காதல் வைரஸ் நெகடிவ்
நிராகரிக்கப்படும்போது
ரணங்கள்
வலிகள்
வேதனைகள்
காயங்கள்
கவிதைகள் எனறு
பல பல.....
எனக்கு எதுவும் இல்லை
இன்றுவரை
_____________________________
பூக்கள்
மரத்தின் கிழ்
உதிர்ந்துக் கிடக்கும்
பூக்கள்
எல்லோருக்கும்தான்
_____________________________
Cheer leaders
லிப்டிலோ
டிரெயினிலோ
சினிமா தியேட்டரிலோ
பாப்கார்ன் வாங்கும்போதோ
கோவில் கூட்டத்திலோ
ஷேர் ஆட்டோவிலோ
பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்போதோ
கல்யாண ஊர்வலத்திலோ
வீட்டிலோ தூக்கத்திலோ
முன் பக்கமோ
பின் பக்கமோ
உரசித்தான் போகிறது
திரும்பிப் பார்க்கவும்
செய்கிறார்கள்
வெட்கத்துடன்
_______________________
பேப்பர் பிணங்கள்
சேனல் சேனலாகப் பிணங்கள்
உருட்டி விடப்படுகிறது
நடு ஹாலுக்கு
பிடிக்கவில்லை
டீசண்டாக சிரித்த முகத்துடன்
சில பிணங்கள் இருக்கிறது
நீத்தார் அஞ்சலி போட்டோவில்
பிடித்திருக்கிறது
3vathu super.firstum super
ReplyDeleteநன்றி அனானி.
ReplyDeleteஎல்லா கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.... கடைசி கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை
ReplyDeleteநல்லா இருக்கின்றன கவிதைகள்.
ReplyDeleteஎன்னோட சாய்ஸ் ‘சியர் லீடர்ஸ்’ தான் சார்...நல்லா இருந்தது...
ReplyDeletecheer leaders leads de list!!
ReplyDeletei started following u jus bcoz of tat followers' poem :))
முதல் மூன்றும் அருமை..
ReplyDeleteகடைசி.. தெரியவில்லை..??!!
ஆதவா said...
ReplyDelete//கடைசி கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை//
டீவி வந்ததிலிருந்து பிணங்கள் நிறைய
காட்டப்படுகிறது.
(சிலசம்யம்அதுவும்சாப்பிடும்போது.
தூக்கில் தொங்கும் பிணங்கள்
குண்டு வெடிப்பு பிணங்கள்
குப்பைத்தட்டி பிணங்கள்
கடத்தல்காரன் பிணங்கள்
கழுவு நீர் சாக்கடைப் பிணங்கள்
இன அழிப்புப் பிணங்கள்
ஈமொய்க்கும் பிணங்கள்
பாலியல் பலாத்காரப் பிணங்கள்
இதையெல்லாம் விட எனக்கு......?
ஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//நல்லா இருக்கின்றன கவிதைகள்//
நன்றி.
தமிழர்ஸ் - Tamilers said...
//தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்//
நன்றி.
//நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்//
பயமா இருக்கே.இப்பத்தான் NTAMIL
னால malware வந்த்து.
// தமிழ்ப்பறவை said.//
//என்னோட சாய்ஸ் ‘சியர் லீடர்ஸ்’ தான் சார்...நல்லா இருந்தது...//
நன்றி.
// kartin said...//
ReplyDeletecheer leaders leads de list!!
//i started following u jus bcoz of tat followers' poem //
முதல் வருகைக்கு நன்றி.followers
பாகம் இரண்டு வரும் விரைவில்.
பட்டிக்காட்டான்.. said...
//முதல் மூன்றும் அருமை..
கடைசி.. தெரியவில்லை..??!//
நன்றி பட்டிக்காட்டான்.
//கடைசி.. தெரியவில்லை..??!//
ஆதவா பின்னூட்டம் பார்க்க.
அனைத்தும் அருமைதான். செய்திகள், தொடர்கைதகள் அனைத்தும் பார்க்கவே கூசுகின்றன.
ReplyDelete//குடந்தை அன்புமணி said..//
ReplyDeleteஅனைத்தும் அருமைதான்.செய்திகள், தொடர்கைதகள் அனைத்தும் பார்க்கவே கூசுகின்றன.
நன்றி கருத்துக்கு.
நேற்று வந்தேன்,... அந்த காதல் இது ( இன்று ) வரையில் இல்லைன்னு சொன்னீங்க பாருங்க அது தான் டச் ...
ReplyDeleteஒரு சினிமா பாடல்ல , கதாநாயகி ஒரு போட்டியில பாடுவாங்க, எஸ் எஸ் ஆர் தான், நாயகன், கொஞ்சம் தாடியோட, சோக முகத்தோட , வெறித்த பார்வையோட வந்து உட்காருவார், அவரை அந்த போட்டியில் மேடைக்கு தள்ளி விடுவார்கள், ...அவரு சொல்லுவார், காதல் ஒரு முறை தான் வரும், அது தான் உண்மையான காதல்... அந்த பக்கத்தில் உள்ள நாயகி , அந்த ஒரு முறை தான் எதுன்னு சொல்ல முடியாது, அது இந்த முறையா கூட இருக்கலாம் .... அவ்ளோ தான் ஹீரோ க்ளீன் போல்ட் .
அது ஒரு கனாக் காலம் said...
ReplyDelete// சொன்னீங்க பாருங்க அது தான் டச் ...//
நன்றி.
//ஒரு சினிமா பாடல்ல , கதாநாயகி ஒரு போட்டியில பாடுவாங்க, எஸ் எஸ் ஆர் தான், நாயகன், கொஞ்சம் தாடியோட, சோக முகத்தோட , வெறித்த பார்வையோட வந்து உட்காருவார், அவரை அந்த போட்டியில் மேடைக்கு தள்ளி விடுவார்கள், ...அவரு சொல்லுவார், காதல் ஒரு முறை தான் வரும், அது தான் உண்மையான காதல்... அந்த பக்கத்தில் உள்ள நாயகி , அந்த ஒரு முறை தான் எதுன்னு சொல்ல முடியாது, அது இந்த முறையா கூட இருக்கலாம் .... அவ்ளோ தான் ஹீரோ//
நானும் பார்த்திருக்கிறேன்.நல்ல ரசனை சார்.
ஒரு கவிதைக்கு அழகு அது பல வித
பரிமாணங்களைக் கொடுக்க வேண்டும்.
நான் விளக்கினாள் நீர்த்துப்போய்விடும் என்பது என் கருத்து.
//கடைசி.. தெரியவில்லை..??!
ReplyDeleteஆதவா பின்னூட்டம் பார்க்க. ..//
பார்த்தேன், படித்தேன், புரிந்தேன்..
பட்டிக்காட்டான்.. said..
ReplyDelete//பார்த்தேன்,படித்தேன், புரிந்தேன்//
நன்றி.