Sunday, October 5, 2008

தொலைந்து போனவர்கள்

1.காதில் பென்சில் சொருகிய சர்வர்
2."காஜா" எடுக்கும் பையன் ((ஸ்டூலில் உட்கார்ந்து)
3."கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும் "
4.ம.எ. தர்மலிங்கம் .பி.ஏ.எம்.ஏ லிட் .. (இன் - அவுட்)
5.மாரியாத்தாவுக்கு மடி பிச்சை
6."டிக்கிட்டு" பாக்கெட்(சீக்ரெட்) வைக்கணுமா? கேட்கும் டெய்லர்
7."தலை வார" இருபது பைசா - பார்பர் ஷாப்பில்
8.டிங்.. டாங்... நேரம் இப்போது ஒன்பது மணி பத்து நிமிடம்.(ரேடியோ-தேன் கிண்ணம்)
8. பூனை உரியில் ஏறி பால் திருடி குடிக்கும் -சினிமா ரேபிங் சீனில் (சிம்பாலிக்)
6. பத்து நாள் தொடர்ந்து சைக்கிள் விடும் போட்டி
7."மஞ்சள் காமாலைக்கு கட்டு கட்டப்படும்" மரத்தடி போர்டு
8.நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது.
9.ஒரு கூல் ட்ரிங்க்ஸ் (கலர்!) பாட்டிலில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது போல்(காமெராவை பார்த்துக்கொண்டு) போஸ் குடுக்கும் திருமண தம்பதிகள் போட்டோ

10. கோலி சோடா

5 comments:

  1. //மாரியாத்தாவுக்கு மடி பிச்சை //
    இது காணாமல் போனதாக தெரியவில்லையே .. :) பல் வேறு பரிணாமங்க எடுத்துள்ளது..

    //மஞ்சள் காமாலைக்கு கட்டு கட்டப்படும்" மரத்தடி போர்டு
    8.நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது//

    கிராமப்புறங்களில் அங்கும் இங்கும் இருக்கிறது.. :)

    நல்ல முயற்சி :)

    ReplyDelete
  2. இந்த வரிசை நீண்டது நண்பரே,

    வார் வைத்து தைத்த கால் சட்டை

    கல் சிலேட்டு

    முதுகில் பெருங்காயம் சுமக்கும் பெரியவர்
    இப்படி....

    ReplyDelete
  3. இந்த வரிசையை நீட்டலாம் நண்பரே.

    கடைகளில் தேன் மிட்டாய் கிடைப்பதில்லை.

    கல்லாங்கா - யாருமே விளையாடுவதில்லை. எங்கேயாவது சிறு கருங்கல்லை (ஜல்லி)யை ஒரு ஏக்கத்துடனே பார்ப்பதாய் இருக்கிறது.

    தாயபாஸ் - மறந்து போயிற்று.

    ReplyDelete
  4. அவ்வப்போது ஏதாவது தொலைந்துபோவதும், புதிதாக வேறு வருவதும் இயல்பானதுதானே :)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!