Thursday, May 21, 2009

ஆனந்த விகடனில் வந்த கவிதைகள்

போன வாரம் ஆனந்த விகடன் 20-05-09  
(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்)  
(27ம் பக்கம்) வெளியான கவிதைகள்

கவிதை - 1

















நாய் குட்டிக்கு அம்மா வேணும்

புசுபுசுவென 
ஒரு செல்ல நாய் குட்டி
வளர்க்க வேண்டும் 
அடம் பிடித்தாள்
என் சின்ன மகள்

யார் கவனித்துக்கொள்வது 
சாத்தியமில்லை என்றேன்
வேலைக்குப் போகும்
அம்மாவும் அப்பாவும்
இருக்கும் வீட்டில்

அம்மாவை ரிசைன்
பண்ணிவிட்டு
கவனித்துக் கொள்ளச் சொன்னாள்
மனமில்லை அவளுக்கு
கிரெஷ்ஷில் விட


கவிதை - 2

















வழித்து வார்த்த கடைசி தோசை

கிச்சனுக்கும் ஹாலுக்குமாய்
அடிக்கடி நடந்து
எல்லோருக்கும் 
வேண்டிய தோசைகளை
சுட சுட வார்த்து
அவரவர் இடத்தில்
கொண்டு போய் பரிமாறி
சட்னியும் மிளகாய் பொடியும்
அவ்வப்போது தண்ணிரும்
குழந்தைகளுக்கும்
கணவர்களுக்கும்
கொடுத்து விட்டு
தனியாக தோசை சாப்பிடும்
அம்மாக்கள்  வழக்கத்தை
கண்டிப்புடன் மாற்றிய மனைவி
அடுப்படியில் பரவுகிறது
தோசை திருப்பப்படும் 
ஓசையும் மணமும்!


21 comments:

  1. முதல் கவிதை வலி
    இரண்டாவதில் மருந்து!

    ReplyDelete
  2. சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன்றி!
    அருமையான கவிதைகள். என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. தோசை கவிதை ...இறுதியா என்ன சொல்றாங்கன்னு தெரியல !!!!!. முதல் கவிதை யதார்த்தம், என் பெண் ரொம்ப உரிமையா வீட்டில் அவளை பார்த்து கொள்ளும், தாதியிடம், " நீ ஊருக்கு போய், உன்னோட மகள், மகன் அவர்களை போய் பார்த்துக்க என்ன ...." அதன் அர்த்தம் அம்மா என்னை இங்கு பார்க்க வேண்டும்

    ReplyDelete
  4. முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  5. மன்னிக்கனும் ரவிஷங்கர்.. உங்க ஃபாலோயர் கவிதைகள் படிச்சேன்.. ஆனா பின்னூட்டம் போடுமளவு நேரமில்லை. பொதுவா நான் படிச்சுட்டு மட்டும் போய்டுவேன்... நேரமில்லாட்டி நமக்கு வாசிப்பு மட்டும்தான்..

    ஆவியில கவிதை வந்துச்சுன்னா, அது எவ்வளவு தரம்னு எனக்குத் தெரியும். என்ன ஒண்ணு, நம்ம மக்கள் கிட்ட, பெருமையா சொல்லிக்கிட்டேன்... ரவிஷங்கர் நம்மாளுதான், நல்லா எழுதுவாரு, ஆவியிலகூட வந்திருக்குன்னு.... ஹி ஹி...

    வாழ்த்துகள் கே.ரவிஷங்கர் சார்/

    ReplyDelete
  6. முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்! அந்த ரசனைக்காகவே அதை மும்முறை படித்தேன். ஆழமான அருமையான கருத்து.

    அடுத்த கவிதையில், ///தோசை திருப்பப்படும்
    ஓசையும் மணமும்!///
    திருப்பப்படுவது தோசை மட்டுமல்ல, பழைய பழக்கவழக்கமும் தான் என்று சொல்லாமல் சொல்வது அருமை! இப்படியும் அர்த்தம் கொள்ளலாம், அதாவது, நான் சுட்டால் ஓசை வராது, இதே என்னவர் சுட்டால், ஒட்டிய தோசையை, கரண்டியால் சுரண்டும் ஓசை வரும். இந்த வேலையை இருவரும் பங்கு போட்டு ஆணும் சுடுவதால் ஓசை வருகிறதோ?!

    விட்டால், இவ்விரு கவிதைகளையும் வைத்து, ஒரு ப்ளாக் போஸ்ட், ஏன் ஒரு தீஸிஸே எழுதி விடலாம் போல் உள்ளது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. // சென்ஷி said..//

    //முதல் கவிதை வலி
    இரண்டாவதில் மருந்து//

    நன்றி.

