Friday, May 22, 2009

மாவு மிஷினில் பைனல் டச் - அனுபவம்

என் சின்ன வயது மாவு மிஷின் அனுபவங்கள் மறக்க முடியாது.அப்போது ஆறு அல்லது ஏழு வயது.


வீட்டில் சொல்லி அனுப்பிவிடுவார்கள்.குழம்பு அல்லது ரசப்பொடி மசாலா கலக்காமல் ”மடி”யாக அரைக்கவேண்டும் என்று. மசாலா வாசனைப் பொருட்கள் நெடி எதுவும் இருக்கக்கூடாது. முன்னவர் (திராவிடர்அரைத்த நெடி ஆரியர் மாவில் வந்துவிடக் கூடாது). அதற்காக கடைத் திறப்பதற்கு முன்னேயே கடையின் மாவடைந்த ஷட்டர் அருகே நிற்க வேண்டும்.


பள்ளி நண்பர்கள் என்னைப் பார்த்து இளித்துக்கொண்டே போவார்கள்.வெட்கம் பிடிங்கி திங்கும்.மானம் போகும்.சிரிப்பது பையைப் பார்த்துதான்.தாத்தாப் பைகள்.


தனிததனியாக இரண்டு துணிப்பைகள்.கஞ்சி மாவு,கோதுமை 
மாவு,அரிசி மாவு என்று வெவ்வேறு அயிட்டஙக்ள்.மறக்கக்கூடாது.(இதெல்லாம் ஒரு life skill தான்.இப்போது நினைத்துப்பார்க்கும் போது)அரைக்க் கூலி காசுகள் அதிலேயே புதைந்திருக்கும்.


நுழைந்தவுடன் தும்மல் வரும்.மாவு மெஷின்.மாவுமெஷின் தான்.கடை ஷட்டரிலிருந்து ஆரம்பித்து எல்லாம் மாவு மாவாக இருக்கும்.((சீகக்காய் மிஷன் தவிர) Fan.ஸ்விட்ச் போர்டு.கலர் பல்புகள்.தரை.மிஷின்கள்.மிஷின் கிழ் இருக்கும் தகர டின்.நட்டு போல்டு.ஒட்டடை.பல்லி.மிஷன் பெல்டுகள்.ஓனரின் மரடேபிள்.அதனுள் இருக்கும் சில்லறைகள்.தொங்கும் திருஷ்டி படிகார பொம்மை.உத்திரம்.பழைய மகா லஷ்மி கேலண்டர்.கடைசாவி. 


மாவரைப்பவர் மாவோடு மாவாக மாவித்திரிக்கா லட்சணத்தோடு மாவரைத்துக் கொண்டிருப்பார்.தேசிய பண்டிகளில் சில பேர் உடம்பெல்லாம் வெள்ளை பெயிண்ட் அடித்துக் கொண்டு காந்தி வேஷத்தில் வருவார்கள்.அவர்கள் ஞாபகம் வரும்.ஓனரும் மாவுதான்.


நாந்தான் முதல்.

”இன்னென்ன அயிட்டம்........”’
”..............................”
”கிருஸ்ன மூர்த்தி அய்யிரு வூடா?”
”..............................”
’எத்தினாம் கிளாஸ் படிக்கிற”
”..............................”
”துட்ட பை உள்ளாரந்து எடுத்துட்டியா?”
”..............................”
 

இது மாதிரி கேள்விகள்.மிஷன் சத்தத்தினூடே கேட்கப்படுவதால் சில கேள்விகள் காதிலேயே விழாது.விழுந்தார்போல் காட்டிக்கொள்வேன்.இடையிடையே தும்முவேன்.


“அய்யரே....கவுச்சி துண்ணு .....பலம் வரும்... தும்ம மாட்ட” என்பார்.

என் முறை வரும்.தகர டின்னில் ஐயிட்டத்தைக் கொட்டி மெஷினில் கொட்டுவார்.டின்னைத் தட்டுவார்.சதுரமான இடத்தில் கைவைத்து நுரைக்காக surfஐ அளைவதுப் போல தானியங்களை அளைவார்.அரைவைச் சத்தம் அதிகமாகும்.

