அதில் ‘பேச்சுத் தமிழில் சினிமா டைட்டில்கள்” என்று
ஒரு பதிவு இருந்தது.
இதை ஏன் எழுதினேன் என்று யோசித்தேன்..
ஒரு முறை டெல்லியிலிருந்து ஒரு உறவுக்காரர்
வந்திருந்தார்.அவரை சினிமாவுக்கு அழைத்தோம்.அவர்
சினிமா பார்த்து பழக்கமில்லை. வாழ்க்கையில் இரண்டு
அல்லது மூன்று படங்கள்தான் பார்த்திருப்பார்.
பத்திரிக்கைப் படிக்கும் வழக்கமும் அவ்வளவு
இல்லை.
வலுக்கட்டயாமாக அவரை அழைத்தோம்.
கடைசியாக ஒப்புக்கொண்டார்.படத்தின் பெயரைக் கேட்டு
சிரி சிரி என்று சிரித்தார்.“இது நம்ம ஆளு”.நம்பவே இல்லை.
அவர்க்கு பரிச்சியமான டைட்டில்கள்.”பாவை விளக்கு” “தாயே நீ
தெய்வம்” “அன்னையின் ஆனை” “நந்தனார்” போன்றவை..
சினிமா பார்த்த பிறகு வீட்டிற்கு வந்து பேச்சுத் தமிழில்
வந்த சினிமா டைட்டில்களை டைரியில் எழுதி காட்டினேன்.
சிரி சிரி என்று சிரித்தார்.
"காதுல பூ” டைட்டிலை இன்னும் நம்பவில்லை. காதுல பூ
என்றுதான் நினைத்தார்.
என் டைரியில் இருப்பது.
டப்பிங் பட டைட்டிலகள் சேர்க்கவில்லை.
- கோழி கூவுது
- கொக்கரக்கோ
- பொழுது விடிஞ்சாச்சு
- முறை பொண்ணு
- ராமாயி வயசுக்கு வந்துட்டா
- பொண்ணு பாக்க போறோம்
- பொண்ணு பிடிச்சிருக்கு
- பாக்கு வெத்தல
- விடிஞ்சா கல்யாணம்
- மேளம் கொட்டு தாலி கட்டு
- பொண்ணு வீட்டுக்காரன்
- வாங்க மாப்பிள வாங்க
- பொண்ணுக்கேத்த புருசன்
- லட்சுமி வந்தாச்சு
- சாந்தி முகூர்த்தம்
- என்ன முதலாளி செளக்கியமா
- பரீட்சைக்கு நேரமாச்சு
- தூறல் நின்னு போச்சு
- வெளிச்சத்துக்கு வாங்க
- நேரம் வந்தாச்சு
- வா இந்த பக்கம்
- தில்லு முல்லு
- இது எங்க பூமி
- காதுல பூ
- தம்பிக்கு எந்த ஊரு
- இது நம்ம ஆளு
- நம்ம ஊரு நல்ல ஊரு
- பாரு பாரு பட்டணம் பாரு
- நான் உன்ன நெனச்சேன்
இது எப்படி இருக்கு?
இதுவும் ஒரு படஙக.
சரி இதையும் லிஸ்டல சேர்த்துடலாம்.
30.இது எப்படி இருக்கு?
நல்ல தொகுப்பு ரவி ஆதித்யா.
ReplyDelete// முரளிகண்ணன் said..//
ReplyDeleteநல்ல தொகுப்பு ரவி ஆதித்யா.
நன்றி சார்!
//ராமாயி வயசுக்கு வந்துட்டா//
ReplyDeleteஇப்படியும் ஒரு தலைப்பா? என்ன கொடுமைய்யா இது!!
Thamizhmaangani said...
ReplyDelete//ராமாயி வயசுக்கு வந்துட்டா//
//இப்படியும் ஒரு தலைப்பா? என்ன கொடுமைய்யா இது//
மலையாளப் படம் டப் செய்யப்பட்டு
தமிழில் வந்தது.
