Monday, October 20, 2008

மூன்று ஸ்பேம் மெயில் கவிதைகள்



     மூன்று  ஸ்பேம் மெயில் கவிதைகள்

ஸ்பேம் மெயில் லோன்(?)

ஐடி புருஃப் வேண்டாம்

அட்ரஸ் புருஃப் வேண்டாம்

ரேஷன் கார்டு பிரன்ட் அண்ட் பேக்

ஜிராக்ஸ் கிடையாது

சேலரி சர்டிபிகேட் காண்பிக்க வேண்டாம்          

பிரி அப்ரூவடு சாங்க்ஷன்  

வ்ட்டி கிடையாது

ஈஎம்ய் பிடித்தம் கிடையாது

டாகுமன்டஷுன் சார்ஜஸ் விலக்கப்படும்

டாலரில் பண்ம் தருகிறார்கள்

சீக்கிரம் வாங்கி விடுங்கள்

ஒரு வாரத்தில் Treasuryக்கு  போய் விடும்

கே .ரவிஷங்கர்  


மற்றவை நேரில்

என் பெயர் ஸ்டாலினா லக்டினைல்

வயது  19

சொந்த ஊர் Coasta-de-reef-uch

அழகாக இருப்பேன்.

நான் ஒரு அனாதை

அப்பாவை விஷம் வைத்து கொன்றார்கள்

அம்மா, அப்பாவின் பிரிவால்

கேன்சர் வந்து மரித்து விட்டாள்

200 மில்லியன் டால்ருக்கு ஒரே வாரிசு

மாமியின் கொடுமை மற்றும்

எனது சிததாப்பாக்களின் சதிகள்

ண்பது வயது மாமாவிற்கு

நான்காம் தாரமாக வற்புறுத்தல்

பிரபஞ்சத்தில் பலகோடி பேர்களில்

நிங்கள் ஒருவர்தான் உத்தமர்

இங்கு வாழ பிடிக்க வில்லை

என்னைத் திருமணம் செய்தால்

நம் இருவர்க்குதான் எல்லா பணமும்

உங்கள் இந்திய முறைப்படி நான் இருப்பேன்

காப்பாற்றுங்கள் ! ப்ளீஸ் !

கவலை படாதே!ஸ்டாலினா 

தைரியமாக இரு, மனதை தளர விடாதே

ரேஷன் கார்டில் உன் பெயர் பதித்து

என் குடும்பத்தில் ஒருத்தியாக 

இதோ வந்து விடுகிறேன் 

TVS 50 டிக்கு  "பஞ்சர்" போட்டு விட்டு................

  கே .ரவிஷங்கர்


ஸ்பாம் மெயிலும் - ஒரு பதில் கடிதமும்

நாங்கள் ...HDFC ..வங்கியிலிருந்து

வாடிக்கையாளர் வலை கணக்கு

பாதுகாப்பு மைய அதிகாரிகள்

உங்கள் இணைய வங்கி கணக்கை

யாரோ மூன்றாம் பேர்

உங்களுக்கு தெரியாமல்

உங்கள் கணக்கில் நுழைந்து

வேவு பார்ப்பதை கண்டு பிடித்துவிட்டோம்

உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு

தங்கள் இணைய கணக்கு சம்பந்தப்பட்ட

எல்லா விவரங்களை உடனே கொடுக்கவும்

உங்கள வலை விலாசத்தை  பலபடுத்துவோம்

எல்லாம் ரகசியமாக் வைககப்படும்

உங்கள் மெயிலுக்கு  நன்றி!

நான் "கோட்டகயச்சி பாளையம்

கிராம விவசாய அபிவிரித்தி

கூட்டுறவு சங்க வங்கி "யில்

தான் கணக்கு வைத்துள்ளேன்

உங்கள் வங்கியில் அல்ல.

என் இருப்பு Rs.64.65 உறுதி செய்யப்பட்டது.

