Friday, May 15, 2009

சும்மா...பியர் &சைட் டிஷ்..சிப்ஸ் & டீ

தி.நகரில் ராமசாமி தெருவில் மன் சுக் என்ற குஜராத்தி உணவகம் இருக்கிறது.எனக்கு தெரிந்து ரொமப வருடமாக இருக்கிறது. முதலில் ரங்கநாதன் தெருவருகில் இருந்தது.மன் சுக்(Mann Sukh)  என்றால் மனதுக்குச்(மன்) சுகமானது (சுக்).இங்கு பனீர் பரோட்டா மற்றும் சாப்பாத்தி(pulka) சாப்பிட்டோம். அருமை. சாப்பாத்திக்கு ஸைட் டிஷ் ஆக “காடி” என்பதும் மற்ற ஸைட் டிஷ்களுடன் சேர்த்து வரும்.இதுவும் சூப்பர் டேஸ்ட்.குடும்பம் புல் கட் கட்டினார்கள்.இங்கு குஜராத்தி சார்ந்த ஐயிட்டங்கள் எல்லாம் கிடைக்கும்.

                        _______________________

அதே தி.நகரில் பஸ் ஸ்டாண்டுக்குத் தள்ளி  அருணா இன் என்கிற ஒரு pub இருக்கிறது. இரண்டாக பிரிந்து இரண்டு இடத்தில் இருக்கும்.TASMACக்கின் கொஞ்சம் higher version என்று சொல்லலாம். கூட்டம் அம்மும்.ஒரே இரைச்சல்.
காரணம். சைட் டிஷ். எல்லா இடத்திலும் டிரிங்க்ஸுக்கு சைட் டிஷ் கொடுப்பார்கள். இங்கு  சைட் டிஷ்க்கு  டிரிங்க்ஸ் கொடுப்பார்கள். உட்கார்ந்தவுடன் ஜலதரங்கம் கப் போல வித விதமான கப்புகளில் சைட் டிஷ் வந்து விடும்.முறுக்கு,வேர்கல்லை வறுத்தது/வறுக்காதது/சிப்ஸ்/காரசேவை
என்று பல அயிட்டங்கள்.இதையெல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விட்டவுடன் சாராயம்(டிரிங்க்ஸ்) வரும்.ஆறு மணிக்கு மேல் சுட சுட பஜ்ஜி புதினா சட்னி. 


இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பாட்டில் பியருக்கு ஒரு சாப்பாடே போடுவார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு பைனா குலர் வழியாக பார்த்து எழுதியது.
குடி குடியை கெடுக்கும்.

                 _______________________


National Ice Cream Parlour ரொம்ப மாறி விட்டது.எவ்வளவு அரட்டைகள்.பழைய நினைவுகள்.ஏக்கம்.பெருமூச்சு.


                _________________________

ரவி ராஜ் லெண்டிங் லைப்ரரி.அதே ஒனர்.இன்னும் இருக்கிறது.என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டார்.”என்ன தம்பி ..... இப்பெல்லாம் இந்த பக்கம் வரதில்ல.....” 

                  _________________________

அன்பழகன் பழக் கடை முத்துப் பழக் கடை இருக்கிறதா?.இல்லை என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னேயே போய் விட்டது.

                  _________________________



19 comments:

  1. //அன்பழகன் பழக் கடை முத்துப் பழக் கடை இருக்கிறதா?.இல்லை என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னேயே போய் விட்டது. //

    அன்பழகன் பழக்கடை இன்னும் இருக்கு. முத்து பழக்கடை போய்ருச்சு.

    ReplyDelete
  2. நன்றி அப்துல்லா.

    ReplyDelete
  3. அவர்களின் ( மன்சுக்) நல்ல chiப்ச் இப்போது நிறுத்திவிட்டார்கள்..

    ReplyDelete
  4. இது சும்மா பதிவா???!!!

    உங்கள் அனுபவம் ரசனையானது!! கலக்குங்க.

    ReplyDelete
  5. ரவி சார்... அருணா இன் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன் . போனதில்லை.
    மத்தபடி நமக்கும் ,சப்பாத்திக்கும் ஏழாம் பொருத்தம்.

    ReplyDelete
  6. நானும் கட்டைக்குள்ள வந்துட்டு போரேன்!!!

    ReplyDelete
  7. Dr.Rudhran said...

    //அவர்களின் ( மன்சுக்) நல்ல chiப்ச் இப்போது நிறுத்திவிட்டார்கள்.//.

    ஏன் நிறுத்தினார்கள்?மன்சுக்கின்
    “psychology" தெரியவில்லை?
    (????????????)

    கருத்துக்கு நன்றி சார்!

    ReplyDelete
  8. ஆதவா said...

    //இது சும்மா பதிவா???!!!//

    ஆமாம்!

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said...

    //ரவி சார்... அருணா இன் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன் . போனதில்லை.
    மத்தபடி நமக்கும் ,சப்பாத்திக்கும் ஏழாம் பொருத்தம்//

    கருத்துக்கு நன்றி.சப்பாத்தி புடிக்காதா?