“மாமனாரின் காம் வெறி”
பொண்ணு ஊருக்கு புதிசு ... சரிதா அம்மா நடிச்சது , ஓரம் போ, ஒரு மஞ்ச குருவி, காலை குயிலே ..போன்ற பாடல்கள்
ReplyDeleteஅப்பிடியே தமிழ் படம் ஆங்கில தலைப்புல வந்தத ஒரு பதிவு போடுங்க
ReplyDeletenice compiling.. sir..
ReplyDeleteசமீபத்தில் 1972-ல் வெளி வந்த "தோ கஜ் ஜமீன் கே நீச்சே” என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் தலைப்பு போஸ்டர்களில்: “ஆறடி ஆழத்தில் அநியாயம்”
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
// அது ஒரு கனாக் காலம் said.//
ReplyDeleteபொண்ணு ஊருக்கு புதிசு ... சரிதா அம்மா நடிச்சது , ஓரம் போ, ஒரு மஞ்ச குருவி, காலை குயிலே ..போன்ற பாடல்கள்
ஆமாம் சார்! டைரில எழுதி வச்சததான் போட்டுருக்கேன்.நன்றி
தேனீ - சுந்தர் said...
நன்றி!
//அப்பிடியே தமிழ் படம் ஆங்கில தலைப்புல வந்தத ஒரு பதிவு போடுங்க//
போட்டாப் போச்சு
Cable Sankar said...
ReplyDelete//nice compiling.. sir..//
நன்றி கேபிள் சங்கர்.
dondu(#11168674346665545885) said...
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்!
//சமீபத்தில் 1972-ல் வெளி வந்த "தோ கஜ் ஜமீன் கே நீச்சே” என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் தலைப்பு போஸ்டர்களில்: “ஆறடி ஆழத்தில் அநியாயம்//
It is hot in Paradise என்று ஒரு படம்(1979).அதற்கு தமிழ் தலைப்பு:-
(தாம்பரம் MR தியேட்டர்)
“சொர்க்கத்தில் சூடேற்றும் சுகுண சுந்தரிகள்”
மதுர
ReplyDeleteவாங்க மாப்பிளே வாங்க
ஜுட்
நீங்க நல்லா இருக்கணும்
பசங்க
ரமேஷ் வைத்யா said...
ReplyDeleteவாங்க ரமேஷ் வைத்யா.
//மதுர
ஜுட்
நீங்க நல்லா இருக்கணும்
பசங்க//
நான் டைரி எழுதும்போது இந்த படங்கள ரிலீஸ் ஆகல.
நன்றி
ரவிசங்கர் அவர்களே,
ReplyDelete'ஈநாடு' மலையாளப் படம் தமிழில் எடுக்கப் பட்ட போது அதன் பெயர்
'இது எங்க நாடு'
'வாங்க டீ சாப்பிடலாம்' என்று நடிகர் ரவிச்சந்திரன் ஒரு படம் எடுத்த ஞாபகம்!
டாக்டர் ராஜசேகரின் பிரபல தெலுங்கு டப்பிங் படம் :
'இதுதாண்டா போலீஸ்'
வேறு ஒரு தமிழ்ப் படம் :
'எம் புருஷந்தான்! எனக்கு மட்டுந்தான்!'
'மழு' (கோடரி) என்ற ஒரு மலையாளப் படத்துக்கு சிலர் வைத்த தமிழ்த் தலைப்பு:
'மாமனாரின் நியாயமான இன்ப வெறி!'
IV சசியின் 'அவளோட ராவுகள்' படத்துக்கு என் நண்பன் வைத்த பெயர்:
' அவள் தொடை ஒரு கதை'!!!!
நன்றி!
சினிமா விரும்பி
கிளம்பிட்டாரு நண்பர் கிளம்பிட்டாரு :-)
ReplyDelete//Cinerma Virumbi said..//
ReplyDeleteவாங்க சினிமா விரும்பி.
நன்றி வ்ருகைக்கு.
டப்பிங் படம் சேர்க்கவில்லை என்று எழுதியிருக்கிறேன் சினிமா விரும்பி.
