Wednesday, May 6, 2009

அபார்ட்மெண்ட் பித்ருக்கள் - ஒரு கவிதை




(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரமான கவிதை 5-5-09)


சற்று முன்தான் 
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி

அடிக்கடி பார்க்கும் சாவுதான்
இரண்டு நாளுக்குப் பிறகு
மீண்டும் ஒரு பெரிய காக்கை
இறந்துக் கொண்டிருக்கிறது

அலகு திறப்பதும் மூடுவதுமாக
இறுதி கணங்களின் துடிப்பு 
குச்சி கால்களிலும் இறக்கைகளும்

குறுக்கும் நெடுக்குமாய்
படபடத்துப் பறந்தபடி
அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல்
சக காக்கைகள் ஓலமிட்டு
பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒரு காக்கை காக்கையாக
சாவதை

இவர்களுடன்
ஏழு மாடி ஜன்னல்களிலும் 
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
*பித்ருக்களின் உறவினர்களும்
காக்கை காக்கையாக
சாவதை

*பித்ரு 
இறந்தவர்களின் திவசத்தின்போது ஒரு பிடி பிண்ட சோறு
காக்கைக்கு வைத்துவிட்டு அது சாப்பிட்டப் பிறகுதான் திவச சாப்பாடு சாப்பிடுவார்கள்.அந்த காக்கை(கள்) நம் இறந்த முன்னோர்கள்(பித்ரு) என்பதாக நம்பிக்கை(ஐதீகம்). 

25 comments:

  1. பித்ருவே செத்ருச்சா..!
    கவிதை O.K.

    ReplyDelete
  2. நவீன விருட்சத்திலும் படித்தேன்.
    நல்ல கவிதை, வாந்ததுக்கள்.

    ReplyDelete
  3. அருமைங்க..... அப்படியே படம் பிடிச்சு போட்டாப்ல இருக்கு!!!

    நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அழகியசிங்கர் ப்ளாகிலேய கமாண்ட் போட்டுவிட்டேன்.

    நல்லா வந்திருக்குங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. டக்ளஸ்....... said...

    //பித்ருவே செத்ருச்சா..!
    கவிதை O.K.//

    பித்ரு...செத்ரு... நல்லாருக்குங்க.

    நன்றி.

    ReplyDelete
  6. //இவர்களுடன்
    ஏழு மாடி ஜன்னல்களிலும்

    பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
    *பித்ருக்களின் உறவினர்களும்
    காக்கை காக்கையாக
    சாவதை

    :(

    ரொம்ப Feel பண்றனோ???

    ReplyDelete
  7. ஆ.முத்துராமலிங்கம் said...

    //நவீன விருட்சத்திலும் படித்தேன்.
    நல்ல கவிதை, வாந்ததுக்கள்.//

    டபுள் நன்றி.

    ReplyDelete
  8. ஆதவா said...

    //அருமைங்க..... அப்படியே படம் பிடிச்சு போட்டாப்ல இருக்கு!//!!

    //நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ரவி சார்..
    //பித்ருவே செத்ருச்சா..!//
    நல்ல தாட்(....?!)

    ReplyDelete
  10. இன்று காலை நவீன விருட்சம் பதிவில் படிக்கும்போதே தோன்றியது - ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறதே... உங்கள் பதிவில் இதற்குமுன் இந்தக் கவிதையைப் பதிவிட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
  11. கவிதை நன்றாக உள்ளது..

    ReplyDelete
  12. கயல்விழி நடனம் said...

    //ரொம்ப Feel பண்றனோ???//
    பண்ணினால் கவிதைக்கு வெற்றி.
    நன்றி.

    ReplyDelete
  13. மண்குதிரை said...
    //அழகியசிங்கர் ப்ளாக்கிலேய கமாண்ட் போட்டுவிட்டேன்//

    நன்றி.

    ReplyDelete
  14. தமிழ்ப்பறவை said...

    //வாழ்த்துக்கள் ரவி சார்//

    நன்றி.

    ReplyDelete
  15. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    //ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறதே... உங்கள் பதிவில் இதற்குமுன் இந்தக் கவிதையைப் பதிவிட்டிருக்கிறீர்களா?//

    இல்லை.

    அது ”காக்கைச் சிறகினிலே.
    .......... ஒரு கவிதை - பித்ரு”

    ஸ்கூட்டர் கண்ணாடியை கொத்தும் காக்கையைப் பற்றி.கவிதை லேபிளில் பார்க்கலாம்.

    கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

    நன்றி

    ReplyDelete
  16. பட்டிக்காட்டான்.. said...

    //கவிதை நன்றாக உள்ளது//

    நன்றி பட்டிக்காட்டான்.

    ReplyDelete
  17. கவிதை நல்லா இருக்கு நண்பா.. நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கார்த்திகைப் பாண்டியன் said...

    //கவிதை நல்லா இருக்கு நண்பா.. நவீன விருட்சத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்//

    நன்றி

    ReplyDelete
  19. வாஙக இயற்கை.ரொம்ப நாளா உங்க பதிவு எதுவும் காணும்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. கவிதை கலக்கல்!

    ReplyDelete
  21. சென்ஷி said...

    //கவிதை கலக்கல்//

    கருத்து ஊக்கம் அளிக்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  22. நன்றாக இருந்தது கவிதை நல்ல தலைப்பும் கூட‌

    ReplyDelete
  23. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  24. மிகவும் அருமை. வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!