Tuesday, May 5, 2009

நண்பர் லக்கி லுக் இது நியாமா? bad touch?

//இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியின் பேட்டியை கண்டு நீங்களும் கூட அதிர்ந்திருக்கலாம். இந்தியாவில் பதிமூன்று மாநிலங்களில் சுமார் பண்ணிரெண்டாயிரத்து ஐநூறு குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றினில் ஐம்பத்தி மூன்று சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் நோக்கத்தோடு துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். துன்புறுத்தியவர்கள் பெரும்பாலும் அக்குழந்தைகளுக்கு நன்கு தெரிந்தவர்களும், பழகியவர்களுமாக இருந்திருக்கிறார்கள்.//


                                     _______________________________________                                

”ஓடுங்க....ஓடுங்க......பக்கத்து வீட்டு அங்கிள் கிட்ட வராரு....”

”ஏண்டி”

”bad touch பயம்தான்”

"பக்கத்து வீட்டு அங்கிள் லக்கி லுக்கோட யோகா டீச்சர்!
 பதிவு அப்புறம் அந்த அனுஷ்கா போட்டோ பாத்துட்டு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாராம்.வழக்கமா “இளமை இதோ இதோ” படம் பார்த்துதான் டென்ஷனாவாரு...இன்னிக்கு”.

                                 _____________________________

இதையெல்லாம் போகிற போக்கில் யாரும் யாரிடமும் பேசிவிட முடியாது. முறையாக கற்றறிந்த மருத்துவர்களோடு ஒரு மாலை நேரத்தில் மனம் விட்டு பேச எல்லோருமே தயாராக தானே இருப்பார்கள். டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் பேச இசைந்திருக்கிறார்கள். 
மறந்துடாதீங்க 


நாள் : மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி.

இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )


____________________________________________________________________



11 comments:

  1. கட்டாயம் இந்தப் பதிவினைப் போட்டவர் அங்கே வந்தாக வேண்டும் :-)

    ReplyDelete
  2. லக்கியப்பத்தி எழுதிட்டு எதுக்கு நர்சிம் லேபிள்..?

    ReplyDelete
  3. லக்கிலுக், நர்சிம், அதிஷா, தீபா, அமிதவர்ஷினி அம்மா மற்றும் கிழக்கு பதிப்பகத்தின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    //அது ஏங்க என் பதிவுல மட்டும் ஆங்கிலத்துல மறு மொழி.ஏதாவது காரணம் இருக்கா?//

    தனியான காரணம் எதுவுமில்லை தலைவரே. என்னுடைய அலுவலக சிஸ்டத்திலிருந்து டைப் செய்வதால் சில சமயம் தமிழ் ஆங்கிலத்திலே டைப் செய்துவிடுவேன். தமிழ் எழுத்துரு இல்லை. இதையும் english to tamil converter ல் தான் டைப் செய்கிறேன்.

    ReplyDelete
  4. //கட்டாயம் இந்தப் பதிவினைப் போட்டவர் அங்கே வந்தாகவேண்டும்//

    மன்னிக்க வேண்டும்.பின்னொரு நாள்
    சந்திப்போம்.

    இந்த பதிவின் நோக்கம் வேறு என்பது உங்களுக்கு தெரியும் நண்பா.

    ReplyDelete
  5. டக்ளஸ்....... said...

    //லக்கியப்பத்தி எழுதிட்டு எதுக்கு நர்சிம் லேபிள்..?//

    நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன்.முதலில் நர்சிம்மின் பதிவை காபி செய்து பேஸ்ட் செய்தேன்.பிறகு எடுத்து விட்டேன். ஆனால் லேபிளில் எடுக்க மறந்து விட்டேன்.எடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
  6. மண்குதிரை said...

    //லக்கிலுக், நர்சிம், அதிஷா, தீபா, அமிதவர்ஷினி அம்மா மற்றும் கிழக்கு பதிப்பகத்தின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.//

    அண்ணே சீரியஸ்ஸா எழுதி-
    யிருக்கீங்களா?

    //தனியான காரணம் எதுவுமில்லை தலைவரே//

    விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  7. Dear Ravishankar,

    என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நண்பர்கள் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  8. ஓகே சார்.வருகிறேன்.சுவராஸ்யமான
    பதிவு எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  9. நல்ல விஷயம்... கடந்த சில நாட்களாக என்னால் வலைப்பக்கம் வரமுடியவில்லை... சென்னைக்கு வரும் வாய்ப்பு இல்லை!!!! சந்தித்துவிட்டு பதிவு எழுதுங்கள்!!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  10. ஆதவா said...

    //சந்தித்துவிட்டு பதிவு எழுதுங்கள்//

    படிக்க நான் லக்கிலுக்குக்கு எழுதிய மறுமொழியை.

    ReplyDelete
  11. கவிதை நன்று!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!