//'ஈநாடு' மலையாளப் படம் தமிழில் எடுக்கப் பட்ட போது அதன் பெயர்
'இது எங்க நாடு'
'வாங்க டீ சாப்பிடலாம்' என்று நடிகர் ரவிச்சந்திரன் ஒரு படம் எடுத்த ஞாபகம்!
டாக்டர் ராஜசேகரின் பிரபல தெலுங்கு டப்பிங் படம் :
'இதுதாண்டா போலீஸ்'
வேறு ஒரு தமிழ்ப் படம் :
'எம் புருஷந்தான்! எனக்கு மட்டுந்தான்!'
'மழு' (கோடரி) என்ற ஒரு மலையாளப் படத்துக்கு சிலர் வைத்த தமிழ்த் தலைப்பு:
'மாமனாரின் நியாயமான இன்ப வெறி!'
IV சசியின் 'அவளோட ராவுகள்' படத்துக்கு என் நண்பன் வைத்த பெயர்:
' அவள் தொடை ஒரு கதை'!//
உங்களுக்கு சொல்லித்தரனுமா?
சினிமா விரும்பி
Suresh said...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//கிளம்பிட்டாரு நண்பர் கிளம்பிட்டாரு//
இந்த மாதிரி ஒரு படம் வந்துதா?
:-))
ReplyDeleteநல்ல தொகுப்பு!
எப்படி இப்படியெல்லாம்....
ReplyDeleteம்ம்ம்... விதவிதமா யோசிக்கிறாங்க...(பேர் வச்சவங்களும், பதிவு போடுறவங்களும்)
சமீபத்தில் வெளிவந்த பசங்க கூட!!!!!
ReplyDeleteநல்ல தொகுப்பு!!
சென்ஷி said...
ReplyDelete//நல்ல தொகுப்பு!//
நன்றி சென்ஷி
தமிழ்ப்பறவை said...
//எப்படி இப்படியெல்லாம்....
ம்ம்ம்... விதவிதமா யோசிக்கிறாங்க...(பேர் வச்சவங்களும், பதிவு போடுறவங்களும்)//
வேற வழியில்ல சார்!
நன்றி.
ஆதவா said...
ReplyDelete//சமீபத்தில் வெளிவந்த பசங்க கூட//
நன்றி.என் டயரி ரொமப் பழசுங்க.
//“சொர்க்கத்தில் சூடேற்றும் சுகுண சுந்தரிகள்”//
ReplyDeleteஎத்தனை வாட்டி படத்தை பார்த்திங்க அண்ணே.....
ஜெட்லி said...
ReplyDeleteவாஙக ஜெட்லி.முதல் வருகைக்கு நன்றி.
//“சொர்க்கத்தில் சூடேற்றும் சுகுண சுந்தரிகள்”//
எத்தனை வாட்டி படத்தை பார்த்திங்க அண்ணே.....
ஒரு வாட்டிதான் அண்ணே.இப்ப லேட்டஸ்டா வர தமிழ் படத்திலேயே
சொர்க்கத்தில் சூடேற்றும் சுகுண சுந்தரிகள் இருக்கிறார்கள்.அந்த அளவுக்கு முன்னேறிட்டோம்.அந்த படம் ஜுஜுபி.
ஹை!! டைட்டில் தொகுப்பு நல்லா பண்ணியிருக்கீங்க ரவிசங்கர். இது எப்படி உட்கார்ந்து யோசிப்பிங்களோ!!!
ReplyDelete(எல்லா இங்கிலீசுல இல்லாம தழில்லதான வச்சுருக்காங்க)
ஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//ஹை!! டைட்டில் தொகுப்பு நல்லா பண்ணியிருக்கீங்க ரவிசங்கர். இது எப்படி உட்கார்ந்து யோசிப்பிங்களோ//
தல அதெல்லாம் ஒண்ணுமில்ல சின்ன வயசுல சினிமா பித்து.இதெல்லாம் டைரில இருந்தது.
//(எல்லா இங்கிலீசுல இல்லாம தழில்லதான வச்சுருக்காங்க)//
அப்ப ஒரு டிரெண்டு.”ச்சு” அல்லது
“ங்க”ன்னு முடியும்.