    ReplyDelete
  10. ஆ.முத்துராமலிங்கம் said...
    //நானும் கட்டைக்குள்ள வந்துட்டு போரேன்!!!//

    எந்த கடைன்னு சொல்லலியே!

    ReplyDelete
  11. //தூரத்தில் நின்று கொண்டு பைனா குலர் வழியாக பார்த்து எழுதியது.

    அட இவ்ளோ நல்லவரா நீங்க??? சொல்லவே இல்ல....

    நன்றி ரவி..என்னையும் தொடர்வதற்கு..

    ReplyDelete
  12. Wow! நீங்கள் சொல்லும் ரவிராஜ் லெண்டிங் லைப்ரரி பிஞ்சால சுப்ரமணியய்யர் ஸ்ட்ரீட் பக்கத்தில் இருப்பதானால், OMG! நாங்கள் தி.நகரில் பனகல் பார்க் எதிரில் (இப்போது “பிரமாண்ட” சரவணா ஸ்டோர்ஸ்) இருந்த ஒரு “பெரிய்ய வீட்டின்” பின்புறம் ஒரு “ச்ச்சின்ன” போர்ஷனில் குடியிருந்தோம் (70-81)! அப்போது எனக்கு ரொம்ப சிறிய வயது! பொழுது போகவில்லை என்றால் உஸ்மான் ரோட்டின் முனையில் நின்று கொண்டு போகவர வாகனங்களை பார்த்துக்கொண்டிருப்பது! இல்லையென்றால் பாலமித்ரா, அம்புலிமாமா எடுக்க ரவிராஜுக்கு போவது! அங்கே ஒருவர் பெரிய தடியான நோட்டில் தடிமனான ஒரு இங்க் பேனாவால் பொறுமையாக எண்ட்ரி போட்டுக் கொடுப்பார்! அப்போதெல்லாம் அங்கே வரும் முக்கால்வாசி இளம் பெண்கள் மில்ஸ் & பூன்ஸ் எடுப்பார்கள்! அதை அவர் எம் & பி என்றே சொல்லி புக்கிலேயும் எழுதுவார்! கல்யாணமாக பிறகுதான் தெரிந்தது எம் & பி என்பது ஒரு வகையான சாஃப்ட் போர்னோ நாவல் என்று :) Anyway, உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ரொம்ப பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது!

    ReplyDelete
  13. கயல்விழி நடனம் said...

    //அட இவ்ளோ நல்லவரா நீங்க??? சொல்லவே இல்ல.//

    எஸ்.ISO 9002.அந்த பார் ஒனர கேட்டுப்பாருங்க.(?)

    //நன்றி ரவி..என்னையும் தொடர்வதற்கு//

    ஒரு கவிதை:


    தொடருதல்
    மீனம்பாக்கம் ஏர்போர்ட்
    வரைதான்

    ReplyDelete
  14. வாங்க ரவிஷா,

    முதல் வருகைக்கு நன்றி.
    கருத்துக்கு நன்றி.

    // பிறகுதான் தெரிந்தது எம் & பி என்பது ஒரு வகையான சாஃப்ட் போர்னோ நாவல் என்று//

    இல்லை.நான் படித்தவரை it is highly romanticizied writing.

    நீங்கள் எழுதிய நினைவலைகள் எல்லாம் கரெக்ட்.பெரிதாக போய்விடும் என்று சுருக்கி விட்டேன்.நிறைய இருக்கிறது.அங்கேயே 50 பைசா கொடுத்து colour magazine(????)
    படிக்கலாம்.

    உங்கள் சைட்டைப் பார்த்தேன்.
    புல்லரிப்பு. நம்ம ராஜாவப் பத்தி.
    நம்மோளட பதிவுகளும் படிங்க.

    ReplyDelete
  15. நன்றி ரவி! You know one thing? It is really weird to call some one who has your name! In any case, நன்றி!

    நான் என் பிளாக்கில் எழுத ஆரம்பித்து பிறகு ஒரு சைட்டில் இளையராஜா சந்திப்பையும் ரஹ்மானின் சந்திப்பையும்! இந்த சுட்டியை தட்டுங்கள்:

    http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=12688&st=0

    அன்புடன்
    ரவி

    ReplyDelete
  16. BY the way, Paratha and Phulka are not Gujarati dishes. They are Punjabi dishes Sir.

    ReplyDelete
  17. விக்னேஷ்வரி said...
    //BY the way, Paratha and Phulka are not Gujarati dishes. They are Punjabi dishes Sir.//

    Thanks vigneshwari.I have not mentioned anywhere in the pathivu it was a Gujarati dish.

    I am also not wellversed with dishes.

    Thanks!

    ReplyDelete
  18. Ravi,

    Aruna is the place hosting parties -:) We were out of town(chennai) bachelors staying in Saidapet in 1997-2000. For any reason(promotion, new job, lost a job, H-1 visa approval etc.) or season (its really raining) Aruna Bar used to be our place!!!

    Thanks,
    Mukund

    ReplyDelete
  19. முதல் வருகைக்கு நன்றி முகுந்த்.

    உங்கள் கமெண்டுக்கும் நன்றி.

    நான் சொன்ன மாதிரி இங்கு கூட்டம் அம்முவதற்குக் காரணம் சைட்டிஷ்தான்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!