மேலும் என்னிடம் இணைய கணக்கு கிடையாது

                 என்னை "உஷார்" செய்ததர்க்கு நன்றி

 கே .ரவிஷங்கர்

14 comments:

  1. ரொம்ப சாதாரணமாகவும் இயல்பாகவும் கடந்து செல்லும் கவிதைகள், கடக்கும் நொடியில் ஒரு புன்னகையை பறித்துச்செல்கின்றன.. :) வாழ்த்துகள் .. மூன்றுமே நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. நன்றி bee"morgan
    நான் ஒரு புதிய பதிவர்
    என்னுடைய மற்ற கவிதைகள் /கதைகள் /கட்டுரையை
    கருத்து சொல்ல raviaditya.blogspot.com

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  3. அட்டகாசம். வரும் ஸ்பாம்களுக்கு இப்படி ஏதாவது எழுதலாமென்று யோசித்து .. மறந்தே போனேன். நிச்சயம் இந்த அளவு அழகாக, குறும்பாக, 'சிக்' என்று எழுதியிருக்க மாட்டேன். way to go ravi. ஒரு மேதாவித்தனம் தெரிந்தால் மன்னியுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. ரவி ஆதித்யா, அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்.
    மற்றபடி, எனக்கு இத்தனை கவிதை ஆவாது.உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது!. :) இது சும்மா தமாஷூக்கு! :)

    ReplyDelete
  5. இது கவிதையா?

    நாலு வரியை மடித்து எழுதினால் அதற்க்கு பெயர் கவிதையா?!!

    இதற்க்கு முன் பினூட்டம் போட்டுல்லவர்கள் போதையில் இருந்திருப்பார்கள் போலுள்ளது :(

    ReplyDelete
  6. நன்றி நண்பரே,
    உங்கள் விமர்சனத்திற்கு !
    என் பதிவிற்கு வருகை தந்ததற்கு!.
    மரபு கவிதை வரவில்லை.
    ஸ்பாம் மெயில் தொல்லையும்
    தாங்கவில்லை
    .
    உங்கள் வலைத்தளத்தை பார்க்க ஆசை படுகிறேன்
    கிளிக் செய்தால் தெரியவில்லை .
    உதவவும்

    ReplyDelete
  7. //என் குடும்பத்தில் ஒருத்தியாக

    இதோ வந்து விடுகிறேன்

    TVS 50 டிக்கு "பஞ்சர்" போட்டு விட்டு..........///

    நறுக்கென்ற வரிகள்!

    ReplyDelete
  8. புதிய பதிவர்!!! :)

    வாங்க கலக்குவோம்!

    வாங்க அடிச்சி ஆடுவோம்!!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. அசத்திப்புட்டீங்க ரவிஷங்கர். விதவிதமாய் படித்த காதல் கவிதைகளுக்கிடையே வித்யாசமான கவிதைகள். எல்லாமே அருமை.
    (நீங்கள் என்னை வித்யாசமாக முயற்சிக்க சொன்னதின் அர்த்தம் விளங்கியது. அப்படியே என் ப்லாகில் நான் உங்களுக்கு போட்ட பின்னூட்டத்தை படித்துவிடவும்)

    ReplyDelete
  10. என் மெயில் ஐடியை ஸ்பேம் மெயில் விட்டு வைக்கலை.அந்த ஸ்பேம் மெயிலையும் நீங்க விட்டு வைக்கலை.
    கவிதை எல்லாம் ஓ.கே.. அந்த ஸ்டாலினா மெயிலை எனக்கு ஃபார்வர்டு பண்ணி விடுறீங்களா..? நீங்க டி.வி.எஸ் 50 க்கு பஞ்சர் ஒட்டுறதுக்குள்ள,நான் என சைக்கிளுக்கு சீக்கிரம் பஞ்ச்ர் ஒட்டி முடிச்சுடுவேன்...

    ReplyDelete
  11. if u have time, visit the below page...not for post for drawing oly if u wish...
    http://thamizhparavai.blogspot.com/2008/08/blog-post.html

    ReplyDelete
  12. அழகா, இயல்பாவும் இருக்கு. கலக்கிட்டீங்க Ravi. Keep up!

    ReplyDelete
  13. நன்றி! tkbg.
    வந்து வாழ்த்தியதற்கு.

    ReplyDelete
  14. ஒத்துக்கப்படவேண்டிய ஸ்பேம்களை
    அழகாகக் கவிதையாக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!