யானையின் துதிக்கைப் போல வளைந்த இடத்தில் ஒரு தொளதொளவென்று ஒரு துணிப்பை சூம்பிப் போய் கோமணத் துணித் தொங்கும்.”மடி” மாவுக்காக அதை தட்டி தட்டி சுத்தம் செய்து வைப்பேன். கானல் நீரைத் துரத்தும் விலங்குகள் போல. ஆனாலும் மாவு தூசு வந்துக்கொண்டே இருக்கும்.வீட்டிற்கு பயந்து பயந்துதான் இதெல்லாம் செய்வது.தும்மல் வேறு தாங்க முடியாது.


ரெண்டாவது ரவுண்ட் கொட்டுவார்.டின்னை தட்டுவார்.ஸ்கேலால் தட்டுவார். என் பையில் பிடித்துக் கொள்ள நான் குனிவேன்.அப்போது ஒரு கொடுமை நடக்கும்.


“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரு பைனல்அழுத்து அந்த கை ஸ்டீரியிங்கில் அழுத்துவார்.முடியப்போகிறது என்று பார்த்தால் “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...மெதுவாக நிறுத்தி மறுபடியும் ஒரு ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....((final touch?) .என்னை வெறுப்பேற்றுவது போலிருக்கும். காது நார் நாராக கிழியும்.காதை முடுவதா மாவைப் பிடிப்பதா?தும்முவதா?

பைகள் கொதிக்கும் .வெளியே வரும் போது நானும் “மாவுத்திரிக்கா” லட்சணத்தோடு வெளியே வருவேன்.தட்டிக்கொள்வேன். பார்பர் ஷாப் ஞாபகம் வரும்.

எல்லாம் முடிந்து ஒரு சின்ன ரெஸ்ட் எடுக்க வெளியே வந்து பொடி போடுவார்.ரெண்டு ராட்ச்ச தும்மல் தும்மி (யேங்ங் அச்சு....யேங்ங் அச்சு) விட்டு உள்ளே போவார்.


பிற்காலத்தில் எங்கள் கம்பெனியில் இந்த "FIVE  S"  "KAIZEN" போன்ற மேனஜ்மெண்ட் முறைகளை (management initiative) அறிமுகப்படுத்தும் போது இந்த “ஆண்டாள் மாவு மெஷின்” அடிக்கடி ஞாபகம் வரும்.


32 comments:

  1. சூப்பர்.interesting anupavam.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உங்க கூடவே நானும் மாவு மிஷினுக்கு சென்று வந்த அனுபவம்..சிறு வயது ஞாபகங்களை அசை போட வைத்த பதிவு..நன்றி !!

    ReplyDelete
  4. மாவு அரைக்கப் போய், சின்ன வயசில நான் காணாம போன அனுபவம் எனக்கு ஞாபகம் வந்திருச்சு. அதை என் ப்ளாகில் ஒரு நாள் எழுதுகிறேன். அப்ப தான் இண்ட்ரஸ்டிங் ஆக இருக்கும்.

    ReplyDelete
  5. நன்றி அனானி.முகத்தக் காட்டக்கூடாதா?

    ReplyDelete
  6. // விமல் said..//

    //உங்க கூடவே நானும் மாவு மிஷினுக்கு சென்று வந்த அனுபவம்..சிறு வயது ஞாபகங்களை அசை போட வைத்த பதிவு..நன்றி //

    தேங்க்ஸ் விமல்.

    ReplyDelete
  7. // SUMAZLA/சுமஜ்லா said.//

    //மாவு அரைக்கப் போய், சின்ன வயசில நான் காணாம போன அனுபவம் எனக்கு ஞாபகம் வந்திருச்சு. அதை என் ப்ளாகில் ஒரு நாள் எழுதுகிறேன். அப்ப தான் இண்ட்ரஸ்டிங் ஆக இருக்கும்//

    எழுதுங்க.சின்ன வேண்டுகோள்.சுருக்கமா எழுதுங்க.

