக்கு முதல் follower நான். ஏதாச்சும் சாமி குத்தம் பண்ணிட்டேனோ...?! :-))

    ReplyDelete
  14. சப்தபதி அருமை ..இப்படிக்கு சப்தம் இல்லாத பதி

    ReplyDelete
  15. ஆ.முத்துராமலிங்கம் said...

    //நல்லா இருக்கு உங்கள் பின்தொடரும் கவிதை//

    நன்றி

    ReplyDelete
  16. TKB காந்தி said...

    //"No Door Delivery" - ரொம்ப அருமைங்க.//

    நன்றி காந்தி.

    ReplyDelete
  17. தமிழ்ப்பறவை said...
    //கை கொடுங்க ரவி சார்//...

    நன்றி

    //அது சரி உங்க பதிவுக்கு முதல் follower நான். ஏதாச்சும் சாமி குத்தம் பண்ணிட்டேனோ.//

    நீங்க ஓண்ணும் பண்ணல.நாந்தான் fevicol போட்டு ஒட்டி வச்சுட்டேன்.
    எஸ்கேப் ஆயிடக் கூடாதில்ல.

    ReplyDelete
  18. அது ஒரு கனாக் காலம் said...

    //சப்தபதி அருமை ..இப்படிக்கு சப்தம் இல்லாத பதி//

    நன்றிங்க பதி.உங்க பதிவுக்கு வரேன்
    சம காலத்தவர் (ஈர்குச்சி ஒடம்பில் பெல் பாட்டம்)மாதிரி தெரிகிறது.

    ReplyDelete
  19. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    :)

    புரியல.

    மேடம்! கன்னித் தமிழ் கைவசம் இருக்க எதற்கு சங்கேதக் குறிகள்.

    ReplyDelete
  20. எல்லாமே நல்லா இருக்கு. குசும்பு கவிதைகள்!

    ReplyDelete
  21. குடந்தை அன்புமணி said...

    //எல்லாமே நல்லா இருக்கு. குசும்பு கவிதைகள்//

    நன்றி.

    ReplyDelete
  22. முதல் கவிதை...
    பூச்செண்டேதான்:)!

    ReplyDelete
  23. ராமலக்ஷ்மி said...

    //முதல் கவிதை...
    பூச்செண்டேதான்://


    நன்றி ராமலஷ்மி.

    ReplyDelete
  24. நல்லா இருக்குங்க. ரசித்தேன்

    ReplyDelete
  25. அழகான வித்தியாசமான பதிவர் ஃபாலோயர் கவிதைகள்... சூப்பர்

    ReplyDelete
  26. நல்ல கவிதைகள்..

    ReplyDelete
  27. ///கவலையில்லை
    எண்ணிப்பார்க்கிறேன்

    ஒன்று குறைகிறது
    மறுபடியும் எண்ணுகிறேன்
    குறைகிறது
    அப்பாடா நிம்மதி
    போனது ஆண் தான்
    பெண் Follower அல்ல///

    சரியான வழிசல் தான் போங்க!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!