    ReplyDelete
  8. ராமலக்ஷ்மி said...

    //சொன்னபடியே பகிர்ந்தமைக்கு நன்றி!அருமையான கவிதைகள். என் பாராட்டுக்கள்//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  9. // அது ஒரு கனாக் காலம் said..//

    நன்றி சுந்தர்ராமன்.

    //தோசை கவிதை ...இறுதியா என்ன//

    எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  10. மண்குதிரை said...

    //முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு//

    நன்றி.

    ReplyDelete
  11. ஆதவா said...

    நன்றி.நேரம் இருக்கும்போது போடுங்க.

    ReplyDelete
  12. SUMAZLA/சுமஜ்லா said...

    //முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்!

    நன்றி

    //அடுத்த கவிதையில் நான் சுட்டால் ஓசை வராது, இதே என்னவர் சுட்டால், ஒட்டிய தோசையை, கரண்டியால் சுரண்டும் ஓசை வரும். இந்த வேலையை இருவரும் பங்கு போட்டு ஆணும் சுடுவதால் ஓசை வருகிறதோ?!//

    மேடம் கொளுத்தரீங்க.சூப்பர்.

    ஒரிஜனலாக எழுதிய கடைசிவரி:

    கண்டிப்புடன் மாற்றிய மனைவி....

    //வார்க்கும் தோசைகளை விட
    கணவன் வார்க்கும் தோசைகள்
    சுவையாக அமைகிறது
    சில சமயம்//

    அப்புறம் “நானே” மாற்றி விட்டேன்.
    என் மனைவிக்கு ஒரிஜனல்தான் பிடித்திருந்தது.

    ஹிஹிஹிஹிஹிஹிஹி

    நன்றி.

    ReplyDelete
  13. நல்ல கவிதைகள்... முதல் கவிதை புரிந்தது... இரண்டாம் கவிதை முடிவு புரியவில்லை

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ரவிஷங்கர் சார்

    ReplyDelete
  15. ரீனா,

    நன்றி.

    //இரண்டாம் கவிதை முடிவு புரியவில்லை//

    படிங்க இவங்க பின்னூட்டத்த.
    அப்புறம் என் பின்னூட்டம்.

    // SUMAZLA/சுமஜ்லா said.../
    /

    ReplyDelete
  16. ரெண்டு கவிதையும் ஒவ்வொரு விதம்..
    முதல் கவிதை சிம்பிள்...
    எனக்குப் பிடிச்சது ரெண்டாவது கவிதை(எனக்கு தோசை பிடிக்கும்றதுனாலயானு தெரியலை)..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. தமிழ்ப்பறவை said.

    //கவிதை(எனக்கு தோசை பிடிக்கும்றதுனாலயானு தெரியலை)
    வாழ்த்துக்கள்//

    நன்றி.பிடிக்கிறது இல்ல வார்க்கத் தெரியுமா? life skill?

    ReplyDelete
  18. //(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) //

    ஹ்ம்ம் எப்படியெல்லாம் விளக்கவேண்டி இருக்குப் பாருங்க :-)

    தோசை கவிதை நல்லா இருக்கு - எனக்கு வார்க்கவும் தெரியும் :-)

    ReplyDelete
  19. ராஜா | KVR said...
    //(நடிகை ஷ்ரேயா அட்டைப் படம்) ஹ்ம்ம் எப்படியெல்லாம் விளக்கவேண்டி இருக்குப் பாருங்க//

    முதல் வருகைக்கு நன்றி. இது ஒரு
    அடிஷனல் செய்தி.

    //தோசை கவிதை நல்லா இருக்கு - எனக்கு வார்க்கவும் தெரியும் //

    நல்லதாப் போச்சு.நானும் வார்ப்பேன்.

    ReplyDelete
  20. //.. ஆவியில கவிதை வந்துச்சுன்னா, அது எவ்வளவு தரம்னு எனக்குத் தெரியும். என்ன ஒண்ணு, நம்ம மக்கள் கிட்ட, பெருமையா சொல்லிக்கிட்டேன்... ரவிஷங்கர் நம்மாளுதான், நல்லா எழுதுவாரு, ஆவியிலகூட வந்திருக்குன்னு.... ஹி ஹி... //

    நானும்..??!!

    ReplyDelete
  21. ம் யாருக்கெல்லாம் தோசை வார்க்க தெரியும்னு ஒரு polling ஏ வைத்துக் கொள்ளலாம் போலிருக்கே!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!