    என்னுடையது பெரிசா ஆயிட்டா மாதிரி ஒரு எண்ணம்.

    நன்றி மேடம்.

    ReplyDelete
  8. அரைச்ச மாவை , அரைசுட்டீங்க., ஓகே, மொளகா பொடி அரைச்ச கத இருக்கா ?

    ReplyDelete
  9. very good.
    Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

    ReplyDelete
  10. மாவ்மில்லுக்கு பேரு, கணேசா வா , இல்லை லக்க்ஷிமி மாவு மில்லா. !!!!
    பதிவு நல்லா இருக்கு, நான் ரொம்ப நாளைக்கு, industry னா , மாவு மில் தான்னு நம்பிகிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  11. மாவ்மில்லுக்கு பேரு, கணேசா வா , இல்லை லக்க்ஷிமி மாவு மில்லா. !!!!
    பதிவு நல்லா இருக்கு, நான் ரொம்ப நாளைக்கு, industry னா , மாவு மில் தான்னு நம்பிகிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  12. // தேனீ - சுந்தர் said..//

    //அரைச்ச மாவை , அரைசுட்டீங்க., ஓகே, மொளகா பொடி அரைச்ச கத இருக்கா //

    இருக்கு சுந்தர். என் தலைல நிறைய பேர் அரைச்சிருக்காங்க.

    நன்றி

    ReplyDelete
  13. Nagendra Bharathi said...
    //very good//
    //Whenever you find time, please have a look at my blog and offer your comments there. Thanks//

    நன்றி நாகேந்திரன் பாரதி.வலையைப்
    பார்த்து விட்டேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. // அது ஒரு கனாக் காலம் said...

    //மாவ்மில்லுக்கு பேரு, கணேசா வா , இல்லை லக்க்ஷிமி மாவு மில்லா//

    ஆண்டாள்(?????)

    நன்றி.

    ReplyDelete
  15. தல..என்ன சொல்றிங்க..ஆச்சரியம்..
    தெரியப்படுட்டியதக்ற்கு நன்றி தல..
    ஆனா என்னோட அந்த ப்ளாக் இப்ப இல்ல..காணாம போய்டுச்சு..

    ReplyDelete
  16. // vinoth gowtham said...//

    //தெரியப்படுட்டியதக்ற்கு நன்றி//

    வாழ்த்துக்கள்!

    //ஆனா என்னோட அந்த ப்ளாக் இப்ப இல்ல..காணாம போய்டுச்சு.//

    ஆமாம்.removed என்று வருகிறது.

    ReplyDelete
  17. maavu machine anubhavam enakkum undu. arumai

    ReplyDelete
  18. அதுக்குன்னு அவ்வளவு சீக்கிரமாகவா போகிறது? யாராவது வெறும் மிளகாய்ப்பொடி அரைக்கமாட்டார்களா என்று பார்த்திருந்து பிறகு அரைத்தாலே “அந்த” வாசனை போய்விடுமே? உங்க ”ஆத்தில்” ரொம்பத்தான் போங்கு!

    ReplyDelete
  19. நீங்களுமா????

    போனவாரம் கூட நான் கோதுமை அரைச்சுட்டு வந்தேன்.. நமக்கு இன்னும் பழசாகலைங்க... உங்க அனுபவம் அலாதியானது!

    ReplyDelete
  20. எனது நினைவுகளையும் தூண்டி விட்டது சார். நல்லா இருந்தது அனுபவம்.
    பார்பர் ஷாப் அனுபவம் எழுதுங்களேன். அது பத்தின பல கதைகள் படிச்சிருக்கேன். எல்லாமே சுவையா இருக்கும்..

    ReplyDelete
  21. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்.

    ReplyDelete
  22. சித்திரங்களாக விரிகிறது காட்சிகள். நல்ல பதிவு.

    ReplyDelete
  23. Nagendra Bharathi said...

    //maavu machine anubhavam enakkum undu. arumai//

    நன்றி.

    ReplyDelete
  24. ரவிஷா said...

    //அதுக்குன்னு அவ்வளவு சீக்கிரமாகவா போகிறது? யாராவது வெறும் மிளகாய்ப்பொடி அரைக்கமாட்டார்களா என்று பார்த்திருந்து பிறகு அரைத்தாலே “அந்த” வாசனை போய்விடுமே? உங்க ”ஆத்தில்” ரொம்பத்தான் போங்கு//

    ?????????????????.

    நன்றி சார்!

    ReplyDelete
  25. ஆதவா said...

    //போனவாரம் கூட நான் கோதுமை அரைச்சுட்டு வந்தேன்.. நமக்கு இன்னும் பழசாகலைங்க... உங்க அனுபவம் அலாதியானது//

    ஒண்ணுமில்லீங்க.அப்சர்வேஷன் முக்கியம்.

    தமிழ்ப்பறவை said...

    //எனது நினைவுகளையும் தூண்டி விட்டது சார். நல்லா இருந்தது அனுபவம்.
    பார்பர் ஷாப் அனுபவம் எழுதுங்களேன். அது பத்தின பல கதைகள் படிச்சிருக்கேன். எல்லாமே சுவையா இருக்கும்.//

    ஏங்க நீங்க எழுதுங்க.உங்க பஸ் பிராயண அனுப்வம் அட்டகாசம்.சொல்ற விதத்திற்க்குதான்
    துட்டு!


    குடந்தை அன்புமணி said...

    //ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்//

    அண்ணே வாங்கண்ணே.நன்றி.உங்க வலையும்,முத்துராமலிங்க வலையும்
    திறக்க முடியல. மால்வேர்ன்னு ஒரு
    வைரஸ் அறிவிப்பு வருதுண்ணே.

    Deepa said...

    //சித்திரங்களாக விரிகிறது காட்சிகள். நல்ல பதி//

    நன்றிம்மா!

    ReplyDelete


  26. கே.ரவிஷங்கர்....

    அவர்களிருவரது தளத்திலும் ntamil.com இன் மால்வேர் தாக்கியிருக்கு. அதனால் ப்லாக்கர் இருவரையும் தடை செய்திடுச்சு... ntamil.com உபயோகிக்கும் அனைவருக்கும் இப்படி ஆகும்னு நினைக்கிறேன்..

    நீங்கள் வேண்டுமானால் ntamil.com தளத்தை, கூகில் க்ரோம் வழியாக சென்று பாருங்கள்.... விஷயம் புரியும்..

    ReplyDelete
  27. அங்க நெல் காயப் போட்டுருபாங்கலே, அதுல ”கால்” வைச்ச அனுபவம் உண்டா??

    ReplyDelete
  28. Vijay said.

    //அங்க நெல் காயப் போட்டுருபாங்கலே, அதுல ”கால்” வைச்ச அனுபவம் உண்டா?//

    நான் அவுட் அண்ட் அவுட் சிட்டிங்க.இங்க ஏது நெல்லு.

    ReplyDelete
  29. chinna vayasu niyabhagangalai kilari
    vittuteenga...

    ReplyDelete
  30. Anonymous commented on blog post_21:

    // “chinna vayasu niyabhagangalai kilari vittuteenga...”//

    நன்றி அனானி.

    ReplyDelete
  31. Ravi,

    Nice post. One of my friend sent your link for the "Nach" short stories. I really enjoyed browsing posts under all category.

    About Maavu Machine, I didn't know there was a big technology behind that until I read this blog:
    http://ariviyal.info/2009/09/03/

    Thanks,
    Mukund

    ReplyDelete
  32. நன்றி முகுந்த்.நீங்கள் சொன்ன லிங்கை ஏற்கனவே படித்திருக்கிறேன். சூப்பர் பதிவு.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!